Suresh Yesubalan : கருத்துக்கள் ( 65 )
Suresh Yesubalan
Advertisement
Advertisement
ஜனவரி
8
2017
அரசியல் கறுப்பு பணத்தை ஆராதிக்கும் அரசியல் பூசாரிகள் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்
இவர் பொய்யான விதைகளை விதைப்பார் , தண்ணீர் பாய்ச்சுவார் , உரமிடுவார், களை எடுப்பார், வேலி அடைப்பார். ஆனால் விதை முளை கிளப்பாது . மக்களிடம் ,கற்பாறை நிறைந்த நிலம். ஆதலால் விதை மக்கி போயிற்று என்று மீண்டும் ஒரு பொய்யை சொல்வார். இப்படி ஒரு பொய் சொல்லும் பிரதமரை, இந்த நாடு இதுவரை கண்டதில்லை .   12:34:20 IST
Rate this:
16 members
0 members
64 members
Share this Comment

ஜனவரி
5
2017
அரசியல் உ.பி.,யில் பா.ஜ.,வுக்கே வெற்றி வாய்ப்பு
கருத்து கணிப்பு என்பது ,குருட்டு மாணவன் எழுதிய பரிட்சைக்கு ,குருட்டு ஆசிரியர் போடும் மதிப்பெண் .   16:33:05 IST
Rate this:
14 members
1 members
15 members
Share this Comment

ஜனவரி
2
2017
அரசியல் 14 ஆண்டு வனவாசம் முடிந்தது உ.பி.,யில் பா.ஜ., ஆட்சி மலரும்
டெல்லி சொல்லியும் கேட்கவில்லை ,பீகார் சொல்லியும் கேட்கவில்லை . மக்கள் சொல்லியும் கேட்கவில்லை .இவர் சொன்னதையே திருப்பி ,திருப்பி சொல்லும், பஞ்சவர்ண கிளி .தன் சிறகுகள் பிடுங்கப்பட்டது தெரியாமல் ,தன் கீச் குரலினால் மக்களை மகிழ்விக்கிறது .   13:37:29 IST
Rate this:
22 members
0 members
21 members
Share this Comment

டிசம்பர்
29
2016
அரசியல் டிச.,31ல் டிவியில் பேசுகிறார் பிரதமர் மோடி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?
டிசம்பர் 31 இரவு 7 .30 மணிக்கு கருப்புப்பண படத்தின் part 2 வெளீயிட்டு விழா   17:33:05 IST
Rate this:
4 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
27
2016
அரசியல் விமர்சிப்பவர்களுக்கு எதிராக நரேந்திர மோடி... கொதிப்பு!குத்துவிளக்கேற்ற பிரதமராகவில்லை என்கிறார்
தோல்வி திட்டம் ,தோல்வியில் முடிந்தது .கெடு முடிந்தது ,பேச்சு முடியவில்லை .என்னை முச்சந்தியில் வைத்து கேள்வி கேளுங்கள் என்று மக்களை முச்சந்தியில் நிற்கவைத்தது தான், இந்த திட்டத்தின் வெற்றி. 15 லட்சமும் போச்சு ,டிசம்பர் 31 போச்சு .இன்னும் நீண்ட தூர பயணம் உள்ளது ,பொய் வேண்டாம் .கசப்பான உண்மையைக்கூட பேசுங்கள் ,இனிப்பான பொய் வேண்டாம் .   13:12:16 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

டிசம்பர்
27
2016
அரசியல் சொன்னதை மறக்க மாட்டேன் பிரதமர் மோடி
சொல்லியதை மக்கள் மறந்துவிட்டார்கள்.மறந்து விடுவார்கள்ன்னு சொல்லிக்கொன்டே இருக்காதீர்கள், மறக்க முடியவில்லை .   20:34:23 IST
Rate this:
6 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
25
2016
அரசியல் கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான அரசின் போர்... தொடரும்!மக்கள் தரும் தகவல்படியே வேட்டை நடப்பதாக மோடி தகவல்
தமிழ்நாட்டின் தலைமைச்செயலர் செய்த ஊழல் மறைந்த முதல்வர் மறைவுக்கு பின் நடந்த ஊழல் அல்ல . அவர் பதவி ஏற்ற நாளில் இருந்து நடந்த ஊழல் . மறைந்த முதல்வர் வாழ்ந்த நாட்களில் உங்க ஊழல் போர் முனை மழுங்கியது ஏன் ?பலவீனமான மிருகங்களை கொன்று தின்னும் கொடிய மிருங்களைப்போல் செயல்படாமல் ,மனிதர்களை போல் செயல்படுங்கள் .ஒருவரின் கல்லறை ஈரம் காய்வதற்குள் ,உங்கள் ஊழல் முனை மழுங்கிய வாள்,தலைமை செயலாளரை பதம் பார்த்ததோ இல்லையோ ,மறைந்த முதல்வரின் உடலை அங்குலம் ,அங்குலமாய் சிதைத்தது மட்டும் உண்மை .ஊழல் போர் எட்டுத்திக்கும் நடக்கட்டும் .மக்களை கயிறு இல்லாமல் கட்டிப்போட வேண்டாம் .இது தொடர்ந்தால் மக்கள் உண்மையில் ஒரு சுருக்கு கயிறை பரிசாக தருவார்கள் .   12:29:04 IST
Rate this:
13 members
0 members
31 members
Share this Comment

டிசம்பர்
24
2016
அரசியல் நாட்டு நலனுக்காக கடின முடிவு எடுக்க தயங்க மாட்டேன் பிரதமர் மோடி பேச்சு
தயவு செய்து இன்னொரு கடினமான முடிவு எடுத்துவிடாதீர்கள் ,எங்களிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை ,ஏனெனில் முன்பு எடுத்த கடின முடிவில் ,எங்கள் கோவணங்களின் முடிச்சு அவிழ்ந்து விட்டது .   16:05:08 IST
Rate this:
30 members
1 members
63 members
Share this Comment

டிசம்பர்
22
2016
அரசியல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பிரதமர் மோடி...சரவெடி!கறுப்பு பண முதலைகளுக்கு வக்காலத்து என விளாசல்
மோடி அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தின் ஒரு கால் கருப்பு பணக்காரனால் செய்யப்பட்டது.அவர் எழுதும் பேனாவில் கருப்பு பணக்காரனின் மையினால் நிரப்பப்பட்டது என்பதும் மக்கள் அறிவார்கள். மோடி எங்களை காக்க வந்த கடவுள் இல்லை ,எங்களுக்கு சேவகம் செய்யவந்த சேவகன் என்ற புரிதல் உருவானால் ,இங்கே இத்தனை முரண்பட்ட கருத்துக்கள் உருவாகாது .   15:59:01 IST
Rate this:
13 members
1 members
34 members
Share this Comment

டிசம்பர்
22
2016
அரசியல் " பேச கற்கும் ராகுல்" - பிரதமர் மோடி
பேச கற்க வேண்டும் என்பதற்கு இது பட்டி மன்றம் இல்லை.இது மக்கள் மன்றம். இங்கு கருத்து பரிமாற்றம்தான் தேவை.வார்த்தை பரிமாற்றம் இல்லை. எவ்வளவு பேசுகிறோம் என்பது முக்கியம் இல்லை.என்ன பேசுகிறோம் என்பதுதான் முக்கியம் .இடைவிடாத பேச்சு சலிப்பை தரும்.   22:36:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment