World Breaking News Headlines & Archives, World Daily News Update, Global News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
உலகச் செய்திகள்  
விந்து தானத்தால் பிறந்த குழந்தைகளுக்கு இதய நோய்

நவம்பர் 08,2009,00:00  IST

லண்டன்:அமெரிக்காவில், விந்து தானம் அளித்தவர் மூலம் பிறந்த குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப் பட்டுள்ளன.ரத்த வங்கிகள் போல விந்து வங்கிகள் வெளிநாடுகளில் அதிகம் உள்ளன. விந்து தானம் செய்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். அமெரிக்காவில் 23 வயது நபரிடமிருந்து பெறப்பட்ட விந்து மூலம் 24 குழந்தைகள் பிறந்தன.



இதில், ஒன்பது குழந்தைகளுக்கு பாரம்பரியமாக வரும் இதய நோய் கண்டறியப் பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் இறந்து விட்டன. மற்ற குழந்தைகள் வளர்ந்து ஏழு முதல் 16 வயதை அடைந்துள்ளன. இந்த குழந்தைகளும் இதய நோயால் எப்போது வேண்டுமானால் இறக்கலாம், என்ற சூழ்நிலையில் உள்ளனர். இதனால், மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



இதய தசைகளை கடினமாக்கும் "ஹைபர் டிராபிக் கார்டியோ மையோபதி' என்ற இந்த நோய் ஒரு சிலருக்கு மட்டுமே வரக்கூடியது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர் மூலம் எடுக்கப்பட்ட விந்து மூலம் பிறந்த குழந்தைகளையும் இந்நோய் பாதித்துள்ளது.



எனவே, இனி விந்து தானம் செய்பவருக்கு, அனைத்து உடல் பரிசோதனைகளை மேற்கொண்ட பின் தான் விந்து பெறப்பட வேண்டும், என்ற விதிமுறையை பிரிட்டன் மருத்துவத்துறை உருவாக்கியுள்ளது. இவ்வளவு கெடுபிடிகள் விதிக்கப்பட்டால், விந்து தானம் செய்ய முன்வருபவர்களின் எண்ணிக்கை குறையும் என்ற கருத்தும் உள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 இயற்க்கைக்கு மாற்றமாக எது வந்தாலும் அது நிலைக்காது. 
by M அபு ரபியா,Riyadh,India    11/8/2009 7:56:49 PM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் உலகச் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்