World Breaking News Headlines & Archives, World Daily News Update, Global News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
உலகச் செய்திகள்  
எதிர்மறையாக சிந்திப்பவருக்கு நினைவுத் திறன் அதிகரிக்குமாம்*ஆய்வில் ஆச்சர்ய தகவல்

நவம்பர் 08,2009,00:00  IST

சிட்னி:நீங்கள் எந்த ஒரு விஷயத்தையுமே "நெகடிவ்' ஆக சிந்திப்பவரா, அப்படியானால் உங்களின் நினைவுத் திறன் அதிகரிக்குமாம். ஆஸ்திரேலியாவில் நடத்திய ஒரு ஆய்வில் தான், இந்த ஆச்சர்யமான விஷயம் தெரிய வந்துள்ளது.



"எந்த ஒரு விஷயத்தையும் எதிர்மறையாக சிந்திப்பது, உடலுக்கும், மனதுக்கும் ஆபத்தை விளைவிக்கும்' என, பலரும் கூறுவது உண்டு. "நல் லதை நினைத்தால், நல்லது நடக்கும்' என்றும் சிலர் கூறுவர். ஆனால், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள், இதற்கு நேர்மாறான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளன.



ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் பல்கலையின் உளவியல் பேராசிரியர் ஜோசப் போர்காஸ், தனது குழுவினருடன் இணைந்து எதிர்மறையான சிந்தனை, நேர்மறையான சிந்தனைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினார். இதில், பல ஆச்சர்யமான விஷயங்கள் தெரியவந்தன.அதில் கூறப்பட்டுள்ளதாவது:



ஒரு விஷயத்தை பற்றி நேர்மறையாக சிந்தித்தால், படைப்பு திறன் அதிகரிக்கும். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணமும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் அதிகரிக்கும். அதே நேரத்தில் எதிர்மறையாக சிந்தித்தாலும் சில பயன்கள் கிடைக்கும். குறிப்பாக, எதிர்மறையாக சிந்திக்கும் ஒருவர், எந்த விஷயத்திலுமே மிகவும் கவனமாக இருப்பார்.



முன் எச்சரிக்கையான சிந்தனைகளால், வெளி உலகத்தை பற்றிய கவனமும், பிரச்னைகள் ஏற்பட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தீர்வும் கிடைக்கும். இப்படிப்பட்ட நபர்கள், நெருக்கடியான நேரத்தில் மற்றவர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பும் மிகவும் குறைவாகவே இருக்கும். நினைவுத் திறன் அதிகரிப்பதோடு, மற்றவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை சரியாக யூகிக்க முடியும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
 அப்போ,இப்ப நடக்கிறதே அடக்காசம், அதற்குப் பெயர் என்ன, இந்தியா பசங்களை வாழ்வைக்கனும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ளவர்கள் நினைத்தார்களோ,அதன் இப்படி இந்தியாகாரகளை அடித்துக் கொலை செயிகிரார்களோ.வாழ்க உங்கள் ஆராட்சி. 
by A.M.Y முஹம்மத் அமின் ,villiers sur marne,France    11/8/2009 6:22:47 AM IST
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் உலகச் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்