World Breaking News Headlines & Archives, World Daily News Update, Global News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
உலகச் செய்திகள்  
வெள்ளை மாளிகை வாசம்: மனம் திறந்த கிளின்டன்

நவம்பர் 04,2009,00:00  IST

Top global news update

இஸ்தான்புல்: ""சாகும் வரை வெள்ளை மாளிகையில் தங்க விரும்பினேன். வெள்ளை மாளிகையை விட்டு என் சவப்பெட்டி தான் வெளியேற வேண்டும் என, நினைத்தேன். ஆனால், என் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டதால் வெளியேறி விட்டேன்,'' என, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.



கடந்த 1992ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை, அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர் பில் கிளின்டன். அந்நாட்டு சட்டப்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்கலாம். அதனால், 2000ம் ஆண்டில் அவரின் பதவிக்காலம் முடிந்து விட்டது. கிளின்டனின் மனைவி ஹிலாரி தற்போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சராக உள்ளார்.



இந்நிலையில், துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில், நேற்று முன்தினம் நடந்த மாநாடு ஒன்றில் பேசிய அமெரிக்க பில் கிளின்டன் கூறியதாவது: எதற்கும் ஒரு வரையறை வைத்திருப்பது நல்லது; இல்லையென்றால் நான் சாகும் வரை வெள்ளை மாளிகையில் தங்கியிருப்பேன் அல்லது தேர்தலில் தோல்வியடையும் வரை தங்கியிருப்பேன். சுகாதாரம், வறுமை மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க உதவி வரும், அறக்கட்டளை ஒன்றின் தலைவராக தற்போது இருக்கிறேன். அந்தப் பதவி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியலை என் மனைவி மற்றும் ஒபாமாவிடம் ஒப்படைத்து விட்டேன். முப்படைகளின் தலைவர் பதவியை நான் மிகவும் நேசித்தேன். அதனால், சாகும் வரை வெள்ளை மாளிகையில் தொடர விரும்பினேன். என் சவப்பெட்டி தான் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கூட, நினைத்தேன். ஆனால், என் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டதால், அங்கிருந்து வெளியேற நேரிட்டது. இவ்வாறு கிளின்டன் கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 i am very much Appreciating kalairaja''s suggestion. Pls give hands to change our rule. maximum 10 years only we hv to give to politicians.  
by k anandh,Tiruppur,India    11/4/2009 5:15:15 PM IST
 நாம வெளிநாட்டிடம் இருந்து நெறைய கற்று கொள்ள வேண்டியுள்ளது, இன்னும் நெறைய காலம் இருக்கு, உலகம் இப்போ ரொம்பவே சுருங்கிடுச்சி, நமது யூத் எல்லாம் வளர வளர நமது கெழட்டு அரசியல்வாதிகள் எல்லாம் ஓடுவார்கள்.  
by p. Balakrishnan,coimbatore,India    11/4/2009 3:40:21 PM IST
 வாழ்க america 
by S அக்கு LALU,maldives,Maldives    11/4/2009 3:17:59 PM IST
 அமெரிக்க அரசியல் போல இந்திய அரசியலும் கொண்டு வரனும். இளம் வயது மக்களுக்கு முதியோர்கள் வாய்ப்பு கொடுங்கள். கடைசி காலம் வரை இருக்காதீர்கள். தயவு செய்து இதைப்பற்றி யோசியுங்கள்.  
by sharbu,dubai,India    11/4/2009 11:44:46 AM IST
 If the same rule is in India it will make lot of changes. We can lot of young and energetic leaders. Mr. Raman dont think that if cong in power tamil nadu will be developed. None of the current Cong leaders can match with Kamaraj standard. In Maharstra Cong struggling to form a govt. You want the same situation in tamilnadu as well.  
by Mr Priyan,kuwait,India    11/4/2009 11:17:49 AM IST
 கலைஞர் போல அருமையான எடுத்துகாட்டு இருப்பதை மறந்து விட்டார் போல. காந்தி சுதந்திரதிக்கு பின் காங்கிரஸ் கட்சியயை கலைத்து விட சொன்னார். அதனால் இப்போது அந்த துயரத்தை மக்கள் அனுபவிக்கிறார்கள்.  
by d சிவகுமார்,chennai,India    11/4/2009 11:00:14 AM IST
 CONSTITUENT ASSEMBLY WAS FORMED UNDER THE CHAIRMANSHIP OF Dr.RAJENDRA PRASAD AND Dr.AMBEDKAR AS VICE PRESIDENT AND R. VENKATRAMAN, O.A. HUME, ALLADI KRISHNASAMI IYER, SILVER TONGUE SRINIVASA SASTRI AS MEMBERS. THEY CHOOSE THE ARTICLES FROM THE UNITARY BRITISH AND FEDERAL AMERICAN CONSTITUTION WHICH WERE FAVOURABLE TO THE CORRUPT INDIAN POLITICIANS. HAD THEY FOLLOWED THE FEDERAL CONSTITUTION OF THE U S THEN THERE WOULD NOT HAVE BEEN HEIRARCHY AND CONTINUOUS PERMANENT MINISTERS AND C Ms IN INDIA. 
by M Annamalai,Valayathur,Arcot Tk.,,India    11/4/2009 10:17:45 AM IST
 கிளிண்டன் இஸ் கிரேட்.  
by R ராமன்,Chennai,India    11/4/2009 10:16:21 AM IST
 காமராஜரை போல் நல்லவர்கள் ஆட்சி செய்தால் இறக்கும் வரை மட்டுமல்ல அவருடைய வாரிசுகளும் (இருந்திருந்தால்) ஆட்சி செய்யலாம். 67 இல் ஆரம்பித்த சனி தமிழகத்தை இன்னும் விடமாடேங்குது? காமராஜருக்கு தமிழன் செய்த துரோகமே இப்ப அனுபவிப்பது . வெறும் 150 ரூ மட்டுமே கொண்டுவந்த மு.க. வின் குடும்பம் இந்தியாவில் பணக்கராவரிசையில் 28 வது இடம். காமராஜர் இறக்கும் போது ரூ. 100 தான் இருந்ததாக கேள்வி . நல்லதை ஏற்றுக்கொள்ள இந்திய மக்கள் தயாராக இல்லை என்பதே மத்தியில் காங். தமிழகத்தில் தி.மு.க. கொண்டுவந்தது.  
by vp visakha,doha,Qatar    11/4/2009 10:01:01 AM IST
 அமெரிக்காவிலும் வாரிசு அரசியல். கிளிண்டனுக்கு பின் அவரது மனைவி.


மோனிகாவை பற்றி ஒன்றும் சொல்லவில்லையா ????  
by D மணிகண்டன் ,Tamilnadu ,India    11/4/2009 9:21:32 AM IST
 ' கலைஞர்'' போல
அவருக்கும் ஆசைதான். ஆனால் என்ன செய்வது சட்டம் அப்படி. அது போல என்று இந்தியாவில் வருமோ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 
by s sara,kl.malaysia,India    11/4/2009 8:30:21 AM IST
 நல்ல சட்டம் அமெரிக்காவில். இங்குதான் சாகும் வரை பதவி ஆசை உண்டு. யாரும் விட்டிட்டு போக மனசே வரமாட்டுது.
பத்து வருடம் அரசியல் தான் நல்லது..நம் நாட்டிலும் இது போல கொண்டு வரணும் .எப்போ வருமோ ??????????? 
by kalai raja,trichy,India    11/4/2009 3:47:07 AM IST
 எங்கே போனாலும் அரசியல்வாதிகள் ஒன்று தான் போலிருக்கிறது. நல்ல வேலை. நமது பீச் சமாதி கலாச்சாரம் அங்கே இல்லை.  
by B கார்த்திக்,Pointe Noire,Congo    11/4/2009 3:08:27 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் உலகச் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்