World Breaking News Headlines & Archives, World Daily News Update, Global News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
உலகச் செய்திகள்  
ஆங்சான் சூயிவுடன் அமெரிக்க அமைச்சர் சந்திப்பு

நவம்பர் 05,2009,00:00  IST

Top global news update

யாங்கூன் : மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அமைச்சர் குர்ட் கேம்பல், அங்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆங்சான் சூயியை சந்தித்துப் பேசினார். அமெரிக்காவின் கிழக்காசியா மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் குர்ட் கேம்பல் மற்றும் அவரது பிரதிநிதியான ஸ்காட் மார்சல் ஆகியோர் நேற்று முன்தினம் மியான்மர் வந்தனர். அங்கு, பல ஆண்டுகளாக வீட்டுக் காவலில் இருக்கும் மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்சான் சூயியை, அமைச்சர் கேம்பல் நேற்று சந்தித்துப் பேசினார். இவர்கள் இருவரும், யாங்கூனில் உள்ள சொகுசு ஓட்டலில் மீடியாக்கள் முன் தோன்றினர்.



ஆங்சான் சூயி, மெரூன் வண்ண பாரம்பரிய உடை அணிந்திருந்தார். இவரது வீட்டுக் காவல் கடந்த ஆகஸ்டில் மேலும் 18 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. கேம்பலுடன் பேச்சு நடத்துவதற்காகத் தான் அவர் நேற்று ஓட்டலுக்கு வந்தார். முன்னதாக, மியான்மரின் நிர்வாகத் தலைநகரான நேபிடாவில், பிரதமர் தேய்ன் சேனை அமைச்சர் கேம்பலும், அவரின் பிரதிநிதி மார்சலும் சந்தித்துப் பேசினர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் உலகச் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்