World Breaking News Headlines & Archives, World Daily News Update, Global News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
உலகச் செய்திகள்  
ராவல்பிண்டியில் தற்கொலை படை தாக்குதல் : கொடூர தாக்குதலில் 34 பேர் உடல் சிதறி பலி

நவம்பர் 03,2009,00:00  IST

Top global news update

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் ஓட்டல் அருகே நேற்று, தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் தாக்குதல் நடத்தியதில், 34 பேர் பலியாயினர். பாகிஸ்தான் ராணுவம், வாசிரிஸ்தான் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதை கண்டித்து தலிபான்கள், பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில், தற்கொலைப் படை தாக்குதலில் 250 பேர் பலியாகியுள்ளனர்.



இதற்கிடையே நேற்று, ராவல்பிண்டியில் வங்கிகள், டிராவல் ஏஜன்சிகள் நிறைந்த கட்டடத்திற்குள் டூவீலரில் ஒருவர் வந்தார். அவரை, பாதுகாப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தி விசாரிப்பதற்குள் அந்த நபர் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இச்சம்பவத்தில் 34 பேர் உடல் சிதறி பலியாயினர்; 25 பேர் படுகாயமடைந்தனர்.


குண்டு வெடித்ததால் அருகே இருந்த ஷாலிமார் ஓட்டலின் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கியுள்ளன. ஓட்டலுக்கு செல்வதற்காக காரில் வந்த சிலரும், இந்த குண்டு வெடிப்பில் பலியாகியுள்ளனர். இதையடுத்து, இந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குண்டு வெடித்த இடத்திற்கு அருகே தேசிய வங்கியில் நேற்று பென்ஷன் வாங்க வந்த முதியவர்கள் சிலரும் இறந்தனர்; சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ராணுவத் தலைமையகத்திற்கு அருகே நடந்த இந்த குண்டு வெடிப்பில், ராணுவ வீரர்களும் பலியாயினர்.


ராவல்பிண்டியில் ராணுவத் தலைமையத்தில் ஒரு மாதத்திற்கு முன் நடந்த பயங்கரத் தாக்குதலில் பலரைப் பிணையமாக பிடித்துச் சென்றனர். ராணுவத்தினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி, அதை முடிவுக்கு கொண்டு வந்தனர். நேற்று நடந்த சம்பவத்தையடுத்து, ராவல்பிண்டியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன.



துப்பு கொடுத்தால் ரூ. 25 கோடி : பாகிஸ்தானில் தேரிக்-இ-தலிபான் என்ற பெயரில் தலிபான் செயல்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வாசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் தலிபான் தலைவர் பைதுல்லா மெக்சூத் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஹக்கிமுல்லா மெக்சூத் புதிய தலைவரானார். இவர் தலைவரானது முதல், பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் அதிகரித்து விட்டது. இதையடுத்து, இவரை பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது கைது செய்தாலோ ஐந்து கோடி ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என, பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.



இவனது கூட்டாளிகளான வலியூர் ரஹ்மான், கோரி ஹூசைன் ஆகியோரை பற்றிய தகவல் கொடுப்போருக்கும் இதே அளவு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் தளபதிகள் முகமது ரியாஸ்கான், அஸ்மத்துல்லா உள்ளிட்டோரை பற்றிய தகவல் கொடுப்போருக்கு தலா இரண்டு கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் அமைப்பின் முக்கிய தலைவர்களின் 19 பேர் படங்களை வெளியிட்டு இவர்களை பற்றிய தகவல் கொடுப்போருக்கு 25 கோடி ரூபாய் பெறுமான வெகுமதி அளிக்கப்படும் என்ற பாகிஸ்தான் அரசின் விளம்பரம், பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. பத்திரிகைகளிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 என் அப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதைதான். பாகிஸ்தானின் பாமரனுக்கு மட்டும் அவர்களை பற்றி தெரிய வாய்ப்பில்லை, ஆனால் பாகிஸ்தான் டாப் லீடெர்களுக்கு கண்டிப்பாக தெரியும்... இது ஒரு பூச்சாண்டி கட்டுரை வேலைதான்... அவர்களே வளர்த்துவிட்டு திரும்பவும் தேடுவர்கள்... இதெல்லாம் அமெரிக்க கத்தில் பூ சுற்றும் வேலை அவ்வளவுதான்.....  
by D chandra,singapore,India    11/3/2009 4:34:35 PM IST
 திவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு விரைவில் அழிப்பது நல்லது. தீவிரவாதிகளின் ஆதிக்கம் எந்த ஒரு நாட்டில் இருந்தாலும் அந்த நாடே அழிந்து போகும்.
இது பாகிஸ்தான் அரசுக்கு தெரிய வேண்டும்
இப்போது பாகிஸ்தான் நல்ல ஒரு திட்டத்தை திட்டியுள்ளது

தீவிரவாதிகளை ஒழித்த பிறகு தான் அந்த நாடு செழிப்பாகும்
உடன்
இந்தியன்



 
by m palani,uae,India    11/3/2009 2:15:27 PM IST
 ayudam illatha ulakam venum

mudiyuama!!!

amaidi vandum 
by b சேகர்,suva,Fiji    11/3/2009 1:09:13 PM IST
 தலிபான் களை பாகிஸ்தான் அழிப்பதற்கு முன்னாலேயே பாகிஸ்தான் முழுவதுமாக அழிந்து விடும்  
by Prabu,sg,Singapore    11/3/2009 12:52:09 PM IST
 வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான். 
by K Ganesan,Nashik,India    11/3/2009 10:12:16 AM IST
 இந்த மாதிரி சம்பவம் நடக்கிறதுக்து பாகிஸ்தான் தான் காரணம் . தமிழில் ஒரு பழமொழி உண்டு ''வினை விதைத்தவன் விதை அறுப்பான்''
 
by ED குமார் என்ற தமிழன் ,TIRUPUR,India    11/3/2009 9:09:26 AM IST
 as pakistan helped to srilanka government to erase LTTE as it knows that LTTE was fighting for libration of Tamils land from the attrவcities of sinhales now it pays for that because the cries sufferings of Tamils falls on pakistan as cures the other countries like china and india also have to pay the cost. 
by ssa henry,Trichy, Tamil Nadu,India    11/3/2009 7:40:23 AM IST
 இந்த மிருகங்களைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பாகிஸ்தான் அரசு நாடுவதை விட, அந்நாட்டு ராணுவ உயரதிகாரிகளையும், பயங்கரவாத அமைப்பான ISI அமைப்பின் உயரதிகாரிகளுக்கு கோடி ரூபாயை தூக்கிக்கொடுத்தால், தானாக இந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைமை மிருகங்களைப் பற்றி அனைத்துத் தகவல்களும் தானாகத் தெரிந்துவிடப்போகிறது. 
by Mr ஏழுமலை,New York, USA,United States    11/3/2009 2:42:27 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் உலகச் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்