Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 2
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-03-01 18:12:15 IST
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் ரூ.12,600 கோடி மதிப்பிலான மெகா பணமோசடியில் ஈடுபட்டார் வைர வியாபாரி நீரவ் மோடி. இந்த பண மோசடி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் சுனில் மேத்தா, 'நாங்கள் இனி இது மாதிரியான தவறுகள் இனி நடக்க விடமாட்டோம் அந்த புற்றுநோயை நீக்குவோம். 2011ஆம் ஆண்டில் இருந்து இந்த புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. நாங்கள் இதை அறுவைச் சிகிச்சை செய்து நீக்கி வருகிறோம்' என பேசியிருந்தார்.இந்நிலையில், பத்மவிபூஷன் விருது பெற்றவரும், புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவருமான சாந்தா, சுனில் மேத்தாவின் கருத்து குறித்து தனது கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'புற்றுநோய் என்ற வார்த்தையை கூச்சமான, நம்பிக்கையற்ற மற்றும் பயமூட்டும் ஒன்றாக காட்டிக்கொள்ளக் கூடாது. கேவலமான, மோசமான ஒன்றோடு புற்றுநோயை நிச்சயமாக ஒப்பிட வேண்டாம். அது புற்றுநோயால் பாதிக்க்கப்பட்டுள்ளவர்களை மேலும் அச்சமூட்டும். எனவே, புற்றுநோயை ஊழலோடு எப்போதும் இணைத்துப் பேசவேண்டாம்' என ஆத்திரத்துடன் எழுதியிருந்தார். இதுகுறித்து ஆங்கில இதழ் ஒன்றிற்கு விளக்கமளித்துள்ள மருத்துவர் சாந்தா, 'ஊழல் ஒரு கிரிமினல் குற்றம் புற்றுநோய் அப்படி அல்ல. ஊழல் உள்நோக்கம் கொண்டிருப்பதைப் போல, புற்றுநோய் இருப்பதில்லை. எனவே, சுனில் மேத்தா தனது கூற்றைத் திரும்பப்பெறவேண்டும்' என தெரிவித்துள்ளார்.மருத்துவரின் ஆதங்கம் நியாயமானதுதான்?சுனில் மேத்தா தனது கருத்தித் திரும்ப பெறுவாரா?...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-03-01 17:54:03 IST
அம்மா உணவகம், நாட்டிலேயே, முதல்முறையாக, மலிவு விலையில் உணவு வழங்கும், அம்மா உணவகம், சென்னை மாநகராட்சியில், 2012ல் துவங்கப்பட்டது.ஆரம்பத்தில், மண்டலத்திற்கு ஒன்று என துவங்கப்பட்ட இந்த உணவகம், தற்போது, 407 இடங்களில் செயல்பட்டு வருகிறது.இங்கு, ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவை, ஐந்து ரூபாய்க்கும் தயிர் சாதம், மூன்று ரூபாய்க்கும் இரவில், இரண்டு சப்பாத்தி மூன்று ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.சென்னை மாநகராட்சிக்கு, 'அம்மா' உணவகத்தால், ஆண்டிற்கு, 100 கோடி ரூபாய், நஷ்டம் ஏற்படுவது, ஆய்வில் தெரியவந்துள்ளது.இதனை தவிர்க்கவும் மக்களை ஈர்க்கவும் , உணவகத்தில், ஊறுகாய், அப்பளம், பொரியல் வழங்க, மாநகராட்சி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது..உணவகம் துவங்கிய போது, மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பு, தற்போது பாதியாக குறைந்துள்ளது.இது விஷயத்தில் அதிகாரிகள் அரசாங்கத்துக்கு தக்க ஆலோசனை வழங்க வேண்டும். ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் என்பது அரசுப்பணம்தானே? அம்மா உணவகம் லாபம் ஈட்டாமல் போனாலும் கூட அரசுக்கு நட்டம் ஏற்படுத்தலாகாது அல்லவா?...
MOORTHY - Hdh.Nellaidhoo,மாலத்தீவு
2018-02-27 13:02:58 IST
சினிமா நடிகை இறந்த செய்தியை விலாவரியாக வெளியீட்டு சமுகத்திக்கு நல்லது செய்வதாக நினைத்து கெட்டது செய்து விடாதீர்கள் ....ஒரு நடிகைக்கு தரும் முக்கியத்துவத்தை மற்றசெய்திகளுக்கு கொடுங்கள் .......
Aarkay - Pondy,இந்தியா
2018-02-21 14:42:52 IST
"நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கலேடா" காமெடி தான் நினைவுக்கு வருகிறது, இன்று முளைத்துள்ள திடீர் தலைவர்களை நினைக்கும்போது.... எனக்கென்று சொந்தமாய், இயங்கும் ஒரு மூளை, பகுத்தாயும் அறிவு இருக்கிறது என்னை வழிநடத்த துடிக்கும் திடீர் தலைவர்களைவிட, என் கல்வியறிவு மிகவும் அதிகம் நான் ஏன் இவர்கள் கூற்றை நம்பி, இவர்கள் பின்னால் சென்று, இவர்கள் ஆடம்பர வாழ்வை தக்கவைத்துக்கொள்ள, என் நேரம், மற்றும் வாழ்க்கையை இவர்களிடம் அடகு வைக்க வேண்டும்? சாமானியனின் வாழ்க்கை இவர்கள் வாழ்ந்ததுண்டா? பசி என்றால், என்னவென்று இவர்களுக்கு தெரியுமா? கீழே இருப்பவனை மேலே தூக்கிவிட இவர்களிடம் திட்டமுள்ளதா? இளைஞர் பட்டாளத்தை டாஸ்மாக்-இலிருந்து மீட்டு, ஆக்கபூர்வமான உழைப்பை அவர்களிடமிருந்து பெற வழியுள்ளதா? பணக்காரர்களுக்கும், ஏழைக்குமான மலைக்கும், மடுவுக்கும் உள்ள இடைவெளியை எப்படி குறைக்கப்போகிறார்கள்? சொந்தக்காசில் 10 வருடங்களுக்கு முன் தானம் செய்ததுண்டா? இவர்களிடம் ஒரு positive அம்சமுண்டா? ஒன்று, தமிழன், மற்றவன் என்ற பிரிவினை, அல்லது, நாத்திகம், இந்துமத துவேஷம் என்ற பிரித்தாளும் சூழ்ச்சி தேர்தல் வரும்போது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எங்கள் சொந்த மூளையை உபயோகித்து, பகுத்தாய்ந்து, நாங்களே எங்கள் அரசை தேர்ந்தெடுத்துக்கொள்வோம் until then, Do Not Disturb...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-02-18 06:04:28 IST
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக, 25 ஆண்டுகளாக வாழ்ந்த சசிகலா குடும்பத்தினரின், தமிழக சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வரும்,வருமான வரித்துறை,அவர்களது போலி நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும், விசாரணையை துவக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சசி, குடும்பத்தினரின், வெளிநாட்டு, முதலீடுகள் குறித்த தகவல்களையும் வருமான வரித்துறை, தோண்டுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.இது தொடர்பாக, அமலாக்கத் துறையும், விரைவில் களத்தில் இறங்கும் எனவும் செய்திகள் கூறுகிறது. அதனால், சசிகலா உறவுகளுக்கு சிக்கல் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் நிழலாக, 25 ஆண்டுகளாக வாழ்ந்த சசிகலா மற்றும் அவர்களது உறவினர்கள், தமிழகத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக்க பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.அவ்வாறு வருமான வரித்துறை இவர்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும் விலை மதிப்புகள் சொத்துக்கள் பணம் போன்றவற்றை தமிழகத்தின் வளர்ச்சி நிதியில் சேர்த்து மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்த முன்வர வேண்டும்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-02-17 16:09:58 IST
ஏற்கனவே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகம் தீவீரவாதத்தின் புகலிடமாக திகழ்கிறது என கூறியிருந்தார்-அதற்கு துணை முதல்வர் "ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்" என விளக்கம் கொடுத்து இருந்தார்.தற்போது தமிழிசை அவர்களும் கூட ஓ.பி.எஸ்., கூறிய அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் தான், கேக்கை அரிவாளால் வெட்டும் நிலை உள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக்கூடாது. சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது எனக் கூறியுள்ளார்-இது விஷயத்தில் தமிழக அரசு தனி கவனம் கொள்வது அவசியமானது ஆகும்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-02-16 16:30:20 IST
ரூ.11 ஆயிரம் கோடி வங்கி மோசடியில் சிக்கியுள்ள நகைக்கடைக்காரர் நிரவ் மோடி அமெரிக்காவில் பதுங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. தேடப்படும் குற்றவாளி .விஜய் மல்லையா-ரூ.9000 கோடி தேடப்படும் குற்றவாளி .நீரவ் மோடி-ரூ.11000 கோடி . இவர்கள் அரசியல் செல்வாக்கில் கணிசமாக கடன் பெற்று விடுகிறார்கள்.பின்னர் திருப்பி செலுத்தாத பட்சத்தில்,அதே அரசியல் செல்வாக்கில் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டு, பின்னர் அதனை வாராக்கடன் என்று கூறி கடனாளியை தேடப்படும் குற்றவாளி எனவும் அறிவித்து விடுகிறார்கள். இதனால் சாதாரண பாமர மக்கள் ஒரு சிறு தொகை கூட அவசியத்துக்காக வங்கியில் கடன் பெற இயலாத நிலை ஏற்படுகிறது....
Sneha Karthik - Nagercoil,இந்தியா
2018-02-13 16:59:40 IST
திருமணம் மாங்கல்யம் கணவர் அற்புதச்சொல் ..... கணவர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.... மனைவியுமே..... ஒரு ஆண் தன் மனைவியை எப்படி நடத்துகிறான் என்பதை பொறுத்து தான் அவன் எப்படி பட்ட அம்மா க்கு பிறந்திருக்கான் என்பது புலப்படும்.... மற்றவர் முன் தன் மனைவியிடம் கடிந்து கொள்வது ஆண் சிறப்பு அல்ல.... என்ன நடந்தாலும் மற்றவர் முன் தனக்காக வந்தவளை விட்டு கொடுக்காதவனே ஆண்மகன் ..... தான் பிறந்த வீட்டை விட்டு உனக்காகவே வந்த உனது உமையவளை சிறிதளவு மதிப்பதில் தவறு இல்லையே.. இருக்கும் பொது எவருக்கும் அருமை தெரியாது..... ஆணின் சிறப்பில் முக்கியமான ஒன்று துணைவியாக இருந்தாலும் அவளை முதலில் பெண்ணாக மதிப்பது மற்றவர் முன் மிதிப்பது அல்ல மனைவியும் ஒரு உயிர் தான்.. அவளுக்கு முதலில் நல்ல நண்பனாக இருக்க கற்று கொள் அவளை புரிந்து கொள் அவள் உணர்வுக்கு மரியாதை கொடு அவளுக்கு மரியாதை கொடு தான் ஆண்..தான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கர்வத்தை தவிர்த்து விடு..அதுவே உனக்கு மரியாதையை பெற்று தரும் உடல்நிலை சரி இல்லாத போதும் தன் கணவனுக்காக சமைப்பது, அவன் துணிகளை துவைப்பது, சிறிது தேவைகளை பூர்த்தி செய்வது ...இப்படிப்பட்டவளை ஒரு உயிராக மதித்தாலே சிறப்பு.. தன்னிடம் எவ்ளோ தனித்திறமை இருந்தாலும், தன் கணவனுக்கு பிடிக்கவில்லை என்றால் அவளது மீதி காலம் சமயலறையில் தான்.... உனக்காக இவ்வளவும் செய்த உன் துணைவிக்காக நீ என்ன செய்தாய் ??? Try to understand her.. Encourage her.. Treat her as a human.. Respect her feelings.. Treat her as your friend.....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-02-11 07:05:19 IST
வாழ்த்துக்கள் போட்டியாளர்களே இன்று தமிழக அரசு துறைகளில், வி.ஏ.ஓ.494 இளநிலை உதவியாளர், 4,301 தட்டச்சர், 3,463 என, எட்டு வகை பதவிகளில், 9,351 காலி இடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப, குரூப் - 4 போட்டி தேர்வு,மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடை பெறுகிறது.சென்னையில், ஒரு லட்சத்து, 60 ஆயிரத்து, 120 பேர், 508 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இந்தியாவில், எந்த ஒரு தேர்விலும் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் நடக்கும் தேர்வில், முதன்முதலாக, 21 லட்சம் பேர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. தேர்வில் பங்கேற்பவர்கள் வெற்றி வாகை சூட வாழ்த்திடுவோம் நண்பர்களேவிடா முயற்சியும் நம்பிக்கையும்தானே வாழ்க்கை இது இவர்களுக்கும் பொருந்துமல்லவா?...
Bairav sundaram - chennai,இந்தியா
2018-02-09 13:37:26 IST
9வதுஹிந்து ஆன்மீக மற்றும் சேவை விழா 9வது ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை, கலாச்சார, பண்பாட்டு, கலை திருவிழா என்று சொல்வதே மிகப் பொருத்தமாயிருக்கும். நம் ஹிந்து சமுதாயத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கலைகளையும் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக அமைக்கப்பட்டு இருந்தது, எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றுமறியன் என்ற வாக்கிற்கிணங்க, ஆன்மீகம் மற்றும் சேவை, தியானம், யோக கலை மூலம் அனைவரும் சிறப்பான வாழ்க்கையை பெற்றிடுமாரு உன்னதமான உயரிய நோக்கத்தோடு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காவேரி கங்கை புண்ணிய நதிகளின் புனித நீரை இறைவனின் திருப்பாத குளத்தில் விடப்பட்டது, கங்கை காவேரி நதிநீர் இணைப்பிற்கு வித்திட்டதாக தெரிகிறது. பெண்களை போற்றும் புண்ணிய பூமியில் பெண்களுக்கு மரியாதையையும், பெண் குழந்தைகளையும் போற்றும் விதமாக “கன்யா வந்தனம்” சிறப்புற நடைபெற்றது. உன்னத தேசபக்தி, மனித மற்றும் குடும்ப மதிப்புகளை ஊக்குவித்தல், சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல், காடுகளை பாதுகாத்தல் மற்றும் உருவாக்குதல், விலங்குகளை பாதுகாத்தல் என்பதே ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியின் முக்கிய குறிக்கோளாக விளங்குகின்றது தெய்வீகத்தையும் தேசியத்தையும் போற்றும் விதமாகவும், அறிந்து கொள்ளும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 64 நாயன்மார்களுடன் இறைவன் அலங்காரத்துடன் காட்சியளிக்கும் வகையில் பார்த்தபோது காண கண் கோடி வேண்டும். கிராம தெய்வங்களைப்பற்றியும், வழிபாட்டு முறைகளை பற்றி அறிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. மகா பெரியவா திருஉருவ சிலையை பார்த்தவுடன் மெய்சிலிர்க்கவைக்கிறது. வேங்கடேச பெருமாளையும், சிவ ஜோதிர் லிங்கங்களையும் ஒன்றாக தரிசிக்க பாக்கியம் கிடைத்திருக்கிறது. தேசப்பற்றை ஊக்குவிக்கும்வகையில் தேசத்திற்க்காக பாடுபட்டவர்கள் பற்றி அறிந்து கொள்ள மிகச்சிறந்த வாய்ப்பை நம்மக்கு அளித்திருக்கிறது. தமிழ் பண்பாட்டு மேளங்கள், வாத்தியங்கள் மற்றும் கருவிகளின் இசை கயிலாயத்தில் சிவ பெருமானையும் தாண்டவ மாடச்செய்யும் வகையில் இருந்தது. தமிழ் பண்பாட்டு கலைகளான தெருக்கூத்து, கரகாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் அரங்கேறியது, அழியும் நிலையில் உள்ள கிராம புற கலைகளை ஊக்குவித்து, நம்மை காணச்செய்தது கண்குளிர செய்வதாய் இருந்தது. சிலம்பத்திற்கென்று தனிஒரு அரங்கு தமிழர் கலையை போற்றுவதாகவும், கலையை வளர்ப்பதற்கு பெரும் முயற்சியை இருக்கிறது தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளான எட்டுக்கோடு, பரமபதம்,சாக்குப்பை, உறியடித்தல், பல்லாங்குழி, கல்லாங்காய், சிலம்பம், ஜல்லிக்கட்டு, பாண்டி, கில்லி,கண்கட்டி விளையாட்டு, கயிறு இழுத்தல், பச்சை குதிரை, ஆடுபுலி ஆட்டம்,கண்கட்டி விளையாட்டு, இசை நாற்காலி, தாயப்பாஸ், நுங்கு வண்டி காலத்தின் மாற்றத்தால் அழிந்து வரும் விளையாட்டுகளை, நாம் மறந்துபோன விளையாட்டுகளை நினைவுபடுத்தி, நம் சந்ததியனர்க்கு எடுத்துச்செல்லும் உன்னத முயற்சி. விவேகானந்தர் ரத யாத்திரை, விவேகானந்தர் கூறிய கோட்பாடுகளை மாணவ சமுதாயம் கடைபிடித்து வாழ்க்கையில் வெற்றிகொள்ள மிகச்சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. மகான்கள், ஆன்மீக சான்றோர்கள், மடாதிபதிகள் பங்கேற்று சிறப்பு செய்தனர். மஹா பெரியவா, விவேகாந்தர் , புத்தர், மஹாவீரர், ராமகிருஷ்ணர், வள்ளலார் , சாய் பாபா, ஹிந்து சைவ ஆதீனங்கள் கூறிய ஆன்மீக வழிகாட்டு புத்தகங்களும், அரங்கங்களும் அனைவர்க்கும் நற்சிந்தனையை தூண்டி, நற்பாதையில் வாழ்க்கையை கொண்டு செல்ல வழிவகுக்கிறது. கோ பூஜை முதற்கொண்டு, வள்ளி திருமணம், திருப்பதி வேங்கடேச பெருமான் திருக்கல்யாணம் மற்றும் பல்வேறு பூஜைகளும் வழிபாடுகளும், கருத்தரங்குகள் சிறப்புற நடைபெற்றன. பல்வேறுபட்ட சமுதாய கலாச்சார பண்பாடுகளை அறிய வைப்பதாக அமைந்திருக்கிறது. மாதிரி கிராமம் உண்மையிலேயே அருமையான கலை படைப்பு பல்வேறு அம்சங்களுடன் உயிரோட்டமாய் கண்களுக்கு விருந்து அளிக்கிறது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளை இசை கச்சேரிகள், பரதநாட்டியம், நாம சங்கீர்த்தனம் மற்றும் போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளித்து பரிசுகளும் அளித்து இருக்கிறார்கள். கலாசார ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகமும், மனிதநேய ஒற்றுமையை பறைசாற்றுவதாக விளங்குகிறது. இயற்கை உரத்தில் உருவாகிய கலை பொருள்கள், மூலிகை செடிகள், நட்டு மருந்துகள், வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள் கண்காட்சியில் பயன் மிக்கதாக இருந்தது. நமது எண்ணங்கள், செயல்கள் உயர்வானதாக மாற்றிக்கொள்ள நாம் சிறக்க, நாடு சிறக்க வாழ்வில் சாதிக்க ஆன்மீகத்தின் மூலமே முடியும் என்பதை கண்காட்சியை பங்கேற்றால் உணர முடியும். மாணவ செல்வங்கள், இளைஞர்கள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள, திறமையை வளர்த்துக்கொள்ள, மன அழுத்தத்திலிருந்து மீண்டிட, தேசப்பற்றை வளர்த்துக்கொள்ள, கலைகளை அறிந்துகொள்ள, வாழ்க்கையில் வெற்றிகொள்ள, சேவை மனப்பான்மையை பெருக்கிக்கொள்ள, விழிப்புணர்வு பெற்றிட, அன்பு, கருணை, கல்வி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைகள் ஆகியவற்றின் முழுமையான பயனை அடைந்திட இந்த ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி மிகமுக்கிய பங்காற்றிடும் என்பதில் ஐயமில்லை. பைரவ சுந்தரம், சென்னை...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-02-07 12:16:49 IST
இந்திய வங்கிகள் பலவற்றிலும் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால், தேடப்பட்டுவரும் குற்றவாளியாக தொழிலதிபர் விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனால், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். இந்திய அரசு, அவரை நாடு கடத்த முயன்றுவருகிறது.தற்போதைய நிலையில், விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் வாங்கிய கடன் தொகை குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக ஆவணங்களை அளிக்குமாறு நிதியமைச்சகத்திடம், மத்தியத் தகவல் ஆணையம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது . ஆனால், அதுகுறித்த தகவல்கள் தங்களிடம் இல்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்த ராஜீவ் குமார் கார்கே என்பவர், விஜய் மல்லையா வாங்கிய கடன்கள்குறித்த தகவல்களை நிதியமைச்சகம் அளிக்க முன்வரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.ஏன் இந்த குளறுபடி? இதற்கு யார்தான் பொறுப்பு?வங்கிகளின் வாயிலாக அவருக்கு வழங்கிய 9000 கோடி ரூபாயின் நிலைதான் என்ன?...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-02-07 07:41:05 IST
தமிழக அரசு மின் ஊழியர்களின் போராட்ட அறிவிப்பை முறியடிக்கும் வகையில் , 'ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தால், எட்டு நாள் சம்பளம், 'கட்' செய்யப்படும்' என, மின் வாரிய நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டத்திற்கு ஊழியர்களை துாண்டி விடுபவர்களை கண்காணிக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற நெருக்கடிகள் காரணமாக, போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள தொழிற்சங்கங்கள் மீது, மின் வாரிய ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், போராட்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ள தொழிற்சங்கங்கள் மீது, ஊழியர்கள் கோபம் அடைந்துள்ள நிலையில், தமிழக அரசு உரிய தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வு ஏற்படுத்திட வேண்டும்.அவர்தம் வேலை நிறுத்தத்துக்கு இடம் தரலாகாது....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-02-07 07:15:16 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் ''தமிழக கவர்னராக, ஐந்து ஆண்டுகள் இருப்பேன் ஏழைகளுக்கு செய்யும் சேவை, இறைவனுக்கு செய்யும் சேவையாகும்,'' என, பன்வாரிலால் புரோஹித் எனக் கூறியுள்ளார். அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.இதுவரை, 50 நடமாடும் கண் அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு, 6,324 பேருக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது.சங்கரா மருத்துவமனை நடத்தும், 100வது நடமாடும் கண் அறுவை சிகிச்சை முகாமை, நான் துவக்கி வைக்க வேண்டும். காரணம், நான் ஐந்து ஆண்டுகள், தமிழக கவர்னராக இருப்பேன் எனவும் கூறியிருக்கிறார் மிக்க மகிழ்ச்சி. ஏழைகளுக்கு செய்யும் சேவை, இறைவனுக்கு செய்யும் சேவையாகும். இவ்வாறு அவர் கூறியிருப்பது வரவேற்புக்கு உரியதுதான்.இருப்பினும் அவர் ஐந்து ஆண்டுகள் தமிழகத்து கவர்னராக நீடிக்கும் நிலையிலேயே ஜோலார்பேட்டை-ஓசூர் ரயில் பாதை திட்டத்தையும்.மாவட்ட தலைநகரில், அரசு தானியங்கி பணிமனை, குறைவான செலவில் எளிதாய் பயணம் மேற்கொள்ள கூடுதலான சாதாரண கட்டண அரசு பேருந்துகள்,ஷேர் ஆட்டோக்கள்,அவசியமான இடங்களில் பயணியர் நிழற்குடை, சுகாதாரமான பேருந்து நிலையம் போன்றவற்றுக்கு வித்திட வேண்டும் என்பது கிருஷ்ணகிரி நகர மக்களின் சார்பான எனது தாழ்மையான வேண்டுகோள் ஆகும் மாண்புமிகு கவர்னர் அவர்களுக்கு.கனிவுடன் பரிசீலிப்பாரா?...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-02-01 09:03:19 IST
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் ஏழுநாள் சம்பளம் பிடித்தம் செய்துள்ளதாக பத்திரிகை செய்திகளில் கூறப்படுகிறது.இதே போல தொழிற்சங்கத்தின் பதவியில் இருந்துகொண்டு-அரசுப்பணி செய்யாமல் அரசு சம்பளம் பெறுவதால் அரசுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.சட்டத்தில் இடமிருப்பின் இது விஷயத்திலும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு பணி புரியாத நபர்களுக்கு சம்பளம் வழங்குவதான/அரசுப்பணம் விரயமாவதை தடுக்க வேண்டும்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-02-01 08:38:26 IST
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் பிடிபட்ட/தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட கொடூரன் ஜஸ்வந்த் குறித்த தகவல் ஏதுமில்லையே?சட்டம் என்ன செய்கிறது?அதனை அப்படியே மறக்கடிக்க செய்து விடுவார்களோ?...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-02-01 08:37:31 IST
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பயணிகளின் கோரிக்கைகளும் எதிர்பார்ப்பும் ஒருபுறம் இருப்பினும் எங்களுக்கு குறிப்பாக எங்கள் மாவட்டத்துக்கு எட்டாத கனியாக இருக்கும்-"இதோ அதோ" என கூறப்பட்டு வருகிற-வட ஆற்காடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான எதிர்பார்த்து ஏமாந்து கொண்டிருக்கும் கிருஷ்ணகிரி வழியிலான மக்கள் பெரிதும் பயனடையும் ஜோலார்பேட்டை-ஓசூர் ரயில்வே வழித்தடம் இந்த பட்ஜெட்டில் முழுவடிவம் பெறும் என நம்புகிறோம்.மத்திய அரசின் பாஜகவினரும்-தமிழக அரசின் அஇஅதிமுகவினரும் தக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செய்வார்களா? அவர்கள் செய்வார்களா?எதிர்பார்க்கிறோம் எட்டாத கனி எட்டும் என்கிற ஆவலில்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-02-01 08:14:56 IST
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா தங்கி இருந்த போயஸ் தோட்டத்தில் அவரது அறையில் இருந்து 5000 கோடி ரூபாய் அளவுக்கான சொத்துக்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்து இருக்கின்றனர். அவரிடம் கர்நாடக சிறை சென்று விசாரிக்கப்-போவதாய் தகவல்கள் வெளியானது.ஆனால் தற்போது சசிகலா, மவுன விரதம் இருப்பதாக கூறியுள்ளதால், அவருக்கு சிறிதுஅவகாசம் அளித்திருப்பதாய் கூறப்படுகிறது. அவர், அவகாசம் கோரிய 10.02.2018வரை, விட்டுப் பிடிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். அதன் பின்னர் விசாரணை நடத்தப்படும் எனவும் வேறு ஏதேனும் காரணம் கூறி, விசாரணையை ஒத்தி வைக்க நினைத்தால், அதை ஏற்க மாட்டோம் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்-பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்-மர்ம முடிச்சுகள் நிலையை....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-31 06:11:09 IST
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை, சிகிச்சை குறித்து முழுவதுமாக தெரிந்த ஒரே நபர் சசிகலாதான். முதல் நபராக பிரமாணம் தாக்கல் செய்யவேண்டிய நீங்கள் இதுவரை தாக்கல் செய்யாதது ஏன்? எனவும் பெங்களூரூ சிறையில் இருந்தாலும் ஆணையத்தின் செயல்பாடு குறித்து அறிந்திருந்தும், ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து ஆவணங்கள் அடங்கிய பென்டிரைவை ஏன் ஆணையத்திடம் வழங்காமல் உங்கள் உறவினர்களிடம் அளித்தது ஏன்? எனவும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சசிகலாவிடம் வினா எழுப்பி உள்ளது.இதற்கு சசிகலா அளிக்கும் பதிலை முன்வைத்தே அடுத்த கட்ட விசாரணை நகர்வு இருக்கும் என நம்புவோமாக....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-30 19:20:44 IST
நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் விசாரணை முடிக்கப்படுமா என சிந்திக்கத் தோன்றுகிறது....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-29 08:01:40 IST
தமிழக அரசுப் பேருந்துகள் என்பதின் அர்த்தம் என்னவென, கேட்போமானால் ஏறும் படிகள் முதல் உட்காரும் இருக்கை வரை ஓட்டை உடைசல், மழை காலங்களில் ஒழுகும் கூரைகள்..என்று மிகவும் சுலபமாக கூறி விடலாம். கடந்த பத்தாண்டுகளாக கிடுகிடு வேகத்தில் அதன் சரிவு. அடகுக்கு போன பணிமனைகள் ஊழியர்களிடம் பிடித்த பிஎப் பணம் ஸ்வாகா புது பேருந்துகள் என்பது மருந்துக்கு கூட இல்லை ஏசி பஸ்கள் மாயமாய் போன மர்மம் சென்னை முதல் குமரி வரை பராமரிப்பு அறவே இல்லை மொத்தத்தில் திவாலாகிப்போய் விட்டது போக்குவரத்து கழகங்கள். திவாலானால் என்ன? அதனை ஈடு செய்யத்தான் சமீபத்தில் இரவோடு இரவாக கிடுகிடு பஸ் கட்டண உயர்வு. திவால் ஆன நிலையில் அரசு அதனை மக்கள் தலையில் சுமத்தி,அவர்களை திவாலாக்கிவிட்டது . ஏழை மக்கள், கூலித்தொழிலாளிகள், சிறிய கம்பெனிகளில் அன்றாடம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பெண்கள் எல்லாரும் அன்றாட சம்பளத்தை பாதி இழக்கும் அவல நிலைக்கு அரசே தள்ளி விட்டது. எதிர்கட்சிகள், மக்கள் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை என்பதால் நேற்று அவசரமாக உள்ளூர் பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு 1 ரூபாய், வெளியூர்களுக்கு கிலோ மீட்டருக்கு 5 பைசா குறைத்து அறிவித்தது. இதனால் எந்த பலனும் சாமான்ய மக்களுக்கு இல்லை என்பதே உண்மை.அவர்கள் ஏற்கனவே வேறு வழிகளை நாட துவங்கி விட்டனர். ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அரசு பஸ்களுக்கு போக வேண்டிய வருவாய் ரயில்வேக்கு கணிசமாக செல்ல ஆரம்பித்துவிட்டது. இனி வரும் காலங்களில் போக்குவரத்து கழகம் விஷயத்தில் அதன் வளர்ச்சிக்கும்/ முன்னேற்றத்துக்கும் என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-28 13:56:03 IST
தமிழகத்தில் அரசுப்பேருந்து கட்டணங்கள் பொதுமக்கள் ஜீரணிக்க முடியாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளாக உயர்த்தாத கட்டணத்தை கனத்த இதயத்துடன் உயர்த்தி இருப்பதாய் முதலமைச்சரும் அமைச்சர்களும் கூறி இருப்பது ஏற்புடையது அல்ல.அதேபோல தற்போது குறைக்கப்பட்டதாய்க் கூறுகிற கட்டண குறைப்பும் கூட கண்துடைப்புதான்....
g.s,rajan - chennai ,இந்தியா
2018-01-28 11:19:19 IST
வைரமுத்து கனிமொழி வைகோ திருமா போன்றவர்கள் இந்து மதத்தைத் தவிர மற்றவர்களிடம் உங்களின் நாத்திகத்தை சொல்லித் தான் பாருங்கள், விதண்டாவாதம் செய்து பாருங்க,...
g.s,rajan - chennai ,இந்தியா
2018-01-28 11:16:32 IST
நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் நம் நாட்டில் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளிலும் உள்ளது இந்தியாவில் இருக்கும் இந்து மதத்தில் மட்டும் அல்ல எனவே எந்த மதமாக இருந்தாலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறாமலும் ,அந்த அந்த மதத்தினரை புண் படுத்தாமல் இருப்பது இழிவு படுத்தாமல் இருப்பது அனைவருக்கும் நலம்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-27 15:10:28 IST
தமிழகத்தில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் குறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம், கடந்த 7 வருடங்களாக தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதை காரணம் காட்டியுள்ளார். அப்படியானால் அந்த ஏழு ஆண்டு உயர்த்தப்பட்ட வேண்டிய பேருந்து கட்டண உயர்வை பொதுமக்கள் தலையில் ஒட்டுமொத்தமாக வைத்தால் எப்படி?அதே நேரத்தில் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டபோதும், அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாக தான் உள்ளது எனக் கூறி இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. நடுத்தர வர்க்க மக்கள் போல் அன்றாடம் பேருந்தில் பயணித்தால் அல்லவா இவருக்கு அந்த கஷ்டம் தெரியும். இவர்தான் அரசாங்கத்தின் சொகுசு குளிர்பதன காரில் பயணிப்பவராயிற்றே மக்களை முட்டாளாக்குகிறார் என்பதைத் தவிர வேறு இல்லை....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2018-01-25 18:52:40 IST
தமிழகம் சர்ச்சையின் புகலிடமாக ஆகிவிட்டதோ என தோன்றுகிறது.வைரமுத்து-ஆண்டாள் பிரச்சினை,விஜயேந்திரர் -தமிழ்த்தாய் பிரச்சினை என தமிழகத்தில் சர்ச்சைகள் அதிகரித்து வருவது.ஏற்புடையதாக இல்லை.இந்த நிலை மாறி தமிழகம் அமைதியின் புகலிடமாக திகழவேண்டும்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement