Advertisement

பொது » சசிகலா போலீஸ் டார்ச்சர் ஓட நினைத்த சத்யம் ஓனர் ஆகஸ்ட் 15,2018 16:50 IST 1

பொது » சசிகலா போலீஸ் டார்ச்சர் ஓட நினைத்த சத்யம் ஓனர் ஆகஸ்ட் 15,2018 16:50 IST

சத்யம் தியேட்டர் ஓனர்களை மிரட்டி, போலீஸ் மூலம் பொய் வழக்கு போட்டு அலைக்கழித்து, அவர்களுக்கு சொந்தமான தியேட்டர் வளாகத்தை சசிகலா குடும்பம் அபகரித்த விஷயம் ஊர்ஜிதம் ஆகியிருக்கிறது. சத்யம் தியேட்டர் உள்ளிட்ட 76 திரைகள் கொண்ட SPI சினிமாஸ் என்ற கம்பெனியை, PVR சினிமாஸ் என்ற மற்றொரு தியேட்டர் குழுமம் 850 கோடிக்கு வாங்கியுள்ளது. சென்னை ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற சத்யம் தியேட்டரை விற்க எப்படி மனம் வந்தது என்று சத்யம் ஓனர்களில் ஒருவரான கிரண் ரெட்டியிடம் கேட்கப்பட்டது. லக்ஸ் தியேட்டர் வளாகத்தை சசிகலா குடும்பம் எங்களிடம் இருந்து பலவந்தமாக பிடுங்கியபோது ஏற்பட்ட அனுபவம்தான் இதற்கு காரணம் என்று தத்துவார்த்த ரீதியில் பதில் அளித்தார் கிரண் ரெட்டி. அப்படி என்ன ஸ்பெஷல் லக்ஸ் அனுபவத்தில்? அவரே சொல்கிறார்: வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் 10 திரைகள் கொண்ட லக்ஸ் என்ற மல்ட்டிப்ளக்சை multiplex நாங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு உருவாக்கினோம். 2015 ல் அந்த மல்ட்டிப்ளக்சை எங்களிடம் இருந்து பிடுங்க திட்டமிட்டது சசிகலா குடும்பம். உண்மையில் அவர்கள்தான் அந்த முயற்சியில் ஈடுபட்டனர் என்பது நீண்ட நாட்களாக எங்களுக்கு தெரியாது. அந்த காலகட்டத்தில் எங்களுக்கு நிறைய தொல்லைகள் தரப்பட்டன. பெரும்பாலும் போலீஸ் மூலமாக தரப்பட்ட கஷ்டங்கள். நிலம் அபகரித்ததாக எங்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. யாரோ நம் மீது கோபம் கொண்ட போலீஸ் அதிகாரிதான் இதையெல்லாம் செய்கிறார் என்று முதலில் நினைத்தோம். பிறகுதான் தெரிந்தது, லக்ஸ் மல்ட்டிப்ளக்சை அபகரிக்க சசிகலா குடும்பம் கொடுத்த டார்ச்சர் என்பது. அப்படிப்பட்ட மோசமான அனுபவம் அதுவரை என் வாழ்நாளில் ஏற்பட்டது இல்லை. நிறைய கஷ்டங்களை அனுபவித்ததோடு, அவர்கள் சொன்ன விலைக்கு விற்றதால் மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்தித்தோம். ஒரு பிசினசை வாங்கி நடத்த இன்னொரு பிசினஸ்மேன் விரும்புவது தவறில்லை. அதை செய்ய முறையான வழிகள் இருக்கின்றன. சசிகலா குடும்பத்தினர் எங்களை ஏன் அப்படி உருட்டி மிரட்டி அந்த தியேட்டர்களை வாங்கினார்கள் என்பது இன்றுவரை எனக்கு புரியவில்லை. அந்த நேரத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிடலாமா என்றுகூட தோன்றியது. இதுதான் கிரண் ரெட்டி சொன்னது. எப்படிப்பட்ட டார்ச்சர் என்பதை அவர் விரிவாக சொல்லவில்லை. ஆனால் சினிமா தொழிலில் இருப்பவர்களுக்கு தெரிந்த ரகசியம்தான் அது. ஃபீனிக்ஸ் மால் திறந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும், அதில் தியேட்டர்கள் நடத்துவதற்கு அதிமுக அரசு அனுமதி வழங்கவில்லை. பிறகுதான் அந்த மாலில் லக்ஸ் தியேட்டரை சத்யம் சினிமாஸ் உருவாக்கியது. ஒவ்வொரு திரையிலும் வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க ரொம்பவும் அக்கறை எடுத்துக்கொண்டது. அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அதைப் பார்த்த ஒரு பெரிய நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு லக்ஸ் தியேட்டரை வாங்க விருப்பம் தெரிவித்தது. கிரண் ரெட்டிக்கும் அவரது பார்ட்னர் சொரூப் ரெட்டிக்கும் விற்க மனம் இல்லை. அப்போதுதான் சசிகலாவுக்கு லக்ஸ் மீது கண் விழுந்தது. சசிகலா குடும்பம் அப்போது ஏராளமான டுபாக்கூர் கம்பெனிகளை பதிவு செய்து வைத்திருந்தது. ஊழலில் குவிக்கும் பணத்தை மடை திருப்பிவிட்டு வெள்ளையாக்க அந்த ஏற்பாடு. அதில் ஒரு கம்பெனியின் பெயர் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங். 2014 ஜூலை 14ம்தேதி அதன் இயக்குனர்கள் கூடி, அதன் பெயரை ஜாஸ் சினிமாஸ் என்று மாற்றினார்கள். அதற்கான தீர்மானத்தில் சசிகலா கையெழுத்திட்டார். சினிமா படம் தயாரிப்பு, வினியோகம், திரையிடுதல் ஆகிய வேலைகளை ஜாஸ் சினிமாஸ் செய்யும் என அதில் குறிப்பிடப்பட்டது. அதன் தலைமை செயல் அதிகாரியாக இளவரசி மகன் விவேக் ஜெயராமனை நியமித்தனர். சசிகலாவின் சகோதரர் மகனான விவேக் அப்போது கல்லூரி மாணவன். விவேக்கை நியமனம் செய்த இயக்குனர்கள் டாஸ்மாக்குக்கு மது சப்ளை செய்யும் மிடாஸ் கம்பெனியிலும் டைரக்டர்கள். இதன் பிறகுதான் சத்யம் ஓனர்களை பந்தாடி, லக்ஸ் தியேட்டர்களை அடிமாட்டு விலைக்கு அபகரிக்கும் வேலை முழு வீச்சில் தொடங்கியது. சசி அன் கம்பெனி அதில் வெற்றியும் பெற்றது. என்னதான் உண்மைகள் அம்பலம் ஆனாலும் சசிகலா குடும்பத்தினர் பலர் இன்னும் சுதந்திர பறவைகளாக நடமாடுவதுதான் எதார்த்தம்.


play button 00:23 'அனைத்து காவல்நிலையங்களில் நூலகம்'

'அனைத்து காவல்நிலையங்களில் நூலகம்'

play button 02:46 சிக்கல் இன்ஸ்பெக்டரின் மிரட்டல் ஆடியோ

சிக்கல் இன்ஸ்பெக்டரின் மிரட்டல் ஆடியோ

play button 00:38 சுருளி அருவியில் சாரல் விழா

சுருளி அருவியில் சாரல் விழா

play button 00:43 முத்தாலம்மன் தேர் வெள்ளோட்டம்

முத்தாலம்மன் தேர் வெள்ளோட்டம்

play button 01:30 எம்.எல்.ஏ. படுகொலை

எம்.எல்.ஏ. படுகொலை

play button 00:37 ஆற்றை கடக்க ஆபத்து பயணம்

ஆற்றை கடக்க ஆபத்து பயணம்

play button 01:20 ஆயுஷ்மான் பாரத் திட்டம்: துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

ஆயுஷ்மான் பாரத் திட்டம்: துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

play button 00:38 கூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் கைது

கூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் கைது

play button 01:08 தனித்தேர்வு இனி ஒன்றுதான்!

தனித்தேர்வு இனி ஒன்றுதான்!

play button 00:32 மீனவர் கழுத்தறுத்து கொலை

மீனவர் கழுத்தறுத்து கொலை

play button 02:18 பா.ஜ. என்னை கூப்பிடலை: எஸ்.வி.சேகர்

பா.ஜ. என்னை கூப்பிடலை: எஸ்.வி.சேகர்

play button 01:45 அக்.5 வரை கருணாஸுக்கு நீதிமன்றக் காவல்

அக்.5 வரை கருணாஸுக்கு நீதிமன்றக் காவல்

play button 00:47 ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு மரியாதை

ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு மரியாதை

play button 00:39 மாநில 'பவர் லிப்டிங்'

மாநில 'பவர் லிப்டிங்'

play button 00:30 லாரி கவிழ்ந்தது வீனாகிய பீர்...

லாரி கவிழ்ந்தது வீனாகிய பீர்...

play button 01:06 'ஆன்மிகத்தில் தலையிட உரிமையில்லை'

'ஆன்மிகத்தில் தலையிட உரிமையில்லை'

play button 01:10 எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் கேட்பேன்

எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் கேட்பேன்

play button 00:27 கஞ்சி கலய ஊர்வலம்

கஞ்சி கலய ஊர்வலம்

play button 00:21 பாலியல் தொல்லை சத்துணவு அமைப்பாளர் கைது

பாலியல் தொல்லை சத்துணவு அமைப்பாளர் கைது

play button 00:42 1008 ஆனந்த மகா வேள்வி

1008 ஆனந்த மகா வேள்வி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஆக-201810:10:11 IST Report Abuse

ருத்ராசத்தியம் என்ற வார்த்தைக்கு சம்மந்தம் இல்லாத குடும்பம். எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவும்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X