World Breaking News Headlines & Archives, World Daily News Update, Global News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
உலகச் செய்திகள்  
ஈரான் நாட்டில் நிலநடுக்கம்: 700 பேர் காயம்

நவம்பர் 05,2009,00:00  IST

டெஹரான் : ஈரானின் தென்பகுதியில் உள்ள முக்கியமான நகரில், நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 700 பேர் காயமடைந்தனர். ஈரானின் தென்பகுதியில் உள்ள நகரம் பந்தர் அப்பாஸ். இந்நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.56 மணிக்கு, பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.9 என பதிவாகிய இந்த நிலநடுக்கத்தின் போது, மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்து தெருக்களில் குவிந்தனர். மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன.


நிலநடுக்கத்தின் போது நடந்த பல்வேறு சம்பவங்களில், 700 பேர் காயமடைந்தனர். இவர்களில் படுகாயமடைந்த 100 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் உலகச் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்