டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஈராக் செல்ல தயார் நிலையில் இருந்த வீரர்கள் மீது, ராணுவ மருத்துவ அதிகாரி திடீரென கண்மூடித்தனமாக வெறியுடன் துப்பாக்கியால் சுட்டதில் 12 பேர் பலியாயினர்; 31 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது போர்ட் ஹுட். அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய ராணுவ முகாமான இந்த மையத்தில் 40 ஆயிரம் வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பர். மொத்தம் 878 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்த பிரம்மாண்ட முகாம். ஈராக் பணிக்கு அடுத்த கட்டமாக அனுப்பப்படுவதற்காக இந்த மையத்தில் நேற்று முன்தினம் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று கொண்டிருந்தது. இந்த மையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ மருத்துவ அதிகாரி மேஜர் நிடால் மாலிக் ஹசன்(39), திடீரென தான் வைத்திருந்து இரண்டு துப்பாக்கிகள் மூலம் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இந்த சம்பவத்தில் 12 வீரர்கள் பலியாயினர்; 31 பேர் படுகாயமடைந்தனர். இந்த அசம்பாவிதத்தை உணர்ந்த போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து மாலிக் ஹசனை சுட்டனர். நான்கு முறை சுட்டு, மாலிக்கை வீழ்த்தினர். ஆனால், மாலிக் இன்னும் சாகவில்லை. தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மாலிக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
மனோதத்துவ டாக்டர்: அமெரிக்க ராணுவ மையத்தில் நடந்த இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வீரர்களுக்கு வெள்ளை மாளிகையிலும், பார்லிமென்டிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய மாலிக் ஹசன், ஜோர்டான் நாட்டு வம்சாவளியை சேர்ந்தவர். அமெரிக்க ராணுவத்தில் மனோதத்துவ டாக்டராக பணிபுரிந்து வந்தார். ஆனால், இவர் ஈராக்குக்கு சென்று பணிபுரிய விருப்பம் இல்லாமல் இருந்தார். இதற்காக, தனது வக்கீல் மூலம் தனது கருத்தை தெரியப்படுத்தி இருந்தார். இவருக்கு மனைவி, குழந்தைகள் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் முதல் போர்ட் ஹுட் முகாமில் பணியாற்றி வந்தார். மாலிக் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்டுள்ளார்களா, என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர்.
மாலிக்கின் ஒன்று விட்ட சகோதரி நதீர் குறிப்பிடுகையில், "ஈராக்கில் பணிபுரிந்து விட்டு திரும்பும் வீரர்களின் கதையைக் கேட்டு மாலிக் சோர்வுற்றிருந்தார். நியூயார்க்கில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட போது மாலிக் பல்வேறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதனால், அவர் அப்போது மனரீதியாக பாதிக்கப்பட்டார்' என்றார். அமெரிக்கா, ஈராக் மீது போர் தொடுத்த பிறகு இந்த மையத்திலிருந்து ஏராளமான வீரர்கள் பாக்தாத் அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், மன உளைச்சல் காரணமாக 75 வீரர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒபாமா கண்டனம்: "அமெரிக்க மண்ணில், அதுவும் ராணுவ மையத்தில் இதுபோன்ற பயங்கரம் நடந்திருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். போர்க்களத்தில் வீரர்கள் இறக்கும் போதே மிகவும் சிரமத்துடன் அதை ஏற்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். ராணுவ முகாமில் இப்படி இறப்பு ஏற்படுவதை கேட்கும் போது அதிக துயரம் ஏற்படுகிறது. இந்த சம்பவத்தின் ஒவ்வொரு கேள்விக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்' என, அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தை யொட்டி, டெக்சாஸ் மாகாணத்தில் அமெரிக்க தேசியக் கொடிகள் நேற்று அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
| வாசகர் கருத்து |
i agree your point
|
by R.R ராஜா ,london,United Kingdom 11/7/2009 9:55:23 PM IST |
வினை விதைத்தவன் வினை அறுப்பான் ஸ்.சரவணன் Maldives .
|
by s. saravanan,male.,Maldives 11/7/2009 9:41:02 PM IST |
everyone should think about this incident.
|
by a abdul kader ,dubai ,United Arab Emirates 11/7/2009 9:24:31 PM IST |
I 100% agreed with Dr. Sekar''s Statement infuture everyone should avoid this....
|
by H Althaf,Doha,Qatar 11/7/2009 6:51:41 PM IST |
காரணம் எதுவாக இருபினும், இன்னொரு மனிதனை கொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இறந்த சகோதர்களுக்கு வருத்தம் படுகிறேன். என் இரங்கலை அவர்களின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கிறேன். இனிமேல் இது போல நடக்கா வண்ணம் அந்த நாடு எச்சரிக்கைவுடன் இருக்கணும்.மனித உயிர்கள் விலை மதிப்பில்லாதது, எங்கு நடந்தாலும் யாராலும் நடத்தப்பட்டாலும்....தவறு தவறு தான் .மன்னிக்க கூடாது
|
by kalai raja,trichy,India 11/7/2009 11:37:47 AM IST |
அமெரிக்க ராணுவ முகாமில் அதிகாரியின் கொடூரம் : திடீரென வெறித்தனமாக சுட்டதில் 12 வீரர்கள் பலி: இது ஏதோ அமெரிக்காவில் நடக்கிறது என்று நாம் சும்மா இருந்து விடக்கூடாது. காரணம் இது ஒரு மன ரீதியான போராட்டம் அணைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கடைப்பிக்கப்பட்டு வரும் ஒரு தவறான வழிமுறைகள். உதாரணத்திற்கு ஒன்று. அலுவலகிதில் பணிபுரிபவர்களை மேல் அதிகாரிகள் ஜாதியின் பெயர் மற்றும் மதத்தின் பெயரை சொல்லி அழைப்பது, மற்றும் முன்னோர்களைப்பற்றி இழிவாக அழைப்பது, ஏதாவது தவறு செய்து விட்டால் பலர் முன்னிலையில் அவர்களின் ஜாதி மற்றும் மதத்தைத் தாக்கிப் பேசுவது நம் நாட்டில் மிகவும் அதிகமாகவே உள்ளது. மனிதனை பெயர் கொண்டு அழைத்த காலம் போக அவமானப்பதுத்தும் நோக்கில் குலத்தை இழிவு படுத்தி அழைத்தல் மிகவும் அதிகரித்து விட்டதே இதற்குக் காரணம். குலம், ஜாதி, மதம் இவைகளை மறந்து காலத்திற்கு ஏற்ப மாறியவர்களையும் இவர்கள் அவமானப்படுதும்போதுதான் இது போன்ற செயல்கள் நடக்கின்றன. இது ஒரு கலாச்சாரமாகவே போய் விட்டது. பத்திரிக்கை நடத்தும் நாடு நிலை நாடுகளும் இதற்க்கு விதி விலக்கு இல்லை. குறிப்பிட்ட செய்தியை அதிகாரப்புர்வமாக வெளியிட்டாலும் கூட நிறுவனரின் ஜாதி பெயரை சொல்லி அடித்து அந்த அலுவலகத்தை அடித்து நொறுக்கும் காலமாகிப்போகி விட்டது. அந்தக்கால கவல துறையினறைப்போல் நம்பர் சொல்லி அழைத்தால் சரியாகி விடுமோ? Lion Dr S Sekar India
|
by Ln Dr S Sekar,Chennai,India 11/7/2009 9:50:24 AM IST |