தமிழ் நாட்டுப் பள்ளிகளில் கல்லூரிகளில் தமிழைக் காணோம். தமிழக நீதி மன்றங்களில் மற்றும் கோவில்களில் தமிழ் இல்லை. தமிழக நூலகங்களில் புத்தகங்கள் வாங்க பணம் இல்லை. இந்திய நாடாளும் மன்றத்தில் தமிழுக்கு இடம் இல்லை. இந்த லட்சணத்தில் இது போன்ற கூத்து தேவைதானா?
14-மே-2013 15:35:47 IST
அஸ்வனி குமார் ஒன்றும் தன்னிச்சையாக செயல்பட வில்லை. மன்மோகன் சிங் பாப்பாவும் இல்லை. நிலக்கரி கருப்பில் இவர் கைங்கரியம் பிரசித்தமானது. பவன் குமார் பன்சால் பானை சோற்றில் ஒரு பருக்கைதான். கொள்ளையர் கூடாரம் இந்த நடுவண் அரசு. கூண்டோடு சிறைக்கு செல்லவேண்டியவர்கள் அலி பாபாவும் தொண்ணூற்றி சொச்சம் மந்திரிகளும். இதில் அச்விநியையும் பவான் குமாரையும் மட்டும் திட்டுவது அர்த்தமற்றது.
10-மே-2013 17:09:15 IST
தண்ணீரை நாசமாக்கும் ரசாயன விவசாயம், கரும்பு பயிரிடல், சாயப் பட்டறைகள், தோல் மற்றும் காகித சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றை ஒழிக்காமல் இவை ஒன்றும் பயன் தராது.
27-ஏப்-2013 08:45:13 IST
மும்பையில் படு மோசமாகக் கட்டப்பட்ட சுமார் 500 புதிய கட்டிடங்களில் வாழும் லட்சக் கணக்கான மக்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தக் கதிக்கு ஆளாக உள்ளனர் என்று ஒரு செய்தி கூறுகிறது. சென்னை இதற்கு ஒன்றும் சளைத்தது அல்ல.
24-ஏப்-2013 16:00:33 IST
சென்ற முறை பூகம்பம் வெடித்த சில மணி நேரத்தில் சீனப் பிரதமர் அங்கு சென்று டெண்டில் தங்கி துயர் துடிப்பு பணியில் ஈடுபட்டார். ஆனால் நமது பிரதமர் வாஜ்பாய் ஏழு நாள் கழித்து குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு சென்றார். சில நல்ல செயல்களும் சீனாவில் நடக்கின்றன. ஓட்டே தேவையில்லாத பிரதமர் உடனடியாக ஓடுகிறார். ஆனால் இங்கோ-
20-ஏப்-2013 16:24:51 IST
சுற்றுச்சூழலை அழிக்கும் தொழில் எத்தனை வருமானம் ஈட்டினாலும் எவ்வளவு ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்தாலும் அதை அனுமதிக்க கூடாது என்று உச்ச நீதி மன்றம் கான்பூர்-வேலூர் தோல் பதனிடும் ஆலைகள், திருப்பூர் சாயப் பட்டறைகள் வழக்குகளின் தீர்ப்பில் தெளிவாக்கி உள்ளது. மக்களின் உயிர், உடல் நிலை மற்றும் சுற்றுச்சூழல் வருமானத்தை விட முதன்மையானது. ஆனால் ஸ்டெர்லைட் வழக்கில் தற்போதைய உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஏற்க்கனவே கூறப்பட்ட தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. தமிழக அரசின் நிலைப்பாடு ஊருக்கு ஊர் மாறுபடுகிறது. திருப்பூர்-ஈரோடு சாய மற்றும் தோல் முதலாளிகளுக்கு சாமரம் ஆனால் அணில் அகர்வாலுக்கு தடா. அறியப்படும் நீதி என்னவென்றால்: அகர்வாலின் சில்லறை சரியாகப் பாயவில்லை.
17-ஏப்-2013 08:31:38 IST
தினமலர் எப்போது இந்த போராட்டம் வலுவானது என்று கூறியுள்ளது? மின்சாரம் வேண்டும் வேண்டும் என்று துடிப்பவர்கள் அவர்கள் ஊருக்கு இந்த அணுமின் நிலையத்தை கொண்டுசெல்லலாமே. குடுகுடுப்பாண்டி அமைச்சர் நாராயணசாமி மீண்டும் ஒரு கெடு வைத்துள்ளார். தேதி மாதம் குறிப்பிட்டுள்ளார். எந்த வருடமோ தெரியவில்லை. வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை நம்புவதற்கு மக்கள் இருக்கின்றனர். எனவே நாராயண சாமி, கலாம் அய்யா, எம் ஆர் ஸ்ரீநிவாசன் ஆகியோரின் பிழைப்பு நடக்கிறது.
08-மார்-2013 22:18:38 IST
திரு விருமாண்டிக்கு இருக்கும் உணர்வும் அக்கறையும் ஆட்சியாளர்களுக்கு இல்லை. அதுதான் இந்த தீவிரவாதத்தின் அடிப்படைக் காரணம். நக்சலைட்டுகள்தான் வளர்ச்சிப் பணிகளைத் தடுக்கிறார்கள் என்பது ஒரு இமாலயப் பொய். நக்ஸல்வாதிகள் முளைத்து முப்பது வருடங்கள்தான் ஆகின்றன. அதற்குமுன் அரசு என்ன செய்தது இந்தப் பகுதிகளில்? தீவிரவாதிகளின் ஆதிக்கம் இல்லாத ஆதிவாசி மாவட்டங்கள் பல உள்ளன. ஏன் அங்கே தொடக்கப்பள்ளி, மருத்துவ மனை, நியாய விலைக் கடைகள், சாலைகள் போன்றவை இன்றும் இல்லை? இந்த அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்துவது அந்த பழங்குடி மக்களுக்கு இந்த வசதிகளை செய்வதற்காக அல்ல. அவர்கள் வாழும் பகுதியில் உள்ள நிலக்கரி, பாக்சைட், இரும்பு போன்ற கனிமங்களை சீக்கிரம் வெட்டி எடுக்க மட்டுமே. கொள்ளைகாரர்களின் பேராசைக்கு அந்த மக்களை அடக்கத் துடிக்கின்றது ஆளும் வர்க்கம். தண்டகாரண்யா தீவிரவாதிகளின் கோட்டை. இந்தப் பகுதி ஆந்திரா - ஒரிஸ்ஸா - சத்தீஸ்கர் - மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் உள்ளது. சுக்மா மாவட்டம் இங்குதான் உள்ளது. சுக்மா ஆட்சியர் பால் மேனன் (ஒரு தமிழர்) தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை நாம் நன்கு அறிவோம். டாக்டர் வித்யாதர் சர்மா என்ற முன்னாள் இ அ ப அதிகாரி இவரை விடுவித்து அழைத்து வரும் போது, இந்த தீவிரவாதிகளுக்கு கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக ஆதரவு கொடுக்கும் உங்களுக்கு என்ன நன்மை கிட்டியது என்று அந்த மக்களைக் கேட்டார். ''பட்வாரி (கிராம அதிகாரி) - தானேதார் (போலிஸ் எஸ் ஐ) ஆகியோரின் ராஜ்ஜியத்திலிருந்து எங்களுக்கு விடுதலை கிடைத்ததே அது போதாதா,'' என்று கூறினார் அந்த ஆதிவாசிகள். இந்த மக்களுக்கும் இன்றைய அரசுகளுக்கும் பல காத தூரம் இடைவெளி உள்ளது. ''லெட் அஸ் கால் ஹிம் வாசு'' என்ற சமீபத்தில் வெளியான பெங்குவின் புத்தகம் தண்டகாரன்யாவைப் பற்றியது. நீ ஏன் உன் ஊருக்கு திரும்பவில்லை என்று ஒரு தீவிரவாதப் பெண்ணிடம் ஆசிரியர் கேட்க அந்தப் பெண் கூறிய பதில்: ''அது சாத்தியமற்றது. இப்போது என் கையில் துப்பாக்கி உள்ளது. நான் திரும்பிப் போனால் இந்தத் துப்பாக்கியை வைத்துக்கொள்ள முடியாது. என்னை யாரும் போலீசிடம் இருந்து காப்பாற்ற முடியாது. எங்கள் ஊருக்கு அடிக்கடி போலீசார் வருகின்றனர். அவர்கள் வரும்போதெல்லாம் தங்கள் உயிரைக் காக்க மக்கள் காட்டுக்குள் ஓடி விடுவர். நான்கு மணி நேரம் நடந்து செல்லும் தூரத்தில் சந்தை உள்ளது. ஆனால் அங்கு சென்றால் சால்வா ஜுதும் போலிஸ் படை பிடித்துக் கொள்வர் என்பதால் எண்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இன்னொரு மார்க்கெட்டுக்கு மக்கள் செல்கின்றனர்''. இந்த லட்சணத்தில் இவர்களை ஒடுக்க அரசு அதிகாரிகள் ஆலோசனை செய்வது கொடுமையிலும் கொடுமை.
04-மார்-2013 11:54:15 IST
இந்த தனியார் பள்ளிகளும் அந்த ஆசிரியர்களோடு சேர்ந்து அரசுப்பள்ளிகளில் இணைந்தால் சமசீர் கல்வி மலரும். பணம்படைத்தோருக்கு ஒரு பள்ளி காசற்றவர்க்கு ஒரு பள்ளி என்ற வர்ணாஸ்ரம அவலம் ஒழியும்.
11-டிச-2012 09:33:20 IST