வாஷிங்டன் : அமெரிக்காவிற்கு, பிரதமர் மன்மோகன் சிங், அதிபர் ஒபாமா ஆட்சி துவங்கிய பின், முதல் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது, எதிர்கால பொது திட்டங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு, பருவ நிலை மாற்றங்கள் தொடர்பான சவால்களை சமாளிக்க ஒருங்கிணைந்து செயலாற்றுவது ஆகிய விஷயங்களில் இருதரப்பினரும் பேசுவர் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியதாவது: பிரதமர் மன்மோகன் சிங், அதிபர் ஒபாமாவின் வரவேற்பை ஏற்று, வரும் 24ம் தேதி, இந்த ஆட்சியில் முதல் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இது இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுப்படுவதை குறிக்கிறது. இந்தியா - அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான எதிர்கால உறவுகளுக்கு, ஒபாமாவின் நிர்வாகம் அளிக்கும் முக்கியத்துவத்தையும் இது காட்டுகிறது. அமெரிக்கா, 21ம் நூற்றாண்டில், தன் முக்கிய கூட்டாளியாக இந்தியாவை கருதுகிறது என்பதால், இச்சந்திப்பில் முக்கிய விஷயங்கள் பேசப்படும். இவ்வாறு ராபர்ட் பிளேக் கூறினார்.
| வாசகர் கருத்து |
மிக்க நன்று.
|
by r sridhaar,srirangam,India 11/9/2009 5:36:29 PM IST |