எங்கள் அன்பு இந்திய உடன் பிறப்புகளே, ஏன் எங்களை ஓரம் தள்ளுகிறீர்கள் ? ஏன் எங்கள் மனதின் கஷ்டத்தை அறிய மறுத்துக்கொண்டு உள்ளீர்கள் ? நாங்கள் செய்யும் தவறுதான் என்ன? ஏன் எங்களை அந்நிய படுத்துகிறீர்கள்? கேவலம் ஒரு நூறு கோடி செலவில் ஆன திரைபடத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்பதக்காகவா நூறு கோடி முஸ்லீம்களின் உணர்வை உடைத்து எறிகிறீர்கள் ??? உங்கள் மன நிலையயை கெடுத்து பணம் சேர்க்கும் ஒரு கூட்டத்துகாகவா உங்கள் கூடவே இருக்கும் நண்பனின் நம்பிக்கையை பொய் ஆக்க முயற்சி செய்கிறீர்கள் ??? உங்களுக்கு மார்க்க ரீதியான நேர்வழியை இறைவன் காட்டவேண்டும் என்று உங்களுக்காக தினமும் ப்ராத்தனை செய்யும் உங்களின் ரத்த உறவுகளையா நீங்கள் தீவிரவாதி என்று முத்திரை குத்துகிறீர்கள் ??? முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று சொன்னால்தான் நீங்கள் தேசியவாதிகள் ஆக முடியுமா ? இல்லை என்றால் நாங்கள் எங்களின் மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்கின்றது என்று சொன்னால்தான் எங்களையும் தேசியவாதி என்று சொல்வீர்களா ??? எங்களிடம் நீங்கள் எதிர் பார்பதுதான் என்ன ??? திரையில் என் இனத்தை தீவிரவாதி என்று சொல்லும்போது நாங்களும் உங்களுடன் சேர்ந்து கை தட்டி விசில் அடிக்கவேண்டும் என்று ஆசை படுகிறீர்களா??? எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றாலும், தயவுசெய்து குரல் கொடுத்துக்கொண்டு இருக்கும் குரலின் நியாயத்தை குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள், அதில் இருக்கும் உண்மையை புரிய முயற்சி செய்யவும் இன்னும் எத்தனை காலம்தான் நாங்கள் அமைதியை காக்க முயற்சி செய்வது ?ஒன்று படுவோம்..தேசத்தை காப்போம்..
30-ஜன-2013 17:30:50 IST
கடந்த ஒரு வாரமாக செய்திகளில் எங்கு பார்த்தாலும் கூடங்குளம் கூடங்குளம் என்று தான் ஒலிக்கிறது...ஒரு சின்ன கிராமம் இந்திய அரசாங்கத்தையே ஆச்சரியபடுத்தும் அளவுக்கு அவர்களின் போராட்டம் இருக்கிறது என்பது பாராட்டுதல்குரியது...மக்கள் ஆட்சிதான் நடை பெறுகிறது என்று உணர்த்தினாலும், ஏனோ இவர்களின் போராட்டம் சரிதான் என்பதை மனசு ஏற்க மறுக்கிறது...ஏனெனில் நன்கு கற்று அறிந்த அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் எந்த வித தீங்கும் இல்லை என்று மெய்ப்பட உறுதி அளித்த பிறகும் இவர்கள் இதை ஏற்காது இப்படி பொதுமக்களுக்கும், அராசங்கத்திர்க்கும் இடையூறு தருவதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது...இவர்களின் உண்மையான போராட்டத்தை ஆராய வேண்டிய கடமை முதல்வருக்கு நிச்சயம் உண்டு...இந்தியாவையே உலுக்கும் இவர்களின் போராட்டத்தை இன்றளவும் முதல்வர் அவர்கள் நேரில் சென்று உண்மை நிலவரத்தை அறியாதது வருத்தம் அளிக்கிறது...மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டி தானே உங்களுக்கு வாக்கு அளித்து கௌரவமான பொறுப்பை ஒப்படைக்கிறோம்...பாவம் அவரும் என்ன செய்வார் வெற்றி பெற்ற தொகுதிக்கு சென்று ஏதாவது கதை சொல்வதும் , கொடை நாட்டில் ஓய்வு எடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது...மக்களுக்காக சேவை செய்ய போராடும் தலைவர்களை காண்பது மிக அரிதாகி விட்டது...(வல்லரசு நாடு வேண்டாம் ..வறுமை இல்லாத நாடு வேண்டும்..)
13-செப்-2012 13:28:10 IST