வாஷிங்டன்: ஆப்கன் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள கர்சாய்க்கு, அமெரிக்கா அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார். ஆப்கன் அதிபராக ஹமீத் கர்சாய் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரை போன் மூலம் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, அவருக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது ஒபாமா கூறுகையில், "ஆப்கனுக்கு இது மிகவும் முக்கியமான நேரம். ஆப்கன் மக்களுக்கு திறமையான நிர்வாகத்தை அளிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. குறிப்பாக, ஊழல் இல்லாத நிர்வாகம் அவசியம். ஊழலை ஒழித்துக்கட்ட தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்றார்.
வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறுகையில், ""ஆப்கன் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும், சட்ட விதிமுறைகளின்படி கர்சாய் அதிபராக தேர்வு செய்யப் பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது. ஆப்கன் வளர்ச்சிக்காக, அமெரிக்கா அவருடன் இணைந்து செயல்படும்,'' என்றார்.
இதற்கிடையே, நேற்று காபூலில் செய்தியாளர்களிடம் பேசிய கர்சாய், ""ஊழல் நடவடிக்கைகளால் நாட்டின் பெருமை சீர்குலைந்துள்ளது. என்ன விலை கொடுத்தாவது ஊழல் அடியோடு ஒழித்துக் கட்டப்படும். இதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
| வாசகர் கருத்து |
DEAR ALL. HAMID HARZAI IS THE BEST PERSON TO RULE AFGHANISTAN. HE IS POLITE AND HONEST AND ETHICAL PERSON TO RULE THIS TROUBLED NATION. EARLIER MR. NAZIBULLAH RULED THEREAFTER CIVIL WAR AND RIOTS AND WAR HAS DESTABILISED AFGHANISTAN. DURING THE REGIME OF MR.HARZAI PEOPLE ARE SMOOTHSAILING. LET MR.HARZAI RULE THIS NATION SO THAT PEACE PREVAILS THERE. INNOCENT PEOPLE''S BLOODSHED MAY STOP. JEYAPRAKASH.
|
by G JEYAPRAKASH,SIVAKASI,TAMILNADU,India 11/4/2009 11:34:21 PM IST |
nallathai yar vandummanallum seillam
|
by rs ramsarvan,kandhakar,Afghanistan 11/4/2009 11:29:18 PM IST |
இவன் ஒரு கருணாநிதி கருணாநிதி சோனியா கை ஆள் கர்சாய் ஒபாமா கை ஆள்
|
by s பிரேம்குமார்,துபாய் .,dubai,United Arab Emirates 11/4/2009 6:53:06 PM IST |
PLEASE CLOSE DOWN AFGAN''S NATIONAL CULTIVATION OF OPIUM
|
by D.M Maran,Dubai,United Arab Emirates 11/4/2009 3:35:43 PM IST |
அதாவது, அமெரிக்காவின் பேச்சை கேட்கும் ஒரு பொம்மையை மீண்டும் வச்சாச்சு
|
by M HAJANIZAMUDEEN,dubai,United Arab Emirates 11/4/2009 1:40:46 PM IST |
கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
|
by S. அப்துல்லா கான்,UAE,United Arab Emirates 11/4/2009 8:47:21 AM IST |