Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 5
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-28 16:15:10 IST
சாப்பிடாமக் கூட இருப்பாங்க நம்ம இந்தியாவுல ,ஆனா செல் போன் இல்லாம 1 நொடி கூட சும்மா இருக்க மாட்டாங்க எப்பவுமே செல் போன் தான் எப்பப் பார்த்தாலும் பேசறது சினிமா பாக்குறது,காதுல ஹெட் போனை மாட்டிக்கிட்டு பாட்டுக் கேக்கறது ,தேவையோ தேவை இல்லாமலேயோ வாய்மூடாமப் பேசிக்கிட்டே இருக்கிறது நெட்டைப் பாக்குறது .என்னவோ கர்ணன் கவச குண்டலத்தோட பொறந்த மாதிரி நம்ம ஆட்கள் எல்லாம் செல் போனோட தான் பொறந்தாங்களே தெரியல சதா சர்வ காலமும் அதை நோண்டிக்கிட்டே தான் இருக்காங்க,ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டே இருக்காங்க செல் போன் போதை செல்பி போதை அவங்களை ரொம்பவே அடிமை ஆக்கிவிட்டு விட்டது.உயிர் போனாக் கூட அதை பத்திக் கவலைப் படாம இருக்காங்க .மொத்தத்தில் இது நல்லதுக்கு இல்லை . ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-28 16:13:39 IST
நம்ம இந்தியாவுல வீட்டுல ஒக்காந்துக்கிட்டே மக்கள் செலவு செய்த பணம் அமேசான் நிறுவனத்திற்கு நல்ல வருமானம் ,உலகப் பெரும் பணக்காரர் பில் கேட்ஸ் அவர்களைப் பின்னால் தள்ளிவிட்டு நம்பர் 1 என்ற நிலையில் அமேசான் நிறுவனம் முன்னேறி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன வருங்காலத்தில் மக்கள் வெளியில் சென்று கடைகளுக்குப் போய் கடை கடையாய் ஏறி இறங்கி விசாரித்துப் பொருட்களை நேரில் பார்த்து வாங்குவது மிகவும் குறைந்து விடும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-28 15:23:39 IST
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்றவற்றில் அகில இந்திய அளவில் சர்வதேச அளவில் நுழைவுத் தேர்வு போட்டித் தேர்வு,நேர்முகத் தேர்வு வைத்தால் வெற்றி பெறும் நிலையில் மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் தகுதி திறமைகளை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு அரசாங்கம் பாடத் திட்டங்களை சீர் செய்ய வேண்டும் .இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் அவர்கள் கொண்டு வந்த போது கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு சில கால கட்டத்துக்கு மட்டுமே அளிக்க வேண்டும் .அவர்கள் முன்னேறிய பிறகு சாதி அடிப்படை மற்றும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை முற்றிலும் நீக்கி விடவேண்டும் என்று கண்டிப்பாகத் தான் கூறினார் .ஆனால் இந்த பாழாய்ப் போன அரசியல்வாதிகள் சாதிகளால் ஓட்டு வரும் என்ற காரணத்தினால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு நாட்டை நாசம் ஆக்குகின்றனர். ஏற்கனவே இந்தியா இன்னும் நாற்பது ஆண்டுகள் வளர்ந்த நாடுகளை விடப் பின் தங்கி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன சாதியின் முதுகில் சவாரி செய்வது நாட்டை கட்டாயம் அழித்துவிடும் .பெரிய தாத்தா கருணா இப்படித்தான் ஹிந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் அப்படின்னு ஒரு மாபெரும் தவறை செஞ்சு தமிழக மக்களை இரண்டு தலைமுறைகளை ஹிந்தி படிக்கவிடாமல் செய்து பல் வேறு சிக்கல்களை மாணவ மாணவிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உருவாக்கி பழி எடுத்தார் ,பலரின் எதிர்காலத்தை நிர்மூலம் ஆக்கினார் அதன் பலனை தமிழகத்தில் பலர் இன்றும் அனுபவித்து வருகின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.தந்தை வழியில் நடக்கும் தமையனால் இப்போது மாணவர்களுக்குக் கேடு,அவர்களின் எதிர்காலத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு ,மிகப் பெரும் சமுதாய சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-27 20:25:39 IST
நீட் தேர்வு குறித்து வேண்டாமா வேண்டுமா என்ற சர்ச்சை நீடிக்கிறது .அகில இந்திய அளவில் சர்வதேச அளவில் நுழைவுத் தேர்வு ,போட்டித் தேர்வு வைத்தால் வெற்றி பெறும் நிலையில் மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் தகுதி திறமைகளை கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு அரசாங்கம் பாடத் திட்டங்களை சீர் செய்ய வேண்டும் .இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் அவர்கள் கொண்டு வந்த போது கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு சில கால கட்டத்துக்கு மட்டுமே அளிக்க வேண்டும் .அவர்கள் முன்னேறிய பிறகு சாதி அடிப்படை மற்றும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை முற்றிலும் நீக்கி விடவேண்டும் என்று கண்டிப்பாகத் தான் கூறினார் .ஆனால் இந்த பாழாய்ப் போன அரசியல்வாதிகள் சாதிகளால் ஓட்டு வரும் என்ற காரணத்தினால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு நாட்டை நாசம் ஆக்குகின்றனர். ஏற்கனவே இந்தியா இன்னும் நாற்பது ஆண்டுகள் வளர்ந்த நாடுகளை விடப் பின் தங்கி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன சாதியின் முதுகில் சவாரி செய்வது நாட்டை கட்டாயம் அழித்துவிடும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-27 14:38:44 IST
புதுக்கோட்டை மாவட்டத்துல ரொம்ப ரொம்ப கஷ்டப்படுறவங்க தங்கள் வறுமையைப் போக்க கஷ்டம்க தீர அதை வெளிப்படையா சொல்லாம நாசூக்கா மொய் விருந்து போடறது வழக்கம் . போற போக்கிலே இந்தியா முழுக்க மக்கள் மொய் விருந்துதான் வைக்கணும் போல இருக்கு சாமானிய மக்களின் நிலைமை அப்படி மோசமாய் போய்கிட்டு இருக்கு ,என்னத்தைச் சொல்ல ???விடியாத கஷ்டம் மக்களுக்கு ,சோதனை மேல் சோதனை போதுமடா சாமி . ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-27 11:07:24 IST
கேரளாவில் ஆண்கள் தான் அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதை நாம் பொதுவாக அறிவோம் இப்போது பெண்களும் குடிக்கப் போட்டி போடுகிறார்கள் பெண் பல் மருத்துவர் ஒருவர் நன்கு குடித்து விட்டு வாகனத்தை ஒட்டி போதை தலைக்கேறி பல விபத்துக்களை ஏற்படுத்தி உள்ளதாக வரும் செய்திகள் மிகவும் வேதனை அடைய வைக்கிறது . ஹூம் இது எங்கே போய் முடியப் போகுதோ ??? படித்தவர்கள் நிறைந்த மாநிலத்தில் இம்மாதிரி நடப்பது வேதனை ஜி,எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-27 11:01:16 IST
விரைவில் சர்வதேச விளையாட்டுக்களில் தமிழகத்துக்கு தங்க பதக்கம் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கிடைக்க சாதி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டுமே சலுகைகள் தர வேண்டும் தகுதி திறமை போன்றவற்றைப் புறம் தள்ள வேண்டும் தகுதி மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் தரக் கூடாது சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஒலிம்பிக் உட்பட நமக்கு எதுவுமே கிடைக்க மாட்டேங்குது நம் தமிழ் நாடு இந்திய நாடு இன்னும் பின் தங்கியே இருக்கு ,மற்ற துக்கடா நாடுகள் கூடப் போட்டி போடா முடியல அதனால நமக்கு பல் வேறு சலுகைகள் அளித்தால் மற்ற நாடுகளோடு எளிதாகப் போட்டி இட முடியும் ,எளிதில் பதக்கங்களை வெல்ல முடியும் என்று ஒரு வேளை நமது மண்ணாந்தை அரசியல்வாதிகள் போராடுவார்களோ ??? தெரியவில்லை ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-27 10:17:55 IST
நீட் தேர்வுக்கு விதி விலக்கு கோரி பல் வேறு அரசியல் தலைவர்கள் கருத்துத்துக்களை சகட்டுமேனிக்கு தெரிவித்து வருகின்றனர் .இது தேவை இல்லாத ஒன்று . மொட்டை உரு தட்டி அதிக மதிப்பெண் பெறுவது பெரிதல்ல ,இதனால் நம்மவர்கள் ஐஐடி மற்றும் ஐ ஏ எஸ் போன்றவற்றில் வெற்றி பெறுவது மிகவும்நு கடினமாக உள்ளது நுழைவுத் தேர்வும் நேர்முகத் தேர்வும் கட்டாயம் ஒருவருடைய முழுத் திறமையை.அறிவுக் கூர்மையை ,திறனை கட்டாயம் எடை போட்டு விடும் .படித்து முடித்து அதிக மதிப்பெண் பெற்ற எல்லாரும் புத்திசாலிகள் என்று எப்படி முடிவு கட்டுவது ? பல் வேறு நேர்முகத் தேர்வு நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்பெற்ற ஒருவர் பல சமயங்களில் தோல்வி அடைவது பற்றி பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது .மொட்டை உரு தட்டி மனப்பாடம் செய்து நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவதில் ஒருவரது திறமையை நிச்சயம் எடை போடவே முடியாது .வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் போது வேலைக்குச் செல்லும் போது ஒருவரது தகுதி திறமை ஆங்கிலப் புலமை முழுவதும் தேர்வு மூலம் மிகவும் தீவிரமாக சோதிக்கப்படுகிறது .இதில் எவருக்கேனும் விதி விலக்கு கோர முடியுமா??? ஜி.எஸ்.ராஜன், சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-26 15:23:20 IST
பாடங்களை மனப்பாடம் செய்து அதை அப்படியே வாந்தி எடுப்பது போல செய்து மதிப்பெண் வாங்குவது திறமை அல்ல ,நுழைவுத் தேர்வு எழுதி அதில் வெற்றி பெறுவது ஒருவரின் திறமையை வெளிப்படுத்தும் .எனவே நீட் தேர்வு தேவையே , ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-26 15:21:47 IST
எத்தனை ஜி எஸ் டி வந்தாலும் சினிமாத துறை அழியாது என்று திரைத் துறையினர் கூறுகின்றனர் ,சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளத்தைக் குறையுங்க, தயாரிப்புச் செலவுகளைக் குறையுங்க அப்போதான் தயாரிப்புச் செலவும் குறையும் .மேலும் மக்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கவும் முடியும் அப்போதுதான் தியேட்டரில் சாமானிய மக்கள் சினிமா பார்க்க முடியும்....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-26 15:13:55 IST
இந்தியாவில் பிறக்க ,இறக்க நடக்க ,மூச்சு விட ,தூங்க ,சேவை வரி போட்டாலும் மற்ற எந்த வகையிலும் வரி போட்டாலும் மக்கள் அதைக் கட்டத் தயாரா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்காங்க நல்ல வரவேற்போட இருப்பாங்க மோடிஜி,வரி என்பதே தொலைந்த நமது நாட்டைக் காக்கத் தானே மோடிஜி அப்புறம் என்ன வரி எதுவா இருந்தாலும் எப்படி இருந்தாலும் போடுங்க. ஒன்னும் தப்பே இல்லை போடுங்க, போடுங்க,போட்டுக்கிட்டே இருங்க நாங்களும் ஏமாந்த சோணகிரிகள் தானே ,காலம் தவறாம பைத்தியம் மாதிரி ஒழுங்கா எல்லா வரியையும் கட்டிக்கிட்டே இருக்கோம் ,கடைக்காரங்க கிட்ட வரி போட்டா அவங்க என்ன அவங்க லாபத்தில் இருந்தா கட்டப் போறாங்க இல்லை கைக்காசைப் போட்டு அவங்க அவங்க தங்க கையைக் கடிக்கிற மாதிரி வச்சுப்பாங்களா ??மக்கள் தலையில தான் எல்லா வரிகளும் விடியும் ஜி.எஸ்.ராஜன், சென்னை ....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-25 16:24:34 IST
நீட் தேர்வில் தகுதி மற்றும் திறமைக்கு முன்னிடம் அளிக்க வேண்டும் சாதி ஒதுக்கீடு இட ஒதுக்கீடு கட்டாயம் துளியும் வேண்டாம் ,இந்த மாதிரி சலுகைகள் இந்தியாவை மேலும் பின்னோக்கிக் கொண்டு சென்று விடும்.அபாயம் உள்ளது . ஜி.எஸ்.ராஜன் சென்னை chenai...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-25 16:13:05 IST
"பிக் பாஸ்" நிகழ்ச்சியில டாய்லெட் க்ளீன் பண்ணுறதை பத்தி விலாவாரியப் பேசுறது மிக மிகக் கொடுமை மேலும் மக்கள் இந்த நிகழ்ச்சியைப் பாக்குற நேரத்துல அவங்க அவங்க வீட்டுல இருக்கிற டாய்லெட் மற்றும் பாத் ரூமைக் க்ளீன் பண்ணலாம் ,பல வீடுகள்ல உள்ளே நுழைஞ்சாலே வெறும் கப்புத்தான் அடிக்குது .பிக் பாஸ் நிகழ்ச்சியால் நடிகர் மற்றும் நடிகையர்களுக்கு விளம்பரமும் நல்ல காசும் கிடைக்குது . ஆனா மக்களின் நேரம் வெட்டியாக் கழியுது, என்னத்தைச் சொல்ல, மக்களை இனி திருத்துவது ரொம்பக் கஷ்டம் தான். இதுல வேற மக்கள் ஓட்டுப் போடணுமாம் மக்களும் முட்டாள்களாக மாறிக் கொண்டு இருக்கிறார்களே வேதனை மேல் வேதனை போதுமடா சாமி.....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-25 14:53:55 IST
தமிழகத்தில் பல் வேறு துரித உணவகங்களில், ஓட்டல்களில் சாலை ஓர உணவுக்கடைகளில் பேக்கரிகளில் டீ ,காபி கடைகளில் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியே பொது இடங்களில் சமையல் எரி வாயு சிலிண்டர் பயன்படுத்துவதைக் கட்டாயம் தடுக்கவேண்டும், தீவிரக் கண்காணிப்பும் வேண்டும், லஞ்சம் ஊழல் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் .அரசாங்கம் உடனடியாக என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் .தும்பை விட்டு விட்டு வாலை பிடித்தால் அப்புறம் கொடுங்கையூரில் தீ விபத்து ஏற்பட்ட மாதிரி ஏகப்பட்ட விபத்துக்கள் கண்டிப்பாக அடிக்கடி நிகழும் .எனவே அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் செய்யுமா ???...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-25 10:41:46 IST
பிக் பாஸ் ஒரு தண்டமான நிகழ்ச்சி குறிப்பா இதை டாய்லட் கிளீன் செய்யறது போன்ற விஷயங்கள் உரையாடல்கள் ரொம்ப ரொம்ப அபத்தம் கண்றாவி ரொம்பக் கடுப்பை ஏத்தறாங்க .இதையும் ஒக்காந்து பாக்குறாங்க பாருங்க நம்ம மக்கள் என்ன செய்வது?? எல்லாம் காலத்தின் கோலம் ....
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
2017-07-23 19:44:51 IST
தமிழ் அறியும் பெருமாள் இந்த புத்தகம் 1960 களில் வெளிவந்த மிகவும் சிறந்த புஸ்தகங்களில் ஒன்று. யாராவது எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்கள்.என்னுடையா பிரதியை வாங்கி சென்றவர் திருப்பித்தரவே இல்லை. தயவு செய்து உதவுங்கள்...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-17 13:46:17 IST
மோடியின் ஆட்சியில் பொதுவாகப் பார்த்தால் ஒன்றும் இந்தியாவில் பெரிதாக நடக்கவில்லை ஒரு வேளை மற்ற நாடுகளில் ,வளர்ச்சி இருக்குமோ தெரியல ஆனால் இந்தியாவின் வளர்ச்சியும் வெறும் மாயையே என்பது போல் உள்ளது .என்னமோ ஏதோ வெட்டியாய் பல செயல்கள் நடக்கிறது .ஹூம்....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-15 16:38:27 IST
நம்ம இந்தியாவுல மக்களில் கிட்டத்தட்ட 99 .9 சதவீதம் பேருக்கு ஒரு சட்டமும் தெரியாது ,நமது உரிமைகளும் தெரியாது ,வளர்ந்த நாடுகளில் அப்படியா ??அரசாங்கத்தைக் கண்ணில் விரலை விட்டு ஆட்டிவிடுவார்கள். என்ன செய்வது ?? மக்கள் இந்தியாவில் முட்டாள்கள். நமது அரசியல்வாதிகள் அதி புத்திசாலிகள் .அவர்கள் காட்டில் அடை மழை ஜி.எஸ்,ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-15 16:36:28 IST
இந்தியாவில் மக்களுக்கு பொருளாதார வளர்ச்சியே வேண்டாம் அதை யார் கேட்டா ??பொதுவா எங்கும் விலைவாசி குறையணும்,சாதாரண மக்கள் வாங்கும் விலையில் பொருட்கள் கிடைக்கணும் ,வாங்கும் வகையில் வருமானம் ஓரளவுக்காவது இருக்கணும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-07 12:43:13 IST
இந்தியாவில் ஜிஎஸ்டி பற்றி கிட்டத்தட்ட 55 சதவீதம் பேருக்குத் தெரியவில்லை என்று செய்திகள் வருகின்றன. நம்ம இந்தியாவுல மக்களில் கிட்டத்தட்ட 99.9 சதவீதம் பேருக்கு ஒரு சட்டமும் தெரியாது ,நமது உரிமைகளும் தெரியாது ,வளர்ந்த நாடுகளில் அப்படியா ??அரசாங்கத்தைக் கண்ணில் விரலை விட்டு ஆட்டிவிடுவார்கள். என்ன செய்வது ?? மக்கள் இந்தியாவில் முட்டாள்கள். நமது அரசியல்வாதிகள் அதி புத்திசாலிகள்...
Babu Desikan - Bangalore,இந்தியா
2017-07-05 14:29:41 IST
ஐயா, கோவில்கள் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி: குறைந்த பட்சம் 150 வருஷங்களை தாண்டிய வேப்ப மரத்தை எந்தெந்த கோவில்களில் காணலாம்?...
subu - Madurai,இந்தியா
2017-07-05 10:16:35 IST
தமிழ்நாடு மருத்துவ படிப்பிற்க்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய தேர்வுக் குழு அறிவித்தது. ஆனால் OMR என்று கூறப்படும் கணினி படிவம் இடம் பெறவில்லை. மேலும் வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கான படிவம் பற்றியோ எங்ஙனம் விண்ணப்பிக்க வேண்டும் என்பதையோ எங்கேயும் தெளிவாக குறிப்பிடவில்லை . மேலும் பல குழப்பங்களை உண்டாக்கும் மருத்துவ விண்ணப்பத்தை பற்றி தினமலர் செய்தி வெளியிட்டால் முன்னேற்றம் உண்டாக வாய்ப்புள்ளது....
Madan - Bangalore,இந்தியா
2017-07-03 12:46:40 IST
Sir, I am a vivid reader of "COMPUTER MALAR" every week. But for the past six months I am missing that Computer Malar. Will you please consider re-publishing it so that every body who wants to learn about computers and their knowledge. Please tell me if there is any other native to obtain the Computer Malar and related information. Kindly do the needful Sir. Thanking you, from: S. Madan Gopal....
Ramesh RK - Theni,இந்தியா
2017-06-28 14:19:53 IST
மாண்புமிகு திரு நீதி அரசர் கிருபாகரன் அவர்களுக்கு அரசு பள்ளியில் படிக்கும் மாணவரின் அப்பா ஆதங்கத்துடன் எழுதுவது தரமற்ற சீருடை, காலனி, பேக், உணவு தகுதி தேர்வு கூட தேறாத ஆசிர்யர்கள் என்று இங்கு எதுவம் சரியில்லை. அரசு உதவி பெரும் பள்ளிகளில், எனது ஆசிரியருக்கு எதுவும் தெரியவில்லை என்று என் மகன் கூறும்போது என்ன செய்வது என்று புரியவில்லை. நிர்வாகத்தில் கேட்டால் அவர் (ஆசிரியர்) பணம் கொடுத்து ஆசிரியர் பனி வங்கியிருப்பதால் அவரை ஒன்னும் சொல்லமுடியாது என்கிறார்கள். அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு ரூ 15000 ஆயிரம் மேல் வசூலிக்க படுகிறது. ஒரு வகுப்புக்கு 70 வது மாணவர்கள் உள்ளார்கள் . கணம் நீதி அரசர் அவர்களே கண்ணீர் உடன் எழுதுகிறேன் இயற்கை உபாதை கூட அடக்கி வைத்து வீட்டில் வந்து செல்கிறார்கள் என் பிள்ளைகளை அந்த அளவு கழிப்பறைகள் மோசம். தினமும் 6 மணிநேரம் , 210 நாட்கள், வேலை அதிக சம்பளம் கொடுத்ததும் ஏன் அரசு இவர்களை(ஆசிரியர்களை) பார்த்து பயப்படுகிறது. இவர்கள் குழந்தைகள் மட்டும் வசதியான தனியார்பள்ளியில் ஏன் இந்த முரண்பாடு. இதை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன. கணம் நீதி அரசர் அவர்களே தமிழகத்தில் உள்ள அணைத்து பெற்றோர் எதிர்பார்ப்பும் இதுதான் 1. அனைவர்க்கும் ஒரே மாதிரி கல்வி வழங்கவேண்டும். 2. அணைத்து பள்ளிகளும் தனியார் மையமாக ஆக்கப்பட்டு மாணவர்கள் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்து பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர் கட்டணத்தை அரசே பள்ளிகளுக்கு வழங்கவேண்டும். 3. ஆசிரியர்கள் சம்பளத்தை அந்த பள்ளிகளே வழங்க வேண்டும். 4. எதுவம் முடியாது என்றல் குறைந்தபட்சம் அரசு ஆசிரியர் பள்ளிக்கல்வி துறை ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கவேண்டும். உங்களின் வரலாற்று சிறப்பு தீர்ப்பை எதிர்பார்த்து தமிழகத்தின் கோடிக்கணக்கான பெற்றோர்களில் ஒருவன்....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-26 12:11:44 IST
தற்போதைய தேவை ஸ்மார்ட் வில்லேஜ்,ஸ்மார்ட் கிராமங்களே சிட்டிக்கள் அல்ல .....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement