E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Panneer : கருத்துக்கள் ( 169 )
Panneer
Advertisement
Advertisement
ஜூலை
29
2014
சம்பவம் வேலூரில் தீக்குளித்த பெண் பலி 10 முறை மனு கொடுத்தும் பலனில்லை
ஆட்சிக்கு வந்தவுடன் நில அபகரிப்பை தடுக்க மாவட்டம் தோறும் காவல் துறை கண்காணிப்பு அலுவலகத்தில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் இது அப்பாவி பொதுமக்களின் மனுக்களை பதிவது கூட இல்லை.. வேண்டப்பட்ட அரசியல்வாதிகளை ஒடுக்கவே பயன் பட்டது என்பதை ஊரறியும்.. எந்த ஒரு மனு கொடுத்தாலும் அதில் சிறிதேனும் உண்மை இருக்குமென்றால் காவல் துறை FIR போடவேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுவதே இல்லை.. நில சம்பந்தப்பட்டவை சிவில் நடை முறை சட்டத்தின் கீழ் வந்தாலும் வன்முறைகள் தலைதூக்கும் போது காவல் துறை ஈடுபட்டுத்தான் பாதிக்கப்பட்டவரை கப்பாற்ற வேண்டும்...காவல் துறையின் செயல்பாடுகள் நீதியைவிட நிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்குமானால் அப்பாவி மக்களால் என்னதான் செய்யமுடியும் ? பிரிட்டிஷ் காரன் நம்மை அடிமைப்படுத்த போட்ட சட்டங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன..ஆட்சிக்கு வருபவர்கள் மட்டும் பாதுகாகப்படுகினறனர், காவல்துறையால்   10:26:36 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
21
2014
அரசியல் லோக்சபா எம்.பி.,க்கள் இருக்கை மாற்றியமைக்க சபாநாயகர் முடிவு
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உரிய அந்தஸ்து ஜனநாயகத்தில் கிடைக்கவேண்டும் ..பெரும்பான்மை உள்ளது என்ற காரணத்துக்காக எதிர் கட்சிகளை ஒடுக்க அல்லது அழிக்க முயலும்போது அடுத்து வரும் தேர்தலில் மக்கள் ஆட்சி மாற்றத்தை தான் விரும்புவார்கள்..காங்கிரஸ் தோல்விக்கு ஊழலும் , லஞ்சமும் தான் முக்கிய காரணம்..மக்கள் விரும்புவது பாதுக்காப்பான நல்லாட்சி .மட்டும்தான். .   09:37:55 IST
Rate this:
8 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
20
2014
அரசியல் சட்டசபைக்குள் மட்டும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்
எதிர் கட்சிகளில் ஓரிருவர் ஜெயித்து வந்தாலே அது வரலாற்று சாதனையாக இருக்கும் எனபது 2016 இல் நடக்கும் தேர்தலில் நிகழத்தான் போகிறது.எதிர் கட்சிகளில் ஓரிருவர் கூட ஜெயிப்பது சந்தேகமே.   08:25:40 IST
Rate this:
5 members
0 members
32 members
Share this Comment

ஜூலை
18
2014
கோர்ட் மதுரையில் நில அபகரிப்பிற்கு துணைபோன போலீஸ் அதிகாரிகள் ஐகோர்ட் நோட்டீஸ்
அரசியல் முக்கியத்துவம் இல்லாத நில அபகரிப்பிற்கு துணை போவதால் போலீஸ் அதிகாரிகள்: குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஆதாய நோக்கத்துடன் தவிர்க்கின்றனர்..நில அபகரிப்பை தவிர்பதர்ற்கு பதிலாக துணைபோவது தமிழக அரசால் கண்டுகொள்ள படுவதில்லை .ஆட்சிக்கு யார் வந்தாலும் காவல் துறை தயவில்லாமல் பதவியில் நீடிக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டே செயல் படுவதால் நீதியின் கண்கள் மட்டுமல்ல கரங்களும் கட்டப்பட்டுள்ளன..பிரிட்டிஷ் காரன் விட்டுசென்ற IPC / CR .PC போன்ற சட்டங்கள் காவல்துறையின் கவசமாக இன்றும் செயல் படும்போது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு இதுபோன்ற பழைய சட்டங்களை என்று தான் தூக்கி எரிந்து விட்டு புதிய மக்கள் நலம் பேணும் சட்டத்தினை கொண்டுவருவார்களோ ? போஸ்டர் ஓட்டுபவர்,கொடி கட்டியவர் ,தலைமைக்கு அடிபணிபவர்,கட்சிக்கு உழைத்தவர் என்ற தகுதிகளின் அடிப்படையில் மட்டும் கட்சிகள் பிரதிநிதிகளை நிறுத்தினால் அப்படிப்பட்டவர்களை மக்கள் நிராகரிக்கும் காலம் எனு வருகிறதோ அன்று தான் , மக்களால், மக்களுக்க்காக என்ற ஜனநாயகம் உருவாகும்.   08:13:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
14
2014
பொது 5 மாநில கவர்னர்கள் நியமனம் ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு
ராணுவத்திலும்,அரசுப்பணியிலும் மிக உயர் பதவியில் இருந்து,சிறப்பாக பணியாற்றியவர் கண்டறியப்பட்டு ஆளுநர்களாக நியமிக்க வேண்டும்..குறிப்பாக ராணுவத்தில் உயர் பதவி வகிப்பவர்கள் நாட்டு நலனில் பணி ஓய்வுக்குப்பின் பயன் படுத்தி கொள்வதன் மூலம் அவர்களை ஊக்குவிக்கலாம்... அரசியலில் உழன்று தள்ளாத வயதில் தேர்தலில் தோல்வியை தழுவியவர்கள்,ஷீலா தீச்சட் போன்றவர்கள் கட்சி சார்பில் ஆளுநர்களாக நியமிப்பது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. காலப்போக்கில் ஜனநாயகம் சீரழிய இதுபோன்ற நியமனங்கள் வழி வகுத்து விடும் .. குறிப்பாக எதிர் கட்சிகள் ஆட்சியில் உள்ளமாநிலங்களில் .   19:47:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
13
2014
அரசியல் அமைச்சர்கள் திணற வேண்டும் விஜயகாந்த் அட்வைஸ்
தற்போதுள்ள சூழ்நிலையில் எதிர்கட்சிகள் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டும் என்றால் வாயை திறக்காமல் இருக்க வேண்டும்.. அப்படி திறந்து பேச வேண்டுமென்றால் அரசின் செயல்களை புகழ்ந்து பேசலாமே தவிர குறை சொல்லக்கூடாது.அப்படி இல்லையென்றால் ஒன்று தானாக வெளியேற வேண்டும். அல்லது வெளியேற்றபடுவார்கள்..அடுத்து வரும் தேர்தல்களில் எதிர் கட்சிகளில் யாரும் இருக்க மாட்டார்கள் எனபது மட்டும் நிச்சயம்.   21:42:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
11
2014
அரசியல் ஜெட்லி தாக்கல் செய்த மோடி அரசின் முதல் பட்ஜெட் நெருக்கடியை ஏற்படுத்தும் மானிய செலவு சுமைக்கு குறி
தன் வாரிசுகளை உலக அளவில் பெரும் பணக்கரர்ரகிய மாறனுக்கு பார்லிமென்ட் வளாகத்தில் சிலை... வைக்கபட்டிருக்கலாம்.. சுதந்திர போராட்ட தியாகிகள் எல்லோருக்கும் சிலை வைப்பதென்றால் யார் முன்வருவார்கள். கூட்டணி கொடுத்த அழுத்தத்தில் சிலை வைக்கப்பட்டது.உண்மை   21:18:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
9
2014
கோர்ட் சென்னையில் 11 மாடி கட்டடம் இடிந்த சம்பவம்சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு
முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., விசாரணை செய்தால் தான் யார் குற்றவாளி எனபது வெளிச்சத்துக்கு வரும். ..தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் கொண்டுவந்து தண்டிக்கப்படவேண்டும்.. விபத்தில் உயிர் பலிக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு விதிகளை மீறியவர்களே காரணம் எனபது மறுக்க முடியாத உண்மை.. சட்டம் இதில் தன கடமையை செய்யுமா?   14:00:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
5
2014
கோர்ட் மவுலிவாக்கம் கட்டட விபத்து இருவர் ஜாமின் மனு தள்ளுபடி
அரசு வழக்கறிஞர் சம்பத் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.என்பதெல்லாம் சரி.கட்டட பொறியாளர் வெங்கட சுப்ரமணியன், கட்டட வடிவமைப்பாளர் விஜய் பர்கோத்ரா ஆகியோர், ஆகியோர் 6 மாடி கட்ட மட்டும் தான் பிளான் போட்டு கொடுத்திருக்க முடியும்.. பிளானை ஏற்றுக்கொண்டு கட்டட அனுமதி கொடுத்த செயலுக்கும்,12 மாடி கட்டும் வரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு யாரால் அளிக்கப்பட்டுள்ளது? தமிழ் நாட்டிலேயே கோடி கணக்கில் லஞ்சம் புரளும் ஒரே அமைப்பு CMDA ஒன்று தான்.. இந்த CMDA 1992 இல் திருத்தப்ப இந்திய அரசமைப்பு சட்ட பிரிவு 243 ZE இன் படி அமைந்ததல்ல எனபது எவறாலும் ,நீத்மன்றம் உட்பட கண்டுகொள்ளப்படவில்லைமேற்குறிப்பிட்ட சரத்துப்படி, மூன்றில் இரண்டு பங்கு பிரதிநித்துவம் தேர்ந்தெடுக்கப்பட மக்கள் பிரதிநிதிகள் இருக்கவேண்டும் என்றுள்ளது. அனால் தற்போதுள்ள CMDA வில் 3 அல்லது 4 பேர் மட்டுமே உள்ளாட்சி பிரதிநித்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது..எனவே தற்போதுள்ள CMDA வே அரசமைப்பு சட்டத்துக்கு உட்பட்டது அல்ல. .திட்ட அனுமதி, கட்டட அனுமதி என ரேட் வைத்து அங்கீகரிக்கும் CMDA வின் செயல்பாடுகளை CBI விசாரணைக்கு உட்படுத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சதுக்குவரும்..   11:20:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
2
2014
அரசியல் தினமலர் நாளிதழுக்கு எதிராக தமிழக முதல்வர் மனு
லஞ்சம் இல்லாமல் கட்டட அனுமதிய எவராலும் வாங்கமுடியாது. லஞ்சம் கொடுத்தவர்கள் உண்மையை சொல்லுவர்களேயானால் அவர்களும் குற்றவாளிகள் என்ற சட்டம் இருக்குவரை லஞ்சம் வாங்குபவர்கள் பாதுகாக்க படுகின்றனர் ..சுலபமாக காசு பார்க்க ஈசல் போல கட்டுமான நிறுவங்கள் வந்துவிட்டன. தமிழ் நாட்டில் இருந்துவந்த கட்டிடதொழிலாளிகளின் எண்ணிக்கை டாஸ்மாக் கைங்கரியத்தால் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது என்பது ஒரு காரணம்.. வெளி மாநிலங்களில் இருந்து வரும் பெரும்பாலனவர்கள் முதிச்சி அடையாத பணியாளர்கள் .. அதிக உயரம் 12 மாடி என்பதெல்லாம் மிக பெரிய நிறுவங்களால் தான் தரமாக கட்ட முடியும். இதே மாதிரி கட்டிடத்தை லார்சன் அண்ட் டோப்ரோ பெரிய நிறுவனங்கள் கட்டியி இருந்தால் விழுந்திருக்குமா?   05:15:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment