எம் ஜி ஆர் காலத்திலிருந்து பல வருடங்கள் அரசியல் அனுபவங்களையும் நுணுக்கங்களையும் அறிந்தவர் பண்ருட்டியார். அவரை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டால் தேமு திக விற்கு ஓரளவு நன்மை. அரை வேக்காடு பிரேமலதாவும் அவரது தம்பியும் ஆக இரண்டு பேரு போதும் அக்கட்சியை அழிப்பதற்கு. கூடிய சீக்கிரம் பண்ருட்டியை இழந்து விட்டு இந்த விஜயகாந்த் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரவுண்டு ஏத்திக்கிட்டு புலம்ப போகிறார்.
15-மே-2013 08:35:50 IST
ஒரு நல்ல செய்தியை தலைப்பாக வைத்தது சரியானதே. ஆனால் யாரை திருப்தி படுத்த இந்த மாதிரி ஒரு கார்டூனை வரைந்தீர்கள். சில சமயம் தினமலரின் குசும்பு ஓவர். இதெல்லாம் வேண்டாம் சரியா? வழக்கம் போல நடு நிலையான உண்மையின் உரை கல்லாக இருக்க வேண்டுமென்பதே எல்லாருடைய விருப்பம்.
15-மே-2013 08:22:41 IST
இதுக்கெல்லாம் யாரும் தப்பான கருத்தை எழுதக்கூடாது. உண்மையிலேயே கருணா அவர்கள் சொன்னது , அதுவும் அவர் ஸ்டைலில் சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
14-மே-2013 08:28:21 IST
சேதம் குறித்த மதிப்பு பட்டியல் தயார் செய்து அதை அந்த வன்முறை வெறி கட்சியிடம் வாங்குவது மட்டும் போதாது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அந்த வன்முறை கட்சியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்து தேர்தலில் போட்டியிடாமல் செய்ய வேண்டும்.
13-மே-2013 07:19:22 IST
திரு ராஜவர்ம பல்லவன் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், அது என்ன பஞ்சம் பொழைக்க ......? நாம் இந்தியர்கள் எந்த மாநிலம் வேண்டுமானாலும் போக முழு உரிமை உண்டு. அதுக்கு பேரு பஞ்சம் பொழைக்க அல்ல...திறமையை வைத்து பிழைப்பது. நீங்கள் வேண்டுமானால் உங்களுக்கு திறமை இருந்தால் போங்களேன். அது மட்டுமல்லாமல் கொஞ்சம் மரியாதை நாகரீகத்தோடு பதில் கருத்தை தெரிவிக்கலாமே.
07-மே-2013 12:12:02 IST
நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒருத்தன் போதாது என்பான். ஆனால் சாப்பாடு மட்டும் போதும் என்பான். எனக்கு தெரிந்து இந்த திட்டம் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு தெரிந்தால் உடனே காப்பி அடிக்கும் திட்டம். ஒரு தாய்க்கு மட்டுமே மனதில் உருவான திட்டம். வாழ்க அம்மா. நாட்டை சுரண்டி தின்னவர்கள் எல்லாம் இன்று பொறாமையினால் வெம்பி போய் விட்டனர்.
23-ஏப்-2013 16:16:37 IST
எந்த வழக்கிலுமே நம் நாட்டில் வரும் தீர்ப்பை பார்த்துவிட்டு மக்கள் சொல்வது ...காலதாமதம் என்றுதான். காலதாமதம் என்பது எந்த விதத்திலும் ஒரு நிரபராதி பாதிக்கப்பட்டோ அல்லது தண்டிக்கப்படக்கூடாது என்பதே நோக்கம். எனவே தாமதத்தை பொறுத்தே ஆகவேண்டும். பாக்கி மூன்றரை வருடம் அனுபவித்து ஆக வேண்டுமல்லவா இந்த சஞ்சய் தத் .. இது தான் நீதி வெல்லும் என்பது.
22-மார்-2013 08:21:10 IST
சிதம்பரம் ...........இவரெல்லாம் ஒரு தமிழனா? ஆட்சிக்கு பாதிப்பு இல்லை என்று சொல்ல தெரிகிறது. அந்த தமிழினத்திற்கு ஏற்பட்ட நிலைமைகளை நினைக்க முடியாத ஒரு பாவி என்றுதான் சொல்ல முடியும் இவரை பார்த்து.. உமது வாழ்நாளில் இனி மத்தியில் மந்திரி பதவியை அடையபோகும் வாய்ப்பே இல்லை. 2014க்கு மேல் காணாமல் போகப்போகிறீர்கள்.
21-மார்-2013 07:54:48 IST
சத்தியமா சொல்றேன் எழுதி வச்சுக்கங்க. திமுக வாபஸ் வாங்க போவதுமில்லை. ஒரு ஆணியும் பிடுங்க போவதுமில்லை. இது எப்படின்னா ...நான் நோகாம அடிக்கிறேன் நீ ஓயாம அழு என்பதுதான். இவர்கள் திட்டம். தமிழ் அகராதியை இப்போது திருத்தி எழுத வேண்டுமானால் .. தமிழின துரோகி என்பதன் பொருள் : கருணா என்பதுதான்.
18-மார்-2013 09:09:12 IST