மொக்கைதனமா பேசுறதே இந்த காங்கிரசுக்காரனுக்கு பொலப்பா போச்சு. முழுக்க நனைஞ்ச பிறகும் முக்காடு போடத் துடிக்கிரானுங்க இந்த கொலைகாரப் பாவிங்க
11-ஏப்-2013 02:13:18 IST
வைகோ அவர்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்த அதிமுக அரசையே ஆலையை மூட வைத்தவர் வைகோ. வைகோவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள், அவரது மக்களுக்கான போராட்டம் தொடரட்டும். மக்களே சிந்தியுங்கள் உங்களுக்காக ஒவ்வொரு நிமிடமும் போராடிக் கொண்டு இருக்கும் வைகோ அவர்களை அரியணையில் ஏற்றுங்கள் உங்களின் ஒவ்வொரு நிமிடமும் நல்லதாகவே அமையும்.
31-மார்-2013 04:16:31 IST
ஈழ தமிழர் மீதான அக்கறையை, இனபடுகொலையாளன் இந்திய பயண எதிர்ப்பை தங்களது ' தீவிர' போராட்டத்தை , ஆண்ட கட்சி சென்னையிலும், ஆளும் கட்சி வெறும் தீர்மான , நினைவூட்டலிலுமே வசதியாக முடித்து கொண்டால், தமிழக, தலைநகர ஊடகங்கள் ' இப்படிதான் ' தங்கள் பங்களிப்பை காட்டும் உண்மையாக போராடும் வைகோவின் வெற்றி, படுகொளையாளன் பயண திட்டத்தை மாற்றி , டெல்லிக்கு வராமல் பயந்து, பறந்து போனதில் அல்லவா நிற்கிறது
09-பிப்-2013 04:20:09 IST
தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் :
வட இந்தியாவில் நடக்கும் சிறு சிறு அசைவுகளை கூட அங்குள்ள ஊடகங்கள் எல்லாம் ஊதி பெரியதாக்கி மக்களுக்கு கொண்டு போய் சேர்த்து விடுகின்றன. முக்கியமான நிகழ்வுகளின் போது,நாள் முழுவதும் அந்த ஒற்றை செய்தியையே ஒளிபரப்புகின்றார்கள்.பல்வேறு விவாதங்களை,கருத்து பதிவுகளை,நேர்காணல்களை முன்னெடுக்கிறார்கள். அன்றைய தினங்களில் வேறு எந்த நிகழ்வுகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
எந்த தொலைகாட்சி சானலை திருப்பினாலும் அந்த ஒற்றை விவாதமே நடக்கும் அளவுக்கு அவர்கள் மிக கவனமாக நடந்து கொள்கிறார்கள். எண்ணற்ற உதாரணங்களை சொல்ல முடியும் என்றாலும் கூட சமீபத்திய நிகழ்வுகளை சொல்ல வேண்டுமானால் டெல்லி பாலியல் வன்கொடுமை நிகழ்வை சொல்லலாம். பால்தாக்ரே மரண நிகழ்வை சொல்லலாம்.
பால்தாக்கரே மரண நிகழ்வை,டெல்லி போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ததன வட இந்திய ஊடகங்கள். ஏன் நம் புதியதலைமுறை தொலைகாட்சி கூட இந்த நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்தது.
ராக்ஜ்பக்ஷேவின் எதிர்ப்பு என்பது,மற்ற நிகழ்வுகளை விட முக்கியமான நிகழ்வில்லையா தமிழர்களுக்கு. இந்த நாள் நமக்கு ஒரு முக்கியமான நாள் அல்லவா. நம் இன உணர்வை வெளிப்படுத்தும் நாள் ,கொல்லப்பட்ட லட்சத்துக்கு அதிகமான நம் உறவுகளுக்கு நியாயம் கேட்கும் நாள், கொலைகார பாதகர்களை இந்த மண்ணில் கால் வைக்க விட கூடாது என்பதை அழுத்தமாக சொல்ல வேண்டிய நாள்.
உணர்வுள்ள தமிழர்கள் பலர் களத்தில் நிற்கிறார்கள். டெல்லியிலும், பீகாரிலும், திருப்பதியிலும் வலுவான நம் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். தொலைகாட்சி ஊடகங்கள் இந்த நாளில் உங்கள் அனைத்து நிகழ்சிகளையும் ரத்து செய்துவிட்டு ராஜபக்சே எதிர்ப்பு என்ற ஒற்றை சிந்தனையில் செயல்பட கூடாதா? போராட்ட களங்களுக்கு நேரடியாக சென்று நேரடி ஒளிபரப்பு செய்ய கூடாதா? பல்வேறு விவாதங்களை,நேர்காணல்களை நடத்த கூடாதா? உங்கள் ஒருநாள் வருமானத்தை இந்த இனத்துக்காக, அதன் நியாயத்துக்காக நீங்கள் தியாகம் செய்ய கூடாதா?
தென்னிந்திய ஊடகங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் நீங்கள் இதை செய்யாது போனால் வேறு எவன் செய்வான்? வேறு யாரிடம் நாங்கள் போய் கேட்பது?
போராட்ட களங்களில் நின்று தங்கள் எதிர்ப்புகளை வலுவாக பதிவு செய்து கொண்டிருக்கும் அனைத்து தோழர்களுக்கும்,எங்கள் சகோதரர்களுக்கும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். உங்கள் உணர்வுகளுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.
அன்பின் ஆழத்தில்
ஆண்டனி வளன்
09-பிப்-2013 04:19:03 IST
வைகோவின் பேட்டியை முழுமையாக வெளியிட வேண்டும், பாதி மட்டுமே வெளியிட்டு திசை திருப்ப வேண்டாம்.
மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா?: திமுகவுக்கு வைகோ கேள்வி "ராஜபட்ச வருகையை தடுக்க முடியாவி்ட்டால் மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா? என்று திமுகவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு தான் இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. எனவே, மற்ற கட்சிகளைப் போல ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவும் அறிக்கை வெளியிடுவதை ஏற்க முடியாது. மத்திய அரசு வற்புறுத்தி ராஜபட்ச வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற வேண்டும். அதற்கு அக்கட்சி தயாரா? என்று கேள்வி எழுப்பினார். அவ்வாறு வெளியேறினால், நான் தி.மு.க.,வை விமர்சிக்க மாட்டேன்"
05-பிப்-2013 02:22:01 IST
இது தொடர்கதை ஆகிக் கொண்டு இருக்கிறது. விவசாயிகளைக் காக்க மாநில அரசும் சரி மத்திய அரசும் சரி ஒரு நடவடிக்கைகளும் எடுப்பது இல்லை. மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டம் என்ற பெயரில் நடக்காத வேலைகளுக்கு சம்பளம் கொடுத்து விவசாய வேலைகளுக்கு ஆட்கள் இல்லாமல் செய்வதோடு மட்டும் அல்லாமல் அவர்களை சோம்பேறிகள் ஆக்கி விட்டது. மறுபுறம் மாநில அரசு இலவசங்கள் என்ற பெயரில் மக்களை சோம்பேறி ஆக்கியும், மது என்ற மயக்கத்திலும் வைத்து உள்ளது. தமிழக மறுமலர்ச்சிக்காக போராடும் கட்சிதான் இங்கேயும் போராடியது, அனால் அதைக்கூட வெளியில் சொல்ல இயலாத அளவுதான் சுதந்திரமும் உள்ளது
26-ஜன-2013 03:41:25 IST
//இந்த செய்தி ம.தி.மு.க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது// //இவரது இழப்பு ம.தி.மு.க.,வுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது//
இது தவறான தகவல். இவர் போனதால் கட்சித் தொண்டர்கள் யாரும் அதிர்ச்சி அடையவில்லை, துரோகிகளை கட்சியில் இருப்பதை விட வெளியேறுவதையே தொண்டர்கள் விரும்பினர். இவர் சென்றதால் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் பேரிழப்பு ஒன்றும் இல்லை. கட்சியில் இவரை விட அருமையான பேச்சாளர்கள் பலர் உள்ளனர்.
04-டிச-2012 12:25:26 IST
மதிமுக தமிழகத்தின் விடிவெள்ளி, தமிழகத்தில் சமூக மாற்றம் தேவை அது கண்டிப்பாக வைகோ தலைமையில் நிறைவேறும். மக்கள் நாலனுக்காண போராட்டத்தில் என்றும் மதிமுக முன்னிலை வகித்தது, வகிக்கிறது, வகிக்கும்.
30-ஜூலை-2012 15:53:14 IST
ஆதியும் அந்தமும் (வரலாறு) தெரியாமல் கருத்துக்களைத் தெரிவித்து விடுவது எளிதாக இருக்கும். கருத்து கூறிய நண்பருக்கு என்று வலி (உரிமைக்கு பங்கம் வந்து) வந்து அதை எதிர்த்து போராடினால், அது அவர் செய்யும் தீவிரவாதம் என்றால் ஈழத்தில் தமிழர்கள் உரிமைக்காக போராடியது தீவிரவாதமாகே இருந்து விட்டுப் போகட்டும், ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த இந்தியாவில் தானே இருக்கிறோம், அந்த அரசாங்கத்தில் இருப்பவர்கள் எப்படி பேசுகிறார்களோ அதே மாதிரி இங்கே கருத்துக்களையும் தெரிவிப்பர்.
துப்பாக்கியால் சுட்டவன் தீவிரவாதி இல்லையாம், அதை தட்டி கேட்பவன் தீவிரவாதியாம். மணல் கடத்தல் தீவிரவாதம் என்று ஒத்துக்கொள்ளும் நண்பர், அதை இந்நாள் முதல்வாரின் படைகளும், முன்னால் முதல்வாரின் படைகளும் செய்த போது கண்டனம் தெரிவிக்க ஏன் வரவில்லை. முதலில் மனித நேயம் செத்துக் கொண்டு இருக்கும் நமது தமிழகத்தில், அதற்கு எதிராக குரல் குடுத்து மனித நேயத்தைக் காத்துக் கொண்டு இருக்கிறார் இந்த உன்னதத் தமிழன் வைகோ.
துப்பாக்கியால் சுட்ட அதிகாரியை வன்மையாகக் கண்டிக்கிறோம், இது போன்ற செயல் தமிழகத்தில் எங்கு நடந்தாலும், அது யாருக்கு நடந்தாலும் அது மனிதாபமனமற்ற செயல். அரசாங்கத்தில் உள்ளவர்களின் மணல் கடததலைத் தடுக்க முடியாமல், மற்றவர்களின் மீது பழி போடும் இந்த அரசாங்க அதிகாரிகளின் செயலை கண்டிக்கிறோம்.
26-ஜூலை-2012 12:55:05 IST