உண்மையிலேயே கண் கலங்கிவிட்டேன் . சன்னாசி அவர்களுக்கு எப்படி பாராட்டு தெரிவிக்க முடியும் . வார்த்தையே இல்லை . அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் , அவரது செல்ல குழந்தைகளுக்கும் நீண்ட ஆயுளையும், ஆரோகியத்தையும் வளமான வாழ்வையும் ஆண்டவன் அருள உளமார வேண்டுகிறேன் . வாழ்க வாழ்கவே பல்லாண்டு . - சந்திரகுப்தன் தோஹா
14-ஏப்-2013 11:30:29 IST
சபாஷ் மாணவர்களே சபாஷ் . இன்னும் பல ஆராய்சிகளை செய்து மேன்மேலும் பெயரும் புகழும் அடையவேண்டும் . வாழ்த்துக்கள் . தொலைதூரத்தில் இந்தியா ஒளிர ஆரம்பித்துள்ளது .
24-மார்-2013 12:03:59 IST
ஏட்டையா , ஏட்டை...................யா என்னோட நாட்ட காணல ? கண்டுபிடிச்சுகொடுங்க கதைத்தான் . இது என்ன பிரமாதம் . பெட்ரோலியத்துறை எவ்வளவு கொள்ளையடிக்கிறது என்று அடுத்தமாதம் வரும் . மிரண்டு போய்விடுவோம் . 3 லக்ஷம் கோடிக்கு மேல் அம்பானிகளுக்கு தாரை வார்த்து ஏழை நடுத்தரவர்க்க மக்களின் மீது விலைவாசி ஏற்றம் என்ற தாரை ஊற்றிய ப.சி. , அன்டோனிய மேனியா (சோனியா ) மௌனமோகன சிம்மன், பிரனாப்பு முகர்ஜி, திருட்டு முன்னேற்ற கழகம் (மு.க.குடும்பம், கேடி மாறன் பிரதர்ஸ் & co ) ஊழல்களும் வெளிவரும் . வழக்கம் போல நாமளும் படித்துவிட்டு , நாக்கு வெளித்தள்ள குடும்ப சுமையையும் நாட்டின் சுமையையும் சுமப்போம் . இன்னும் தூங்குவோம் இந்தியனே . ஒரு நாள் நாம் விழிக்கும் போது கட்டிய கோவணமும் உருவப்பட்டிருக்கும் . எத்தனை கோடி கொள்ளையடித்தால் என்ன காலை நீட்டி படுத்துவிட்டால் ஆறடி நிலம் கூட சொந்தமில்லை இது தெரிந்தும் .................. வாழ்க இந்திய பணநாயகம் .
06-மார்-2013 13:30:01 IST
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்ட மாபெரும் தலைவர்..சர்வதேச கொள்ளை கும்பலிடம் இருந்து தன் நாட்டின் எண்ணெய் வளங்களை காத்தவர், எளிமையான மனிதர். எந்த நாட்டு கரென்சிக்கும் எண்ணெய் விற்பேன் என்று அமெரிக்க டாலருக்கு ஆப்பு வைத்த சிறந்த நிர்வாகி. தன் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கியவர். இப்படி பல நாம் கூறினாலும் அந்நாட்டு மக்களின் இந்த இழப்பிற்கு ஈடு இணை இல்லை. நல்லவர் அதனால் 58 வயதில் காலமாகி சரித்திரத்தில் இடம் பிடித்தார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
06-மார்-2013 12:42:36 IST
கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு 128.57 டாலரில் இருந்து 131 டாலராக உயர்ந்த காரணத்தாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்த காரணத்தாலும் பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளன. ஒரு நாளைக்கு ரூ20 / - மாதத்திற்கு ரூ 600/- மட்டுமே வாங்கும் காங்கிரஸ்காரனுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் . தயவு செய்து 1.50 ரூ ஏற்றவேண்டாம் . ஒரு லிட்டர் ரூ 150 ஆக்கிவிட்டால் ஏற்ற இறக்கங்களை பற்றி கவலைபடாமல் குடும்பம் நடத்தலாம் .
02-மார்-2013 17:00:43 IST
எந்த ஒரு திட்டமும் விவசாயிகள் நிலம், மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளிலேயே நடத்துவது அழிவுக்குத்தான் வழிவகுக்கும். ஏற்கனவே நீரில்லாமல் விவசாய நிலங்கள் தரிசாக போகிறது. எங்கும் அதிகார துஷ்ப்ரயோகம் தான். தமிழக விவசாயிகள் ஏமாளிகள் என்ன வேணுமானாலும் செய்யலாம் என்றால் புரட்சித்தான் வெடிக்கும். அம்மாவின் அறிவிப்பு தற்காலிக ஆறுதல் தான். இருந்தாலும் நன்றி , நன்றி .
02-மார்-2013 15:59:37 IST
:பாகிஸ்தானில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் வெட்டு ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.அடப்பாவிகளா நாங்க இங்க ரெண்டுமணி
நேரம் கூட மின்சாரம் இல்லம் இருக்கோம் எங்க நிலைமை என்னன்னு சொல்ல ? நாங்கதான் 55000 MW கரெண்ட் தருகிறோமே அப்புறம் என்ன மின்வெட்டு ? நாங்க சோத்துக்கு சிங்கியடிச்சாலும் அடுத்தவனை வாழவைப்போம் . இதுதாண்டா இந்தியா ?
25-பிப்-2013 12:19:19 IST
இதுவரைக்கும் காங் . முழு பூசணிக்காயை சோத்துப்பரிக்கையில் மறைத்தது . ஆனால் இப்போது முழு பூசணி வயல்களையும் சோத்துப்பரிக்கையில் மறைக்கப் பார்கிறது .
18-பிப்-2013 14:56:08 IST