மக்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமோ பயனோ வாக்களிக்கும் வாய்ப்போ இல்லாத் அஒரு தேர்தல். கட்சிகளின் எம் எல் ஏ எண்ணிக்கைகைகளை வைத்து நடக்கும் ஒரு கூத்து. எப்பவுமே ஆளும் கட்சி தான் அதிக வாய்ப்பைப் பெரும் என்பதும் ஜனநாயக மரபு. இதுக்கு ஏன் இத்தனை அலட்டலோ? தி மு க வேட்பாளர் தோற்றதும், ஆஹா ஊஹூ என்று இன்னும் சில தினங்கள் குதிக்கலாம். கலைஞரை வசை பாடுவதை தொடரவும் வாய்ப்பு, அவ்வளவே..
19-ஜூன்-2013 13:25:38 IST
பா ஜ க விற்கு இது தானே வழக்கம். ஆக்க பூர்வமாக எந்த விவாதத்திற்கும் எப்போதும் பா ஜ க தயாரில்லை. அமளி, வெளிநடப்பு அல்லது அவை ஒத்தி வைப்பு - இவை தான் எதிர்க் கட்சியாக பா ஜ க இதுவரை மக்களுக்காக செய்தது.
19-ஜூன்-2013 13:19:35 IST
வாக்குரிமை இருக்கும் எம் எல் ஏக்களிடம், கட்சி வேட்பாளருக்காக வாக்கு கேட்பதை எப்படி மடிப் பிச்சை, தூது, கெஞ்சல் என்றெல்லாம் சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. கலைஞரை மரியாதையின்றி விமர்சிப்பதே வேலை யாவருக்கும். சொல்லிவிட்டுப் போங்களேன். 23 எம் எல் ஏக்கள் ஆதரவு கனிமொழிக்கு இருக்கிறது. தே மு தி க விற்கு 22. எனவே 6 ஆவது ராஜ்ய சபா எம் பி யாக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம். பொது மக்களின் எந்தப் பங்களிப்பும் இல்லாத இந்தத் தேர்தலுக்கு இத்தனை அலட்டல் தமிழ்நாட்டில் மட்டுமே. எந்த தொலைக் காட்சி சேனல்களும் இது பற்றிக் கண்டு கொள்ளவே இல்லை கவனித்தீர்களா?
19-ஜூன்-2013 11:38:59 IST
மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்றும், ராஜ்ய சபா தேர்தலில் கம்யூனிஸ்ட் உடன் கூட்டு என்றும் அ தி மு க தலைவியின் இரட்டை வேடத்தை விமர்சிக்கவே இல்லை யாரும். திராணி இல்லையோ? பாவம். கம்யூனிஸ்ட்டின் கனவு வார்த்தைகள், அ தி மு க வின் இரட்டை வேடம், தே மு தி க வின் தவறான கணிப்பு இவற்றை விமர்சிப்பதை விடுத்து, கனிமொழி, அழகிரி, ஹார்லிக்ஸ் என்று பினாத்தும் ஜென்மங்களைப் பார்த்து நகைக்கிறேன். அரசியல் பேச இங்கு யாருமிலை. ஒரு குடும்பத்தை விமர்சிக்கும் தாழ்ந்த பிறழ்ந்த மன நிலைக்காரர்கள் தான் அதிகம். 22 எம் எல் ஏக்கள் மட்டும் இருக்கும் தே மு தி க வேட்பாளர் எங்கிருந்து 34 இருக்கிறது என்கிறார்? தி மு க விற்கு 23 எம் எல் ஏக்கள் இருக்கிறார்கள். CPI, CPM எம் எல் ஏக்கள் 18 உம், அ தி மு க வின் 15 உம் சேர்த்தாலும் 33 என்பதால் டி ராஜா வெல்வார். இது பற்றியெல்லாம் அலசி விமரிச்ப்பதை விடுத்து ஒரு குடும்பத்தைப் பார்த்து வயிற்றெரிச்சல் பட மட்டுமே, பலராலும் இந்தக் களன் பயன்படுத்தப் படுகிறது.
19-ஜூன்-2013 08:57:56 IST
எந்த விதத்திலும் மக்களை பங்கெடுக்கவியலாத ஒரு தேர்தல் பற்றி செய்தி. அதையும் விமர்சிக்காமல் வழக்கம் போல கலைஞரை விமர்சிக்கிறார்கள். வெட்கக் கேடு. எப்படியும் டி ராஜா ராஜ்ய சபாவில் அ தி மு க வின் வரிசையில் போய் அமரப் போகிறார். தே மு தி க இளங்கோவனும் ஜெயித்தால், உடனே ஜெயலலிதாவை போய் சந்திக்கப் போகிறார். மக்களவை தேர்தலுக்குப் பின் தம்மை அ தி மு க ஆதரிக்கும் என்று கனவு கண்டு கொண்டிருந்த பா ஜ க ஆடிப் போயிருக்கிறது. தா பா அதை விடப் பாவம். காட்டிய ஆரத்தி எல்லாம் வீணாகி விட்டது. இதெல்லாம் பற்றி யாரும் சொல்வதில்லை.
19-ஜூன்-2013 08:40:18 IST
தேர்தல் பிரச்சாரத்தை, ஏன் கேவலமாக விமர்சிக்கிறார்கள்? கட்சி வேட்பாளருக்காக, வாக்குரிமை இருக்கும் எம் எல் ஏ க்களிடம் வாக்கு கேட்பது சாதாரணம் இல்லையா? இதில் ஏன் தனி மனித விமர்சனங்கள், அதுவும், வழக்கமான நாகரீகமற்ற வார்த்தைகளில்? மக்களவை தேர்தல் எனில் மக்களிடம் வாக்கு கேட்க தலைவர்கள் வருவதில்லையா? இதில் என்ன விசித்திரம் இருக்கிறது? கலைஞர் என்றதும், ஒவ்வொருவரும் தத்தமது அடி மனத்துப் பொறாமை, காழ்ப்புணர்ச்சிகள், கொட்டித் தீர்க்கிறார்கள். அவ்வளவே.
19-ஜூன்-2013 08:35:41 IST
தி மு க தலைவர் மற்றும் கனிமொழி பற்றிய விமர்சனங்கள் அனாவசியம். 23 எம் எல் ஏக்கள் இருப்பதால் போட்டியிடுகிறது தி மு க. வாக்களிக்க வாய்ப்பே இல்லாதவர்கள் இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டாம். எப்படியும் டி ராஜா ராஜ்ய சபாவில் அ தி மு க வரிசையில் தான் உட்காரப் போகிறார். தனது கட்சியின் 5 ஆவது வேட்பாளரை வாபஸ் வாங்க வைத்தது பற்றி எந்த விமர்சனமும் எழுதத் திராணி இல்லை போலும். தி மு க , கலைஞர் என்றால் லட்டு தின்பது போல ஆசை ஆசையாக விமர்சனம் எழுதுவார்கள். நன்றி.
18-ஜூன்-2013 21:12:38 IST
இதன் மூலம் மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் செக் வைத்து விட்டார். மக்களவை தேர்தலுக்குப் பின் தமக்கு ஆதரவளிப்பார் என்று மோடியும் பா ஜ க வும் கண்டுகொண்டிருக்கும் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்.
18-ஜூன்-2013 14:51:22 IST