World Breaking News Headlines & Archives, World Daily News Update, Global News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
உலகச் செய்திகள்  
அதிபர் சர்தாரியை வெளியேற்ற பாக்., ராணுவ ஜெனரல்கள் சதி

நவம்பர் 04,2009,00:00  IST

Top global news update

வாஷிங்டன்: "பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை, ஜனநாயக மற்றும் அரசியல் ரீதியாக பதவியில் இருந்து வெளியேற்ற,  அந்நாட்டு ராணுவ ஜெனரல்கள் சதி செய்து வருகின்றனர்' என, அமெரிக்க புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.



இதுகுறித்து, அமெரிக்க புலனாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ட்ராட்போர் என்பவர் கூறியதாவது: பாகிஸ்தானில், தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக அங்கு பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல், அந்நாட்டு அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. அதனால், ராணுவ புரட்சி இல்லாமல், அதிபர் சர்தாரிக்கு எதிராக ராணுவத்தினரின் ஆதரவை திரட்டி, அவரே தன் பதவியை விட்டு விலகும் வகையில் செய்ய ராணுவ ஜெனரல்கள் முற்பட்டுள்ளனர். இதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளனர். அவர்களின் முக்கிய நோக்கம் சர்தாரியை பதவியை விட்டு இறக்குவது; தற்போதைய அரசை கலைப்பது அல்ல. கடந்த 1985ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை, நான்கு அரசுகளை பாக்., ராணுவம் கலைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஸ்ட்ராட்போர் கூறினார். 

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 ஏனென்றால் அவர்கள் விதி அப்படி !! 
by SIVA,INDIA,India    11/4/2009 4:09:54 PM IST
 இது வெகு நாட்களுக்கு முன்பே எதிர்பார்த்துதான். பாக். ராணுவத்திற்கு மூளை அரிப்பு எடுத்துக்கொண்டே இருக்கும், சரியான சந்தர்ப்பத்தில் கவிழ்த்து விட்டு தன் நாட்டு மக்கள் வாழ்வில் மண்ணை போட்டு விடுவார்கள்.
பாக். அரசியல்வாதிகள் மற்றும் ராணுவத்தால் அப்பாவி பொதுமக்கள் அல்லல் பட்டு வருகிறார்கள் ... 
by M பிரகதீஸ்வரன்,Ahmedabad,India    11/4/2009 3:21:46 PM IST
 இது வரலாறு. பாக் ராணுவம் இதை செய்யவில்லை எனில் அப்புறம் அவர்கள் திருந்தி விட்டார்கள். ஆகையால் இது பாக்கின் தலைவிதி  
by SKS Moorthy,Dubai UAE,India    11/4/2009 1:22:12 PM IST
 வினை விதைத்தவன் வினை அறுப்பான்
 
by d சிவகுமார்,chennai,India    11/4/2009 11:04:55 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் உலகச் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்