நியூயார்க் : பங்குச் சந்தையில் "இன்சைடர் டிரேடிங்' மூலம் பலகோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், அமெரிக்க புலனாய்வுத் துறையினர், மேலும் 14 பேரை கைது செய்துள்ளனர். இதன் மூலம், இவ்வழக்கில் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கை மையமாகக் கொண்ட தொழிலதிபர் ராஜ் ராஜரத்தினம், இரண்டு இந்திய அமெரிக்கர்களான அனில் குமார் மற்றும் ராஜிவ் கோயல் உட்பட ஆறு பேர், தவறான வழியில் முதலீடு செய்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்கும், "இன்சைடர் டிரேடிங்' மூலம், 100 கோடி ரூபாய் நிதி மோசடி செய்ததாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக, தற்போது மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, அமெரிக்க அட்டர்னியான பிரீத் பராரா மற்றும் அமெரிக்க புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஜோசப் டீமாரஸ்ட் ஆகியோர் கூறியதாவது: இன்சைடர் டிரேடிங் மூலம், 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக, கடந்த மாதம் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது, முதலீட்டு சேவை நிறுவனத்தைச் சேர்ந்த, தீப் ஷா, நியூயார்க்கில் உள்ள ஸ்காட்டன்பெல்ட் குழுமத்தின் முன்னாள் உரிமையாளர் கவுதம் சங்கர் உட்பட, 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் எட்டு பேர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். ஒருவரை கைது செய்து பின், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஐந்து பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
| வாசகர் கருத்து |
அறியப்பட்ட history
|
by m ashok,bodi,India 11/7/2009 11:35:54 AM IST |
இது போன்ற சட்டங்கள் இந்தியாவில் இருக்கா?
|
by இளங்கோ,Singapore,Singapore 11/7/2009 9:56:37 AM IST |