Varun Ramesh : கருத்துக்கள் ( 561 )
Varun Ramesh
Advertisement
Advertisement
டிசம்பர்
4
2018
கோர்ட் எம்.பி., - எம்.எல்.ஏ., மீது நிலுவை வழக்குகள் 4,122! தமிழகத்துக்கு 3வது இடம்
தமிழகத்திற்கு மூன்றாமிடமா? ? ? ? மூன்றாமிடத்தை பிடிப்பதற்காகவா அரைநூற்றாண்டு கால போராட்டம்? சர்வே தவறு   10:46:44 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
2
2018
பொது 3,50,00,00,00,00,00,000 வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை போன தொகை
அம்மா, ஆங்கிலேயன் நம் எதிரி. நம்மை அடிமைப்படுத்தி கொள்ளையடிப்பதற்காகவே வந்தான் கொள்ளையடித்தான். 71 ஆண்டு சுதந்திர இந்தியாவில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அடித்து சேர்த்து வைத்திருக்கிற கொள்ளைப்பணம் எவ்வளவென்று கணக்குப்பார்த்து சொல்ல முடியுமா? அது அநேகமாக இதைவிட அதிகமிருக்கும்.   11:23:58 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
30
2018
பொது எய்ட்ஸ் இல்லா மாநிலம் முதல்வர் அழைப்பு
அப்படியே, லஞ்ச ஊழல் இல்லா மாநிலம் என்றும் பெயரெடுக்க அனைவரும் உறுதி ஏற்கவேண்டும் என்று சொல்லுங்கள் முதல்வர் அவர்களே   19:28:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
23
2018
பொது போலீசார் சாதுர்யமாக செயல்பட வேண்டும் முதல்வர்
காவலர்களுக்கு இருந்து வந்த 'பரேட்' என்னும் தினசரி பயிற்சி முறையை 1978 ல் ரத்து செய்தவர் உங்களது முன்னோடியான அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்தான். அதன் விளைவு, குனிந்து கால் கட்டைவிரலைக்கூட பார்க்க முடியாத நிலையில் டம்மியோடு இன்றைய காவலர்கள். எங்கிருந்து தியானம்? எங்கிருந்து உடற்பயிற்சி? இப்போது நீங்கள் அவற்றையெல்லாம் மீண்டும் கொண்டு வந்தால், லெட்டர் பேடு கட்சிகள் முதற்கொண்டு உங்களை எதிர்க்கும்.   17:22:57 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
17
2018
சம்பவம் சிறையில் கஞ்சா விற்ற காவலர் சஸ்பெண்ட்
களை பயிரை கபளீகரம் செய்தால் கூட மன்னிக்கலாம் ஆனால் பயிரை மேயும் வேலியை வேரறுக்க வேண்டும்.   17:07:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
15
2018
கோர்ட் ஜெ., சொத்து யாருக்கு? ஐகோர்ட் அதிரடி
மாதம் ஒரு ரூபாயை ஊதியமாக பெற்று அதில் செலவுகளை ஈடுகட்டியது போக மீதியை, இன்றைய மதிப்பில், ரூபாய் 913 கோடியாக மாற்றிக்காட்டும் திறனை பெற்றிருந்த அம்மா உண்மையில் ஒரு ஈடு இணையற்ற பொருளாதார மேதைதான். இவர் இந்தியாவின் நிதியமைச்சராக இல்லாமல் போனது இந்திய மக்களின் பெரும் துரதிர்ஷ்டம். அதிர்ஷ்டம் கெட்ட மக்கள் நாடு.   10:17:34 IST
Rate this:
3 members
1 members
28 members
Share this Comment

நவம்பர்
12
2018
அரசியல் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., உறுதி
இவர்களை பொறுத்தவரையில் 'அம்மா' எல்லாம் 'சும்மா'. உண்மையில் ஜெயலலிதா இல்லாத நிலையில் இவர்களுக்குத்தான் குளிர்விட்டுப் போய்விட்டது.   17:58:40 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் ஜெ.,க்கு ஸ்லோ பாய்சன்கொடுத்து கொன்ற கும்பல் * அமைச்சர் சீனிவாசன் திடுக்
சட்டவிரோதமான எதையும் செய்யமாட்டேன் வேறு எவரேனும் அவ்வாறு செய்வதாக எனக்கு தெரிய வந்தால், அவர்களை சட்டத்தின் முன் கொண்டு நிறுத்துவேன் எனது உயிருக்கோ உடமைக்கோ ஆபத்து, அச்சுறுத்தல் வந்தாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் நடவடிக்கை மேற்கொள்ளுவேன் - இது சத்தியம் என்று நாட்டின் இறையாண்மையின்மீது சத்தியப்பிரமாணம் செய்து அமைச்சராக பதவி ஏற்றவர். தன்னை அமைச்சராக்கிய முதலமைச்சர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்று தெரிந்தபோதே அதனை வெளியே சொல்லி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க துப்பில்லாத இது போன்ற ஜென்மம் வாக்களித்த வாக்காளர்களையா காப்பாற்றிவிடப்போகிறது? 'அச்சம் என்பது மடமையடா' என்று பாடி ஆட்சியை பிடித்த எம்.ஜி.ஆரின் கட்சியில் இப்படியும் கையாலாகாத பிறவிகள்.   12:50:33 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

நவம்பர்
11
2018
எக்ஸ்குளுசிவ் ப்ரீ பெய்டு மீட்டர் பொருத்த மின் வாரியம் அலட்சியம்
ஒழுங்கீனம் என்பதே இவர்களிடமிருந்துதான் தொடங்குகிறது. தகுதிக்கும் திறமைக்கும் மீறிய ஊதியம், சலுகை. லஞ்சம் தலைவிரித்தாடும் துறைகளில் ஒன்று. எப்படி புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள, பொறியாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள்?   08:49:58 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
10
2018
பொது தீபாளிக்கு 7.25 லட்சம் பேர் பயணம்
சராசரியாக ஒரு டிக்கெட் கட்டணம் ரூபாய் 350 என்று வைத்துக் கொண்டால், ஏறத்தாழ ரூபாய் 25 கோடி வருவாய் ஈட்டியுள்ளது அரசு போக்குவரத்துக்கழகம். ஆண்டிறுதியில், வருவாய் குறைவென்று சொல்லாமலிருந்தால் சரி.   14:55:11 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X