வாஷிங்டன்:நடிகைகள் அணிந்த ஆடைகள், பொருட்களை தாங்களும் பயன்படுத்த வேண்டும் என்று பள்ளி மாணவிகள் சிலருக்கு வந்த ஆசை விபரீதத்தில் முடிந்தது. நடிகைகளின் வீடுகளில் திருடியபோது போலீசிடம் சிக்கிக் கொண்டனர்.அமெரிக்காவின் பிரபல சினிமா நட்சத்திரங்கள் லிண்ட்ஸி லோகன், பாரிஸ் கில்டன். ஓர்லாண்ட்டோ ப்ளம், சின்னத்திரை நடிகை அட்ரினா பாட்கிட்ஜ் ஆகியோரது வீடுகள் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது.
சமீபத்தில் இவர்களின் வீடுகளில் தங்க நகைகள்,விலை உயர்ந்த ஆடைகள் காணாமல் போய்விட்டன.முழு பாதுகாப்பு இருந்தும் திருட்டு போயிருப்பது போலீசுக்கு குழப்பமாக இருந்தது.ஆனால், நடிகைகளின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய சுழல் வீடியோ கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, போலீசுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.திருடியிருப்பது பள்ளி மாணவிகள் என்பது தான் அதற்கு காரணம்.உடனே விசாரணை நடத்தி, லாஸ் வேகாஸ் பகுதியை சேர்ந்த ராச்சல் லீ, கோர்ட்னி அமஸ்,அலெக்ஸ் நியியர்ஸ்,டயானாடாமயோ ஆகிய நான்கு பள்ளி மாணவிகளை கைது செய்தனர்.
பேஷன் பத்திரிகைகள், இன்டர் நெட் மற்றும் வெப்சைட்டுகளில், நடிகைகள் பயன் படுத்தும் ஆடைகள், பொருட்கள் பற்றிய விவரங்களை இந்த மாணவிகள் பார்த்துள்ளனர். அதனால், நடிகைகளின் ஆடைகளை பயன்படுத்த வேண்டும் என்று திருடியுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுடன் மாணவன் புருகோ என்பவனும் சிக்கினான். அவன் வீட்டில் சோதனை செய்தபோது, நடிகைகளின் நிர்வாண படங்களும் இருந்தன.
| வாசகர் கருத்து |
அரை குறை ஆடை மேலேயே பைத்தியமா ஆகிட்டாங்கையா..மார்கெட்டு ஏற ஏற நடிகைகளின் டிரஸ் அளவும் குறைஞ்சிகிட்டே இருக்கு. அப்புறம் ஏன் பைத்தியம் பிடிக்காது. வருங்கால கனவு நாமும் நடிகைகளாக வரணும் என்கின்ற ஆசைலேதான்.
|
by J.S மைதீன். கத்தார்.,DOHA- QATAR,Qatar 11/8/2009 8:03:27 PM IST |
அங்கேயும் சினிமா பைத்தியங்கள். என்ன செய்ய...
|
by s ரகுமான்,chennai,India 11/8/2009 8:39:20 AM IST |