Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 16
g.s,rajan - chennai ,இந்தியா
2016-08-14 18:18:26 IST
நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய அளவுக்கு அதிகமாகப் புழங்கும் கறுப்புப் பணத்தையும் ,நல்ல நோட்டுக்களை வலு இழக்கச் செய்யும் கள்ள நோட்டுக்களை அதிரடியாகப் பறிமுதல் செய்யுங்கள்.மற்றவை எல்லாம் தங்கச்சி சரியாகிவிடும் ,கட்டுக்கு அடங்காமல் செல்லும் விலைவாசியும் நிச்சயம் குறையும்.ஜெய் ஹிந்த் ஜி.எஸ்.ராஜன் சென்னை ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-08-14 16:02:06 IST
பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் வரையில் உள்ள சுற்றுப்புறத்திற்கு உள்ளே கோயிலின் புனிதம் காக்க இறைச்சிக்கடைகளை முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டும். மதுக்கடைகளுக்கு ஸ்ரீரங்கத்தில் தடை விதித்தது போல ஸ்ரீரங்கத்தைச் சுற்றிலும் மீன் ,ஆடு ,கோழி மற்றும் இதர விலங்குகள் கொல்லப் படுவதைத் தடை செய்ய வேண்டும் .திருப்பதியில் பெருமாளுக்கு எந்த அளவு சுத்தம் பேணிக் காக்கிறார்களோ அது போல ஸ்ரீரங்கத்தில் செய்ய அரசு உத்தரவு இடவேண்டும் .தமிழக முதல்வர் ஜெயா லலிதா அவர்கள் அதிரடி உத்தரவு இடுவாரா??மேலும் ஸ்ரீரங்கத்தில் கோயில் கோபுரங்களைக் காக்கவும் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் .சுப மற்றும் அசுப காரியங்களின் போது அதிரடி வேட்டுக்கள்,வெடிகள் வெடிப்பதைத் தடை செய்ய வேண்டும் வெடிச் சத்தத்தினால் ஏற்படும் அதிர்வுகளால் கோபுரங்கள் சிற்பங்கள் கட்டாயம் பாதிக்கப் படுகின்றன ,மேலும் வெடிகள் வெடிக்கக் கூடாது என்ற சட்டம் தற்போது பொதுவாக இருந்த போதும் பலர் அதை பின்பற்றாமல் அலட்சியம் செய்து விதிகளை மீறுகின்றனர் .மேலும் எங்கு பார்த்தாலும் நல்லது கெட்டது போன்ற நிகழ்வுகளுக்கு காகித போஸ்டர்களை ஒட்டி நாசம் செய்வது வேதனை டிஜிட்டல் போஸ்டர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் .அரசு கவனிக்குமா ??சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்குமா ?? ஜி.எஸ்.ராஜன் சென்னை ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-08-14 15:46:17 IST
தமிழகத்தில் பல தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மிக மிக மோசமான நிலையில் உள்ளது .மோசமான சாலைகளில் சாலை விபத்துக்கள் பெருகி வருவதும் உயிர் இழப்புக்கள் அதிகரித்து வருவதும் மிகவும் சோகம் .குண்டும் குழியுமான பல்லாங்குழிச் சாலைகள் சரி செய்யப் படுவது எப்போது ??முதல்வர் ஜெயலலிதா உடனடியாக கவனிப்பாரா ???அதிகாரிகளுக்கும் ,சம்பந்தப்பட்ட மந்திரிகளுக்கு சாலை பணி முடுக்கி விட ஆணை இடுவாரா???குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் பல் வேறு சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது .கணிக்க ஆணை இட முதல்வர் உத்தரவு இடவேண்டும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-08-14 11:50:12 IST
நமது நாடு சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 70 ஆண்டு காலம் ஆன பிறகும் பல இடங்களில் பேருந்துகள் பலவற்றை ரயில் நிலையத்தோடு இணைக்க முடியவில்லை,ரயில் நிலையத்தை இணைக்க முடியவில்லை என்பது மிகவும் வெட்கக் கேடானது.இதற்குத் தீர்வு எப்போது? ரயில் நிலையங்கள் என்ன தீவுகளா ???தமிழகத்தில் இதன் நிலை படு மோசம் ஜெய் ஹிந்த் ஜி.எஸ்.ராஜன் சென்னை ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-08-14 11:43:34 IST
திருத்தணி,சூலூர்ப்பேட்டை யில் இருந்து புறப்படும் மின்சார ரயில்கள் இனி வேளச்சேரி ரயில் நிலையம் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. பல பயணிகளுக்கு நிச்சயம் பயன் உள்ளதாக அமையும். இதனால் சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் நிலையத்தில் கட்டாயம் நெரிசல் குறையும். மேலும் அந்த வழியாகச் செல்லும் விரைவு மற்றும் அதி விரைவு ரயில்களைக் கூட வேளச்சேரி வரை இயக்கலாம் .இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வசதியாக இருக்கும். சென்ட்ரலில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு மீதம் உள்ள பயணிகளுக்கு வசதியாக இருக்கும் வகையில் வேளச்சேரி வரை இயக்கலாம். பலர் இப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ ,அல்லது ரயில் அல்லது வாடகைக்காரில் அதிக செலவு செய்து வர வேண்டி உள்ளது .வயதானவர்கள் .குழந்தைகள்,பெட்டி மற்றும் மூட்டை முடிச்சுக்களோடு ஏறி இறங்குவது மிகவும் சிரமமாக உள்ளது .இதைத் தவிர வேளச்சேரி மற்றும் பரங்கிமலை (SAINT THOMAS MOUNT) வரையிலான 4 கிலோ மீட்டர் பாதை பணிகள் ஜவ்வு மாதிரி பல ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே இருப்பதால் பொது மக்களுக்கு ,ரயில்பயணிகளுக்கு பல விதங்களில் கால விரயம் பண விரயம் ஆகிறது .எனவே இந்தப்பாதையில் பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இயங்க வேண்டும் ,இதன் மூலம் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் நெருக்கடி கட்டாயம் குறைந்து விடும் .தென் மாவட்ட ரயில் பலவற்றைக் கூட வேளச்சேரி வழியாக இயக்கலாம் .தென்னக ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்குமா ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை ....
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
2016-08-11 20:30:19 IST
எதை யார் அமல் படுத்தினால் என்ன,மக்களுக்காகத்தானே எல்லாம்.எதாஹியெல்லாம் சொல்லி எதையும் செய்யவிடாமல் தடுப்பதுதான் எதிர்க்கட்சிகளின் வேலையோ?...
Nazeer - Riyadh,சவுதி அரேபியா
2016-07-31 15:00:45 IST
காஷ்மீர் பிரச்சனை என்ன? காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு அந்த மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது மட்டும் தான் என்று பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷனும், அவரது மகன் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நீதி மன்ற வளாகத்திலேயே அவர்கள் சங்பரிவார கும்பலால் தாக்கப்பட்டனர். கறுப்பு மை பூசப்பட்டனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறும் நேரம் நெருங்கி விட்டதாகவே தெரிகிறது. ஏன் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கின்றனர்? இதற்கு காஷ்மீர் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது இந்தியாவை ஒரு நாடாக பிரிட்டிஷார் அறிவித்தார்கள். அவ்வாறு அறிவித்த இந்தியாவில் காஷ்மீர் இருக்கவில்லை. பாகிஸ்தானை ஒரு நாடாக அறிவித்தனர். அவ்வாறு அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானிலும் காஷ்மீர் இருக்கவில்லை. அது தனிநாடாகத்தான் விடுதலை பெற்றது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் மாட்டிக்கொண்ட காஷ்மீரின் 33 சதவிகிதம் நிலப்பரப்பு இன்று பாகிஸ்தானில் உள்ளது. 67 சதவிகிதம் நிலப்பரப்பு இந்தியாவில் உள்ளது. காஷ்மீர் தனது நாட்டின் பகுதி என்று இந்திய அரசு கருதினால் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரை -ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்று இந்திய அரசால் குறிப்பிடப்படும் பகுதியை - மீட்பதற்காக ஏன் பாகிஸ்தானுடன் போரிட்டு மீட்கவில்லை? நமது நாட்டின் ஒரு ஜான் நிலத்தை எந்த நாடு ஆக்ரமித்தாலும் அதை மீட்கும் கடமை அரசுக்கு இருக்கிறதா இல்லையா? வாஜ்பேயி ஆட்சியில் இருந்தபோதாவது பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீரை மீட்க ஏன் போர் செய்யவில்லை? காஷ்மீர் மக்கள் மீது இராணுவம் மூலம் எல்லையற்ற கொடுமைகளை நிகழ்த்தி வரும் மோடி அரசு பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்க ஏன் போர் செய்யவில்லை? அதுபோல் காஷ்மீர் எங்களுக்குச் சொந்தம் என்று பாகிஸ்தான் உண்மையில் கருதினால் இந்தியாவால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்கும் கடமை அந்த நாட்டுக்கு உள்ளதல்லவா? எத்தனையோ போர்களை இந்தியாவுக்கு எதிராக நடத்திய பாகிஸ்தான் காஷ்மீர் எங்கள் நாட்டைச் சேர்ந்தது அதைப் போரிட்டு மீட்கப் போகிறோம் என்று அறிவித்து போர் தொடுத்து இருக்க வேண்டும். இரு நாடுகளுமே தங்கள் பகுதி என்று வாதிட்டாலும் ஏன் போர்ப்பிரகடனம் செய்ய முடியவில்லை? இரு நாடுகளுக்கும் காஷ்மீர் எப்படி தங்கள் நாட்டுடன் இணைக்கப்பட்டது என்ற வரலாறு தெரியும் என்பதே இதற்குக் காரணம். நாடு விடுதலை அடைந்த போது ஆங்கிலேயர்களின் கீழ் 562 குட்டி மன்னர்களின் ஆட்சி நடந்தது. இன்றைய இந்தியாவுக்கு உள்ளேயும் பாகிஸ்தானுக்கு உள்ளேயும் அவை இருந்தன. அந்தக் குட்டி ராஜ்ஜியங்கள் விரும்பினால் தனித்து இயங்கலாம் அல்லது இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாம் என்று ஆங்கிலேயர்கள் முடிவெடுத்து அறிவித்தனர். விடுதலை அடைந்த பின் தங்கள் பகுதிக்குள் குட்டி ராஜாக்கள் இருப்பதை விரும்பாத இந்தியாவும், பாகிஸ்தானும் மிரட்டியும், தொடர்ந்து மன்னர் மானியம் தருவதாக வாக்குறுதி அளித்தும் குட்டி ராஜ்ஜியங்களை தங்கள் நாட்டுடன் இணைத்தனர். இவ்வாறு ராஜ்ஜியத்தை இழந்த ராஜாக்களும், அவர்களின் வாரிசுகளும் கோடிக் கணக்கில் ஆண்டுதோறும் பல சலுகைகளையும், மன்னருக்கான மானியத்தையும் பெற்றுவந்தனர். இந்திரா காந்தியின் ஆட்சியில் மன்னர் மானிய ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து இதை நிறுத்தும் வரை அதிகாரமில்லாத ராஜாக்களாக முன்னாள் மன்னர்கள் பவனி வந்தனர். இது போன்ற ஒரு பகுதியாகத் தான் இந்தியாவில் உள்ள காஷ்மீரும் பாகிஸ்தானில் உள்ள காஷ்மீரும் இணைந்து ஒரு நாடாக இருந்தது. தங்கள் பகுதிக்குள் இருந்த ராஜாக்களிடமிருந்து அதிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டது போல காஷ்மீர் விவகாரத்தில் பிடுங்கிக் கொள்ள இயலவில்லை. காஷ்மீர் என்பது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு இருந்ததால் இரு நாடுகளுமே தங்கள் கட்டுப்பாட்டில் காஷ்மீரைக் கொண்டு வர திட்டமிட்டனர். (இணைந்த) காஷ்மீர் மக்களில் சுமார் 90 விழுக்காடு மக்கள் முஸ்லிம்களாக உள்ளதால் பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என்பது பாகிஸ்தான் வாதம். காஷ்மீர் மாநிலத்தின் மன்னராக ராஜா ஹரிசிங் இருந்தார். இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இந்து மன்னர் ஆட்சியில் அது இருப்பதால் அதை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்பது இந்தியாவின் நியாயம். இந்து மன்னரான ஹரிசிங் என்பவரின் ஆட்சியின் கீழ் அங்கே மன்னராட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தி தன்னாட்சியுடன் பாகிஸ்தானுடன் இணைய 1947 ல் ஒப்பந்தம் செய்தார். இதன் பின்னர் காஷ்மீர் மன்னரை இந்திய அரசாங்கம் சரிக் கட்டியதால் அவர் இந்தியாவுடன் நிபந்தனையின் அடிப்படையில் இணைய ஒப்புக் கொண்டு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உதவியை நாடினார். இதன் படி இந்திய ராணுவம் இந்திய எல்லையில் இருந்தும், பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் இருந்தும் காஷ்மீருக்குள் நுழைந்தன. காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அது சுதந்திர காஷ்மீர் என்று பாகிஸ்தான் கூறுகிறது. அது ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று இந்தியா கூறுகிறது. எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றிக் கொண்டது. இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் நாட்டோடு காஷ்மீரை இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டதால் காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் 1948 ல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. இந்தியாவும், பாகிஸ்தானும் தனது செயலைச் சட்டப்பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால் காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக ஐநா சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும், பாகிஸ்தானும், மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த ஒப்பந்தம். ஐநாவின் மூலம் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் நடைமுறைப்படுத்தவில்லை. எப்படியாவது காஷ்மீரைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் இரண்டு நாடுகளின் நப்பாசையாக இருந்தது. அதனால் தான் இது வரை ஓட்டெடுப்பு நடத்தவில்லை. ஓட்டெடுப்புக்கு விடாமல் இந்தியாவுடன் காஷ்மீரை எப்படியும் முழுமையாக இணைத்து விட வேண்டும் என்று நினைத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தாலும் அதன் தனித்தன்மைகள் காக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் தான் காஷ்மீரின் மூன்றில் இரண்டு பாகம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. இந்த உறுதிமொழி இந்திய அரசியல் சாசனத்திலும் சேர்க்கப்பட்டதால் ஓட்டெடுப்பு நடத்தும் திட்டத்தை இந்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது. இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் போது வாய்மொழியாக மட்டுமில்லாமல் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டு அந்த வாக்குறுதிகள் சேர்க்கப்பட்டன. இன்று வரை அரசியல் சாசனப் புத்தகத்தில் இது இருந்து வருகிறது. இந்திய அரசியல் சாசனத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட படி காஷ்மீருக்கான அரசியல் சாசனம் 17.11.1956 ல் அரசியல் சாசனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது 26.1.1957இல், இந்தியாவின் எட்டாவது குடியரசு நாளில் நடப்புக்கு வந்தது The Constitution of Jammu and Kashmir Preamble. - We, the people of the State of Jammu and Kashmir, solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947, to further define the existing relationship of the State with the Union of India as an integral part thereof, and to secure to ourselves - ……… IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION. மேலே உள்ளது ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி. இது என்ன கூறுகிறது? ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக் கொண்டோம்'' எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு - தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்து கொண்டனர். சுதந்திர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?. அதன் முகவுரையில் இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்'' என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் இந்திய மக்கள்''. ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள். காஸ்மீருக்கு தனியாக தேசியக் கொடியையும் இந்தியா ஏற்றுக் கொண்டது. 144. Flag of the State: 144. Flag of the State: - The Flag of the State shall be rectangular in shape and red in colour with theree equidistant white vertical stripes of equal width next to the staff and a white plough in the middle with the handle facing the stripes. The ratio of the length of the flag to its width shall be 3 : 2. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இலங்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம் கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் முனை வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும். மேலும் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டு காஷ்மீரின் தனி அதிகாரம் குறித்து உறுதி செய்யப்பட்டது. அந்த 370 வது விதி இதுதான் 370 வது பிரிவு கூறுவது என்ன? 370. (1) இந்த அரசியல் சாசனத்தில் யாது கூறப்பட்டிருப்பினும் (அ) 238 ஆவது கோட்பாட்டில் உள்ளவற்றை ஜம்மு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம் (ஆ) அந்த மாநிலம் சம்பந்தமாக சட்டம் இயற்றுவத்ற்கு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம் (1) அந்த மாநிலத்தைக் குடியேற்ற நாடான இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்ட ஆவணத்தில் அந்த மாநிலம் பற்றிக் குடியேற்ற நாடான இந்தியாவுக்குச் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரமுள்ளதாகக் குறிப்பிடப்பட்ட விவகாரங்களுக்கும் அதோடு ஒத்திருக்கும் விவகாரங்களுக்கும் மத்தியப் பட்டியலிலும் மத்திய மற்றும் மாநிலப் பட்டியலில் இருக்கின்றவை எனக் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்படும் விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசைக் கலந்தாலோசித்த பின்னரும் (2) அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் தம் உத்தரவில் குறிப்பிடத்தக்க அத்தகைய பட்டியல்களில் உள்ள வேறு விவகாரங்கள் பற்றியும் மட்டுமே சட்டம் இயற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விளக்கம் : இந்தக் கோட்பாட்டில் வரும் மாநில அரசாங்கம் என்ற சொல் குடியரசுத் தலைவரால் தற்காலிகமாக ஜம்மு காஷ்மிரின் மகாராஜா என்று அங்கீகரித்துள்ள நபரைக் குறிக்கும். அந்த மகாராஜா 1948 மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் வெளியிட்டுள்ள பிரகடனப்படியுள்ள தம் அமைச்சரவையின் அறிவுரைக்கு ஏற்பச் செயல்பட வேண்டும். (இ) இந்தக் கோட்பாடும் மற்றும் ஒன்றாவது கோட்பாடும் அந்த மாநிலத்துக்கு அனுசரிக்கப்பட வேண்டும். (ஈ) குடியரசுத் தலைவரின் உத்தரவில் குறிப்பிடும் விதி விலக்குகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு இந்த அரசியல் சாசனத்தில் உள்ள மற்ற விதிகளும் அனுசரிக்கப்படலாம். ஆனால் (ஆ) கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த அந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது, இதற்கு முந்தைய விதியில் கூறப்படாத விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. (2) (1) வது கூறின் (ஆ) கிளைக் கூறின் (2)வது பத்தியில் உள்ளபடி அல்லது அந்தக் கூறின் (ஈ) இணைக் கூறின் இரண்டாவது விதியில் உள்ளபடி மாநில அரசாங்கத்தின் சம்மதத்தை அந்த மாநிலத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு முன்னர் பெற்றிருந்தால் அதனை அரசியல் நிர்ணய சபையில் அத்தகைய முடிவு எடுக்கப்படுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். (3) இந்தக் கோட்பாட்டில் இதற்கு முன்னர் யாது கூறப்பட்டிருப்பினும் தாம் குறிப்பிடும் அத்தகைய நாளிலிருந்து இந்தக் கோட்பாட்டில் உள்ளவை செயல் இழக்கும் அல்லது அத்தகைய மாற்றங்களூக்கும் விதி விலக்குகளுக்கும் உட்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு பொது அறிவிக்கை மூலம் குடியரசுத் தலைவர் அறிவிப்பு தரலாம். எனினும் அத்தகைய அறிவிப்பை செய்வதற்கு முன் (2) வது கூறிலுள்ளபடி அந்த மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபையால் அந்த அறிவிப்பு பரிந்துரை செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தில் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமையும், சிறப்பு அந்தஸ்தும் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு, அயலுறவு, நாணயம், செய்தித் தொடர்பு ஆகியவை மட்டும் இந்திய அரசிடம் இருக்கும். மற்ற எல்லா அதிகாரமும் மாநில அரசிடம் இருக்கும். காஷ்மீரை ஆள்வதற்காக மக்களால் தேர்வு செய்யப்படுபவர் ஜம்மு காஷ்மீர் பிரதமர் என்று அழைக்கப்படுவார். ஆளுநர் ஜனாதிபதி என்று அழைக்கப்படுவார் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. இதன்படி காஷ்மீரின் முதல் பிரதமராக (முதல்வராக அல்ல பிரதமராக) 1951 ல் ஷேக் அப்துல்லா பதவியேற்றார். மன்னர் ஹரிசிங்கின் மகன் கரன்சிங் ஜனாதிபதியானார். இதன் பின்னர் 370 வது பிரிவில் சொன்னபடி நடக்காமல் 1954 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநில அரசை இந்திய அரசு கலைக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனச்சட்டம் வெளியிடப்பட்டு ஒப்பந்தம் மீறப்பட்டது. பின்னர் 1957 ஜனவரி 26ல் இன்னும் ஒரு அரசியல் சாசனச் சட்டத்தின் மூலம் காஷ்மீர் இனி எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்று ஆக்கப்பட்டது. ஐநா ஒப்பந்தத்தை இந்திய அரசு மீறியது போலவே இந்து மன்னரிடமும் முஸ்லிம் தலைவர்களிடமும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் ஒவ்வொன்றாக மீறியது. பிரதமர் முதல்வராக ஆக்கப்பட்டார். ஜனாதிபதி கவர்னர் ஆனார். இப்படி கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியும் இந்திய அரசால் மீறப்பட்டது. ஆனாலும் மீதமுள்ள மாற்றப்படாத மீறப்படாத ஒப்பந்த விதியின் படி காஷ்மீரின் தேசியக் கொடி இந்தியாவின் தேசியக் கொடி அல்ல. காஷ்மீருக்கு என தனியான தேசியக் கொடி என்பது தான் இன்று வரை உள்ள சட்ட நிலைமை. நேருவும் பட்டேலும் ஒப்புக் கொண்ட விஷயத்துக்காகத்தான், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காகவே காஷ்மீர் மக்கள் போராடி வருகின்றனர். மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைந்த பின் காஷ்மீரில் இப்போது காணப்படுவதை விட ஆயிரம் மடங்கு கொந்தளிப்பு ஏற்பட்டது. இன்றைய உமர் அப்துல்லாவின் பாட்டனாரும், பரூக் அப்துல்லாஹ்வின் தந்தையுமான காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டுக் கட்சி காஷ்மீர், இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்று கடுமையான போராட்டம் நடத்தியது. நூறு சதவிகித மக்களும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதை விரும்பவில்லை என்று உறுதிபடச் சொன்ன கால கட்டம் அது. பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவுப்படி ஷேக் அப்துல்லா தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கொடைக்கானலுக்கு கொண்டு வரப்பட்டு சிறைவைக்கப்பட்டார். இதன் பின்னர் நிலைமை இன்னும் மோசமானது. காஷ்மீர் மக்களின் மனக்குறையை நீக்குகிறோம் என்று போராளிகளுடன் பேசி பலவிதமான முடிவுகள் எடுத்து அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அது 370ஆவது பிரிவாக அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இணைத்துக் கொள்ளும் போது ஒப்புக் கொண்டு எழுதப்பட்ட 370 வது ஷரத்தின் பல பகுதிகளை இந்திய அரசு படிப்படியாக நீக்கி விட்டது. ஒன்று ஐக்கிய நாடுகள் சபையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதைச் செய்யாவிட்டால் இணைக்கும் மன்னருக்கும் காஷ்மீர் மக்களுக்கும் அளித்த வாக்குறுதியை அரசியல் சாசனத்தில் அதிகாரப்புர்வமாக அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். இரண்டையும் இந்திய அரசாங்கம் செய்யவில்லை. இதுதான் காஷ்மீர் மக்களின் கோபத்துக்குக் காரணம். அது மட்டுமின்றி இதற்காக போராடும் மக்களை இராணுவச்சட்டம் மூலம் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்துடன் இராணுவத்தை இறக்கி போர்க்களமாக்கி இருப்பதும் இந்திய அரசு செய்து வரும் மிகப்பெரும் தவறாகும். இந்தியாவுடன் இருக்க மாட்டோம் என்று ஒருமித்து அவர்கள் முடிவு செய்தால் அத்தகையோர் நமது நாட்டுக்குத் தேவையில்லை. கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதியினர் பாகிஸ்தானோடு இருக்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து முஜிபுர் ரஹ்மான் என்பவர் தலைமையில் புரட்சி செய்த போது இந்தியாவும் தலையிட்டு பங்களாதேஷ் என்ற தனி நாடாக ஆக்கியது. பாகிஸ்தானுடன் அம்மக்களும் சேரவிரும்பவில்லை என்றால் தனிநாடாக இருப்பது சரிதான் என்று உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன. காஷ்மீர் என்ற பெயரைச் சொல்லி பல ஆயிரம் கோடிகள் வீணடிக்கப்படுகின்றன. உலக அளவில் மனித உரிமை தொடர்பான பல விமர்சனங்களைச் சந்திக்கிறோம். உள்நாட்டு மக்களை எத்தனை ஆண்டுகள் இராணுவத்தை வைத்துக் கொண்டு ஆள்வது? என்றெல்லாம் பொறுப்போடு சிந்தித்து ஒரு முடிவு எடுப்பது நல்லது. பிரசாந்த் பூஷன் சொன்னதும், நேருவும், பட்டேலும் ஒப்புக்கொண்டதும் பாகிஸ்தானும் ஐநாவும் ஏற்றுக்கொண்டதுமான வாக்கெடுப்பு என்ற ஒரே முடிவைத் தவிர இதற்கு நிரந்தரத் தீர்வு ஏதும் இல்லை....
Tamilan - Sydeney,ஆஸ்திரேலியா
2016-07-31 08:18:43 IST
உயர் திரு ஆசிரியர் அவர்களுக்கு தினமலர் பத்திரிகைக்கு என்று ஒரு தனி தன்மை மற்றும் நல்ல பெயர் உள்ளது. தமிழ் உங்களை போன்ற சில பத்திரிகையால் இன்னும் வாழ்ந்து கொண்டு இருகிறது, அதனால் ஆங்கிலம் தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் (No change) என்பதுக்கு பதிலாக (மாற்றம் இல்லை) என்று போடலாம்....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-22 20:41:07 IST
கபாலி படம் வெளியானவுடன் இந்தியா வல்லரசாகி விட்டது ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-22 18:50:15 IST
சீனாவைப் போல் சிக்கன விதிகள் எப்போ இந்தியாவுக்கு வரும் ???.எங்கும் ஆடம்பரம் ,எதிலும் ஆடம்பரம் ,ஒரு பக்கம் ஏழ்மையும் வறுமையும் மறுபுறம் தேவையற்ற வீண் ஆடம்பரம் ,வீண் செலவு செய்யும் இந்தியாவினர் திருந்துவது எப்போது ???இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-22 17:39:57 IST
ரேஷன் கடையில க்யூவுல நிக்க மாட்டாங்க, மத்த தேவையான இடங்கள்.பயணிகள் சேவையில் கொஞ்சம் கூடப் பொறுமை இல்லாமல் நிக்குறவங்க. காலங்காத்தால நாலு மணிக்கு ஒரு வீணாய்ப்போன படத்துக்கு மணிக்கணக்கில் போய்க் காத்துக் கிடக்காங்க தறுதலைங்க , தன் குடும்பத்துக்கு பெத்த தாய் தகப்பனுக்கு கூடப் பொறந்த அக்கா தங்கைக்கு அண்ணன் தம்பிக்கு ஏதாவது உருப்படியா உதவி செய்வானுங்களா ,நாறப் பசங்க .நாதாரிங்க இந்தியா வல்லரசு 2020 பாழாய்ப் போன இவனுங்களை நம்பி, கலாமின் கனவு...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-22 16:46:02 IST
ரயில்வே துறை பற்றி பல முறை கரடியாகக் கத்தியாகி விட்டது. ரயில் நிர்வாகம் ஒரு சேவைத் துறை, இது மக்களுக்கான சேவை. இதில் லாப நஷ்டம் பார்க்க முடியாது. பெரும்பாலும் நஷ்டம் வர வாய்ப்பே இல்லை. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதைத் தடுத்தாலே போதும் , ரயில்வே லாபத்தில் கொழிக்கும்...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-22 16:17:54 IST
இந்த கபாலி படத்துக்கு என்ன ஒரு அடிதடி ,இந்த ரஜினி ரசிகருங்க எல்லாம் உருப்படாத பசங்க ,இவர்கள் வருங்காலத் தூண்களா??மறைந்த மாமேதை அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவு இந்தியா வல்லரசு 2020 வெறும் கனவுதானா ???கானல் நீர்தானா ???...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-22 12:14:08 IST
மக்களிடம் செல்போனில் அளவுக்கு அதிகமாகப் பேசுவது வெகுவாக அதிகரித்து வருவது மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்.பொதுவாக தற்போது இது ஒரு பெரிய வியாதியாகி வருகிறது .ரொம்ப நேரம் பேசினால் அது ஒரு பாஷனோ இல்லை அது ஒரு பெருமை என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை .தேவை இல்லாமல் பேசுவதால் நேரமும் பணமும் வீணாவதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-22 12:09:54 IST
பல வேகத்தடைகள் ஒட்டகத்தின் திமில் இருப்பத்தைப் போல மிக மிக உயரமாக மலை போல உள்ளது.பல வேகத்தடைகள் உரிய முன் எச்சரிக்கைப் பலகைகள் (Sign Boards) இல்லாமல் இருப்பது பல வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ,குறிப்பாக இரு சக்கர வாகனங்களுக்கு மிகவும் ஆபத்து ,மேலும் பல வேகத்தடைகள் உரிய வெள்ளை நிற ஒளிரும் பட்டை இல்லாமல் இருப்பதை பல இடங்களில் காண முடிகிறது ,யாராவது சரி வர கவனிக்காமல் வேகத்தடைகள் மீது மோதினால் தூக்கி எறிந்துவிடும் ,இதனால் ஓட்டுனருக்கு கபால மோட்சம் தான் கிடைக்கும் பலர் தலைக்கவசம் அணிவதே இல்லை ,கிராமப்புறங்களில் பலர் தலைக்கவசம் அணியாமல் தான் வாகனத்தை ஓட்டுகின்றனர். ,தலைக்கவசம் போட்டு இருந்தால் உயிருக்கு ஆபத்து இருக்காது ஆனால் வாகனங்கள் சேதம் அதிகம் அடைய வாய்ப்பு உள்ளது .மேலும் இரவு நேரங்களில் வேகத்தடைகள் தெளிவாகத் தெரிய ஒளி பட்டால் பிரதிபலிக்கும் ரிஃப்ளெக்டர்கள் அமைக்க கட்டாயம் மீது நீதி மன்றங்கள் உத்தரவு இட வேண்டும்.மேலும் வேகத்தடைகள் அமைக்க சரியான நீளம் ,அகலம் ,உயரம் கட்டாயம் வரையறுக்கப் படவேண்டும் ,மேலும் அந்த வரைமுறையை எல்லா இடத்திலும் பின் பற்ற வலியுறுத்த வேண்டும் ,மேலும் ஆபத்தான முறையில் தமிழகத்தில் பல சாலைகளில் நகரங்களில் ,கிராமங்களில் ,தெருக்களில் அமைக்கப் பட்டு இருக்கும் வேகத்தடைகளை உடனடியாக அகற்றவும் நீதி மன்றம் அரசுக்கு விரைவாக ஆணை இடுமா ???இல்லையேல் பலருக்கு முதுகுத் தண்டுவடம் சில நாட்களில் கண்டிப்பாக காலியாகி விடும் ,மேலும் அது நிச்சயம் ஒருவரைப் பலவகையில் முடக்கிவிடும்....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-22 11:59:31 IST
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தற்போது உள்ள 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் .பிறகு 100 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் ,200 மற்றும் 300 ரூபாய் நோட்டுக்களை புதிதாக அச்சடிக்கலாம் .10 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் சிறிதளவு கால அவகாசம் கொடுத்து பிறகு அவற்றையும் 20,50 ரூபாய் நோட்டுக்களை பிறகு செல்லாது என்றும் அறிவித்தால் கறுப்புப் பணம் அறவே இந்தியாவில் ஒழிக்கப் பட்டு விடும் ,கள்ள நோட்டுக்களையும் அறவே ஒழிக்கமுடியும் .நோட்டுக்களை வேலிடிட்டி மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் என அதில் குறிப்பிட்டால் பதுக்கி வைக்கும் எண்ணம் தானாகவே மக்களிடம் குறைந்து விடும் , ஊழல்வாதிகளிடம், அரசியல்வாதிகளிடம் பணம் சேர்க்கும் போக்கு கண்டிப்பாக குறையும் ....
kala - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2016-07-18 15:26:21 IST
I am an NRI staying in Dubai for more than 16 years. I am always facing problem from Customs Authorities in Madurai Airport while coming for my vacation. Our Customs Act stays that a female passenger can bring gold jewellery up to 40 gm (maximum value of Rs. 1,00,000) It does not include our normal regular use jewellery. The customs Authorities will be very vigilant when Spice Jet flight arrives in the Air Port to take bribe from the passengers for whatever they wear (whether it is new/regular use). If really the passenger brings excess gold they can collect duty with due receipts. Please bring it to the notice to concerned authorities to stop happening this in future for the convenience of the NRI passengers to arrive in Madurai Airport....
Seshathiri Iyengar - upparpatty ,theni,இந்தியா
2016-07-16 18:49:29 IST
க .விலக்கு அரசு மருத்துவமனையில் எனது அக்காவின் மகளுக்கு நலமாய் பெண் குழந்தை பிறந்து இன்று மருத்துவ மனையில் இருந்து வீட்டிற்கு செல்லலாம் என்று சொல்லியபடியால் மதியம் சரியாக மூன்று மணியளவில் தேனி க .விலக்கு அரசு மருத்துவமனைக்கு எனது காரில் மேற்படி பிரசவமான பெண்ணையும் குழந்தையையும் அழைத்துவரச் சென்றேன். மருத்துவமனை வாயிலில் ஒருவர் வண்டியை மறித்து வண்டி உள்ளே செல்ல கட்டணம் ரூபாய் பத்து வேண்டுமென்று சொல்லி இரண்டு ஐந்து ரூபாய்க்கான சீட்டுக்களை கொடுத்தார் .அந்த சீட்டில் வாகன அனுமதி என்று மட்டுமே இருந்தது .மேலும் அவரிடம் கேட்டதற்கு காருக்கு பத்து ரூபாய் என்றால் காருக்கான பாசைக்கொடு என்று கேட்கவே எனது ஓனர் இப்படித்தான் வசூல் செய்ய சொல்லியுள்ளார் என்று விவகாரம் பேசவே உங்களது ஓனரை வரச்சொல் என்று சொல்லிவிட்டு நான் உள்ளேசென்று தாயையும் குழந்தையையும் காரில் ஏற்றிக்கொண்டு வரும்வரை யாருமே வரவில்லை.அடாவடியாக வசூல் செய்வதுடன் பதினைந்தாம் தேதி சீட்டை திருத்தி பதினாறாம்தேதி என்று எழுதி வண்டி எண் நேரம் எதுவுமே இல்லாமல் அடாவடி வசூல் செய்வதை தடுத்து நிறுத்துவதுடன் உள்ளே லிப்டில் என்ற இறங்க பிரசவித்த பெண்களிடம் தயவில்லாமல் பணம்கேட்டு பெறுவது, படுக்கை மாற்றும் வேலை செய்பவர்கள் ரூபாய் இருபதிலிருந்து பலித்த மட்டும் பணம் கேட்டு பெற்றுத்தான் படுக்கை மாற்றுவதையும் தடுத்து ஏழை மக்களுக்கு உதவவேண்டும்...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-07-07 13:25:14 IST
திருச்சி சமயபுரம் டோல்கேட் அதாவது நம்பர் 1 டோல்கேட் முதல் லால்குடி வரை உள்ள சாலை போதுமான அகலம் கொண்டதாக இல்லை ,ஆனால் வாகனப் பெருக்கத்தினால் இச்சாலை அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது . இச்சாலை டால்மியா , அரியலூர் ,ஜெயங்கொண்டம் ,நெய்வேலி ,சிதம்பரம் போன்ற ஊர்களுக்குச் செல்லும் மிக முக்கிய சாலையாகும் ,இது தவிர சர்க்கரை மற்றும் அரசு மற்றும் தனியார் சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிக அளவில் இப்பகுதியில் இயங்குவதால் 24 மணி நேரமும் பல வகை லாரிகள் ,சுண்ணாம்புக் கல் லாரிகள் ,கல் ,மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் ,மற்றும் இதர லாரிகள் ,நகரப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.ஆனால் சாலைகளின் அகலமோ மிகவும் குறைவு ,எல்லா வாகனங்களும் தாறுமாறாக முந்திச் செல்ல முயல்வதால் இச்சாலையில் அடிக்கடி பல விபத்துக்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது .உயிர் இழப்புக்களும் பெருகி வருவது மிகவும் கவலைக்கு உரியது .நகரப் பேருந்துகள் எனப்படும் டவுண் பஸ்கள் சாலையில் ஓரமாக நிறுத்தப் படாமல் ஆங்காங்கே சாலையில் நிறுத்தப்படுவது விபத்துக்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது .சாலையின் இருபுறம் ஆக்கிரமிப்புக்களால் மிகவும் சுருங்கி உள்ளது,எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இந்தச் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டும் .லாரிகள் தனியாகச் செல்ல புறவழிப்பாதை அமைத்து லால்குடி ,புள்ளம்பாடி ,டால்மியா,கல்லகம் மற்றும் கீழப்பழூர் வரை ஊருக்கு உள்ளே லாரிகள் ,பேருந்துகள் செல்லாதவாறு புறவழிச் சாலைகள் அதாவது பைபாஸ் அமைத்தால் பயண நேரமும் குறையும் ,ஊர்களுக்கு உள்ளே செல்லும் சாலைகளில் ஏகப்பட்ட வேகத்த தடைகள் தற்போது அமைத்து இருக்கின்றனர்.இதனால் பேருந்துகள் மற்றும் மற்ற வாகனங்களில் செல்லும் போது பயண நேரம் அதிகரிப்பது கொடுமை மேலும் வேகத்தடைகள் மிகவும் உயரமாக இருப்பதால் அனைவருக்கும் முதுகு வலியும் ஏற்படுகிறது ,இதனால் பயணத்தில் அசதியும் ,சோர்வும் ,வெறுப்பும் ஏற்படுகிறது .கல்லகம் அருகே ரயில்வே கேட் இருப்பதால் சென்னை ,திருச்சி மற்றும் மதுரை செல்லும் ரயில்கள் ,கூட்ஸ் ரயில் ,பாசஞ்சர் ரயில்கள் வரும் போது கேட் போடப்படுவதால் மேம்பாலம் இல்லாமல் இருப்பதால் மிகவும் சிரமமாக உள்ளது .எனவே தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை ,மத்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இச்சாலையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்கவேண்டும் .செய்வார்களா ???. ஜி.எஸ்.ராஜன், சென்னை....
விமல் ஆனந்த்.செ - tenkasi,இந்தியா
2016-07-07 02:11:20 IST
நான் நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா சேர்ந்தவன், எங்கள் ஊரின் குறை நீங்கள் சரி பண்ணுவிங்க என்று நம்புகிறேன் குறிப்பு .செங்கோட்டை காவல் நிலையம் அருகில் அதாவது செங்கோட்டை அர்ச்சி பக்கத்தில் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. குண்டும்குழியுமாக உள்ளது.செங்கோட்டை காவல் நிலையம் முதல் பிரனூர் காளிஸ்வரி திரை அரங்கு வரை மின் விளக்கு ஒன்னு கூட இல்லை.அந்த செங்கோட்டை ஆத்து பாலம் பகுதி மின் விளக்கு இல்லாமல் வாகனம் ஒட்டி நாங்கள் ரொம்ப சிரம்ப படுகிறோம் அடுத்து பிரனூர் டூ இலஞ்சி சரியான மின் விளக்கு இல்லை, கொட்டகுளம் டூ இலஞ்சி அபாயகரமான வளையு ஒன்று உள்ளது. அந்த இடத்தில் பல காலமாக மின் விளக்குகள் எரிவதே இல்லை.அந்த பகுதியில் நிறைய விபத்துகள் நடக்குகின்றன. உங்கள் பத்திரிகை வழியாக வெளிபடுத்தி உரிய அதிகாரி கவனத்துக்கு கொண்டு செல்ல தாழ்மையுடம் கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு விமல் ஆனந்த்...
perumal - thiruvaalur,இந்தியா
2016-07-06 08:19:53 IST
கல்லம்பேடு ஊராட்சியில் உள்ள அங்கன்வாடிகளில் நடக்கும் முறைகேடுகளை அதி காரிகள் சோதனைகள் செய்ய வேண்டி...
perumal - thiruvaalur,இந்தியா
2016-07-06 08:16:12 IST
கல்லம்பேடு டூ பூவனுர் ரோடு சீரமைக்க வேண்டி...
perumal - thiruvaalur,இந்தியா
2016-07-06 08:14:11 IST
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கல்லம்பேடு ஊராட்சியில் உள்ள கல்லம்பேடு கிராம குள வரவு கால்வாய் அகரற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டி...
Anantha Baskar - chennai,இந்தியா
2016-07-05 20:56:02 IST
மந்தைவெளி ராஜா தெருவில் இன்று இரவு சுமார் ஏழுமணி அளவில், மோட்டார் சைக்கிளின் வந்த இரண்டு ஆசாமிகள் ஒரு வயதான மூதாட்டியிடம் இருந்து இரண்டு முறை சங்கிலி பறிக்க முயன்றனர். இதற்கு முக்கிய காரணம் இந்த தெருவில் தெரு விளக்குகள் மிகவும் மங்கலாக இருப்பதே. இந்த சம்பவம் மிக சமீபத்தில் அருகாமையில் உள்ள சாந்தோமில் இரண்டு பெண்மணிகள் உயிர் இழந்த நேரத்தில் நடந்து இருப்பது மக்களிடம் மிகுந்த அச்சத்தை உருவாக்கி உள்ளது. அதிகாரிகள் உடனடியாக இந்த தெருக்களில் மெரசுரி விளக்குகள் பொருந்துமாறு பொதுமக்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன் பாஸ்கர் ராஜா ஸ்ட்ரீட் மந்தைவெளி சென்னை 600028....
Jamal Eha - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2016-07-04 08:06:23 IST
ஒரு இளம்பெண் காரிருள் சூழ்ந்த நடுஇரவில் கூட ஆபத்து இல்லாமல் தனியாக சென்றுவரும் நிலையையே நான் சுயராஜ்யம் என்பேன் - காந்தி (நவஜீவன் 14-8-1921) மேற்கண்ட காந்திய சிந்தனை நம் தேசத்தில் நிறைவேறியதா? இல்லை, என்பதே உண்மை... மாறாக, பெண்கள் பட்ட பகலில் கூட தனியாக செல்வதற்கு பாதுகாப்பற்ற சூழலை கொண்ட தேசமாக மாறிய மோசமான நிகழ்வுகள் தொடா்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன என்பதே நிதா்சமான உண்மை... இது இந்தியா்கள் அனைவருக்கும் கவலை தரும் விஷயம். குற்றவாளிகள் கடுமையான முறையில் தண்டிக்கப்படாமல் போவதும் குற்றங்கள் அதிகாிக்க ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை... இவ்விஷயத்தில் ஆளும் அரசுகள் உாிய சட்டத் திருத்தங்கள் மூலம் துாித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்... அப்பொழுதுதான் மேற்கண்ட காந்திய சிந்தனை உயிா் பெற்று நமது தேசத் தந்தையான மகா ஆத்மாவின் ஆத்மா சாந்தி அடையும்... வாழ்க பாரத தேசம்.. வளர்க மனிதகுல நேசம்... இ.ஹ. ஜமால் முகம்மது....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X