Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 3
g.s,rajan - chennai ,இந்தியா
2017-10-03 15:07:29 IST
கடந்த எட்டு மாதங்களில் சாலை விபத்துக்களில் கிட்டத்தட்ட 11000 பேர் உயிரை இழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது. போக்குவரத்து காவல்துறை விழி பிதுங்கி வேடிக்கை பார்த்து வருவது தெள்ள தெளிவு . சாலைகளில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் கண்டபடி தாறுமாறாக ஓட்டுவது ,குறிப்பாக பல இளைஞர்கள் ஓட்டும் இரு சக்கரவாகனங்களில் பின்னால் வரும் வாகனங்களை பார்ப்பதற்கு மிக மிக உதவியாக இருக்கும் ரியர் வியூ மிரர் (REAR VIEW MIRROR ) காணவே இல்லை ,இதனால் பின்னால் வரும் வாகனங்களின் போக்கு அறியாமல் திடீரென்று தாறுமாறாகத் திருப்புகின்றனர்,சாலையின் குறுக்கே செல்கின்றனர் ,இடது புறம் மற்றும் வலது புறம் என மாறி மாறி முந்துகின்றனர் ,பாம்புகள் போல சாலைகளில் வளைந்து நெளிந்து இஷ்டப்படி தங்கள் மனம் போன போக்கில் வேகமாக ஓட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து மிகப்பெரும் தொல்லையாக இருக்கிறது . குறிப்பாக இந்த அசுரவேக சக்தி கொண்ட இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்னவோ நொடிக்கணக்கில் நேரத்தை மிச்சம் செய்து விடுவதாக நினைத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் போல பறப்பது மிகவும் பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கி அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உயிருக்கும் ,உறுப்புக்கும் ஆபத்தை வரவழைப்பதாக உள்ளது ,சாலை விதிகளை துச்சமென மதித்து செயல்படுவது வேதனை .எதோ ஓட்டப்பந்தயத்தில் ஓட்டுவதாக நினைப்பு அவர்களுக்கு ,சாலைகள் என்ன ஓட்டப்பந்தய ஓடுகளமா,இல்லை ஆடுகளமா ??புரியவில்லை,குறுக்கும் நெடுக்கும் தலைக் கவசம் அணிந்து கொண்டோ ,தலைக் கவசம் அணியாமலோ சாலைகளை அளப்பது வாடிக்கையாகிவிட்டது .இதை ஸ்டைலாகக் கருதி எங்கும் தொடர்வது மேலும் மேலும் ஆபத்து.இதற்கு யார் முடிவு கட்டுவது ?? ஜி.எஸ்.ராஜன் சென்னை ....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-10-03 14:54:33 IST
ரயில்ல விக்கிற ஜுஸ் சரியில்லை தண்டம் அபப்டின்னு மாஜி அமைச்சர் திரிவேதி ரயில்வேத் துறைக்கு கண்டனம் தெரிவிச்சு இருக்காரு.மக்கள் இதுவரை எவ்வளவு நாளா அந்தக் கண்றாவியை சகிச்சுக்கிட்டு பயணம் செய்யுறோம் தெரியுமா ??பொதுவா ரயில்ல விக்கிற எதுவுமே நல்லா இல்ல, கொடுத்த காசுக்கு தகுந்த மாதிரி ஏதாவது நல்லாக் குடுக்குறாங்களா எல்லாமே தண்டம்தான், விலையும் அதிகம் தரம், சுவை எதுவுமே இல்லை, ரயில் பயணிகளோட வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறாங்க. காபி, டீ அப்படின்னு ஒரு திரவத்தை பேர் சொல்லிக் கொடுக்குறாங்க, அவ்வளவுதான் சரி வேற வழியில்லை அப்படின்னு வாங்கிக் குடிச்சா பவுடர் பால் வயத்தைக் குமட்டுது. சமயத்துல வயிற்றுக்கு சேராத புடுங்கிகிட்டுப் போவுது. எல்லாம் கலப்படம் .சாப்பாடு, டிபன் எல்லாமே தண்டம் தான், பாலும் கிடைக்கவே மாட்டேங்குது .எல்லாம் இந்திய ரயில் பயணிகளின் தலை விதிதான் நுகர்வோர் நீதிமன்றம், சாதாரண நீதிமன்றங்கள் ஏன் இது குறித்து ரயில்வேயை தட்டிக் கேக்க மாட்டேங்குறாங்க, தெரியல ரயில் பயணிகள் மிக நீண்ட தூரம் பயணம் செய்யும் போது நிச்சயம் செத்து செத்துப் பிழைக்கிறாங்க வீட்டுல இருந்து கட்டி எடுத்துக்கிட்டுப் போறது மிக மிக உத்தமம் ஆனா எல்லாருக்கும் அப்படி முடியாதே, பிறகு என்ன செய்யறது? எல்லாம் இந்திய மக்களின் தலை எழுத்து , தலை விதி....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-09-28 08:35:39 IST
இனி வருங்காலத்துல இந்தியாவில விவசாயம் எல்லாம் மொத்தமா செத்துப் போய் சாப்பாட்டுக்கே பஞ்சம் வரும்,மக்களுக்கு அப்போ ரேஷன் மூலமாகத் தான் குறிப்பிட்ட அளவு மட்டுமே ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்ச அளவு உணவு தானியங்கள் ,பருப்பு ,எண்ணெய் ,மளிகைப் பொருட்கள் மட்டுமே வழங்கும் காலம் வந்துவிடும் ,அப்போது வெளி மார்க்கெட்டில் எதுவுமே கிடைக்கவே கிடைக்காது .ரேஷன் கடைகளில் மட்டுமே எல்லாம் கிடைக்கும் நிலை ஏற்படும் ,ரேஷன் கடைகளை அப்போ திறந்துக்கலாம். ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-09-28 08:32:37 IST
இனி இந்தியாவில் நீங்கள் சாலையும் போட வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் மக்கள் இனி எங்கு சென்றாலும் எல்லாரும் ஆகாய மார்க்கமாகப் போய் விடுகிறோம் ,அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் "கட்டிங்" விஷயத்தால் இந்தியாவில் சாலைகளின் தரமோ தரித்திரம் வரிக்கு மேல் வரி கட்டி இனிமேல் மக்களுக்கு என்ன பெரிதாக பயன் கிடைத்துவிடப் போகிறது?? உதவாக்கரை சாலைகளை போட்டால் என்ன போடாவிட்டால் தான் என்ன ??எல்லாமே ஒன்றுதான் . இதைத் தவிர எங்கு பார்த்தாலும் வழி நெடுக டோல் கட்டணம் வேறு ,போங்கடா நீங்களும் உங்கள் தரித்திரமான சாலைகளும்,குண்டும் குழியுமான பேப்பர் ரோஸ்ட் சாலைகளும் வேண்டவே வேண்டாம் .ஆகாய மார்க்கமே இந்தியாவில் இனி பெஸ்ட் . ஜி.எஸ்.ராஜன் சென்னை...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2017-09-27 10:24:11 IST
கிருஷ்ணகிரி வேளாண்மை உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் வாயிலாக காந்தி ரோட்டில் சுமார் எழுபத்து இரண்டு கடைகள் அடங்கிய தொகுப்பில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.இந்த உழவர் சந்தையின் தரைப்பகுதி மண்தரையாக இருப்பது வேதனை அளிக்கிறது.அன்றாடம் சுமார் ஆயிரம் நபர்கள் வருகை தரும் இந்த உழவர் சந்தையின் தரைப் பகுதியை சிமெண்ட் கான்க்ரீட் தளமாக மாற்ற உரிய நிர்வாகம் முன்வர வேண்டும்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2017-09-26 07:59:46 IST
ஜெயலலிதா இட்லி சாப்பிட்ட விஷயத்தில் பொய் சொன்னதாக தமிழக மக்களிடம் மன்னிப்பை கேட்ட திண்டுக்கல் சீனிவாசன் பொய் கூறியதற்கு பிராயசித்தமாக தனது பதவிகளை துறந்திருந்தால் ஒரு மிகப்பெரும் தியாகியாக இருந்திருப்பார். தமிழக மக்களிடம் மேலும் அவருக்கு மவுசு கூடியிருக்கும்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2017-09-25 15:37:48 IST
சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் உள்ள சாலைகளின் தன்மையை மாநகரஆட்சி நிர்வாகம் கண்டறிந்து அச்சாலைகளை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.புதிதாக சாலை அமைக்க நிதிநிலை இடம் தராத பட்சத்தில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடவாவது செய்ய வேண்டும்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2017-09-24 07:47:24 IST
ஒரு முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா அவர்களின் சிகிச்சை விவகாரம் அரசியலாக்கப்பட்டு இன்னும் விடிவு எட்டப்படாத நிலை எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கே தலைகுனிவாக இருக்கிறது.எங்கு போனது, நீதி, நேர்மை நியாயம்? அவரால் பதவி முதல் பல்வேறு ஆதாயம் அடைந்த எவருக்கும் மனசாட்சியே இல்லாமல் போய்விட்டதா? இறந்தவர் மீண்டு வரப்போகிறாரா என்கிற நினைப்பா அவர்களுக்கு? ஒரு முதலமைச்சரின் விஷயத்திலேயே இப்படி எனில் சாதாரண மனிதனின் நிலைதான் என்ன?...
gopikannan - மதுரை,இந்தியா
2017-09-22 13:16:22 IST
கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் நேரம் மாற்றியமைக்கப்படவில்லை. பல வார்டுகளில் குடி தண்ணீர் அதிகாலை நான்கு மணிக்கு வருகிறது. அது பல வார்டுகளில் பல மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். நோயாளிகள், வயதானவர்கள் குடிதண்ணீர் பிடிக்காமல் இருக்கிறார்கள். எந்த நேரம் வைத்தாலும் காலை 6 மணி மேல் இருந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தினமலர் பத்திரிகை மதுரை மக்களுக்கு உரிய முறையில் உதவ வேண்டும்....
Natarajan - வெளிபட்டினம், Ramanathapuram,இந்தியா
2017-09-22 08:57:41 IST
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லஞ்ச ஒழிப்பு ஆனால் பாதிக்கப்படுவது நேர்மயானவர்களே சமீப காலமாக மின்சார வாரியத்தில் அனைத்து பிரிவுகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுவதாக செய்திதாள்களில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இன்று கூட தினமலரில் பொறியாளர்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. உண்மையை உணரவேண்டும். இன்றைய மின் வாரியத்தில் உப மின்நிலையங்களில் பெரும்பான்மையாக பணிபுரியும் பொறியாளர்கள் தண்டிக்கப்பட்டவர்கள், வம்பு வேண்டாம் என்று ஒதுங்குபவர்கள் நேர்மையான அதிகாரிகள் மேல் அதிகாரிகளால் தண்டிக்கப்பட்டவர்கள். மின் திருட்டு தடுப்பு குழுவில் உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் நேர்மையானவர்கள் ஆனால் சில பேர் ஊழல் பேர்வழிகள் சொந்த ஊரில் பதவி இல்லாத போது கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் அமர்ந்து கொள்வார்கள். இவர்கள் சங்கத்தின் பொறுப்பிலும் இருப்பார்கள் (ஆனால் இருக்க கூடாது) தனது சங்கத்தின் உயர் அலுவலர் கூறும் சொல்லுக்கு ஏற்ப விநியோக பிரிவில் உள்ள நேர்மையான் பொறியாளர்கள் மீது இவர்களே புகார் மனு தயார் செய்து அவர்களது சங்கத்து உயர் அலுவலர் மூலம் திட்டமிட்டு ஆய்வு செய்து தண்டித்து விடுவார்கள். மதுரையில் விடுதலை புலி தலைவனின் பெயரைக்கொண்ட அலுவலர் இப்படி செய்வதில் வல்லவர். இவர் திருப்பாலையில் உதவி மின் பொறியாளராக இருந்த போது செய்த திருட்டு தனங்கள் ஏராளம். ஆனால் இவர் இன்று மின் திருட்டு தடுப்பு குழுமத்தின் அதிகாரி. இவர் போன்ற அதிகாரிகள் இருக்கும் வரை மின் வாரியத்தில் நேர்மையான பொறியாளர்கள் பாதிக்கப்படுவர் திருடர்கள் காப்பாற்றபடுவர்....
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2017-09-19 06:46:14 IST
கிருஷ்ணகிரி பாரத மாநில வங்கியின் பிரதான கிளை இ கார்னரில் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிரதான கிளையிலும் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கு எளிதில் சில்லறை நாணயங்கள் வழங்கக் கூடிய தானியங்கி சில்லறை வழங்கும் இயந்திரம் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது.மக்கள் நலன் பேணுகின்ற வகையில் வங்கியாளர்கள் இந்த இயந்திரங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்........
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2017-09-19 06:38:54 IST
அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் தமிழக அரசிடம் இருந்து சம்பளம் பெறும் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு பொருந்துமா பொருந்தாதா?அவர்களுக்கு இத்தகைய நடத்தை விதிகளுக்கு மாறாக செயல்பட சலுகைகள் ஏதுமுள்ளதா? சமீபத்திய ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள இந்த சந்தேகத்திற்கு சட்ட நிபுணர்கள் மூத்த அரசியல்வாதிகள் எவரேனும் இதற்கு விளக்கம் தர இயலுமா?...
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2017-09-19 06:32:54 IST
தமிழகத்துக்கும் தமிழக அரசியலுக்கும் யாருடைய எத்தகைய சாபமோ தெரியவில்லை தமிழக அரசியலை படாதபாடு படுத்திக்கொண்டு இருக்கிறது. அரசியல் தலைகள் ஆளாளுக்கு சரவெடிகளை வீசிக்கொண்டு இருக்கிறார்கள்.எங்கு எப்படிப்போய் முடிகிறதோ தமிழகத்தின் தலையெழுத்து?...
velmurugan - tindivanam,இந்தியா
2017-09-18 07:36:36 IST
Indian democracy cannot survive overpopulation......
velmurugan - tindivanam,இந்தியா
2017-09-18 07:36:20 IST
Corruption and politician collapse the whole societies in India......
velmurugan - tindivanam,இந்தியா
2017-09-18 07:36:02 IST
இந்தியவில் அரசியல் அமைப்புகள் ஆகியவற்றின் தீவிர மறு சிந்தனை அவசரமாக உள்ளது....
velmurugan - tindivanam,இந்தியா
2017-09-18 07:35:47 IST
Today youth can only reorganize socially, politically and economically.....
velmurugan - tindivanam,இந்தியா
2017-09-18 07:35:25 IST
Political parties can spend the money on new housing and food for poor people and the homeless, but political parties spend it on banner ......
velmurugan - tindivanam,இந்தியா
2017-09-18 07:34:53 IST
Youth can make change the India to be a better, happier, good place every day......
velmurugan - tindivanam,இந்தியா
2017-09-18 07:34:02 IST
We have a powerful potential in our youth.But change to new ideas.....
velmurugan - tindivanam,இந்தியா
2017-09-18 07:33:44 IST
Everybody has some responsibility. Save our nation.....
velmurugan - tindivanam,இந்தியா
2017-09-18 07:33:25 IST
ஜாதி மற்றும் பணத்திற்காக எந்த மக்களும் பிறக்கவில்லை.....
velmurugan - tindivanam,இந்தியா
2017-09-18 07:33:00 IST
Young people should be at the forefront of society.....
velmurugan - tindivanam,இந்தியா
2017-09-18 07:32:36 IST
இந்தியாவில் ஒவ்வொரு மனித வாழ்க்கையும் மதிப்பதில்லை......
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
2017-09-16 16:46:57 IST
ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்கிற சிக்கல் தீராத நிலையில் மீண்டும் புதிய நாணயங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.பிரச்சினைக்குரிய பழைய பத்து ரூபாய் நாணயங்களுக்கு மாற்றாக பத்து ரூபாய் தாள்களை வழங்க ரிசர்வ் வங்கி முன்வரவேண்டும்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement