Rajalakshmi : கருத்துக்கள் ( 67 )
Rajalakshmi
Advertisement
Advertisement
ஏப்ரல்
24
2017
உலகம் 101 வயதில் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்ற இந்திய பெண்
மிகவும் பாராட்டப்படவேண்டும்.   17:49:36 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
24
2017
சம்பவம் கொடைக்கானலில் முகாமிட்ட யானைகள் விவசாயிகள் கலக்கம்
அனைத்து விஷயங்களிலும் நாம் ஏன் "கண் கெட்ட பின் ஸூர்யநமஸ்காரம்" என்றிருக்கிறோம் ? பல வனவிலங்குகளும், புள்ளினங்களும் அழிந்து விட்டன. நமக்கு மிகவும் அத்தியாவசியமான தேனீக்கள் , வௌவால்கள் , தட்டான் பூச்சிகள் யாவும் கணிசமாக குறைந்து கொசுக்களும் , மனித கும்பலும் மட்டுமே மிகுந்து இருக்கின்றன. மேலும் மேலும் சொகுசு வண்டிகள் , அவை ஓட பெட்ரோல் , ஜல்லிக்கட்டு போராட்டம் , வாடகை தாய்கள் மூலம் மேலும் குழந்தைகள் உற்பத்தி என்று இவைகள் பின்னால் ஓடி நன்மை ஏதுமில்லை.வனவிலங்குகள் , குறிப்பாக யானைகள் உட்கொள்ள நிறைய கரும்பு , விளாம்பழம் , வாழை , பொரி என பெருமளவில் தேவை. கரும்பிலிருந்து biofuel என்பது தேவையில்லாத விரயம். அவை அருந்த , குளிக்க தண்ணீர் மிகவும் அவசியம்.   17:47:17 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
24
2017
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
சமையல் கலை , சங்கீதம் கற்பது மூலமும் வலது பக்க மூளை பலப்படும். இடம் , வலம் என இரண்டுமே இயங்குவதுதான் நல்லது.   15:40:53 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
17
2017
எக்ஸ்குளுசிவ் கடல் மூலம் ஹஜ் பயணம் மத்திய அரசு ஆலோசனை
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் அறிவுறுத்தியிருக்கிறார் , ஹிந்துக்களாகிய நாம் முஸ்லிம்களின் புனித ஹஜ் யாத்திரையை முஸ்லிம்கள் சிரமமில்லாமல் சென்று வரும் வசதியை செய்துகொடுக்க வேண்டும் அது நமது கடமை என்று. ஹிந்துக்களும், கிறித்தவர்களும் உடனே வீம்புக்கு போட்டா போட்டி பண்ணக்கூடாது. முஸ்லிம்களுக்கு மட்டும்தான் இந்த உபகாரம் செய்ய வழி வகுக்க வேண்டும். முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் வசதி குறைவானவர்கள்தான். அவர்களுக்கு எது சௌகரியம் என்று அவர்களையே கேட்க வேண்டும். விமானப்பயணம் preferable என்றால் அப்படியே இருக்கட்டும். நமது கோவில்களின் காணிக்கையில் ஒரு பங்கை முஸ்லிம்களுக்கென்று நிச்சயம் அளிக்க வேண்டும். திருமுருககிருபானந்தவாரியார் சுவாமிகளும் முஸ்லிம்கள் அவசியம் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.   21:40:27 IST
Rate this:
5 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
3
2017
சம்பவம் பிரெஞ்ச் பிரையுடன் வறுத்த பல்லி கர்ப்பிணி அதிர்ச்சி
"ஸ்வயம்பாகம்" என்று நாமே நம் கையால் நம் முன்னோர் காட்டிய வழியில் சிரத்தையாக சமைத்து உண்ணவேண்டும் ஹோட்டல்களிலும் , பிறர் சமைத்து உண்பதையும் ( pot luck ) அறவே தவிர்க்க வேண்டும் என்று காஞ்சி மஹாசுவாமிகள் எந்நேரமும் வலியுறுத்தினார் வலியுறுத்துகின்றார். நல்ல அறிவுரைகளெல்லாம் "ஆரிய மாயை , பார்ப்பன சதி" என்று இடதுசாரிகளாலும் பகுத்தறிவு பிசாசுகளாலும் புறக்கணிக்கப்பட்டன.   19:31:47 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
19
2016
சம்பவம் கேரளாவில் ராகிங் கொடுமை மாணவர் சிறுநீரகம் பாதிப்பு
இந்த ragging இன்று நேற்றல்ல எனது சிறுவயது முதல் இந்தியாவெங்கும் படுசமத்துவமாக நடந்து வந்தும் பத்திரிகைகள் ரிப்போர்ட் பண்ணும். சிலர் விவாதம் நடத்துவர். அவ்வளவே. இன்று சினிமா உலகம் இதை வைத்து பணம் பண்ணி கொழுக்கிறது. 'ragging விழிப்புணர்வு'' கொண்டு வந்த படம் , தயாரிப்பாளர் என்று சொல்லி பல விருதுகள் வாங்கி குவிக்க சுலபமான வழி. என்றோ தடை செய்திருக்க வேண்டும்.   10:29:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
20
2016
பொது மருத்துவமனையிலிருந்து சுஷ்மா சுவராஜ் டிஸ்சார்ஜ்
டாக்டர்கள் கூட்டம் செய்யும் சகல அக்கிரமங்களும் ஹிந்துக்களின் தர்ம சாஸ்திரங்களுக்கு மிக மிக விரோதமானவை. ஹிந்துக்களின் சாஸ்திரங்கள் விதித்தபடி இறந்தபின் பல சம்ஸ்காரங்கள் மறையோதும் அந்தணர்கள் துணையோடு அவர்கள் வாழ்ந்த வீட்டில் இரத்த சம்பந்தம் உள்ள உறவினரால் செய்யப்பட்டு பின் அக்கினியில் முழுமையாக தகனம் செய்ய வேண்டும். அதை விடுத்து பணம் பண்ணும் நோக்குடன் 'மனிதநேயம்' என்று பிதற்றி கண் முதல் தோல் வரை அனைத்தும் மருத்துவமனையிலேயே அறுவடை செய்து விடும் அரக்கர் கூட்டம் இன்றைய டாக்டர்கள். "கருணைக்கொலை" என்பதும் அந்நிய நாட்டு மதத்தினர் திணித்தது. டெஸ்ட் tube மூலம் கருத்தரிப்பது , வாடகைத்தாய் , wombs on rent , artificial insemination இவையாவும் மிக மிக அதர்மமானவை.   10:22:26 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
15
2016
கோர்ட் கலியுகம் போல் மாறிவிட்டது ஐகோர்ட் வேதனை
தமிழ் நாட்டின் சில பட்டிமன்ற பேச்சாளர்கள் இப்படியே பேசி பேசி பலரின் அறிவை மழுங்க வைத்திருக்கின்றனர். "குகன் கொடுத்த தேனையும் மீனையும் நின்றார் இராமர் " என்று மீண்டும் மீண்டும் சொல்வார்கள். ஏதோ பிறந்தது முதல் இராமபிரானும் அவரது சகோதரர்களும் காலை breakfast மீனும் தேனும் உண்டு மதர்த்த வளர்ந்தனர் என்று "பகுத்தறிவு , நாத்திக பாசறையின் வழித்தோன்றல்கள் " மனப்பால் குடித்து தி.மு.க. வினர் இராமர் எந்த கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் வாங்கினார்.....அவர் கட்டிய பாலம் என்று என்ன அத்தாட்சி என்று எகத்தாளமாக கேட்டதும் இதே கலியுகத்தில்தான். அவர்கள் நடத்தும் தொலைக்காட்சியில் பல பேச்சாளர்கள் ( ஆன்மிக பேச்சாளர் என்ற பெயருடன் ) ஒழுக்கம் , வாய்மை , புலனடக்கம் பற்றியெல்லாம் வாய்கிழிய சொற்பொழிவு செய்ததும் இதே கலியுகத்தில்தான். இராமபிரான் அரியணை துறந்து விசுவாமித்திர மஹரிஷியுடன் இளைய பெருமாளுடன் வனங்களில் சில காலம் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம். பல அரக்கர்களை , தாடகை என்ற அரக்கி உட்பட அழித்தனர். அந்த சீலமிகுந்த இராமபிரான் உங்களுக்கு தெரியவில்லை ? Let us presume as alleged by you & kindred folks , விசுவாமித்திர மஹரிஷி , இராமபிரான் ஒரு உடும்பை அடித்து உண்டனர் என்று. இருவரும் உடும்பை தங்கள் staple food என்று எங்கும் சொல்லவில்லை. இராமபிரான் உண்டிருந்தால் அந்த உடும்பு செய்த பெரும் பாக்கியம் மீண்டும் பிறவா நிலை அடைந்திருக்கும். விசுவாமித்திரர் அப்பேர்ப்பட்ட சிரேஷ்டமான காயத்ரி மந்திரத்தை உலகிற்கு அளித்தார். அதனால் அவர் இந்த உலகுக்கே / விஸ்வத்திற்கே ( விஸ்வம் விஷ்ணு :) மித்திரர் , நித்ய மங்களம் செய்பவர். இராம நாமத்தின் மகிமையை பற்றி அறிந்து கொள்ள ஸ்ரீஆஞ்சநேயர் , ஸ்ரீபோதேந்திரர் , தியாகப்ரும்மம் ஏன் அந்த சர்வேஸ்வரனே "ஸ்ரீராம ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ....ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே" என்று பார்வதி தேவிக்கு உரைக்கின்றார். இன்று எத்தனையோ பேர் உலகெங்கும் பெருமளவில் உடும்பு , பசு , கன்று , எருமை , வாத்து , கோழி , மீன் , ஆடு என்று கொன்று புசிக்கின்றனர். அவர்களில் ஒரு இராமரையோ , விசுவாமித்திர மஹரிஷியையோ காண முடியுமா ...அந்த ஸ்ரீராமர் மேல் ஆணை முடியாது.   15:22:17 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
6
2016
பொது அமரரானார் ஜெ., *கண்ணீர் கடலில் தொண்டர்கள் தவிப்பு *பலனளிக்கவில்லை 75 நாள் தீவிர சிகிச்சை *அஸ்தமித்தது அ.தி.மு.க.,வின் விடிவெள்ளி
மிகவும் துக்கமாக இருக்கின்றது. வாழ்க்கை முழுவதும் ஒரே சோதனைகள் நிறைந்திருந்தாலும் இறைவனருளால் அனைத்தையும் கடந்து வந்தார். அவர் நற்கதியடைய , நிரந்தர நிம்மதியடைய இறைவன் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்   10:08:12 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
5
2016
பொது அமரரானார் அம்மா
மிகவும் துக்கமாக இருக்கின்றது. வாழ்க்கை முழுவதும் ஒரே சோதனைகள் நிறைந்திருந்தாலும் இறைவனருளால் அனைத்தையும் கடந்து வந்தார். அவர் நற்கதியடைய , நிரந்தர நிம்மதியடைய இறைவன் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.   17:57:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment