லாஸ் ஏஞ்சல்ஸ்:""மைக்கேல் ஜாக்சன் எனக்கு பல ஆண்டுகளாக உதவி செய்து வந்தார். அவர் மரணம் அடைந்து விட்டதால், அவரின் எஸ்டேட் வருவாயில் இருந்து எனக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்,'' என, ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன்.
கடந்த ஜூன் 25ம் தேதி திடீரென காலமானார். இவரது எஸ்டேட் வருவாய், இந்தாண்டு இறுதியில், 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவரது தந்தை ஜோ ஜாக்சன்(81); நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். "இவர் தன் மகனின் எஸ்டேட் வருவாயில் இருந்து உதவித் தொகை வழங்க வேண்டும்' என, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு முன் வரை, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள எனக்கு உதவி செய்து வந்தார். மைக்கேல் ஜாக்சன், தன் தாய் கேத்தரீன் ஜாக்சனுக்கு பண உதவி செய்வார். அதை அவர் எனக்கு கொடுப் பார்.எனக்கு மாதம், 10 லட்சம் ரூபாய் செலவாகிறது. ஆனால், அமெரிக்க சமூக பாதுகாப்பு மூலம், மாதம் 85 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.
எஸ்டேட் வருவாயில் இருந்து மைக்கேல் ஜாக்சனின் தாய் கேத்தரீனுக்கு உதவித் தொகை வழங்க, அதன் நிர்வாகிகள் கோர்ட் அனுமதி கேட்டனர். ஆனால், அதிலிருந்து என் பெயரை எவ்வித தெளிவான காரணமும் இன்றி நீக்கி விட்டனர்.மைக்கேல் ஜாக்சன், தன் எஸ்டேட் மூலம், தன் மூன்று குழந்தைகள், தாய் மற்றும் அறக்கட்டளை பயனடையும் வகையில், உயில் எழுதி வைத்துள்ளார்.
2000ம் ஆண்டுகளின் துவக்கத்தில், மைக்கேல் ஜாக்சன், அவரது தாய் கேத்தரீன் ஜாக்சனுக்கு மாதம் 25 லட்சம் ரூபாய் வழங்கி வந்தார். பின்னர், மாதம் 33 லட்சம் ரூபாய் வழங்கி வந்தார்.கேத்தரீன் ஜாக்சன் அந்த பணத்தின் ஒரு பகுதியை எனக்கு கொடுத்தது, மைக்கேல் ஜாக்சனுக்கு தெரியும். தற்போது அந்த பணம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, எனக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
| வாசகர் கருத்து |