Advertisement
தினமலர் முதல் பக்கம் » Namachivayam Paramasivam அவரது கருத்துக்கள்
Namachivayam Paramasivam : கருத்துக்கள் ( 23 )
Namachivayam Paramasivam
Advertisement
ஜூன்
16
2013
அரசியல் "தி.மு.க., ஆட்சியின் சாதனையை சொந்தம் கொண்டாட முயற்சி கருணாநிதி
உங்க சுமுக பேச்சை அழகிரி-ஸ்டாலின்-கனிமொழி-ராஜாத்தி, தயாளு அம்மாள்களை சமாதான படுத்துவதில் வைத்து கொள்ளுங்கள். அது அரசு விஷயங்களில் கூடாது. சுமூகமாக பேசி தண்ணீரை கொண்டு வந்தது உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்நடவடிக்கை ஒரு தற்காலிக நடவடிக்கைதான். எதிர்காலத்தை மனதில் கொண்டு தொலை நோக்கு நடவடிக்கையாக இருக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அவர்களிடம் கையேந்தி நம் உரிமையை பறிகொடுக்க வேண்டிய நிலையைத்தான் நீங்கள் உருவாக்கினீர்கள். இதே போல் 10 ஆண்டுகள் அட் ஹாக் முறையில் தண்ணீர் வாங்கியிருந்தால் நம் உரிமையும் பரிபோயிருக்கும். நல்ல வேளை நீங்கள் போனீர்கள் தற்போது தண்ணீர் வரவில்லை என்றாலும் என்ன நடக்கிறது என்பதாவது வெளியில் தெரிகிறது. உங்கள பீரியடில் எல்லாவற்றையும் கவுட்டுத்தனமாக மூடி மறைத்தீர்கள். நிரந்தர தீர்வுக்கு போராடும் ஜெயா உங்களை விட ஆயிரம் மடங்கு நல்லவர்.   06:23:50 IST
Rate this:
158 members
0 members
154 members
Share this Comment

பிப்ரவரி
13
2013
பொது ஹெலிகாப்டர் ஊழல்: குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது: அந்தோணி
இத்தாலி காங்கிரஸ் , இத்தாலி எல்லாம் ஒரே ரகம் எந்த விசாரணையிலும் உண்மை வெளிவராது. தண்டணையும் கிடைக்காது.   11:58:16 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

ஜனவரி
27
2013
அரசியல் அதிர்ச்சி கொடுக்கும் காங்கிரஸ்; அதிரடி திட்டத்துடன் தி.மு.க.,; தேர்தல் பரபரப்பு ஆரம்பம்
யார் யாருடன் கூட்டணி வைத்தாலும் மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள். லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்ற காங்கிரசையும் அதற்கு துணை போன அதன் இன்னாள் கூட்டாளியுமான தி.மு.க வையும் 2014 பாராளுமன்ற தேர்தலில் தோற்கடித்தே தீர்வார்கள். வெற்றி பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடிப்பது வீண் வேலை.   07:54:07 IST
Rate this:
85 members
0 members
71 members
Share this Comment

ஜனவரி
27
2013
அரசியல் கருணாநிதி - விஜயகாந்த் சந்திப்பு: திருச்சியில் திருப்பம் வருமா?
விஜயகாந்துக்கு எதுக்கு அரசியல்? ஏதோ நடித்தோமா நாலு காசு சம்பாதித்தோமா என்று இல்லாமல் கல்யாண மண்டபம் இடிபடாமல் தடுப்பதற்காக அரசியலுக்கு போய் கல்யாண மண்டபமும் போய் கையில் இருந்த பணமும் போய் கூடவே இருந்த நல்ல நண்பர்களும் போய் இருந்த நல்ல பெயரும் போய் குடிகாரன் என்று கேட்ட பெயர்தான் மிச்சம் . தேவையா இந்த சாக்கடை?.   07:33:30 IST
Rate this:
70 members
1 members
17 members
Share this Comment

ஜனவரி
25
2013
பொது கேரளா, ஆந்திராவில் வெளியானது விஸ்வரூபம்
கமல் எந்த படம் எடுத்தாலும் அதை தடுக்க நினைக்கும் நபரோ அல்லது குழுவோ தூண்டி விடுவதாகத்தான் நான் நினைக்கிறேன்.சண்டியர் என்று பெயர் வைத்தால் அதில் பிரச்சினை. கதையில் பிரச்சினை.இப்படி ஆளுக்குஆள் எதிர்த்தால் எப்படி கதை பண்ணுவது எப்படி படம் பண்ணுவது. ஒரு தலைசிறந்த கலைஞனுக்கு பிரச்னை ஏற்படுவதை இந்த திரை உலகத்தவர்கள் மனதிற்குள் மகிழ்ந்தபடி மௌனமாக இருக்கிறார்கள். பாம்பை குச்சியால் அடித்தான் என்று கதை எழுதினால் பாம்பும் எதிர்த்து குச்சியும் எதிர்த்தால் எப்படி படம் எடுக்கமுடியும். சினிமாவை நேசிக்கும் சினிமாவின் அனைத்து துறைகளிலும் திறமையான ஒரு கலைஞனான கமலை அவர் வழியில் படம் பண்ண விடுவதே கலைக்கு நாம் தரும் மரியாதையாக இருக்கும்.   04:41:01 IST
Rate this:
6 members
0 members
97 members
Share this Comment

ஜனவரி
5
2013
அரசியல் அழகிரிக்கு போக்கு காட்டிய கருணாநிதி
உலகத் தமிழர்களுக்கே போக்கு காட்டி இலங்கைத் தமிழர்களின் கொலைக்குத் துணை போன கருணாநிதிக்கு தன்னுடைய மகனுக்கு போக்கு காட்ட தெரியாதா? போக்கு காட்டி ஏமாற்றுவது அவருக்கு கைவந்த கலையையாயிற்றே .   12:27:44 IST
Rate this:
18 members
2 members
52 members
Share this Comment

செப்டம்பர்
20
2012
சம்பவம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு: பிரச்சனையை அரசியலாக்கும் கன்னட அமைப்புகள்
தமிழ் நாட்டு அயோக்ய அரசியல்வாதிகளும், கர்நாடக அயோக்ய அரசியல்வாதிகளும் மத்தியில் ஆளும் அயோக்ய காங்கிரசும் கை கோர்த்துக்கொண்டு தமிழ் நாட்டு விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்.விவசாயியின் வாழ்க்கை முறை வன்முறை பாதையாக மாறிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது.   06:39:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
20
2012
சம்பவம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு: பிரச்சனையை அரசியலாக்கும் கன்னட அமைப்புகள்
தமிழ்நாட்டின் பிரச்னை என்ன என்பது மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் தெரியாதா? அவர்களுக்கு தெரியாத மாதிரி நடிக்கிறார்கள். தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்று விட்டதால் குடிநீருக்கே பஞ்சம் வந்து விட்டது . கர்நாடகமும் பிரதமரும் செய்யும் அடாவடித் தனங்களை செய்திகளில் பார்த்த உச்ச நீதி மன்றம் தானாகவே முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்து தமிழ் நாட்டுக்கு தண்ணீர்விட கர்நாடகத்துக்கு உத்தரவிடவேண்டும்.   06:31:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
20
2012
சம்பவம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு: பிரச்சனையை அரசியலாக்கும் கன்னட அமைப்புகள்
நியாயவாதியை எதிர்த்து கோர்ட்டுக்கு போகவேண்டியதில்லை அநியாயவாதியை எதிர்த்து கோர்ட்டுக்கு போனாலும் பிரயோஜனமும் ஏற்படுவதில்லை என்ற நிலை தமிழ்நாட்டுக்கு. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு அவர்கள் அடித்த கொள்ளை பணத்தை எப்படி முதலீடு செய்து காப்பாற்றுவது என்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.தமிழ் நாட்டை பற்றியும் விவசாயிகளை பற்றியும் நினைக்க நேரமில்லை. காவிரியில் தண்ணீர் வந்தால் என்ன வராவிட்டால் என்ன அவர்கள் கவலைபட மாட்டார்கள். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத்தவிர வேறு வழி தெரியவில்ல.   06:22:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
14
2012
பொது வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம்
அறுபது ஆண்டு காலம் அஹிம்சை வழியில் போராடியவர்களுக்கு இலங்கை அரசாங்கம் என்ன மரியாதை கொடுத்தது.அவர்களை ஆயுதம் வைத்து இலங்கையை ஆண்டவர்கள்தான் என்பதை வரலாறு படித்தவர்கள் உணர்வார்கள். எல்லா அஹிம்சை வழி முயற்சியையும் இலங்கை அரசு தனது பயங்கரவாதத்தால் தோற்கடித்தது. உலக நாடுகளும் கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகுதான் ஆயுதம் ஏந்தி போராடும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்கள். இதையெல்லாம் உணர்ந்து தான் நிறோமி டிசோசா விடுதலை புலியானார்.அங்கே அவரால் கட்டுப்பாடாக இருக்க முடியாத காரணத்தாலும் சுகவாழ்க்கையை அனுபவிக்கும் ஆசையாலும் அங்கிருந்து வெளியேறி மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்புகிறார்.   05:33:04 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment