Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 6
அ.அப்பர்சுந்தரம் மயிலாடுதுறை - மயிலாடுதுறை ,இந்தியா
2017-06-25 18:58:27 IST
ரம்ஜான் தினத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட பெட்ரோல் லாரி வெடித்த சம்பவம் மிகவும் மனவேதனையை தருகிறது...இனியாவது இது போன்ற பெட்ரோல் லாரிகள் கவிழும் போதோ அல்லது விபத்துக்கு ஆளாகும் போது சாலையில் சிந்திய அல்லது கொட்டிய பெட்ரோலை அல்ல யாரும் செல்லக்கூடாது என்று இச்சம்பவம் உலகிற்கு பாடம் தந்துள்ளதாகவே நான் கருதுகிறேன்......
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-24 12:34:07 IST
ஜி எஸ் டி யாழ் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று செய்திகள் வருகின்றன . வரி அதிகமாய் போட்டா நாட்டின்பொருளாதாரம் உயருமா ??இது என்னாடா இது புதுக் கதையா இருக்கு .வரி போட்டா மக்களை உறிஞ்சறதா அரசாங்கம் நினைக்கல,நடுத்தர மக்கள் தொடர்ந்து எல்லா வரியும் ஒழுங்காகக் கட்டிக்கிட்டேதான் இருக்கோம் ஜி .எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-24 12:27:57 IST
முன்னாடியெல்லாம் ரயில்ல கொள்ளை அடிப்பவர்கள் பயணிகளை வழிப்பறி செஞ்சு அடாவடியா மிரட்டி கொள்ளை அடிப்பாங்க ,இப்ப ரயிலே மக்களிடம் அடாவடியா பல வகையில் தட் கல் ,பிரீமியம் தத்கல் என்று வழிப்பறி அடிக்குது ,கட்டணக் கொள்ளை அடிக்குது ,விமானம் மூலம் பயணம் செய்யும் கட்டணம் வாங்குது ?? என்னத்த சொல்ல ??? எங்கே யாரிடம் சொல்லி அழுவது ??தெரியல ஜி.எஸ்.ராஜன், சென்னை ....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-24 09:23:44 IST
கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிறாங்க கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்த யாரோட சேமிப்போ எப்படி எப்படியோ யார் யாருக்கோ அனாமத்தா போகுது .ஹூம் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் பலன் பணக்காரர்களுக்குத் தான் நடுத்தர மக்கள் எப்பவும் போல பல வகையில் நசுக்கப்படுகின்றனர் . ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-24 04:23:59 IST
Railways doing Daylight robbery in booking Tatkal and premium Tatkal .It should be revoked and reviewed. g.s.rajan, Chennai...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-22 15:36:33 IST
இந்தியாவில் ஏடிஎம் இல் பணம் எடுப்பது அதிகரித்து வருவதாக செய்திகள் வருகிறது .இந்தியாவில் விலைவாசி வெகுவாக அதிகமாகிவிட்டதால் செலவு அதிகம் செய்யப்பட்டு ரத்த அழுத்தம் ,நாடித் துடிப்பு தாறுமாறாக எகிறுது மக்களுக்கு அடிக்கடி பணம் தேவைப்படுது .எடுத்த பணம் நொடியில் காலியாகுது .இனிமே சாக்கு மூட்டைகளில் பணத்தை சுமந்து சென்று பைகளில் பொருட்கள் வாங்க வேண்டும் போல் தான் நாளுக்கு நாள் எல்லாப் பொருளும் விலை தாறுமாறாக எகிறுது .ஒண்ணும் சமாளிக்க முடியலே இந்தியாவில் நேர்மையாக கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்துக்கு துளிக் கூட மதிப்பே இல்லை என்ன செய்வது எல்லாம் தலை விதி ஜி.எஸ்.ராஜன் சென்னை...
Mailvakanam Arumugam - srivilliputtur,இந்தியா
2017-06-20 14:44:14 IST
மத்திய பிரதேசத்தில் வெங்காயம் விலை இல்லை என்று மக்கள் போராட்டம் நடத்துகின்றார்கள். அனால் இங்கு வெங்காயம் கிலோ 100 இங்கு மேல் விற்கின்றது. அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ அங்கெ வாங்கி இங்கு விற்கலாம் இல்லையா....
Mailvakanam Arumugam - srivilliputtur,இந்தியா
2017-06-20 14:40:07 IST
ஜூன் 18 வாரமலரில் புதுவை பிரபா அவர்களின் குன்றென நிமிர்ந்தவள் என்ற சிறு கதையை படித்தேன். தன்னம்பிக்கை ஊட்ட கூடிய இந்த கதை சரியான நேரத்தில் பிரசுரம் ஆகி உள்ளது. கல்லூரியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கதை இது....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-20 11:33:17 IST
மோசமான வேகத்தடை அமைப்புக்களால் பலர் உயிரிழப்பதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்து உள்ளது மிகவும் குறிப்பிடத தக்கது .இந்த அரியலூர் திருச்சி சாலையில் பாக்கணுமே வேகத் தடைகளை ஒவ்வொண்ணும் மலை அளவு இருக்கு, கார், இரு சக்கர வாகனங்கள் ஏறி இறங்குவதற்குள் ப்ரம்மப் பிரயத்தனம் தான் இந்த வழியில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளின் ஓட்டுனர்கள் பயண நேரம் அதிகமாகி மிகுந்த கால தாமதம் ஆவதால் தாறுமாறாக வேகமாகச் சென்று பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் முதுகுத் தண்டு வடங்களைப் பதம் பார்க்கின்றனர் .போகிற வேகத்தில் பேருந்தின் மேற் கூரைகளில் சென்று இடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை இந்த வழித் தடத்தில் மட்டும் சமயபுரம் டோல் கேட் வரை கிட்டத்தட்ட 64 வேகத்தடைகள் சிறியதும் பெரியதுமாக இருப்பதால் அனைவரும் பாதிப்பு அடைவது வாடிக்கையாகிவிட்டது .இந்த வழிப்பயணத்தில் பலரும் நொந்து நூடுல்ஸ் ஆகின்றனர் .எனவே திருச்சி மற்றும் அரியலூர் வழித்து தடத்தில் பை பாஸ் அதாவது புற வழி சாலை அமைத்து லாரிகள் மற்றும் குறைத்த நிறுத்தப் பேருந்துகளை புற வழியாக இயக்க வேண்டும் .சிமெண்ட் மற்றும் சுண்ணாம்புக்கல் லாரிகள் ஊருக்குள் வராமல் புறவழிப்பாதையில் சென்றால் இப்பாதையில் விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புக்களும் குறையும். அரசாங்கம் மற்றும் போக்குவரத்துத் துறை உடனடியாக ஆய்வு செய்யுமா ?? முறையற்ற வடிவமைப்பு இல்லாத வேகத்தடைகள் உடனே அகற்றப்படுமா ??இதே நிலை நீடித்தால் அனைவருக்குமே மிகவும் ஆபத்து சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா,விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா ???...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-16 20:48:02 IST
ரஜினி அரசியலுக்கு பிறந்த நாளின் போது வருவதாக செய்திகள் வருகின்றன. .ரஜினி வாழ்க்கையில் நல்லா சம்பாதித்தும் விட்டார் ,நிறையா சாதிச்சுட்டார் ,ரஜினி ரசிகர்கள் இப்போ வெட்டியாத் தெருவுல தண்டத்துக்கு வீட்டுக்கு ,நாட்டுக்கு பாரமா உதவாக்கரைகளா திரிஞ்சுக்கிட்டு இருக்காங்க . ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-16 17:21:17 IST
இந்த வேளச்சேரி பரங்கிமலை மாடி ரயில் திட்டம் என்ன ஆச்சு ,வேளச்சேரியை தாம்பரத்துடன் இணைக்க இன்னும் 50 ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை அதற்குள் ஹெலிகாப்டர் சர்வீஸ் (CHOPPER SERVICE )இந்தியாவுல புழக்கத்துக்கு வந்துடும் போல இருக்கு ,ரயில்வே நிர்வாகம் என செய்யுது ??அந்தக் கடவுளுக்குத் தான் வெளிச்சம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-16 17:00:40 IST
ரயில்களில் ஆன் லைன் மூலம் பயணிகள் விரும்பும் உணவை ஆர்டர் செய்ய ரயில்வேத் துறை முடிவு செய்து உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .நமது நாட்டின் மண்ணின் மணம் வீசும் பாரம்பரிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி அதன் சுவை மற்றும் தரத்தை மேம்படுத்தி உடல் நலம் பாதிக்காத வகையில் அந்த அந்த மாநிலங்களில் இருக்கும் பிரபலமான உணவுகளை சுவையாக தயாரித்து அளிக்கலாம் ,வெளிநாட்டு ஜங்க் உணவு (JUNK FOOD) கண்டிப்பாக ரயில் பயணிகளுக்கு வேண்டாம் . ஜி.எஸ்.ராஜன், சென்னை....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-16 13:15:33 IST
ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் மேல் வருமானம் இருந்தால் அவர்களுக்கு காஸ் மானியம் "கட் "செய்யப் போவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது தற்போது சொகுசுக்கார்களுக்கு வரி அதிகமாய் போட்டாலும் பெட்ரோல் மற்றும் டீசல் எல் பி ஜி போன்ற எரி பொருளை ஒரு கணக்கே இல்லாமல் கண்மூடித்தனமாக செலவழிக்கின்றனர் .மேலும் பெட்ரோல் டீசல் மற்றும் எல் பி ஜி நம் இந்தியாவில் போதுமானதாக இல்லை .கிட்டத்தட்ட 90 சதவீதம் எரிபொருளை நாம் பல கோடிக்கணக்கான டாலர் செலவழித்து இறக்குமதி செய்து பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறோம் .இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் இதுவரை துளியும் முயற்சி செய்ய முனையவில்லை .மாறாக அளவுக்கு அதிகமா வரியைப் போட்டு பெரும் பணத்தை வருவாயாக நியாயமற்ற முறையில் ஈட்டி வருவதை நாம் அனைவரும் அறிவோம் . எரி பொருளின் உபயோகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இதுவரை உள்ளது வேதனை .கறுப்புப் பணத்தை செலவழித்து எரி பொருளை நிரப்புவதைத் தடுக்க வேண்டும் .எரிபொருளுக்கு ரேஷன் முறை கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுப்பது நன்று .எரிபொருளைத் தாறுமாறாக உபயோகிப்பதால் நமது நாட்டின் அன்னியச் செலாவணி வெகுவாக அதிகரிக்கிறது .1 டாலர் 1 ரூபாய் என்ற மதிப்புக்கு நாம் நாடு நாணயம் இருந்தால் நாம் செலவுகளும் கட்டுப்படும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-15 16:48:32 IST
இந்தியாவில் விஷத்திற்கு பொது சேவை வரியில் இருந்து (GST) வரி விலக்கு அளியுங்கள்,மக்கள் விஷம் அருந்தி சாகட்டும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-15 16:46:21 IST
ரயில்ல மக்கள் இயற்கை உபாதைகளைத் தணிக்க தனியா சேவை வரி(SERVICE TAX) போடலாம் ,இதனால் இன்னும் கொஞ்சம் கணிசமா வருமானம் ரயில்வேக்கு கிடைக்கும் .ஆனா எப்பவும் நம்ம இந்தியாவில ரயில்வேக்கு விடியாத கஷ்டம்தான் . ஜி.எஸ்.ராஜன் சென்னை....
Swaminathan - Chennai,இந்தியா
2017-06-15 14:09:51 IST
ஒரு புறம் இயற்கையின் கருணை இன்னும் தமிழகத்தில்முழுமையாக இல்லை. ீ தழிழகத்தில் வறட்சிதலைவிரித்தாட எங்கு பார்த்தாலும் தண்ணீர் பற்றாக்குறை . ஏரி குளங்கள் காலில் தோன்றும் பித்த வெடிப்புகள் போல வெடித்துகிடக்கின்றன. மறுபுறம் மதுக்கடைகள் மூடும் போராட்டம். பெண்கள் போராட்டத்தில் குதித்து கடைகள் உதை வாங்கி வருகின்றன. அதே நேரம் மது வாங்க நிற்கின்றகூட்டம் ரே.ஷன் கடையிலோ மற்ற நிகழ்விலோ கூடபார்த்தது கிடையாது. அப்படி ஒரு நிலை இன்று. காய் கனிகள் விலை விண்ணைத் தொடும் நிலை. அரிசி மற்றமளிகைபொருட்கள் மக்கள் வாங்க இயலாத விலை மாற்றங்கள் கேஸ் மற்றும் பெட்ரோல் விலை தினம் தினம் மாறும்நிலை. தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.சி.என்றபெயரில்கல்விகட்டணம் மற்றும்.பஸ்கட்டணங்கள். ஒரு குழந்தைக்கு ஆரம்ப நிலை வகுப்பிற்கு ஒரு லட்சம்எட்டும். இயற்கையின் வஞ்சகம்இப்படி இருந்தாலும் எதிர்கட்சிகளின் தாக்குதல்கள் ஆளும்.கட்சியினரிடையே கருத்து வேறு பாடுகள் .இதையெல்லாம் சமாளித்து இன்றுவரைஆட்சி கம்பிமேல் நிற்பதை போல் ஓடிககொண்டிருக்கிறது. மதுகடைகள் வேண்டாம் என போராட்டம் என்ற பெயரில் நடக்கும் நாடகமா.புரியவில்லை. ஒரு பொருளை மறைக்க மறைக்க அதன்மீது ஆசை அதிக மாவதைப்போல கடைகளை மூடமூட மது வாங்க கூட்டம் குறைவதே இல்லை . அரசுக்கும்வருமானம் போகாமலும் மதுப்பிரியர்கள் கள்ள சந்தை நாடிப் போகாமலும் முனபு இருந்த பர்மிட் முறையை முறைப்படுத்தி குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அரசால் அஙங்கீகரிகாகப்பட்ட இடங்களில் பர்மிட் உள்ளவர்கள் மட்டும் வீட்டிற்கி வாங்கி செல்ல மட்டும் முறைபடுத்தினால் இராணுவ வீர்கள்களின் கேன்டீன் போல அரசுக்கும் வருமான இழப்பு ஏற்படாது . மதுக்கடைகளும் கண்டகண்ட இடங்களில் இருக்காது . இக்கருத்து ஒரு மனதில் தோன்றிய எண்ணம்தான். கல்விகட்டணத்திற்கும் மத்திய மாநில அரசுகள்இதனை நெறிமுறை ஒரே சீராக அமைத்தால் யாரும் எங்கு வேண்டுமானாலும் சேரலாம். மாணவர்கள் மேற்படிப்பு பெற நீட் போன்ற தேர்வுகள் வந்ததுபோல எல்லாவற்றி்ற்கும் எல்லா துறைகளுக்கும் ஏன்தகுதி தேர்வு அமுல்படுத்த கூடாது . இனறு கிராமங்களில்.இருக்கும் பள்ளிகள் எதற்கும் சோடை போகவிலலை. இன்று இருக்கும் விஞ்ஞான வளர்சியில் எல்லா மாணவர்களும் திறமையானவரகள் எனபதில்.ஐயமில்லை. காலங்கள் மாறிவரும் நிலையில்.இனி இந்த ஜனநாய.நாட்டில் தேர்தலில் போட்டியிடகூட வயது கல்விதகுதி யோடுகூட நீட் தேர்வைபோல ஒரு தேர்வு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒன்று மட்டும் புரிகிறது.எல்லா.வளமும்.இங்கு உள்ளது. மற்ற நாடுகள் பொறாமைப்படும் அளவிற்கு இந்தியாவும் குறிப்பாக தமிழ்நாடு இந்தியாவிற்கே எடுத்துகாட்டாக ஒரு.முதுகெலும்பாக மாறிவரும் நிலை வெகு தூரத்தில் இல்லைஎன்பது மட்டும்பு ரிகிறது்....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-14 16:44:05 IST
ரயில் டிக்கெட் வாகப் புதிய வசதிகளை மேற்கொள்ளப் போவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது .மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப போதுமான ரயில்களை இயக்காமல் டிக்கெட் எங்கிருந்து வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் , மொதல்ல நிறைய ரயில்களை விடுங்கப்பா ,முக்கியமா தென் மாநில ரயில்களில் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி ரயில் பயணம் செய்கின்றனர் .பொதுவாக மற்ற மாநிலங்களில் டிக்கெட் வாங்காமல் ஓசிப் பயணம் தான் மேற்கொள்கின்றனர் ரயில்களில் இலவச சேவை அவர்களுக்கு மட்டுமே ,நமக்கு எந்தக் காலத்திலும் கிடையாது . ஜி.எஸ்.ராஜன், சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-14 13:00:06 IST
தமிழக அரசின் மின் வாரியம் இந்த மின் கட்டணத்துல ஸ்லாப் ஸிஸ்டெம்னு (SLAB TEM) போட்டுக் கொள்ளை அடிக்கிறாங்களே நடுத்தர மக்கள் குறிப்பா இதனால ரொம்பக் கஷ்டப்படுறாங்க அதைக் கொஞ்சம் சரி செய்யுங்களேன்....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-14 11:10:55 IST
உலகின் உணவுத் தொழிற்சாலையாக இந்தியாவை மத்திய அரசு மாற்ற இருப்பதாக செய்திகள் வருகின்றன .உணவு தானியங்கள் பருப்பு வகைகள் சமையல் எண்ணைய் வகைகள் உற்பத்திக்கு என்ன வழி செய்யப் போறாங்க ??,இந்தப் பாடாவதி பாமாயிலை( PALMOLEIN)எதுக்கு வெளிநாட்டில் இருந்து ஏகப்பட்டதை இறக்குமதி செஞ்சு தொலைக்கிறாங்க ??? இங்கு நம் நாட்டில் எள் ,வேர்க்கடலை .தேங்காய் உற்பத்தியை மிகைப் படுத்த மத்திய அரசு என்ன செய்யப்போவதாக உத்தேசம் ???...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-13 13:53:44 IST
சினிமாத் துறையினரிடம் ஏகப்பட்ட கறுப்புப் பணம் உள்ளது ,சினிமா தயாரிக்க அவர்களுக்கு யார் பணம் கொடுக்கின்றனர் ,எப்படி அவர்களுக்கு அந்தப் பணம் வந்தது, சினிமாவில் நடிப்பவர்கள் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றனர் .கறுப்பில் எவ்வளவு ???வெள்ளையில் எவ்வளவு ??கணக்கில் காட்டப்படாத பணத்தை எங்கு முதலீடு செய்து உள்ளனர் ???வருமான வரித்துறை என்ன செய்யுது ??ஒன்றுமே புரியவில்லை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-13 05:21:14 IST
தனியார் பாலில் பெரும்பாலும் கலப்படம் தான் இருக்கு மேலும் ஆட்டுப்பால் மாதிரி ஒரு வீச்சம் வருது ,திக்கா வழ வழப்பா கொழ கொழன்னு இருப்பது பெரும்பாலும் சந்தேகத்தைக் கிளப்புகிறது , ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-12 17:53:58 IST
இன்றைய இசையின் நிலை பற்றி நீங்கள் வேதனை தெரிவித்து இருப்பது நூற்றுக்கு நூறு உண்மையே இசைஞானி இளையராஜா அவர்களே ,ராஜா சார் நீங்கள் கூறுவது மிகவும் சரி .என்ன இருந்தாலும் உங்க இசைக்கு ஈடு இணையே இல்லை .உங்களின் இசையில் உருவான அனைத்துப் பாடல்களும் மிக மிக அற்புதம் 1976 வருடம் முதல் என்று நிச்சயம் அடித்துக் கூறலாம் ,இப்போது வரும் பாடல்கள் எல்லாம் ஒரு தடவைக்கு மேல் கேட்கவே முடியாது .மறந்தும் போய் விடுகிறது .ஆனால் உங்களின் இசையில் வந்த பாடல்கள் காதுகளுக்குள் என்றும் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கின்றன அதன் மாயம் தான் என்ன மர்மம்தான் என்ன??? ,எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது.அத்தனையும் தேவாமிருதம் . உங்களின் இசையில் இருக்கும் ஜீவன் வேறு எவரிடமும் இருப்பது போல் நிச்சயம் தெரியவில்லை ILAIYARAJA SIR YOU ARE DEFINITELY A GODS GIFT TO US ஜி.எஸ்.ராஜன்,, சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-12 14:07:14 IST
நமது இந்திய நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் வரை ஆன போதிலும் சென்னை மும்பை அகல ரயில் பாதை இன்னும் இரட்டிப்பு செய்யாமல் (DUAL LINE)ஒரு வழியாகவே பல இடங்களில் இருக்கிறது .மின்சார ரயில் என்ஜின் மூலம் இயக்கப் படாமல் இன்னும் டீசல் என்ஜின் மூலமாகவே இதுவரை இயக்கப்படுவது வேதனை.இதனால் சுற்றுப்புற சூழல் மாசுபடுகிறது .பயண நேரமும் அதிகமாகிறது .மின்சார ரயில் என்ஜின் மூலம் இயக்கினால் உடனடி வேகமும் கிடைக்கும் ,டீசல் என்ஜின் மூலம் இயக்கினால் உடனடியாக வேகம் எடுக்க முடியாது.மும்பை செல்லும் வழிகளுக்கு இடையே ஆந்திரா ,கர்நாடகா,மஹாராஷ்டிரா மாநிலம் நெடுகிலும் முற்றிலும் இரட்டை வழிப்பாதை இல்லாமல் இருப்பதால் பல இடங்களில் சிக்னலுக்கு என தேவையே இல்லாமல் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டு பயண நேரம் அதிகரிப்பது மேலும் வேதனை .அனைத்து ரயில்களும் ஒரு வழிப்பாதையில் பல இடங்களில் காத்துக் கிடைப்பதால் காலம் வீணாகப் போகிறது .எனவே இப்பாதையை மின் மயமாக்கி முழுவதும் மின்சார ரயில் என்ஜின் மூலம் இயக்க வேண்டும் ,அதே நேரத்தில் இரட்டை வழிப்பாதையும் சென்னையில் இருந்து மும்பை வரை முழுமையாக இயக்கம் வகையில் திட்டங்களை உடனடியாக குறுகிய காலத்தில் செயல்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் .ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா ???நாள்தோறும் பல ரயில்கள் இயக்கப்பட்டு வரும் இந்த முக்கியமான ரயில் பாதை விரைவில் இரட்டிப்பு செய்யப்படுமா ??? மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படுமா ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை ....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-11 17:59:57 IST
ரயில்வே நிர்வாகத்திற்கு தினமும் ட்விட்டரில் 3000 வரை வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.பல ரயில்கள்ல அந்த ரயிலோட பேரு கூட என்னன்னு தெளிவாத் தெரியல ,ரயில் பெட்டிகளில் ரயில் செல்லும் வழிகளும் தெளிவாக இல்ல ரயில் என்ஜின் முன்னாடி கூட எந்த ரயில் அப்படின்னு தெளிவா பெயர்ப்பலகை இல்ல ,டிஜிட்டல் எல் ஈ டி(LED) பெயர்ப்பலகையும் கூட கேவலம் ரயில்வே நிர்வாகத்துல வைக்க முடியலையா ???தமிழ்நாட்டுல சாதாரண குக்கிராமத்திற்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகளில் கூட LED பெயர்ப்பலைகை தெளிவாகப் பொருத்தப்பட்டு செல்லும் வழிகளைக் குறிப்பிட்டு நேரம் உட்பட அறிவிக்கப்பட்டு மிகவும் அருமையாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது .இதுக்கு கூட விரைவு மற்றும் அதிவிரைவு ரயிலில் வசதி செய்ய முடியாதா ???அதுதான் ஒண்ணும் புரியல. ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-06-11 11:25:52 IST
தற்போது இட ஒதுக்கீட்டைக் கட்டிக்க கொண்டு நம்ம இந்தியாவில் ஓட்டுக்காக அரசியல்வாதிகள் மலிவு அரசியல் செய்வதால் பெரும்பாலான பிராமணர்கள் அரசு வேலைகளை நம்பாமல் வேறு துறைகளில் சென்று தங்கள் தகுதி திறமையை முன்னிறுத்தி அதில் முழுமையாக திறமையை வெளிப்படுத்தி பல வகையில் வெற்றி பெற்று இருப்பது உறுதி எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது ..தற்போது மத்திய மாநில அரசுப் பணிகளில் பெரும்பாலும் பிராமணர்கள் இல்லை ,தங்களுடைய தகுதி மற்றும் திறமையைப் பயன்படுத்தி முன்னேறிப் பல வெளி நாடுகளுக்குச் சென்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர் சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆகும் போதிலும் சாதி அடிப்படையில் செல்லும் இந்தியா கண்டிப்பாக மற்ற வளர்ந்த நாடுகளை விட பின் தங்கியேதான் உள்ளது ,என்ன செய்வது ??நமது அரசியல்வாதிகள் ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுக்களில் சாதி அடிப்படையை வைத்து பல நாடுகளின் போட்டிகளுக்கு இடையே கண்டிப்பாக தங்கம் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் இந்தியாவுக்குத் தரவேண்டும் என்று இது வரை போராடவில்லை அதுவரைக்கும் ரொம்ப நிம்மதி . ஜி.எஸ்.ராஜன் சென்னை...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement