World Breaking News Headlines & Archives, World Daily News Update, Global News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
உலகச் செய்திகள்  
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் : விசாரிக்க உயர்மட்ட குழு

நவம்பர் 07,2009,00:00  IST

கொழும்பு : இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையை ஆய்வு செய்ய, ஐந்து உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவை இலங்கை அதிபர் ராஜபக்ஷே நியமித்துள்ளார்.



இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த கடைசிக் கட்ட போரின் போது, பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததாக, அமெரிக்க காங்கிரஸ் சபையில், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அறிக்கை தாக்கல் செய்தது. இதுதொடர்பாக, இலங்கையின் அப்போதைய ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடமும் விசாரணை நடத்த அமெரிக்கா தீர்மானித்தது. ஆனால், இந்த விசாரணையில் சிக்காமல், பொன்சேகா நாடு திரும்பி விட்டார்.



இந்நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பான, அமெரிக்காவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்காக, ஐந்து உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவை, இலங்கை அதிபர் ராஜபக்ஷே நியமித்துள்ளார். இந்த கமிட்டி சட்ட நிபுணர் விஜிசிங்கே தலைமையில் செயல்படும். ஜனாதிபதியின் ஆலோசகர் நிகில் ஜெயமன்னா, இலங்கையின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் டிசில்வா, சட்ட நிபுணர் மனோ ராமநாதன், கல்வியாளர் ஜெசிமா இஸ்மாயில் ஆகியோர் கமிட்டியில் இடம் பெற்றுள்ள மற்ற உறுப்பினர்கள். இந்த கமிட்டி டிசம்பர் 31ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 Is it the stunt by both USA and Sri Lankan Governments to threaten China not to demand anything from Sri Lanka.

Is that the US Government immigration not aware of the Goverment orders issued to interrogate Mr.Sarat Ponseka, ex-commander. If they aware, why they let him walk freely flee back to his country?

Is it a drama staged by USA as if, they are the only country worried about the war crimes un-acceptable that even if it is taking place in the third world.

If USA is keen to enquire and ensure the freedom and the rights given to all the people equally in Sri Lanka and raise your voice openly, ensure strict laws against Sri Lanka for force them to follow.

Only way people will believe USA that if you put restrictions on Sri Lankan exports like how the European council implemented export ban for Sri Lankan textiles.

Also, implement ban on issuing visa for the any Sri Lankan defence personnel until they undergo the human rights violation enquiry to be conducted by non-asian country like Norway/Japan/Britain/any other European nation. 
by R Murali,Singapore,India    11/7/2009 4:28:00 PM IST
 நல்லா இருக்கே... தப்பு பண்ணினது அவன்தான்... விசாரணை பண்றதும் அவன்தானா... மக்களை ஏமாத்தலாம் ... மகேசனை ஏமாத்த முடியாது.... அவர்களுக்கு தண்டனை நிச்சயம் .... 
by m மது,Singapore,Singapore    11/7/2009 12:01:32 PM IST
 இப்படி ராஜா மாதிரி பேசிகிட்டே இருங்க.  
by M Jeyanth,chennai ,India    11/7/2009 9:18:09 AM IST
 பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காமல், சர்வதேசத்தை அனுமதிக்காமல் விசாரணை கமிஷனா? இலங்கையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல தானே? 
by சிவசங்கர்,Chennai,India    11/7/2009 7:46:50 AM IST
 வரவேற்க தக்கது. இதுபோல இஸ்ரேலிடமும் ,அமெரிக்க மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கேள்வி கேக்கணும்.அமெரிக்காவும் இராக்கில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சொல்லணும்..சொல்லுமா ? 
by kalai raja,trichy,India    11/7/2009 2:16:36 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் உலகச் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்