World Breaking News Headlines & Archives, World Daily News Update, Global News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
உலகச் செய்திகள்  
கோல்மேனிடம் விசாரிப்பதற்காக அமெரிக்கா சென்றது இந்திய குழு

நவம்பர் 04,2009,00:00  IST

வாஷிங்டன்: இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய அமெரிக்கர், டேவிட் கோல்மேன் ஹெட்லியிடம் விசாரணை நடத்துவதற்காக "ரா' மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர்.



பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் - இ- தொய்பா சார்பில், இந்தியாவில் நாசவேலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக, டேவிட் கோல்மேன் என்ற அமெரிக்கரையும், அவரின் கனடா நாட்டு நண்பர்  தாவூர் ஹூசைன் ராணாவையும் அமெரிக்க எப்.பி.ஐ.,போலீசார் சிகாகோ நகரில் கைது செய்துள்ளனர். சிகாகோவில் உள்ள  பாகிஸ்தான் தூதரக அதிகாரியும் ராணா மற்றும் கோல்மேனின் பள்ளி நண்பர். இவரிடமும் எப்.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.



காங்கிரஸ் எம்.பி., ராகுலை கொல்ல ராணாவும், கோல்மேனும் சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரிப்பதற்காக இந்திய புலனாய்வு மற்றும் "ரா' பிரிவு அதிகாரிகள் குழு வாஷிங்டன் சென்றுள்ளனர். இந்த குழுவினர் ராணாவிடமும், கோல்மேனிடமும் விரிவான விசாரணை நடத்த உள்ளனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் மத சாயம் பூசுவதை ப்ளீஸ் விட்டு விடுங்கள்


 
by a hillman,jersey city,United States    11/4/2009 5:48:57 PM IST
 அப்படியா போயிட்டுவந்துட்டாலும் வந்தவுடனே அத்தனை போரையும் கோர்ட்டுல நிறுத்தி துக்குதண்டனை வாங்கிகொடுத்து உடனே துக்குதண்டனை நிறைவேத்தற மாதிரி சொல்றிங்க எல்லாமே கரக்ட்ட நடக்கும் ஆனா துக்குல மட்டும் போடமாட்டாங்க என்ன எத்தநை பேரு செத்தாலும் பரவாயில்லை சிறுபான்மையினர் வோட்டை மட்டும் இழக்க குடாது என்பது காங்கரசின் வேதமந்திரம்  
by m ஸ்ரீனிவாசன்,erode,India    11/4/2009 11:07:00 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் உலகச் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்