Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 1
Jayakumar - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
2018-11-17 15:26:06 IST
சென்னை சர்வ தேச விமான நிலையம் வருகை பகுதியில் உள்ள அனைத்து கழிவறையிலும் தண்ணீர் வரும் பைப்பை இடது புறம் வைத்துள்ளனர். குறிப்பாக வெஸ்டர்ன் கம்மெட் உள்ள கழிவறைஇல் பைப்பை இடதுபுறம் கம்மெட் முன்பாக வைத்துள்ளனர் இதை பயன்படுத்துபவர் எப்படி பயன்படுத்துவது ......... ஒரு சர்வதேச விமானநிலையம் குறைத்த பட்ச பயன்பாட்டாளர் அசௌவாரிய முறையில் அமைத்து இருப்பது மிகவும் வேதனையான விஷயம் . வே.ஜெயக்குமார் பிஇ.,...
bhairav - chennai ,இந்தியா
2018-10-23 16:01:31 IST
வணக்கம் கேளம்பாக்கம், எல்லையம்மன் நகரில் வசித்து வருகிறோம். இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் பின்புறம் அமைந்துள்ளது. இது கேளம்பாக்கம் வார்டின் கீழ் வருகிறது. இதற்கடுத்த சாலை தையூர் பகுதியின் கீழ் வருகிறது. எல்லையம்மன் நகரில் சரியான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீர் கால்வாய் மற்றும் குப்பை தொட்டி கூட இல்லை. இதனால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மண் சாலை மட்டுமே உள்ளது. மழை நேரத்தில் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்கும். கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் குடியிருப்புவாசிகள் கழிவு நீர் லாரிகளின் மூலம் கழிவு நீரை வெளியேற்றி வருகிறார்கள் ஆனாலும் சில சமயங்களில் கழிவு நீர் வெளியேறி சாலைகளில் ஓடுகிறது. இதில் குடியிருப்புவாசிகளையும் சொல்வதற்கில்லை ஏனெனில் நிலத்தடி மண் நீரை உறிஞ்சுவதில்லை. மேலும் மழை காலம் துவங்கி விட்டதால் தொற்று கிருமிகள் பரவும் அபாயம் மிகுந்து உள்ளது. ஆகவே தயவு கூர்ந்து மேற்கண்ட வசதிகளை உடனடியாக செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். - பைரவ்...
Parasumanna Sokkaiyer Kannan - Chennai,இந்தியா
2018-09-26 16:39:38 IST
Sir, THE CM CELL WEBSITE IS THE ONLY SOURCE FOR THE COMMON MAN TO LODGE THEIR GRIEVANCES AND IT IS BEING ATTENDED TO IMMEDIATELY BY THE RESPECTIVE DEPARTMENTS. FOR THE PAST 10 DAYS THE CM CELL WEBSITE IS NOT FOR NEW USERS. WHEN A NEW USER LODGES HIS COMPLAINT AN ID NUMBER WOULD BE GIVEN SO AS TO ENABLE TO LODGE HIS GRIEVANCE. BUT THIS FACILITY IS NOT WOKING. IN ORDER TO ENQUIRE ABOUT IT THE FOLLOWING TELEPHONE NUMBERS I.E.25671764, 25665566, 25672345 AND 24991222 WERE CONTACTED BUT NONE OF THEM IS RESPONDING. THE GRIEVANCES OF THE PUBLIC IS INCREASED DAY-BY-DAY AND THE KNOCKING OF DOORS OF GOVERNMENT OFFICES BY THE PUBLIC IS INCREASING BUT THEY ARE UNABLE GET THE THINGS DONE BECAUSE THERE IS NO PROPER MECHANISM IN THE DEPARTMENTS TO ACCOUNT FOR THE TAPALS PRESENTED BY THE PUBLIC AND THE ONLY RESORT TO REDRESS THEIR GRIEVANCES IS CM CELL. BUT THIS IS ALSO NOT WORKING. PLEASE TAKE IT TO THE KNOWLEDGE OF THE CHIEF MINISTER AND SEE THAT THE COMPLAINTS LODGED BY THE NEW USERS ARE PROPERLY RESPONDED. THANKS, P.S.KANNAN, 167C-CHINNA KANMOI ROAD, MUNICHALAI POST, MADURAI-625009 E.MAILpingalan77@gmail.com MOBILE9445980560...
ஈரோடுசிவா - erode ,இந்தியா
2018-09-15 01:06:24 IST
வணக்கம் .... சமீப காலமாக ஈரோடு மாவட்டத்தில் இரவு நேரங்களில் தேவையில்லாமல் பல மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது .... இதனால் பொதுமக்கள் தூக்கம் கெட்டு கொசுக்கடியில் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது .... மின்சார வாரியத்தில் இருக்கும் கருப்பு ஆடுகள் வேண்டுமென்றே எடப்பாடியார் ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கி மக்கள் அதிருப்தியும் கோபமும் அடைய திட்டமிட்டு நடத்தப்படுகிறதோ என்று ஐயம் எழுகிறது .... சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அமைச்சர் இதனை கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .... கடந்த திமுக ஆட்சியின் தோல்விக்கு மின்தடை ஒரு முக்கிய காரணம் என்பதை ஆற்காட்டாரே ஒப்புக்கொண்டுள்ளதை நாம் மறந்துவிட முடியாது ....
Bala - Chennai,இந்தியா
2018-09-05 13:55:22 IST
Dear Sir, The article on "Orunginantha Pannai Thittam" is a great effort by the Central government and the support given by TN government is really appreciable. They have understood the value. And finally, you have published this good scheme and have clearly mentioned the efforts put in by the state government. Kudo's to you as it will reach the farmers and people living in rural TN. I sincerely appreciate the effort put in by newspapers like yours. Keep up the good work...
jaffar ali - jubail,சவுதி அரேபியா
2018-09-05 07:06:08 IST
சவூதி அரேபியாவின் ரியால் கரன்சி to இந்தியன் ரூபாய் convert இடவில்லை....
D Ravikumar - Vellore,இந்தியா
2018-08-30 08:19:43 IST
கடந்த 14 ஆண்டுகளாக நான் தினமலர்.காம் வாசகன். மிக மனோதிடத்துடனும் யாருக்கும் அஞ்சாமலும் துணிந்தும் செய்திகள் வெளியிடுவதில் உங்களுக்கு நிகர் தமிழுலகில் யாரும் இல்லை என்றால் அது நிச்சயம் மிகையாகாது. ஆனாலும், சில நேரங்களில் செய்தியுடன் (FACTS) செய்தி ஆசிரியரின் சொந்த கருத்தையும் (OPINION) சேர்த்து எழுதுவதை தயவுசெய்து தவிர்க்கவும். இது நாளிதழை TABLOID என்கிற நிலைக்குத் தள்ளிவிடும். அதை, ஆசிரியரின் சொந்த கருத்து என்று தலைப்பிட்டு எழுதலாம். மேலும், "தனி மனித தாக்குதல்களுக்கு இங்கு இடம் இல்லை. தனி மனித தாக்குதல் நடத்த விரும்புவோர், அதை பேஸ்புக்கில் செய்து கொள்ளலாம்" என்பது மிகவும் பாராட்டுக்குரியது. 'சுடலை, எச்ச ராஜா, கட்டுமரம், பப்பு' போன்ற, நீங்கள் உங்கள் நாளிதழில் அச்சிட விரும்பாத, அனுமதிக்காத unparliamentary வார்த்தைகளை வாசகர் கருத்து பகுதியிலும் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை (accused) 'அவன், இவன்' என்கிற ஏக வசனத்தில் குறிப்பிடுவது சட்டப்படி சரியாகத் தெரியவில்லை. நாட்டின் மிக உயரிய உச்ச நீதிமன்றத்தாலேயே குற்றவாளிகள் (convicted) என்று தீர்ப்பளிக்கப்பட்ட அரசியல்வாதிகளை நாம் அப்படி அழைப்பதில்லையே. 20 ஆண்டுகள் முன்னோடியாய் இருந்து வெற்றிப்பாதையில் செல்லும் உங்களை மனமார வாழ்த்துகிறேன். நான் பல வருடங்கள் வெளிநாடுகளில் இருந்தபோது, தினமும் தினமலர்.காம் மூலமாய் தாய்வீட்டிற்கு போகும் ஒரு உணர்வையும், உற்சாகத்தையும், மனமகிழ்வையையும் தந்தது தினமலர். 35 வருடங்களுக்கு மேலாய் நான் THE HINDU நாளிதழிழன் அபிமான வாசகனாய் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்தபோது இணையதளம் மூலமாய் தினமும் நான் முதலில் படித்த நாளிதழ் தினமலர். ஏதோ நம் நெருங்கிய சொந்தக்காரர் வீட்டிற்கே போன ஒரு நிறைவை ஏற்படுத்தியது தினமலர். தினமலர் இன்னும் பலஆண்டுகள் தொடர்ந்து இந்த அரும்பணி ஆற்ற வாழ்த்துகிறேன்....
SANJAIGANDHI - PATTUKKOTTAI,இந்தியா
2018-08-18 19:52:54 IST
கடைமடைக்கு வருவாளா காவிரி....? ஒரு ஆய்வு பயணம் (ஆய்வு பணியில் : கா.சஞ்சய்காந்தி மற்றும் செ.கார்த்திக்) என்னதான் பிரச்சனை ? கல்லணையில் திறந்து ஐந்தாவது நாள் வந்திருக்க வேண்டிய தண்ணீர் இப்போதும் பட்டுக்கோட்டையை தாண்டியிருக்கவில்லையே என்ன காரணம் ? என்பதையெல்லாம் அறிந்துகொள்ளும் பொருட்டு ஒரு பயணம் புறப்பட்டோம். என்னதான் கரிகாலசோழன் கல்லணையை கட்டினாலும் அவனுக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் இங்கு ஆட்சி செய்த பிரிட்டீஷ்காரர்களின் அறிவில் உதித்ததுதான் கல்லணை கால்வாய் திட்டம். கல்லணையில் துவங்கி தஞ்சை நகரை குளிர்வித்து புதுக்கோட்டை மாவட்டத்துற்குள் நுழைந்து பசுமையை போர்த்துவதுதான் அன்னை காவிரியின் பயணம் இதற்கு வழியமைத்தவர்கள் பிரிட்டீஷ்காரர்கள். இந்த கல்லணை கால்வாயிலிருந்து ஒரு பகுதி நீரை ஈச்சங்கோட்டை என்ற இடத்தில் பிரித்து ராஜமடம் வாய்க்கால் வழியாக அன்றைய கணக்கில் கிட்டதட்ட 26,061 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் இந்த கால்வாய் வெட்டப்படுகிறது (இன்றைக்கு பாசனப்பரப்பு அதிகரித்து இருக்கிறது) ஈச்சங்கோட்டையில் துவங்கி சோழபுரம், கக்கரக்கோட்டை, பின்னையூர், திருநல்லூர், சோழகன்குடிக்காடு, கிளாமங்களம், வேப்பங்காடு, ஏனாதி, சாந்தாங்காடு வெட்டிக்காடு வழியாக பட்டுக்கோட்டை நகருக்குள் புகுந்து நேர்பாதையில் முதல்சேரி, பள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை, மாளியக்காடு, தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை வழியாக இராஜாமடம் சென்று வங்காளவிரிகுடாவை தொடுகிறது. பட்டுக்கோட்டை நகரை ஒட்டியே பிரியும் இன்னொரு வழி பொன்னவராயன்கோட்டை, அணைக்காடு, பழஞ்சூர், மழவேனிற்காடு, நரசிங்கப்புரம் வழியாக வங்காளவிரிகுடா வரை செல்கிறது. இந்த கால்வாய் வெட்டப்பட்டு கிட்டதட்ட நூறு ஆண்டுகளை கடந்துவிட்டது இன்றுவரை இல்லாமல் இப்போது என்ன குழப்பம் ? ஏன் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை ? ஈச்சங்கோட்டையிலிருந்து கிட்டதட்ட 60 அடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருகரையையும் தொட்டுக்கொண்டு ஓடிவருகிறாள் அன்னை காவிரி ஆனால் கடைமடைக்கு சென்று சேரவில்லை, வழியெங்கும் நிறைய மதகுகள் அதுமட்டுமல்லாமல் தனியார் சிலர் கால்வாயிலிருந்து ரகசியமாக குழாய்கள் பதித்து நீரை தங்கள் நிலங்களுக்கு கொண்டு செல்கிறார்கள், அத்தோடு பொதுமக்கள் வீடுகள் தோறும் இருக்கும் குப்பைகுழிகளை பயன்படுத்துவதுபோல ஆற்றில் நீர்வரத்து இல்லாத காலங்களில் இந்த ஆற்றையே குப்பைகளை குவித்து வைக்கும் இடமாக நினைப்பது, ஐந்தாண்டுகளாக நீர்வரத்து குறைவால் பலமிலந்து இருக்கும் செப்பனிடப்படாத கரைகள், தூர்வாரப்படாத ஆறு என பல்வேறு சிக்கல்களை காண முடிந்தது. இப்போது காவிரியில் வரும் இரண்டு லட்சம் கன அடி இன்னும் இருநூறு லட்சம் கன அடியாக வந்தாலும் கடைமடைக்கு தண்ணீர் வருவது சந்தேகம்தான் என்பதே நிதர்சனமான உண்மை இதற்கு தீர்வுதான் என்ன ? 1. ராஜாமடம் வாய்காலின் கரையை இப்போதிருக்கும் உயரத்திலிருந்து குறைந்தது இரண்டு அடியிலிருந்து நான்கடியாவது உயர்த்த வேண்டும் அதே நேரம் வாய்காலினை ஒன்றிலிருந்து இரண்டடிக்கு மட்டும் ஆழமாக்கினால் போதும் (ஆழம் அதிகரிப்பது கடைமடைவரை நீரை கொண்டு செல்ல தடையாக இருக்கும்), கரையை உயர்த்த இதே வாய்கால் பாசன பகுதியில் இருக்கும் ஏரி, குளங்களிலிருந்து மண் எடுத்துக்கொள்ளலாம். 2. ஈச்சங்கோட்டையிலிருந்து இரண்டு மதகுகள் வழியாக மட்டுமே ராஜாமடம் வாய்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது அதனை அதிகரித்து மேலும் இரண்டு மதகுகள் அமைக்க வேண்டும். 3. ராஜாமடம் வாய்காலினை அகலப்படுத்த வேண்டும் (தேவையான இடம் இருக்கிறது) 4. கடைமடைவரை தண்ணீர் சீராக சென்றடைய இருக்கும் அனைத்து மதகுகளையும் சீரமைத்தோ, புதிதாக அமைத்தோ பராமரிக்க வேண்டும். 5. பொதுப்பணிதுறையினரை எல்லா வேலைகளோடு இதனையும் கவனிக்க சொல்லாமல் ராஜாமடம் வாய்க்காலினை பராமரிக்கவும், சரியான முறையில் அனைத்து பகுதிக்கும் தண்ணீரை கொண்டு சேர்க்கவும் அரசாங்கம் தனித்த பிரிவு ஒன்றை ஏற்படுத்தி தேவையான பணியாளர்களை நியமித்து நீர்வழித்தடத்தை முழுமையாக கண்காணிக்கவும், பராமரிக்கவும் செய்ய வேண்டும். 6. தனியார்கள் தண்ணீரை முறைகேடாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், சொத்துக்களை பரிமுதல் செய்ய வேண்டும். மேற்சொன்ன யோசனைகளை செயலாற்ற குறைந்தது நூறுலிருந்து இருநூறு கோடி ரூபாய் அளவுக்கு செலவு ஏற்படும், இந்த தொகையினை ஈடுசெய்ய ராஜாமடம் வாய்க்கால் பாசனப்பகுதியில் இருக்கும் விவசாயிகளிடமிருந்து நிலங்களின் அளவிற்கேற்ப "ஒருமுறை வரி" வசூலித்து இதனை செயலாக்க வேண்டும், இதனை இன்றோ நாளையோ நிச்சயமாக செய்து முடிக்க முடியாது குறைந்தது ஒருவருட காலம் ஆகும் இந்த பணிகளை துவங்கி செய்து முடிக்க..., போதிய நிதியை ஒதுக்கி நேர்மையான அதிகாரியினை மேற்பார்வை செய்ய வைத்து, முழுமனதோடு இதனை செய்தால் மாண்புமிகு முதல்வருக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். அதுவரை கடைமடைக்கு தண்ணீர் கண்ணீர் மட்டும்தான்... கா.சஞ்சய்காந்தி செ.கார்த்திக்...
Muniyandi V - pondicherry,இந்தியா
2018-08-17 11:58:07 IST
நாவலூர்பழைய மஹாபலிபுரம் சாலையில் உள்ளது.இந்த பகுதி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதி இங்கு சேவை சாலையில் ஒரே குப்பையும் கூளமுமாக உள்ளது.நாவலூர் ஊராட்சி அலுவலக அருகிலே குப்பை உள்ளது.இதனை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி சரிசெய்ய மக்கள் பிரச்சனைகள் முன் நின்று எடுத்து செல்லும் தினமலர் ஆவணம் செய்யுமாறு தினமலர் வாசகர் மற்றும் சாலையை கடப்பவர்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்...
Muniyandi V - pondicherry,இந்தியா
2018-08-17 11:48:13 IST
சென்னையில் ஆவின் பால் ஏஜென்ட்கள் நாவலூரில் அதிகபட்ச விலையை விட அதிகமாக விற்கிறார்கள் இது சரியா.மக்களுக்காக போராடும் தினமலர் இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண ஆவின் நிர்வாகம் மற்றும் மாவட்டநிர்வாகத்திற்கு தெரிய படுத்தி மக்களுக்கு நன்மை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்....
vasanti iyengar - Mumbai,இந்தியா
2018-08-15 08:04:14 IST
எச்சரிக்கை: நூதன முறை திருட்டு மிக சமீபத்தில் எனக்கு நடந்த சம்பவம். மற்றவர்கள் ஏமாற்றபடகூடாது. தாங்கள் உங்கள் பெண் அல்லது பையனுக்கு வரன் தேடுவர்களாக இருந்தால் உங்களுக்கும் போன் வரக்கூடும். தங்கள் பெண் மற்றும் பையனுக்கு வரன் தேடும்போது ஜாதகம் அனுப்புகிறோம் என்று போன் வந்தால் ஏமாற வேண்டாம். சில நாட்கள் முன்பு என் கணவர் ஏமாற்றப்பட்டார் [அவருக்கு செமையா கிடைத்தது வேற கதை] இங்கிருந்துதான் போன் வந்தது. (600ரூ. தண்டம்) ராசி மேட்ரிமோனி / பிராமின் மேட்ரிமோனி 317/A,VPM பிளாசா, 80 அடி ரோடு , அண்ணா நகர், மதுரை - 20 போன்: 9790483409 / 9790465184 / 9049009898...
arasan - theni,இந்தியா
2018-07-24 18:32:27 IST
தேனி மாவட்டம் அல்லிநகரம் தேனியில் கள்ள நோட்டு கும்பலுக்கும் பைனான்ஸ்கம்பெனிநிறுவனர்க்கும் வட்டிக்கு விடும் நபர்களுக்கும் தொடர்பு உள்ளது , கள்ளநோட்டு கும்பல் மொத்தமாக அச்சடித்து பைனாசியர் கம்பெனிநிறுவனர்க்குகொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது இந்த பைனான்சியர் தேனீ மாவட்டம் முழுவதும் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்டுள்ளார் ஆகவே தயவு செய்து குறைந்த வட்டிக்கு எந்த பைனான்சியர் பணம் குடுத்தாலும் தயவு செய்து பொது மக்கள் வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறோம் யாரும் ஏமாறவேண்டாம் மக்கள்...
B Srinivasan - trichy,இந்தியா
2018-07-23 05:37:42 IST
திருச்சி மத்திய பேருந்து நிறுத்தத்தில் நடக்கும் அநியாயங்களை கேட்பாரில்லையா ? தள்ளுவண்டி மற்றும் சைக்கிளை வைத்துக்கொண்டு நுற்றுக்கணக்கானப்பேர் பழம் விற்கிறார்கள் கூழ் விற்கிறார்கள் ஆம்னி பேருந்துகள் அட்டகாசம் வேறு ....பொது மக்கள் பாதுகாப்பாக நடந்து உளளே செல்ல முடியவில்லை இதே போலத்தான் தெப்பக்குளம் பகுதியும் முழு ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கிறது மக்கள் நாடு ரோட்டில் தான் நடக்கமுடியும் . திருச்சி பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாம், திருடர்களுக்கும் , ஜேப்படி திருடர்களுக்கும், ஆக்ரமிப்புகாரர்களுக்கும் பொறுக்கிகளுக்கும் ஆன இடமாகியுள்ளது ......மத்திய பேரூந்துநிலையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அக்கிரமிப்புக்காரர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை ....கேட்க ஆளில்லை ..... போலிஸும் கார்பரேஷனும் ஏதும் செய்வதாக தெரியவில்லை .....இந்த நிலை மாறவேண்டும் மறுபடி சுரண்சிங் வரவேண்டும்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-07-05 16:43:52 IST
மதுரை மாநகராட்சி ஆணையாளர் அனீஸ் சேகர்.ஓய்வு பெற்ற 3-வது நாளில் 73 பணியாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.4.49 கோடி மதிப்பிலான பணப்பலன்களை வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். அரசு துறைகளில் பணி ஓய்வு பெறும் பணியாளர்கள், தங்களுடைய பணப் பலன்களை பெறுவதற்கு பெரும் வாழ்நாள் போராட்டத்தையே சந்திக்க வேண்டியது வரும். அதுவும், முக்கிய வருவாய் தரக்கூடிய, அதிகளவு நிதியை கையாளக்கூடிய துறைகளில் ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு பண பலன்கள் கிடைப்பது இன்னமும் சிரமம். ஆனால் மூன்றே நாட்களில் ஓய்வுகால பலன்களுக்குரிய காசோலைகளையும், பணி நிறைவு சான்றிதழ்களையும் மாநகராட்சி ஆணையாளர் அனீஸ் சேகர் வழங்கி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் நமது வாழ்த்துக்களை உரித்தாக்குவோம்....
R Sridhar - Chennai,இந்தியா
2018-07-01 12:43:57 IST
சிலை திருட்டு தடுப்பு துறை ஐ ஜி திரு பொன் மாணிக்கவேல் அவர்கள் ஆற்றி வரும் கடமைக்கு கைம்மாறு என்பது சிந்திக்க கூட முடியாது. தலையல்லால் கைம்மாறிலேனே என்பதை தவிர வேறு இல்லை. கடந்த ஐம்பது வருடங்களாக அரசியல்வாதிகளும், இந்து அறநிலைய துறையை சேர்ந்து அரசாங்க அலுவலர்களும் நமது வழிபாட்டு தலங்களை சீரழித்து வருவது மட்டுமில்லாமல், சிலை திருட்டு, கோயில் ஆபரணங்கள் திருட்டு போன்றவற்றை கண்டும் காணாமலும் இருந்து வந்தனர். கோவில் சொத்துகள் சரிவர பராமரிக்க படாமல் பகல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன. இந்த கால கட்டத்தில் நேர்மையாக, தைரியமாக திரு பொன்மாணிக்கவேல் அவர்கள் எந்த அரசியல் உருட்டல் மிரட்டல்களுக்கும் பயப்படாமல் தனது கடமையை செவ்வனே ஆற்றி கொண்டிருக்கிறார். இவர் நேர்மையாக வேலை செய்வது பொறுக்காமல் இவரை ரயில்வே துறைக்கு மாற்றினார். நீதிமன்றித்தின் தீர்ப்பால் இவருக்கு மீண்டும் சிலை திருட்டு தடுப்பு துறை கூடுதலாக தரப்பட்டது. அரசாங்கத்தால் இவருக்கு எண்ணற்ற இடைஞ்சல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆய்வு அறிக்கையை முடிப்பதற்குள் அதை பற்றி தகவல் கேட்டு வற்புறுத்தல் (சம்பந்தப்பட்ட திருடர்களை உடனே காப்பாற்றும் எண்ணமோ ??), அவரது துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளை இடம் மாற்றுதல் (சமீபத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கில் சில முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என்பதனாலோ என்னவோ அந்த திருட்டை விசாரணை செய்த டி எஸ் பி ஆய்வு முடிக்கும் -15 நாட்களில் முடிவடைந்து விடும் - தருவாயில் இடம் மாற்றப்பட்டார்) போன்ற பணி இடையூறுகள் இருந்தும் தடைகளை உடைத்தெறிந்து கடமையை ஆற்றி கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த சிலை திருட்டை பிடிக்க உதவிய ஒருவருக்கு தனது சொந்த வருமானத்திலிருந்து 10000 ரூபாய் வழங்கினார். எப்பாடுபட்டாவது தனது கடமையை செவ்வனே ஆற்ற எண்ணம் கொண்டவர் என்பதை தெள்ளத்தெளிவாக காண்பிக்கின்றது. (இது தொடர்பாக வேண்டுகோள் திரு பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு - நீங்கள் ஒரு அறக்கட்டளை மாதிரி தொடங்கினால் தங்களது இந்த உயரிய சேவைக்கு பலரும் உதவ முன் வருவர்.) இவரின் செயல் திறத்தால் திருடு போன எண்ணற்ற சிலைகள் மீட்கப்பட்டன. திருட்டு கும்பல்கள் பிடிபட்டு வருகின்றன. இவரது நடவடிக்கைகளால் ஊழலில் ஊறிப்போயிருக்கும் சில துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் நிச்சயம் சிக்குவர். திரு பொன் மாணிக்கவேல் நமது சனாதன தர்மத்தின் காவலராக திகழ்கிறார். நமது முன்னோர்களின் கலாச்சாரத்தையும், கலைத்திறனையும் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவும், நமது சமுதாய மேம்பாட்டின் அரண்களாகவும் இருக்கும் கோயில்கள் இவரால் நிச்சயம் புது பொலிவு அடையும் என்பதில் சந்தேகமில்லை. இவர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பணியிலிருந்து ஓய்வடைய இருக்கிறார் என்பது கவலை அளிக்கிறது. நமது நீதிமன்றம் இதில் மீண்டும் தலையிட்டு இவரது பணியின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி இவரது பணிக்காலத்தை குறைந்த பட்சமாக 2 ஆண்டுகளாவது நீட்டித்தால் மேலும் பல சிலைகள் இவரால் மீட்கப்படும், குற்றம் புரிவோரும் கைதாவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவரின் தொண்டை கவுரவிக்கும் விதமாக எல்லாக் கோயில்களிலும் இவருக்கு முதல் மரியாதை (தீர்த்த மரியாதை போன்றவை) வழங்கினாலும் இவரது தொண்டிற்கு ஈடாகாது....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-28 20:18:06 IST
கல்விக்கு கடன் வாங்க தகுதி இல்லாதவர்களுக்கு கல்விக்கடன் மறுக்கலாம் என செய்திகள் கூறுகின்றன.சரிதான்-கடன் வாங்கிக்கொண்டு திரும்ப செலுத்தாமல் தலைமறைவாகிறவர்களுக்கு அவர்களது அரசியல் செல்வாக்கை வைத்துக்கொண்டு எத்தனை ஆயிரம் கோடி வேண்டுமானாலும் தரலாம்-அத்தகையவர்கள் தகுதியுடையவர்கள் அவர்களும் மீடியாவுக்கு அழகிகளுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.அவசியமான கல்விக்கு கடன் இல்லை தலைமறைவாகிறவர்களுக்கு கட்டாயம் கடன் உண்டு ....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-28 18:06:12 IST
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அலேபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேரோட்டம், 42 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. கடைசியாக தேரோட்டம் 1976ம் ஆண்டு நடந்தது. இதையடுத்து தேர் பழுது ஏற்பட்ட காரணத்தால், தேரோட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு மற்றும் பொதுமக்களின் உதவியோடு 42 லட்சத்திற்கு தேர் புதுப்பிக்கப்பட்டு நேற்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இந்த ஆன்மீக திருப்பணிக்கு பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-28 18:05:39 IST
பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பது பற்றிய தகவல்களை தர வேண்டும் என்று பீமப்பா என்பவர் பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்தார். இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், 4 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 41 முறை வெளிநாட்டுப் பயணம் செய்து, 52 நாடுகளுக்குச் சென்றுவந்ததாகத் தெரிவித்துள்ளது....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-28 13:13:37 IST
புள்ளியியல் தினத்தை ஒட்டி குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள் புதிய ரூ.125 மற்றும் 5 ரூபாய் நாணயங்களை வருகிற ஜூன் இருபத்தொன்பதாம் தேதி வெளியிட உள்ளார்.வரவேற்கலாம் -எனினும் அந்த பத்து ரூபாய் நாணயம் மக்களிடம் சிக்கிக் கொண்டு பரிமாற்றம் செய்ய இயலாமல் இன்னமும் அவதிப்படுகிறதே அதற்கும் ஒரு வழி செய்யுங்களேன்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-27 07:39:28 IST
சமீபத்தில்-தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா தான் செலுத்த வேண்டிய தொகையினை வங்கிகளுக்கு செலுத்தி விடுவதாக மட்டும்தான் கூறி இருக்கிறார்.அவர் இன்னமும் இந்தியா வந்த பாடு இல்லை சொத்துக்களை விற்ற பாடு இல்லை-விற்ற தொகையை வங்கிகளுக்கு செலுத்திய பாடு இல்லை.அதற்குள் "மோடிக்கு வெற்றி-இந்தியாவுக்கு வெற்றி" என கூவினால் எப்படி? அவர் இன்னமும் 17 இந்திய வங்கிகளில் பெற்ற ரூ.9000 கோடி கடனை வழிவகைகளை செய்து,நம் இந்திய வங்கியினர் தயார் நிலையில் இருந்து அந்த தொகைகளை வங்கி கணக்கில் வரவு வைத்த பிறகுதான் இந்த தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையாவின் வாராக் கடன் வங்கிகளுக்கு வந்து சேர்ந்ததாக அர்த்தம்.இன்னும் அவர் அவரது சொத்துக்களை விற்பதற்கே எத்தனை நெளிவு சுளிவுகள் இருக்கும்.நாம் கைமாற்று வாங்குவதுபோல் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கடனா என்ன?திருப்பி கொடுத்து விட்டேன் என கூறுவதற்கு? பாமர மக்களுக்கு லட்சம் என்பதே மிகப்பெரும் தொகை அதிலும் இது 9000 கோடி ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை? இது வங்கிகளுக்கு வரப்பெற்றவுடன் பாஜக மட்டுமல்ல-மத்திய அரசுடன் இணக்கமாக செல்லும் அம்மாவின் ஆன்மா வழி ஆட்சி நடத்தும் எடப்பாடி அவர்களை வைத்தே கூட நம் தமிழகத்தில் வெற்றி விழா கொண்டாடலாம் தப்பில்லை....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-26 15:46:39 IST
தேடப்படும் தலை மறைவு குற்றவாளி சொல்வதை நம்புங்க வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.வங்கிகள் செய்த தவறு காரணமாக பொது மக்களுக்கு என் மீது கோபம் அதிகரித்தது. வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளேன். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்து, இனி அது தொடரும் எனக் கூறியுள்ளார்...
mariappan - coimbatore,இந்தியா
2018-06-24 12:28:10 IST
ஏன்...........ஏன்.......ஏன்...... காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தகோரி மத்திய அரசுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் தமிழகமே போர்க்களம் ஆகும் அளவிற்கு போராட்டம் நடத்திய தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இப்போது குமாரசாமியின் குரங்காட்டத்திற்கு எதிராக எழுந்து நின்று போராடாமல் பதுங்கு குழிக்குள் பயந்து முடங்குவது ஏன். ஒருவேளை தங்கள் வளர்ச்சிக்காகவும் தங்கள் சுயநலத்துக்காகவும் மக்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொல்கிரார்களா? மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய கனவாண்களே கர்நாடகாவில் காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்தும் குமாரசாமியின் கொக்கரிப்பை நிறுத்த வலியுருத்தி தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு இராஜினாமா செய்யும் வரை தமிழகத்தில் காங்கிரஸ் சார்பாக எந்த நிகழ்ச்சியையும் நடத்தவிட மாட்டோம் என பொங்கி எழாதது ஏன். ஒருவேளை பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் இன்று நாம் இவ்வளவு பிரபலம் பெற்றிருக்க மாட்டோம் பிரபாகரனை கொல்ல காரணமாக இருந்து உங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த காங்கிரசுக்கு நன்றிகாட்டவா/ ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய புனிதர்களே, குமாரசாமி அவர்களே காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு நீங்கள் கட்டுப்படாவிட்டால் உங்களுக்கான ஆதரவை வாபஸ் பெறுவோம் என சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எச்சரிக்க வேண்டும் என்று போராட பொங்கி எழாதது ஏன். ஒருவேளை ஐபிஎல் போட்டியில்சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி சென்னையில் விளையாடக்கூடாது என்பதற்காக வேறு ஏதேனும் அணி செய்த சதியை நிறைவேற்றத்தான் பொதுமக்கள் என்ற போர்வையில் அந்த போராட்டத்தை நடத்தினீர்களா? விவசாய சங்கத்தின் விடிவெள்ளி நல்லக்கண்ணு அவர்களே காவிரி விவகாரத்தில் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு டெல்லியில் அரைநிர்வாண போராட்டம் வரை ஆர்ப்பரித்த நீங்கள் கர்னாடக முதல்வர் குமாரசாமியை எச்சரிக்க ராகுல் காந்தியை சந்திக்க அவர் வீட்டுமுன் போராட்டம் நடத்தாது ஏன். ஒருவேளை பணமதிப்பு நடவடிக்கையில் மத்திய அரசிடம் முறைகேடு செய்தவர்கள் பட்டியலில் நீங்களும் உங்களை சார்ந்த சிலரும் இருப்பதால்தான் காவிரிப்போர்வையில் மோடிக்கு எதிராக முழக்கமிட்டீரோ? விவசாய பெருமக்களுக்கு ஆதரவாக வீதிகளிலும் சமூக வலைதளங்களில் போராடிய இளைஞர் பட்டாளமே அறிவு ஜீவியான என்னிடம் ஆட்சியை கொடுங்கள் இருண்டுபோன உங்கள் வாழ்க்கை என்னும் வீட்டிற்கு விளக்காக ஒளிவீச்வேன் என்று அரசியலுக்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட கமலஹாசன் முப்பது ஆண்டுகளாக வருமான வரிகட்டும் வானளாவிய அறிவு படத்த கமலஹாசன் மூன்று ஆயிரம் சம்பளம் வான்கிய கமலஹாசனை இன்று மூன்று கோடி சம்பளம் வாங்கும் நிலைக்கு உயர்த்திய தன் ரசிகர் மன்றத்தில் வறுமையில் வாடி வருமானமில்லாமல் இருந்த எத்தனை இளைஞர்களுக்கு தொழில் அமைத்துக்கொடுத்தார், படிக்க வசதியில்லாத எத்தனை ஆயிரம் ரசிகர்களின் பிள்ளைகளுக்கு படிப்புக்கான செலவை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை எப்போதாவது சிந்தித்ததுண்டா, இப்போதாவது சிந்திப்பாயா இதைமட்டுமல்ல காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குய பிறகும் கமலஹாசன் காவிரிக்காக கர்னாடக முதல்வரை சந்திக்கிறார் இருவரும் அளிக்கும் பேட்டியில் குமாரசாமி தமிழகத்துக்கு தேவையான தண்ணீர தருவோம் என்கிறார். சில தினங்களில் ராகுல் சோனியா இருவரையும் கமலஹாசன் சந்திக்கிறார். என்ன நடந்ததோ கர்நாடகாவில் குமாரசாமி செய்தியாளர்களிடம் தமிழகத்திக்கு தண்ணீர் தரமாட்டோம் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிறார் இதையும் சிந்திக்க வேண்டும் தோழர்களே. மாரியப்பன். கோவை...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-23 19:38:56 IST
கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் புனித அன்னாள் மேனிலைப்பள்ளி அருகில் பழுதடைந்த பயணியர் நிழற் கூடம் உள்ளது.வயதானவர்களும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.என்ன காரணத்திலோ இந்த நிழற் கூடத்தை செப்பனிட மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் அலட்சியம் காட்டுகிறது. மக்கள் நலம் பேணும் அம்மாவின் ஆன்மா வழி ஆட்சியில் இந்த பயணியர் நிழற்கூடம் போர்க்கால அடிப்படையில் சீர் செய்யப்படுமா?...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-22 20:44:54 IST
எட்டு வழி சாலை விஷயத்தில் அம்மாவின் ஆன்மா வழி ஆட்சி நடத்தும் எடப்பாடியார் அவர்களின் கருத்தை பிரதிபலித்ததான தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களே சேலம் மாநகர எல்லைக்குள் பழுதடைந்து இருக்கும் குண்டும் குழியுமான சாலைகளையும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளால் பழுதடைந்துள்ள சாலைகளையும் செப்பனிட தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கூட உத்தரவிடலாமே?உங்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும்...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-06-22 20:44:06 IST
மீடியா உள்ளிட்ட பல்வேறு வகையிலும் சுமார் மூன்று மாதங்களாக கிருஷ்ணகிரி நகராட்சி 19 வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணன் கோவில் சன்னதி தெரு விளக்குகள் ஒளிராமல் இருப்பதை ஒளிரச்செய்யும் எனது நமது நகராட்சி வழியிலான முயற்சி தோல்வியில் முடிந்தது.அதற்காக நான் இன்னமும்கூட மனம் தளரவில்லை-இருப்பினும் மத்திய மாநில அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இது விஷயத்தில் முயற்சித்து மக்கள் பணி ஆற்றலாமல்லவா?இது நியாயமான அரசியல் சாயமற்றதாக கருதினால் முயற்சிக்கலாம்,...

« First « Previous 1 2 3 4 5 6 ....  
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X