இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படு கொலை செய்யப்பட்டது குறித்து, முன்னாள் அதிபர் முஷாரப்பிடம் ஐ.நா.,கமிஷன் விசாரணை நடத்த உள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனசிர் புட்டோ கடந்த 2007ம் ஆண்டு ராவல்பிண்டியில், தேர்தலுக்கு முன்னதாக நடந்த பேரணியில் கலந்து கொண்ட போது, தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் புலனாய்வு அமைப்புகள் விசாரித்தன. இருப்பினும் பெனசிர், கணவர் சர்தாரி "ஐ.நா.,கமிஷன் விசாரிக்க வேண்டும்' என, கோரினார். தற்போது சர்தாரி, பாகிஸ்தான் அதிபராக உள்ளார். இதையடுத்து, ஐ.நா., கமிஷன், பெனசிர் புட்டோவின் கொலையை விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, முன்னாள் அதிபர் முஷாரப்பிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு ஐ.நா.,கமிஷன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ அதிகாரிகளிடமும், ஐ.எஸ்.ஐ.,அதிகாரிகளிடமும் இந்த கமிஷன் விசாரணை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. தற்போது முஷாரப், அமெரிக்காவில் தங்கியுள்ளார். இதற்கிடையே தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர், தலிபான்களின் கோட்டையாக விளங்கும் மக்கீன் நகரை நேற்று சுற்றி வளைத்தனர்.
| வாசகர் கருத்து |
முன்னால் அதிபர் முஸ்ஹ்ரப்
|
by S Kumar,chennai,India 11/7/2009 1:18:06 PM IST |