டெகரான்:ஈரான் நாட்டின் தலைநகரான டெகரானில் எதிர்காலத்தில் பேரழிவுகளை உண்டாக்கும் பூகம்பம் ஏற் பட வாய்ப்பு உள்ளதாக, நிலநடுக்க ஆய்வியல் நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். இதைத் தொடர்ந்து, அத் தகைய பேரழிவு வாய்ந்த நிலநடுக் கத்தில் இருந்து தன் மக்களை காப்பாற்ற, தலைநகரை வேறு நகருக்கு மாற்றும் திட்டத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெகரான் நகரில், எதிர்காலத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால், பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் முயற்சியாக, இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.தலைநகரை வேறு இடத்தில் நிறுவும் திட்டத்தை அந்நாட்டின் தலைவர் அயதுல்லா அலி காமேனி முன் மொழிந்து, அதற்கான கவுன்சிலிடம் ஒப்புதல் பெற்றார். ஆனால், தற்போது இருக்கும் நகரிலேயே ஒன்று தலைநகராக தேர்ந்தெடுக்கப்படுமா அல்லது புதிதாக நிறுவப்படுமா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
ஈரானின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அதற்கு பல்வேறு காலகட்டங்களில், இஸ்பாகான்,குவாசின்,சிராஸ், மஸ்காத் மற்றும் ஹமீதான் உட்பட பல்வேறு நகரங்கள் தலை நகரங்களாக இருந்துள்ளது தெரிய வரும்.கடந்த 1795ம் ஆண்டு, மன்னர் அகா முகமது கான், டெகரானை தலைநகராக அறிவித்தது முதல், அந்நகர், நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார மையமாக திகழ்ந்து வருகிறது. தற்போது இந்நகரில், ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஈரான் நாட்டிற்கு புதிய தலைநகரை நிறுவுவது குறித்து, 20 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. 2003ம் ஆண்டு பாம் மாகாணத்தின் தென் கிழக்கு நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில், 40 ஆயிரம் பேர் வரை பலியானதையடுத்து, அதிகாரிகள் தலைநகரை மாற்றும் திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
| வாசகர் கருத்து |
கிரேட் கமெண்ட் ஜெயதேவா சூப்பர் கிரேட்
|
by G துரை.,Singapore,Singapore 11/8/2009 6:55:38 PM IST |
ஐயா இஸ்மாயில் அவர்களே, எல்லாமே கடவுள் செயல்தான். இல்லை என்று சொல்ல வில்லை. அதற்காக நாம் எதுவுமே செய்யாமல் இருந்துவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. ஆபத்து வருகிறது என்று விஞ்ஞானிகள் மூலமாக இறைவனே சொல்கிறான் என்று ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? நாம் நம்மால் முடிந்ததை செய்வோம். இதற்கும் மீறி அழிவு வந்தால் அதுவும் அவன் செயலே என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். நாம் இறைவன் கொடுத்துள்ள புத்தியை வைத்துக்கொண்டு நம் கடமையை செய்வோம், இறுதியில் என்ன ஆக வேண்டும் என்று அவன் முடிவு செய்வான். எதுவுமே செய்யாமல் சும்மா இரு என்று எந்த வேடமும் சொல்ல வில்லை.
|
by K Jayadeva Dasa,Bangalore,India 11/8/2009 4:11:00 PM IST |
தலை நகரை மாற்றுவதற்கு பதில் ஒரே இடத்தில மக்கள் குவிவதை தவிர்க்கலாம் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மக்களை பல் வேறு இடங்களில் குடிஅம்ர்தலாம் உயிர் இழப்பு குறையும்
|
by KUMAR,doha,Qatar 11/8/2009 3:35:34 PM IST |
hi this thinking is good i like it
|
by v vanjinathan,dubai,India 11/8/2009 3:29:48 PM IST |
உண்மை
|
by mohamed rafeek,sharjah,United Arab Emirates 11/8/2009 12:37:58 PM IST |
இறைவன் நாட்டப்படி நடக்கும். பூகம்பங்களும் அதற்கு மாற்றாக இறைவன் அளித்த மனிதனின் அறிவு, சிந்த்தித்து செயல்பட, அதிலிருந்து காப்பற்றிக் கொள்ள திட்டங்கள் வகுப்பது இயற்கையே! அதன் பின்னும் பூகம்பங்கள் நிகழ்தால் மனிதன் என்ன செய்ய முடியும். அதனால் ஈரான் அரசு செயல் படுவதை குறை கூறாதீர்கள்.
|
by SA PALAYAM,CHINA,India 11/8/2009 11:49:37 AM IST |
Talk constructively. We can see many such instances where the capital has been shifted with the aim of protection from enemies and other natural calamities. present day Tehran also made on the same principles. One doubt.
|
by V.S Abdullah,Chennai,Maldives 11/8/2009 9:38:44 AM IST |
நல்ல யோசனை. பாராட்டலாம்.
|
by Adaikalam,chennai,India 11/8/2009 7:49:30 AM IST |
மானிடா,இது இறைவன் எழ்திவைத்தாது,எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது.இது சத்தியம்.
|
by A.M.Y முஹம்மத் அமின் ,villiers sur marne,France 11/8/2009 6:11:23 AM IST |
எந்த இடத்தை தலை நகராக ஆக்கினாலும் இறைவன் அங்கு பூகம்பத்தை ஏற்படுத்த நினைத்தால் அதனை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.கண்ணா ! சரி நீ ஒரு இடத்தை தலைநகராக்கி பிறகு ஆய்வாளர்கள் இங்கும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு வுள்ளது என்றால் அப்ப என்ன செய்வாய் கண்ணா?இதெலாம் தேவையா என நன்றாக யோசி கண்ணா!
|
by ismail.dubai,,dubai,uae.,United Arab Emirates 11/8/2009 1:28:01 AM IST |
இதை நன் வரவேற்கிறேன்.. இதை போல் நம் அரசியல்வாதிகள் செய்வார்களா .....
|
by p kprc,dublin,Ireland 11/8/2009 12:31:54 AM IST |