World Breaking News Headlines & Archives, World Daily News Update, Global News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
உலகச் செய்திகள்  
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு இரண்டு பேர் பரிதாப பலி: பலர் காயம்

நவம்பர் 08,2009,00:00  IST

வாஷிங்டன்:அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், ஓர்லாண்டோ நகரில் உள்ள உயரமான கட்டடத்தில், துப்பாக்கி யுடன் வந்த ஒருவர் நேற்று கண்மூடித்தனமாக சுட்டதில், இரண்டு பேர் பலியாயினர்.பலர் காயம் அடைந்தனர். அமெ ரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், போர்ட் ஹூட் ராணுவ முகாமில் நடந்த தாக்குதலில், 13 ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட அடுத்த சில மணி நேரங்களில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.



இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:ஓர்லாண்டோ நகரில் உள்ள கேட்வே சென்டர் கட்டடத்தில், தாக்குதல் நடத்திய நபரின் பெயர் ஜாசன் ரோட்ரிகஸ் (வயது 40). துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த கட்டடத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில், அவர் முன்னர் பணியாற்றியுள்ளார். துப்பாக்கியால் சுட்டபின் அந்த நபர், நிசான் காரில் தப்பிச் சென்றுள்ளார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளார். சம்பவ இடத்தில் போலீசார் முற்றுகையிட்டு, விசார ணை நடத்தி வருகின்றனர். ஹெலிகாப்டரிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.இவ்வாறு போலீசார் கூறினார்.



இதற்கிடையில்,ராணுவ முகாமில் நேற்றுமுன்தினம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி, ராணுவ வீரர்கள் 13 பேர் பலியாகக் காரணமாக இருந்த மனோதத்துவ டாக்டர் மாலிக் ஹசன், தற்போது கோமா நிலையில் உள்ளார். சாதாரண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்,பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும், வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.



அதேநேரத்தில், அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த சிலரும் உயிருக்கு போராடி வருகின்றனர். ஹசன் உயிர் பிழைத்தால் மட்டுமே, துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான கார ணத்தை அறிய முடியும் என, போலீசார் கூறியுள்ளனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 போன உயிர்கள் திரும்பாது ; எல்லாவற்றிற்கும் முக்கிய கரணம் மன உளைச்சல் மற்றும் வேலை பளு ; 
by a nicky,chennai,India    11/8/2009 10:02:16 AM IST
 அமெரிக்கா வில் இதுபோல இன்னும் நிறைய நடக்கும். இதுதான் ஆரம்பம். ஈராக் மக்களின் சாபம் அவர்களை சும்மா விடுமா. அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கு இதுபோல் இன்னும் நடக்க வேண்டும்..... 
by H ஷெரிப்,Dubai,India    11/8/2009 9:59:57 AM IST
 மண்ணாங்கட்டி... ஈராக்குக்கு ராணுவத்த அனுப்புறத நிறுத்துனா சரியாயிடும்  
by m மனசாட்சி,sg,India    11/8/2009 7:03:23 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் உலகச் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்