E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
KR India : கருத்துக்கள் ( 5 )
KR India
Advertisement
Advertisement
செப்டம்பர்
5
2013
வாரமலரில் திரு.செல்லப்பா மற்றும் திரு.வைரம் ராஜகோபால் போன்றவர்களின் ஆன்மீக நன்னெறி தொடர் மிகவும் என்னை கவர்ந்தது. "அன்புடன் அந்தரங்கம்" பகுதி "இது உங்கள் இடம்" போன்றவை பொது மக்கள் எவ்வாறு சமுதாய நீரோட்டத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தி வருகிறது. " டீ கடை பெஞ்ச்" பகுதி குற்றங்கள் செய்யும் நபர்களை மறைமுகமாக இந்த உலகிற்கு தெரிய படுத்தி, அரசாங்கத்தின் காதுக்கும் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க உதவுகிறது. சில பத்திரிக்கைகள் எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அதற்க்கு ஜால்ரா அடித்தே நடுநிலை நாளிதழ் என போடும் போது, தினமலரோ அதற்கு நேர் எதிராக, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நல்லது செய்தால் தோள் கொடுத்தும், தவறு செய்தால் சாட்டையால் விளாசியும் வந்து இருக்கிறது. நம் கலாச்சாரத்தின் இரு கண்களான தேசப்பற்றையும், தெய்வப்பற்றையும் போற்றி வளர்த்து வரும் தினமலர் பிற பத்திரிக்கைகளை ஓரம் கட்டும் ஒரு புரட்சி மலர் என்று கூறினால் அது மிகையல்ல.... வாழ்க நின் புகழ் வளர்க்க உன் சமுதாய தொண்டு   16:45:24 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
29
2012
உலகம் சிறப்பு விமானத்தி்ல் உடல் டில்லி வந்தது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
பெரும்பாலான தினமலர் வாசக நண்பர்கள் மேலோட்டமாக இந்த சம்பவத்தை கண்டிகிறார்களே தவிர குற்ற சம்பவத்தின் ஆணி வேறை கிள்ளி எறிய ஏன் நினைப்பதில்லை? (1) குற்றம் நடந்த வேனின் கண்ணாடி கருப்பு ஸ்டிக்கர் ஓட்டப் பட்டிருந்தது. எனவே உள்ளே நடந்த குற்ற செயல் 5 போலீஸ் செக் போஸ்டை கடந்த பின்னும் தெரிய வில்லை. டெல்லி மிகுந்த கண்காணிப்பு மிகுந்த நகரம். பல்வேறு இடங்களில் கேமரா உண்டு. அனைத்தையும், இந்த கருப்பு ஸ்டிக்கர் கண்ணாடி மறைத்து விட்டது. (2) இருவரும், சினிமா பார்க்க போனது காலை அல்லது மதியம் காட்சிக்கு சென்று இருக்கலாம். சரி. மாலை நேர காட்சிக்கு போகும் போது, நண்பர்களிடமாவது இரு சக்கர வாகனம் வாங்கி கொண்டு சினிமா பார்க்க போய் இருக்கலாம். படம் முடிந்ததும், . பெண்ணை பாதுகாப்புடன் கொண்டு போய் சேர்க்க திட்டமிடாமல் விட்ட அவனும் குற்றவாளியே? (3) சினிமா இரவு 9 மணிக்கு முடிந்தவுடன், பஸ்சில் ஏறும் முன் அது வழக்கமான பஸ் இல்லை என்பதும், முன் பின் தெரியாதவர்கள் இருக்க கூடிய பஸ் என்பதும் தெரிந்ததும் ஏறியிருக்க கூடாது. ஒருவனது முகத்தை பார்த்தாலே அவன் எப்படி பட்டவனாக இருக்க கூடும் என்பதை "FACE READING" என்பார்கள். பெரும்பாலான புத்திசாலி காவல் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கு அந்த திறமை உண்டு. அந்த பக்குவம் வளர்த்து இருந்தால் அந்த வண்டியில் ஏறி இருக்க மாட்டார்கள். சிறிது தூரம் நடந்து இருந்தால் டெல்லி மெட்ரோ ரயில் வசதி இரவு வரை உண்டு. அதையாவது பயன்படுத்தி இருக்கலாம். (4) தன் மகள் ஆண் நண்பர்களுடன் சுற்றுகிறாளா? என்று கண்காணிக்க தவறிய அவளது பெற்றோர்களும் குற்றவாளிகள் தான். (5) இனிமேலாவது அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்தியா முழுதும் உள்ள அனைத்து கார், பஸ், லாரி, வேன், பேருந்து, மகிழுந்து மற்ற வேற எந்த எந்த உந்துகள் (வண்டி) உண்டோ அனைத்திற்கும் கருப்பு ஸ்டிக்கரையும், திரை போட்டிருந்தால் திரையையும் கிழித்து எறிய அந்தந்த மாநில காவல் துறைக்கு அதிகாரம் தர பட வேண்டும். நீதிபதிகள், IAS, IPS உயர் அதிகாரிகள், எம்.எல்.ஏ, எம். பிக்கள் உட்பட அனைவரும் தாங்களாகவே முன் வந்து இதை அமல் படுத்த வேண்டும். அடுத்த 48 மணி நேரத்தில் செய்யாதவர்கள் யாராக இருப்பினும் 50,000 ரூபாய் அபராதம் விதித்தால் அரசாங்க கஜானாவும் நிரம்பும். அலறி அடித்து கொண்டு எல்லோரும் விதிகளுக்கு கட்டுப் படுவார்கள். தவறு செய்தவர்களுக்கு அதிக பட்ச தண்டனை கொடுக்க பட வேண்டும். அது இனிமேல் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். அநியாயமாக உயிரை பறி கொடுத்த அந்த சகோதரிக்கு இதுதான் நாம் செய்யும் உண்மையான அஞ்சலி. இனி இதுபோல் நடக்கமால் இருக்க இதை படிக்கும் உளவு / காவல் துறையை சேர்ந்த காவல் தெய்வங்கள், தெரிவிக்க வேண்டிய இடத்தில் இதை தெரிவித்து தக்க நடவடிக்கையை எடுத்து, நம் சகோதரிகளை காப்பாற்ற முன் வர வேண்டும். நன்றி.   00:16:40 IST
Rate this:
1 members
2 members
53 members
Share this Comment

டிசம்பர்
23
2012
வாரமலர் எட்டிலிருந்து எண்பது வரை!
செல்லப்பா நீங்க ரொம்ப சூப்பர்ரப்பா    11:40:10 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
3
2012
பொது தென்கோடி மாணவர்களின் கலங்கரை விளக்கம் டாக்டர் ஆர்.லட்சுமிபதி
வாழ்க. வளர்க. தயவு செய்து தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று தொடங்கினால் மிகவும் நல்லது... அதில் இட ஒதுக்கீடு என்ற குறுக்கு வழியை மூடி விட்டு, நேர்மையான முறையில், படித்து, அதிக மதிப்பெண் பெற்று வரும் தகுதியானவர்களை மட்டும் சேர்த்து அவர்களை தலை சிறந்த மருத்துவர்களாக, பணத்தாசை இல்லாமல் சேவை மனப்பான்மை உடையவர்களாக ஆக்க வேண்டும். தங்களை போன்ற பெரியவர்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.   01:05:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
14
2012
சம்பவம் ஸ்டேஷன் முன் சத்தியாகிரக முயற்சிவக்கீல் உட்பட மூன்று பேர் கைது
இதற்கு முன்பு உச்ச நீதி மன்றம் ஒரு வழக்கில் இரவு 10 முதல் 6 மணி வரை எந்த ஒரு ஒலி பெருக்கியும் பயன் படுத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது. எனினும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஒலி பெருக்கி பயன் படுத்த தடை விதிக்க வில்லை. ஆனால் நிர்ணயிக்க பட்ட ஒலி அளவை விட மிக கூடாது எனவும் கூறியுள்ளது. அனைத்து விழாக்கள், அனைத்து மத சம்பந்தமான பிரச்சாரங்கள், கோவில், மசூதி மற்றும் சர்ச் சம்பந்த பட்ட அனைத்து பிரிவு மக்களுக்கும் இது பொருந்தும். எனவே சம்பந்த பட்ட காவல் நிலைய அதிகாரிகள், நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த மதத்தினரை சேர்ந்தவராக இருந்தாலும் , எக்காரணம் கொண்டும், குழந்தைகளின் கல்விக்கு இடையூறு செய்ய கூடாது.    14:20:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment