நியாயமான வருத்தம், இந்திய அரசு தன் சார்பில் இவரை அனுப்பி ஏலத்தில் காந்தியின் பொருட்களை ஏலம் எடுத்து அவற்றை இந்திய கொண்டு வந்திருக்க வேண்டும். எது எதுக்கோ கோடிக்கணக்குல செலவு பண்றாங்க, இதுல சில கோடி செலவு பண்றதுல தப்பில்ல.
22-மே-2013 13:17:56 IST
இந்த விவகாரத்த இந்திய அரசு அவமானம் பாக்காம இன்டர்போல் விசாரணைக்கு விடவேண்டும். அப்பதான் முழு நெட்வொர்க் வெளிய வரும், இவனுங்களே விசாரிச்சா கெடச்ச ஆளுங்கள பலிகடாவாக்கி திரும்ப மஜா பண்ணுவானுங்க கேடு கெட்டவனுங்க
22-மே-2013 13:16:35 IST
spot fixing இல் சென்னை அணி உரிமையாளரின் உறவினருக்கு தொடர்பு
சென்னை அணி உரிமையாளர் ஸ்ரீநிவாசன்
ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவர், india cements owner , மாறன் brothers கூட்டாளி
தலைவரே fixing பண்றப்ப எப்படி விவகாரம் வெளிய வரும்? இத சிபிஐ கூட விசாரிக்க கூடாது, இன்டர்போல் விசாரிக்கணும், காரணம் இது இந்தியர்கள் மட்டும் சம்பந்தபடல, linked to தீவிரவாதிகள்(தாவூத் n கோ)
22-மே-2013 13:14:34 IST
"விளையாட்டு வீரர்களை குறிப்பிட்ட அளவுக்கு தான் பி.சி.சி.ஐ., கட்டுப்படுத்த முடியும்", "ஒவ்வொரு அணியிலும் ஊழல் தடுப்பு குழ அதிகாரிகள் இடம்பெறுவார்". ஊழல் தடுப்பு குழு என்ன வேலை செய்யுதுன்னு உங்களால சொல்ல முடியுமா? ஒவ்வொரு அணியிலையும் 100 பேரா இருக்காங்க? 15 பேர் தப்பு பண்றாங்களான்னு கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு உலகத்துல பணக்கார கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐ இருக்கு சொன்னா சிரிக்க மாட்டாங்க?
நேத்து சென்னை பெங்களூர் மேட்ச்ல நெறைய சந்தகத்துக்கு இடமான செயல்கள் நடந்துது. இனிமே வழக்கத்துக்கு மாறா மேட்ச்ல எது நடந்தாலும் ரசிகர்கள் சந்தேகத்தொடதான் பாப்பாங்க. நேர்ல பாக்க ஆயிரக்கணக்குல பணம் கொடுத்தும் 4 மணி நேரம் டிவி முன்னாடி உக்காந்தும் மேட்ச் பாக்குற ரசிகர்கள் உங்களுக்கு கேணயனா தெரியுரானா Mr சீனிவாசன்? அரசியல்வாதிகள்தான் எங்கள எமாத்துராங்கன்னா நீங்களுமா?
எதுவுமே எங்கலலால தடுக்க முடியாது, எங்களுக்கு பணம்மட்டும்தான் சம்பாதிக்கணும் அப்டின்னு சொன்னிங்கன்னா, சரிதான் போங்கடான்னு நாங்களும் கிரிக்கெட் பாக்குறத விட்டுட்டு எங்க வேலைய பாக்க போய்டுவோம், நீங்க தலையில துண்ட போட்டுக்கிட்டு கிரிக்கெட் வெளையாடுங்க.
19-மே-2013 14:33:01 IST
கமலின் உணர்ச்சி பெருக்கான பேட்டியில் - "இருந்த ஒரே சொத்தான வீட்டை அடமானம் வைத்து படம் எடுத்துருக்கிறேன்" என்று சொன்னது தேவை இல்லாதது. தொழில் மூலதனம் தேவைப்படும் அனைவரும் நகையையோ சொத்து பத்திரத்தையோ அடமானம் வைப்பது வழக்கமான ஒன்று. "நியாயத்துக்கு புறம்பாக என் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் " என்று கமல் கோவப்பட்டிருந்தால் வரவேற்று இருக்கலாம். "ஒரே வீட்டை அடமானம் வைத்து" என்று அனுதாபம் தேடி இருக்க வேண்டியதில்லை. நாளை, அவர் வேறு ஒரு படத்திற்காக இந்த வீட்டை மீண்டும் அடமானம் வைத்து படம் எடுக்கலாம், அது அவர் உரிமை, தொழிலில் ஒரு வழக்கமான செயல், லாபம் சம்பாதித்தால் வீட்டை மீட்பார் இல்லை என்றால் வீடு ஏலத்திற்கு போகும், இதை தெரிந்தேதான் அவர் செய்கிறார். அவரது பெட்டியை கண்டு அதற்காக உணர்ச்சிவசப்பட்டு கமலுக்கு பணம் அளித்தவர்கள் நிறைய பேர், அவர்கள் முதலில் தங்கள் குடும்ப நலனை பேணட்டும். சினிமா பார்க்கலாம், சினிமா பைத்தியம் பிடித்து இருக்க கூடாது. மதமும் அதே போல்தான், எம்மதமானாலும் நம்பிக்கை இருக்கலாம், மூட நம்பிக்கை இருக்க கூடாது.
04-மார்-2013 04:43:18 IST
வாழ்த்துக்கள். இதே போல் திமுக தலைவரின் பேரனும், திமுக முன்னால் அமைச்சரான தயாநிதி மாறனின் அண்ணனுமான சன் நெட்வொர்க் கலாநிதி மாறன் நடத்தும் spice jet விமான நிறுவனத்தின் srilanka colombo நகருக்கான விமான சர்வீஸ் நிறுத்த சொல்லுங்களேன். flight number "SG 1". அதேபோல் பெரியார் வாரிசு என பேசும், திராவிடத்தை வளர்க்கும்(என சொல்லி கொள்ளும்) திமுக தலைவரின் பேரனின் தொலைகாட்சியில் மகாபாரதம் எதற்கு?
22-பிப்-2013 04:49:14 IST
நீண்டகால நிவாரணம் 4 வழி பாதை. இப்போதைக்கு இரு வழி பாதை தொடங்கும் இடத்தில் speed breaker , அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். புதிதாக இந்த வழியில் வருபவர்கள் திணறி போவார்கள். உண்மையான செய்தி.
19-பிப்-2013 11:53:22 IST
திமுக காங்கிரஸ் ஆட்கள் இதற்க்கு பதில் சொல்லிவிட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வாருங்கள். அதற்க்கு முன் வந்தால்.. உங்களுக்குதான் சூடு சொரணை இல்லாட்டி எங்களுக்குமா? பூஜ்யம்தான் கிடைக்கும் தமிழ்நாட்டில். இதை உங்கள் இத்தாலி தலைமையிடம் சொல்லிவிடுங்கள்.
19-பிப்-2013 11:50:43 IST
எப்படி சினிமா உலகினருக்கு தங்கள் கருத்துக்களை சொல்லி படம் எடுக்க உரிமை உள்ளதோ, அதே போல் அந்த படம் ஒருவரையோ ஒரு சமூகத்தையோ இழிவு படுத்துவது, தாக்குவதுபோல் இருந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்களுக்கும் உரிமை உள்ளது. உரிமை அனைவருக்கும் பொதுவானது. ஆனால் அதை நியாயமாக செய்ய வேண்டும், படம் வெளியான பின்னர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
10-பிப்-2013 12:48:21 IST