Advertisement

சிறப்பு தொகுப்புகள் » ரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு? நவம்பர் 16,2018 19:00 IST 4

சிறப்பு தொகுப்புகள் » ரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு? நவம்பர் 16,2018 19:00 IST

ரயில்வேயில் பார்சல் ஊழல் நடப்பது அம்பலமாகியுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 8ம்தேதி 30 பார்சல்களை, திருப்பூர் ஜவுளி நிறுவனம் கொல்கத்தாவுக்கு அனுப்ப புக் செய்தது. 30 பார்சல்களும் போய்ச் சேர்ந்ததாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 11 பார்சல்கள் பிளாட்பார்மில் கிடந்தன. கமர்ஷியல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஏதோ தப்பு நடக்கிறது என்பதை உணர்ந்தார். 11 பார்சல்களையும் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். ஒரு யூனியனை சேர்ந்த பார்சல் ஊழியர்கள் அங்கு சென்று, சூப்பர்வைசரை மிரட்டி 11 பார்சல்களையும் தூக்கிச் சென்றனர். விவகாரம் பெரிதானது. உயரதிகாரிகள் வந்தனர். 30 பனியன் பார்சல்களையும் கொல்கத்தாவுக்கு அனுப்பிவிட்டோம் என்று ஊழியர்கள் சாதித்தனர். தீவிரமாக விசாரித்தபோதுதான் பார்சல் முறைகேடு அம்பலமானது. பார்சல் முறைகேடு எப்படி நடக்கிறது? சரக்கு பார்சல்களை பார்சல் ஏஜெண்ட் புக் செய்வார். 10 பார்சல்களை கொண்டு வருவார். ஆனால், 5 பார்சல்களுக்கு மட்டுமே அதிகாரிகள் பில் போடுவர். பிறகு, இரண்டு ஐந்து பார்சல்களாக பிரித்து காலை, மாலை என, அடுத்தடுத்த ரயில்களில் அனுப்புவர். (உதாரணத்துக்கு, ஒரு பார்சலுக்கு கட்டணம் 200 ரூபாய் என்றால், 10 பார்சல்களுக்கு கட்டணம் 2,000 ரூபாய். 5 பார்சல்களுக்கான கட்டணம் 1,000 ரூபாய்க்கு பில் போட்டுவிட்டு, எஞ்சிய 1,000 ரூபாயை ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார், பார்சல் ஏஜென்ட்கள் பங்கு போட்டுக் கொள்வர். சரக்கு போய்ச்சேரும் ரயில் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள், RPF போலீசுக்கும் உரிய பங்கு போய் விடும்) (கார்டு) பார்சல் ஊழல் எப்படி நடக்கிறது? ----------------- ஒரு பார்சலுக்கு கட்டணம் 200 ரூபாய் 10 பார்சல்களுக்கு கட்டணம் 2,000 ரூபாய் 5 பார்சல்களுக்கு மட்டும் 1000 ரூபாய் பில் போடுவர் எஞ்சிய 5 பார்சல்களுக்கான கட்டணம் 1000 ரூபாய் ஸ்வாஹா ரயில்வே அதிகாரிகள் RPF போலீசார் பார்சல் ஏஜெண்ட் பங்கு போடுவர். இப்படியாக, ஒவ்வொரு ரயிலிலும் நடக்கும் பார்சல் முறைகேடுகளை கணக்கிட்டால் மலைப்பை ஏற்படுத்தும். பார்சல் மூலம் ஒருநாளைக்கு ரயில்வேக்கு 50 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது என்கிறது புள்ளி விவரம். ஆக, ரயில்வேக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான வருவாய் சில கறுப்பாடுகளை போய்ச்சேருகிறது. இதே பாணியில்தான் பனியன் பார்சல்களை அனுப்புவதிலும் முறைகேடு நடந்திருக்கிறது. இதுதொடர்பாக, டிக்கெட் பரிசோதகர் யுவராஜ் உள்ளிட்ட 5 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். யுவராஜ், எஸ்.ஆர்.எம்.யூ., பொதுச்செயலாளர் என்.கண்ணையாவின் உறவினர் என்பதால் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய தெற்கு ரயில்வே தலைமைக்கு தொடர்ந்து நெருக்கடிகள் வருகிறதாம். அதன் பிறகே பார்சல் முறைகேடு பல பெரும்புள்ளிகளின் பின்புலத்தோடுதான் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேர்மையான விசாரணை நடத்தப்பட்டால் பல புள்ளிகள் சிக்கும் என நேர்மையான ரயில்வே ஊழியர்கள் கூறுகின்றனர்.


play button 00:45 ரிசர்வ் வங்கி புதிய கவர்னர்  சக்தி காந்த தாஸ்

ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்தி காந்த தாஸ்

play button 01:20 2ல் காங் ஆட்சி; ம.பியில் இழுபறி தெலங்கானாவில் TRS வெற்றி

2ல் காங் ஆட்சி; ம.பியில் இழுபறி தெலங்கானாவில் TRS வெற்றி

play button 00:39 பா.ஜ., தோல்வி; ரஜினி, கமல் கருத்

பா.ஜ., தோல்வி; ரஜினி, கமல் கருத்

play button 05:00 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 00:30 கோழிக்கோடு பல்கலை., சாம்பியன்

கோழிக்கோடு பல்கலை., சாம்பியன்

play button 00:57 தரமில்லாத தார் ரோடு

தரமில்லாத தார் ரோடு

play button 00:56 மதுவை தவிர்த்து கல்விக்கு செலவிடுங்கள்...

மதுவை தவிர்த்து கல்விக்கு செலவிடுங்கள்...

play button 00:35 பெண் கல்விக்கு 6,000 கி.மீ., ஸ்கேட்டிங்

பெண் கல்விக்கு 6,000 கி.மீ., ஸ்கேட்டிங்

play button 00:56 தப்பியோடிய 2 பேர் சடலமாக மீட்பு

தப்பியோடிய 2 பேர் சடலமாக மீட்பு

play button 00:53 மழை வரலயா...? கிரண்பேடிதாங்க காரணம்

மழை வரலயா...? கிரண்பேடிதாங்க காரணம்

play button 00:38 தினகரன் ஆதரவாளரை சிறைபிடித்த அரசு ஊழியர்கள்

தினகரன் ஆதரவாளரை சிறைபிடித்த அரசு ஊழியர்கள்

play button 00:53 ரவுண்டானாவை அழகுபடுத்தும் ஜல்லிகட்டு, கருங்கல் தேர்

ரவுண்டானாவை அழகுபடுத்தும் ஜல்லிகட்டு, கருங்கல் தேர்

play button 00:48 ரேப் விக்டிம்ஸ் பெயர்களை வெளியிட தடை

ரேப் விக்டிம்ஸ் பெயர்களை வெளியிட தடை

play button 00:50 தந்தங்களுக்காக யானைகள் கொலையா : இருவர் கைது

தந்தங்களுக்காக யானைகள் கொலையா : இருவர் கைது

play button 00:26 பயிர்களை பார்வையிட்ட அதிகாரி விபத்தில் பலி

பயிர்களை பார்வையிட்ட அதிகாரி விபத்தில் பலி

play button 05:15 புதிய ஏடிஎம் கார்டு   புதிய ஆபத்து

புதிய ஏடிஎம் கார்டு புதிய ஆபத்து

play button 00:29 வெற்றிகரமான தோல்வி:தமிழிசை

வெற்றிகரமான தோல்வி:தமிழிசை

play button 00:52 தூத்துக்குடி வழக்குகள் சிபிஐ வசம்

தூத்துக்குடி வழக்குகள் சிபிஐ வசம்

play button 00:32 சிலம்பம்: கற்பகம் பல்கலை., அமர்க்களம்

சிலம்பம்: கற்பகம் பல்கலை., அமர்க்களம்

play button 03:33 நீதிமன்றங்களுக்கு   விடுமுறை அவசியமா?

நீதிமன்றங்களுக்கு விடுமுறை அவசியமா?

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
17-நவ-201809:23:37 IST Report Abuse

Mannai Radha Krishnanகன்னையா பயஙர ஃப்ராடு என்று ரெயில்வே ரிடையர்ட் எம்ப்ளாயீகள் சொல்வார்கள். இது போல் இன்னும் எவ்வளவோ. இந்த பார்சல்களை புக் செய்யும் கம்பெனிகள் என்ன செய்வார்கள். ஜீ.எஸ்.டீ யில் மொத்த பில்லுக்கும் வரி கட்டி இருப்பார்களே....அதில் தெரிந்து போகுமே....

Rate this:
17-நவ-201809:11:42 IST Report Abuse

பச்சை தமிழன்இப்ப சொல்லுங்கள் பிஜேபி ஆட்சி யில் உழல் இல்லை என

Rate this:
17-நவ-201809:07:44 IST Report Abuse

Arul Krishkoooo..... chiku buku... chiku buku... chiku buku...

Rate this:
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
17-நவ-201803:30:12 IST Report Abuse

நந்தினி திவ்ய பாரதிந்த ரயிலுகாரவுங்க ஊழல பார்சல் பண்ணிட்டங்கலமா. சிபிஐ இன்வெஸ்டிகடே பண்ணகூடதம்மா. அதே டெலீட் பண்ணிட்டங்கலமா ஹைதெராபாத் கோல்கட்டா காரவுங்க.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X