பிளஸ் 2 முடித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான "வழிகாட்டி' நிகழ்ச்சி சென்னை, கோவையில் இன்று துவக்கம்: தினமலர், புதிய தலைமுறை, எஸ்.ஆர்.எம்., இணைந்து வழங்குகின்றன
சென்னை: பிளஸ் 2விற்கு பிறகு மாணவர்கள் உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பது குறித்து விளக்கமளிக்கும் வகையில், புதிய தலைமுறை மற்றும் "தினமலர்' நாளிதழ் சார்பில், "வழிகாட்டி' நிகழ்ச்சி சென்னை மற்றும் கோவையில் இன்று துவங்குகிறது. இந்நிகழ்ச்சியை எஸ்.ஆர்.எம்., ஸ்பான்சர் செய்கிறது.
புதிய தலைமுறை மற்றும் "தினமலர்' நாளிதழ் சார்பில், பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என தெரிந்து கொள்ளும் வகையில், "வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சென்னை மற்றும் கோவையில், "வழிகாட்டி' நிகழ்ச்சி இன்று துவங்குகிறது. இந்நிகழ்ச்சிகளை எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் ஸ்பான்சர் செய்கிறது. சென்னையில், "வழிகாட்டி' நிகழ்ச்சியை, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக இணைவேந்தர் ரவி மற்றும் பதிவாளர் சேதுராமன் துவக்கி வைக்கின்றனர். இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று தினங்கள் சென்னை மற்றும் கோவையில், "வழிகாட்டி' நிகழ்ச்சி நடக்கிறது.
சென்னையில் ராஜா முத்தைய மற்றும் ராணி மெய்யம்மை அரங்கிலும், கோவையில் ராமகிருஷ்ணா திருமண மண்டபத்திலும் இந்நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 6, 7, 8 ஆகிய தினங்களில் மதுரையிலும், வரும் 9, 10, 11 ஆகிய தேதிகளில் புதுச்சேரியிலும், "வழிகாட்டி' நிகழ்ச்சி நடக்கிறது. மதுரையில் லட்சுமி சுந்தர மஹாலிலும், புதுச்சேரியில் சுபலட்சுமி திருமண மண்டபத்திலும் இந்நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவன ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. தினமும் காலை 10 மணிக்கு துவங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி, இரவு 7 மணி வரை நடக்கிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பது குறித்தும், எந்தெந்த கல்வி நிறுவனங்களில் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது குறித்தும் தெரிந்து கொள்ளும் வகையில், "வழிகாட்டி' நிகழ்ச்சியில் கருத்தரங்கமும் நடக்கிறது.
மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கவும், அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி அமைக்கும் வகையிலும், கல்வியாளர்கள் பலர் இக்கருத்தரங்கில் பேசுகின்றனர். உயர்கல்வி குறித்த மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு, வல்லுனர்கள் நேரடியாக பதில் அளிக்கின்றனர். தினசரி காலை 10 மணி முதல் மதியம் 11.30 மணி வரையும், மலையில் 4 முதல் 5:30 மணி வரையும் கருத்தரங்கம் நடக்கிறது. இன்று நடக்கும் கருத்தரங்கில், கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி., துறையின் தற்போதைய போக்குகள் குறித்து டி.சி.எஸ்., நிறுவன துணைத் தலைவர் ஹேமா கோபாலன் விளக்குகிறார். ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் துறையில் தொழில் வாய்ப்புகள் குறித்து எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக ஆட்டோ மொபைல் துறைத் தலைவர் லென்னஸ் மார்ட்டின் வழிகாட்டுகிறார்.
கை நிறைய சம்பாதிக்க உதவும் சி.ஏ., - ஏ.சி.எஸ்., - ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்புகள் குறித்து பிரபல ஆடிட்டர் சேகர் ஆலோசனைகள் வழங்குகிறார். கடல்சார் படிப்புகளை படித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து, அத்துறையில் 30 ஆண்டு அனுபவம் பெற்ற நிபுணர் நரசய்யா அறிவுரைகள் வழங்குகிறார்.
பாராமெடிக்கல், நர்சிங், பிசியோதெரபி துறைகளில் வேலைவாய்ப்புகள் குறித்து எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக விரிவுரையாளர் வைஜெயந்தி மாலா விளக்குகிறார். வெளிநாடுகளில் சென்று படிப்பது எப்படி என்ற வழிமுறைகளை வெளிநாட்டுக் கல்வி ஆலோசனை நிறுவனம் நடத்திவரும் பால் செல்லக்குமார் விளக்குகிறார். மீடியா துறையில் பெருகி வரும் வேலைவாய்ப்புகள் குறித்து எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக பேராசிரியர் பாலாஜி விளக்கம் அளிக்கிறார்.
பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல், கேட்டரிங் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் குறித்த தகவல்களை இந்நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ளலாம். தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சி நடக்கிறது.
"வழிகாட்டி' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அனுமதி இலவசம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு, "எந்த கல்லூரியில் என்ன படிப்புகள் உள்ளது?' என்ற, முழுமையான வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வழிகாட்டி நிகழ்ச்சியில், கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன. மேலும் மாணவர் சேர்க்கையும் நடக்கிறது.
Ordered List:The fifteenth edition of “Vazhikaatti 2010” is the much awaited educational career guidance expo. It aims to provide for a direct and interactive platform for educators and students. This exhibition will furnish detailed information to the student community about various educational opportunities offered by different institutions. It is a cost effective medium for both the participants and the target customers, resulting in expanding horizons.
Exhibit to benefit
- To bring in the best educational institutions under one roof.
- To enable the institutions to showcase the courses, infrastructure, products and skill sets on offer.
- To facilitate a direct interaction between students and institutions.
- To enable students to make their choice.
- To illustrate about varied career option available to students.
- To offer career guidance to career - conscious students by organizing various seminars addressed by eminent experts.
PromotionTo inform students, parents and educators about your institutions educational products and services. To meet the students and conduct counseling & on-the-spot admissions.
The expo will be given a wide and sustained coverage by Dinamalar, Outdoor Advertising, Cable TV, Internet, Satellite Channels, Radio, etc.,

Provision For Exhibitors

The student community is exploring options to find the right course leading to the right career. BE SURE TO BE THERE.
Booking
- Modular Stalls, fabricated with white laminated sheet mounted on Aluminium Frame, on interiors and exteriors.
- Name of the participant in the frontage panel
- One 5 amps plug point and two spot lights. Extension chord to be brought on own.
- One table and two chairs, one waste bucket.
- Wall to wall synthetic carpet.
- Extra requirements to be mentioned in requisition forms.
100% with application

