Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 17
srivatsan - chennai,இந்தியா
2016-06-11 16:35:30 IST
மேன்மை மிகு மயிலை கபாலி கோவிலில், 'சுற்றுப்புற தூய்மை' என்ற கொள்கையின் அடிப்படையில் சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட 'பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்' என்று துவங்கிய நிகழ்வு, சில நாட்களிலேயே அறிவிப்பில்லாமல் 'திரும்ப பெற்றது', பெரிதும் ஏமாற்றத்தை தருகிறது. சிறிது காலத்துக்கு நுழைவிடத்தில் காவலாளி ஒருவர் பக்தர்களை அன்புடன் வரவேற்று பிளாஸ்டிக்கினால் ஆன கைப்பைகளை சிறிய மூங்கில் கூடைகளை மாற்றி வந்தனர். அனால், இப்போதோ பழயபடி பிளாஸ்டிக் குதூகலத்துடன் ஆண்டவர்கள் சந்நிதிகளில் உலா வருவது வருத்தப்பட வேண்டிய ஒரு நிகழ்வு. அடிப்படையில் ஆலய அதிகாரிகளின் 'பொறுப்பற்ற ' மற்றுமொரு நிகழ்வாக பக்தர்களால் பார்க்கமுடிகிறது....
L R K Krishnan - Chennai,இந்தியா
2016-06-10 10:15:02 IST
To the Editor, Dinamalar, Chennai: I am a resident of Sobha Meritta Apartment, Pudupakkam, Vandaloor-Kelambakkam Main Road, opp Butterfly factory, Chennai 6013103. We are suffering in the absence of BSNL Landline and Broadband connections. Repeated visits to BSNL office with application has gone in vain. We are being told that there is no OFC cable and the area is not serviceable. How can residents suffer for lack of telecom infrastructure in Chennai. Your support is required by publishing this plea. regards, Dr. L.R.K. Krishnan PhD lrkkrishnan@gmail.com...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-04 19:34:20 IST
இப்போது உள்ள யூஸ் அண்ட் த்ரோ (Use and Throw) கலாச்சாரம் செல்போன் தரமற்ற நீடித்து உழைக்காத எலெக்ட்ரானிக் சாதனங்கள் தான் மிக முக்கியக் காரணம்.முதலில் யூஸ் அண்ட் த்ரோ கலாச்சாரம் ஒழிந்தால்தான் மின்னணுக் கழிவுகள் இந்தியாவில் ஒழியும் .ஜப்பானைப் போல் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ,மத்திய மாநில அரசுகள் மிக மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-03 19:41:20 IST
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பேருந்துகள் ரயில் நிலையத்திற்கு உள்ளே வந்து செல்வது ரயில் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது.இதே போல சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலும் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பயணிகளுக்கு வசதியாக மாநகரப் பேருந்துகள் முதாலாவது வழித் தடம் அமைத்து உள்ளே வந்து சென்றால் அது மிகவும் வசதியாக இருக்கும்.தற்போது ஆட்டோக்கள் தனியார் வாகனங்கள் ,ப்ரீ பைட் (PRE PAID) ஆட்டோக்கள் போன்றவற்றைத் தாண்டி நீண்ட தூரம் நடக்க வேண்டி உள்ளது .தமிழக அரசு கவனிக்குமா ???மாநகரப் பேருந்து நிர்வாகம் கவனிக்குமா??எல் இ டீ LED மின்னணுப் பலகையை வைத்து பேருந்துகளின் கால அட்டவனையை தெளிவாக சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் வைக்க வேண்டும் எந்தப் பேருந்து எத்தனை மணிக்குப் புறப்படும்,வரும் என்று மக்களுக்குக் கட்டாயம் தெரிய வேண்டும் ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-03 19:28:25 IST
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும். 1 கிலோ பீன்ஸ் கிட்டத்தட்ட 120 ரூபாய் .தக்காளி கிலோ 50 டு 60 ,நல்ல சாப்பாட்டு அரிசி கிலோ 60 ரூபாய் .நல்லெண்ணெய் கிலோ 180 .கடலை எண்ணெய் .சுத்திகரிப்பட்ட கடலை எண்ணெய் .தேங்காய் எண்ணெய் விலை ,பருப்பு வகைகள் .புளி மற்றும் பல சமையல் பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது .பல காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை கிட்டதட்ட செஞ்சுரியைத் தொட்டுவிட்டன . வருமானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பொருளை மிகுந்த விலை கொடுத்து வாங்கக் கூடிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்,இதுதான் பொருளாதார வளர்ச்சி போலும் ,இன்னும் சிறிது காலங்களில் கண்காட்சியில் காய்கறிகளை ,மளிகைப் பொருட்களை ,பழங்களை அழகாக அடுக்கி வைத்து அழகு பார்க்கலாம்.பார்த்து ரசிக்கலாம் ,பசித்துப் புசிக்க முடியாது ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-03 19:25:57 IST
எல்லா நகைக் கடைகளிலும் தீவிரமாகச் சோதனை நடத்தினால் வருமான வரித்துறையால் பெருமளவு கறுப்புப் பணத்தைக் கட்டாயம் கைப்பற்ற முடியும்.தேர்தலுக்குப் பின்னும் பல அதிரடி சோதனையை நடத்த வருமான வரித்துறை முன் வர வேண்டும். இனித் தீவிரம் காட்டுமா ???...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-03 19:18:44 IST
இந்த m.Dinamalar app ஐ விட www.Dinamalar.com app மிகவும் அருமையான முறையில் செய்திகளைப் படிக்க முடிஞ்சது. ஆனால் இப்போது மொபைல் போனில் m.Dinamalar.com மொபைல் ஆப் பில் அந்த முழுப் பத்திரிகை யையும் படித்தது போலத் திருப்தி இல்லை.எனவே மீண்டும் அந்த www.Dinamalar.com வலைத் தளம் மொபைலில் வருவதுபோல் வடிமைக்கப் படவேண்டும்.தினமலர் கவனிக்குமா ???...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-03 19:16:08 IST
தமிழகத்தில் பெருகிவரும் சாலை விபத்துக்கள் அதன் மூலம் ஏற்படும் உயிர் இழப்புக்கள் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது .விபத்துக்களைக் குறைக்க அனைத்து தரப்பினரும் முயற்சி செய்ய வேண்டும்...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-03 18:29:19 IST
தமிழகத்தில் பெருகிவரும் சாலை விபத்துக்கள் அதன் மூலம் ஏற்படும் உயிர் இழப்புக்கள் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது .விபத்துக்களைக் குறைக்க அனைத்து தரப்பினரும் முயற்சி செய்ய வேண்டும்....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-03 17:49:58 IST
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும். 1 கிலோ பீன்ஸ் கிட்டத்தட்ட 100 ரூபாய். தக்காளி கிலோ 50 டு 60 ,நல்ல சாப்பாட்டு அரிசி கிலோ 60 ரூபாய் .நல்லெண்ணெய் கிலோ 180 .கடலை எண்ணெய் .சுத்திகரிப்பட்ட கடலை எண்ணெய் .தேங்காய் எண்ணெய் விலை ,பருப்பு வகைகள் .புளி மற்றும் பல சமையல் பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது .பல காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை கிட்டதட்ட செஞ்சுரியைத் தொட்டுவிட்டன . வருமானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பொருளை மிகுந்த விலை கொடுத்து வாங்கக் கூடிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்,இதுதான் பொருளாதார வளர்ச்சி போலும் ,இன்னும் சிறிது காலங்களில் கண்காட்சியில் காய்கறிகளை ,மளிகைப் பொருட்களை ,பழங்களை அழகாக அடுக்கி வைத்து அழகு பார்க்கலாம்...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-03 17:48:11 IST
கருணா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .வாழ்க பல்லாண்டு...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-03 17:46:49 IST
இனி இந்தியாவில் தொடங்கப்படும் வாகனத் தொழிற்சாலைகள் மாற்று எரிபொருள் பயன்படுத்தி வாகனம் ஓட்டும் வகையில் அமைய வேண்டும்.பெட்ரோல் மற்றும் டீஸல் இல்லாமல் மாற்று எரிபொருள் பயன்படுத்தி நமது அன்னியச் செலாவணி செலவுகளைக் குறைக்க ஆவண செய்யலாமே ,கவனிக்குமா ,அரசாங்கம் மற்றும் தனியார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நிர்வாகங்கள் ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-03 17:22:07 IST
வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விலை சரிவு ,இங்கு இந்தியாவில் நம் நாட்டில் பெட்ரோல் டீஸல் விலை ஏற்றம் என்ன கண்ட்ராவியோ இது ???வேறு எந்த நாட்டிலும் இந்தக் கூத்து நடக்காது ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-02 17:58:18 IST
இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன ,ஆம் யாரோட பொருளாதார வளர்ச்சி ???எது பொருளாதார வளர்ச்சி ???பல காய்கறிகள் பழங்களின் விலை கிட்டத் தட்ட செஞ்சுரியைத் தொட்டு விட்டன 1 கிலோ பீன்ஸ் கிட்டத்தட்ட 100 ருபாய் .தக்காளி கிலோ 50 டு 60 ,நல்ல சாப்பாட்டு அரிசி கிலோ 60 ரூபாய் .நல்லெண்ணெய் கிலோ 180 .கடலை எண்ணெய் .சுத்திகரிப்பட்ட கடலை எண்ணெய் .தேங்காய் எண்ணெய் விலை ,பருப்பு வகைகள் .புளி மற்றும் பல சமையல் பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது .ஒரு பொருளை மிகுந்த விலை கொடுத்து வாங்கக் கூடிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்,இதுதான் பொருளாதார வளர்ச்சி போலும் ,இன்னும் சிறிது காலங்களில் காய்கறிகளைப் பழங்களை மளிகைப் பொருட்களைக் கண்காட்சியில் அழகாக அடுக்கி வைத்து அழகு பார்க்கலாம். ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-02 17:42:51 IST
இசைஞானி இளையராஜா அவர்களின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைத் தந்த இளையராஜா அவர்களுக்கு வாசகர்களின் சார்பில் இனிய பிறந்த வாழ்த்துக்கள்.இறைவனின் அரிய . அதிசயப் படைப்பான அவரை நேரில் கண்டு பிரமிக்க வேண்டும், வாழ்த்த வயதில்லை என்ற போதும் வாழ்த்த வேண்டும் என்ற ஆசை, பேராசை என்று கூடக் கூறலாம் என் போன்ற தீவிர ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாக ஆழ் மனதில் வெகு நாட்களாக உள்ளது. அந்த நன்னாள் என்று வருமோ அது வரை பொறுமையோடு காத்திருப்போம். Wish you a Happy Birth day Ilaiyaraja Sir ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-02 17:35:11 IST
இசைஞானி இளையராஜா அவர்களின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைத் தந்த இளையராஜா அவர்களுக்கு வாசகர்களின் சார்பில் இனிய பிறந்த வாழ்த்துக்கள். அவரை நேரில் கண்டு பிரமிக்க வேண்டும், வாழ்த்த வயதில்லை என்ற போதும் வாழ்த்த வேண்டும் என்ற ஆசை, பேராசை என்று கூடக் கூறலாம் என் போன்ற தீவிர ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாக ஆழ் மனதில் வெகு நாட்களாக உள்ளது. அந்த நன்னாள் என்று வருமோ அது வரை பொறுமையோடு காத்திருப்போம். Wish you a Happy Birth day Ilaiyaraja Sir. ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-02 17:33:09 IST
ராஜான்னா ராஜா தான், இறைவனின் பரிபூரண ஆசியோடு இசைஞானி இளையராஜா அவர்கள் நீடூடி வாழ வாழ்த்துக்கள், ராஜா சாருக்கு இணை அவரேதான் வேறு யாரும் அல்ல. அவருக்கு அனைத்து வாசகர்களின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் Wish U a many More Happy returns of the Day Ilaiya raja Sir...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-06-02 17:28:58 IST
அம்மாவுக்கு ஜெயமே. ஒரு வேளை அம்மா சொத்துக் குவிப்பு செய்ததற்கு நீதிமன்றம் தண்டனை அளித்தால் கருணாவின் மீதும் சுப்பரமணிய சாமி ஊரறிந்து வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை குவித்ததற்காக சொத்துக்குவிப்பு வழக்கு போடுவாரா ??அப்பத்தான் அவர் ஒரு மீசை இல்லாத ஆம்பளை...
Kumar - tirupur,இந்தியா
2016-05-25 21:27:49 IST
அண்ணா பல்கலைகழகம் 2016 கவுன்சிலிங் அப்ளை செய்யும்பொழுது ,சந்தேகங்களுக்காக ஈமெயில் அனுப்பினாலோ தொலைபேசியில் தொடர்பு கொண்டாலோ பதில் கிடைப்பதில்லை .பலருக்கும் இதே நிலைமை .தங்களால் இயன்றால் அது பற்றி கேட்டு எழுதவும் ,எல்லோருக்கும் பயன்படும் ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-05-19 16:18:40 IST
தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சிதான்,தீய சக்திகள் அறவே அழிந்து மக்களுக்கு நன்மை செய்திட முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முழு உத்வேகத்தோடு செயல்படுவார் என பரிபூரணமாக நம்புகிறோம் ,வாழ்த்துக்கள் அம்மா ,இறைவனின் அருளோடு ஆட்சியைப் பிடித்த அம்மாவின் குறிக்கோள்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும் ....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-05-15 11:40:39 IST
அப்போ அந்த 1,76,000 கோடி ஒரு வேளை வேற பல கன்டெய்னர்களில் மறைந்து இருக்குமோ ???தெரியல . g.s.rajan chennai...
g.s,rajan - chennai ,இந்தியா
2016-05-12 15:05:42 IST
வருமான வரித்துறை தற்போது மிக விழிப்புடன் ,துடிப்புடன் செயல்பட்டு பல கோடி ரூபாய் முறைகேடான பணத்தைக் கைப்பற்றி வருவதை அனைவரும் அறிவோம்.மேலும் இதே போல நடவடிக்கைகளை தேர்தலுக்குப் பிறகும் முழு வீச்சில் தொடர்ந்தால் நாட்டில் புழங்கும் பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி ஒரு மிகப் பெரும் சாதனையாகவே செய்ய முடியும் .முறைகேடான முறையில் ஈட்டும் பணம் ,லஞ்சம் மற்றும் ஊழல் மூலம் மிக மிகக் குறுகிய காலத்தில் சாம்பாதிக்கும் ( )பணம் ,ஹவாலாப் பணம் ,இதனால் வருமான வரி கட்டாமல் அரசை ஏமாற்றும் போக்கு இந்தியாவில் பெரும்பாலும் குறையும்.ஆங்காங்கே தனது அதிரடி சோதனையை தேர்தலுக்குப் பிறகும் எந்த வித பார பட்சமும் இல்லாமல் தீவிரமாகத் தொடர வருமான வரித்துறை முன்வர வேண்டும் என்பது நடு நிலையான மக்களின் ஆசை.கணக்கில் காட்டப் படாத பணத்தைக் கைப் பற்ற நடவடிக்கை எடுப்பதைத் தீவிரமாகத் தொடருமா வருமான வரித்துறை ??? ஜி.எஸ்.ராஜன், சென்னை....
g.s,rajan - chennai ,இந்தியா
2016-05-11 10:51:28 IST
திருச்சியில் இருந்து லால்குடி, புள்ளம்பாடி, டால்மியாபுரம் வழியாக அரியலூர் செல்லும் சாலைகளில் லாரிகளின் போக்குவரத்து நாள் தோறும் வெகுவாக அதிகரித்து வருகிறது.24 மணி நேரமும் லாரிகள் இந்தச் சாலைகளில் ஓய்வு இல்லாமல் இயக்கப்படுவதால் பல்வேறு சாலை விபத்துகளும் ஏற்பட்டு உயிர் இழப்பு சர்வ சாதாரணமாக ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் நடுவே சென்டர் மீடியன் அமைக்க சாலைகளில் ஆக்கிரமிப்புக்களைத் தேவையான இடங்களில் அகற்றிடத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். பீக் ஹவர் எனப்படும் நெருக்கடியான நேரங்களில். சிமெண்ட் லாரிகள், கரும்பு ஆலைகளின் லாரிகள், கல் மற்றும் மணல் லாரிகள், சுண்ணாம்புக் கல் லாரிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி லாரிகளைப் புறவழிச் சாலைகள் வெகு விரைவில் அமைத்து பல இடங்களில் சாலை நெருக்கடியைத் தவிர்க்க உதவிட வேண்டும்.மேலும் திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வரை கிட்டத்தட்ட 32 வேகத் தடைகள் ஒரு வரைமுறையே இல்லாமல் தாறுமாறான உயரத்தில் அமைக்கப் பட்டு பல வாகன ஓட்டுனர்களின் முதுகுத் தண்டுவடத்தைப் பதம் பார்க்கிறது,பயண நேரமும் அதிகரிக்கிறது .அளவுக்கு அதிகமான உயரங்களில் வேகத் தடைகள் இருப்பது குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எமனாகி வருவது வேதனை . வெள்ளை நிறப் பட்டைகளும் தெளிவாகக் காணப் படாமல் இருப்பது விபத்துக்களை மேலும் அதிகரிக்கவே செய்யும். சாலைகளில் அதிக உயரமுள்ள வேகத்தடைகள் உடனடியாக சாலை போக்குவரத்துக்கு மிகவும் அபாயமாக இருப்பதால் அவற்றை இடிக்க வேண்டும் .போக்குவரத்துத் துறை ,தமிழக மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை கவனிக்குமா ???...
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
2016-05-11 05:50:43 IST
வோட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற உறுதி மொழி எடுப்பது நல்லதே.ஆனால் உண்மை நிலை இதுவல்ல. காரணம் பெரும்பாலனவர்கள் எதையாவது வாங்கியே பழக்கப்பட்டவர்கள். இந்த கலாசாரம் போக வெகு நாள்கள பிடிக்கும்....
prakash - theni,இந்தியா
2016-05-09 16:04:48 IST
இன்று நடிகர் விஜயகாந்தின் பேட்டியை என்டிடிவி சேனலில் பார்த்தேன். பிரணாய் ராய் உள்பட இந்தியாவின் ‘டாப்’ பத்திரிகையாளர்கள் 3 பேர் அவரை பேட்டி எடுத்தனர். அவர்கள் மூவருக்குமே தமிழ் தெரியாது. அவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பதும், அதற்கு விஜயகாந்த் தமிழிலேயே திக்கி, திணறி பதில் அளிப்பதுமாக பேட்டி முடிந்தது. (://www.ndtv.com/video/news/my-heart-is-young-says-captain-vijayakanth-to-prannoy-roy-415151) சாதாரண ஆங்கிலம் கூட விஜயகாந்த்திற்கு தெரியவில்லை. இவர் தான் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராம். எங்கே போய் முட்டிக்கொள்வது என தெரியவில்லை. இதுபோன்ற கொடுமைகள் இனிமேலும் நடக்கக் கூடாது என்றால், தேர்தலில் போட்டியிடுவோருக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. உடனடியாக சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும். அரசியல் கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கையில் இதையும் ஒரு வாக்குறுதியாக சேர்க்க வேண்டும்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X