20 ரூபாய் அரிசி வேக நீண்ட நேரம் எடுப்பதை தவிர்க்க, முதல் நாள் இரவே அரிசியை உறவைத்து, மறுநாள் காலையில் சாதம் வெடித்தால் சாதமும் நன்றாக இருக்கிறது. நீண்ட நேரம் வேகவைப்பதும் குறைகிறது. ரேஷன் துவரம் பருப்புக்கும் இந்த முறையை கடைப்பிடித்தால் காஸ் சிக்கனம் மட்டுமின்றி பருப்பும் நன்றாக வேகிறது.
23-மே-2013 07:39:53 IST
ஏனையா இப்படி பீதியை கிளப்புகிறீர்கள் ? ஏற்கனவே வெளிச்சந்தையில் அரிசி விலை கிலோ ரூபாய் 46 முதல் 58/60 முதலும் வெறும் மாவு அரிசி விலை 35 ரூபாய்க்கும் விற்கிறது. இந்த செய்தியை படித்தால் அரிசி கொள்ளை வியாபாரிகள் குறைந்த பட்ச விலையை கிலோ ரூபாய் 50 ஆகவும் அதிகபட்ச விலையை கிலோ ரூபாய் 75 ஆகவும் நிர்ணயித்து விற்க ஆரம்பித்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.
23-மே-2013 07:33:40 IST
தினசரி உண்டியல் வருவாய் 2 கோடி ரூபாய் கிடைக்கும் நிலையில், இவர்கள் தனி அரசாங்கம் போல வரிவிதிப்பது எந்தவகையில் நியாயம்? முதலில் திருப்பதி நிர்வாகத்தில் முன்பிருந்த, தற்போது இருக்கும் நபர்களின் சொத்துக்களை வருமான வரித்துறை ஆய்வு செய்ய வேண்டும். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக எவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்று ஆய்வு செய்ய வேண்டும். கோவிலின் வரவு செலவு கணக்குகளை சி எ ஜி மூலமாக பார்க்க ஏற்பாடு செய்யவேண்டும். அப்போது தான் பல லட்சம் கோடி ரூபாய் சொத்து மற்றும் வருவாயில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறதென்று தெரியும். ஏழுமலையான் சொத்துக்கள் எவ்வளவு கொள்ளை போயிருக்கிறதென்று வெளிச்சத்திற்கு வரும்.
23-மே-2013 07:21:57 IST
ஏற்கனவே மின்சாரம் தட்டுப்பாட்டால் தமிழகமே அல்லல் படுகிறது. அதுபோல, சென்னையில் செயற்கையாக குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்த ஏதாவதொரு எதிர்கட்சியின் சதியாக இருக்குமோ?
18-மே-2013 14:47:40 IST
எல்லா பத்திரிகைகளிலும், டிவி செய்தி களிலும் வரும் செய்திகள் எல்லாம் பொய்யா? பா.ம.க.,வை வன்முறை கட்சி என்ற பெயரை ஏற்படுத்த இவர்கள் முயர்ச்சிக்கிறார்களா? பா ம க வைப்போல அகிம்சையை போதிக்கும் ஒரு கட்சியை உலகிலேயே பார்க்க முடியாதோ? எவ்வளவு பேருந்துகள் சேதம், எவ்வளவு பேருந்துகள், கார்கள், கண்டைனர், எரிக்கப்பட்டது? எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டன? எத்தனை பேர் தாக்கபட்டார்கள்? அதில் எத்தனை பேர் இறந்தனர்? இதல்லாம் அகிம்சையாளர்கள் செய்யும் செயலா? தமிழக வட மாநில, கிழக்கு மற்றும் மேற்கு மாநில மக்கள் உங்கள் செயலால் வீட்டை விட்டு வெளியே வரவே, பேருந்துகளில் பயணம் செய்யவே பயப்படுகிறார்களே? இந்த கொடுஞ்செயல்களால் பா ம க கட்சி வளரும் என்றோ ஆட்சியை கைப்பற்றலாம் என்றோ நினைக்காதீர்கள். அனைத்து பிரிவு மக்களும் நியாயமான வன்னியர்கள் உட்பட உங்களின் செயல்பாடுகளால் வெறுப்புற்று இருக்கின்றனரே இது உங்களுக்கு தெரிய வில்லையா? "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்பதுபோல இந்த செயல்களுக்கான பதில் வரும் தேர்தலில் எதிரொலிக்கும்.
05-மே-2013 17:31:41 IST
பாமாகாவினர் இவ்வளவு கொடுமையாக வன்முறைகள் செய்திருக்கிறார்கள். இதற்கு அதன் தலைவர் அன்புமணியோ வன்முறைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஆனால் தொண்டர்களை அமைதியாக இருக்கவும் தினமலருக்கு பேட்டி அளித்துள்ளாரே?
03-மே-2013 07:24:18 IST
வட தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகு பொதுச்சொத்துக்களுக்கு வேண்டிய அளவு சேதம் விளைவித்த பின்பும் , பொதுமக்களுக்கு பேருந்துகளை இயக்க முடியாமல் இடையூறு செய்த பின்பும் "வன்முறைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் ஆனால் தொண்டர்களை அமைதியாக இருக்ககோரி அவர்களுக்கு அறிக்கை வெளியிட்டு உள்ளேன் என்கிறாரே
03-மே-2013 07:13:34 IST
30 ஆண்டுகளாக நகராட்சியும் ஊராட்சியும் உயர் மின்னழுத்த கம்பிகளை மாற்ற எழுதிக்கொடுக்காமல் என்ன செய்கின்றன? இந்த ஓட்டு அரசியல் வியாதிகள் என்ன செய்கிறார்கள்?
14-மார்-2013 08:36:19 IST
முதல்வர்கள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களும் குஜராத் முதல்வர் திரு நரேந்திர மோடி அவர்களும்தான். ஆனால் அவர்கள் ஏன் இந்த விலை ஏற்றத்தை மெளனமாக பார்த்துகொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.
14-மார்-2013 08:25:40 IST