யோகாவில் அசத்தும் 107 வயது 'இளைஞர்': 35 ஆண்டுகளாக தொடரும் தவம்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த 107 வயது முதியவர் குருசாமி, பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்துகிறார். நடிகர் சிவக்குமாருடனும் யோகா போட்டி செய்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்துார் ஊரணிபட்டி தெருவை சேர்ந்த நெசவுத் தொழிலாளி குருசாமி,107. இவர் இந்த வயதிலும் இளைஞர்போல தன்னுடைய அன்றாட வேலைகளை தானே சுறுசுறுப்பாக செய்கிறார். கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்துார் அரிமா பொன்னையா செட்டியார் யோகாசன மையத்தில் இளம் தலைமுறையினருக்கு யோகாசனங்களை கற்றுக் கொடுத்தார். தற்போதும் 40க்கும் மேற்பட்ட வகை யோகாசனங்களை எளிதாக செய்கிறார்.

சர்வதேச யோகாசன தினத்தையொட்டி குருசாமி கூறியதாவது:ஆர்வம் காரணமாக கீழப்பட்டி தெருவை சேர்ந்த கோபால் என்பவரிடம் யோகா கற்றேன். 1980 முதல் யோகாசனம் செய்கிறேன். தினமும் அதிகாலை 5 மணி முதல் யோகா செய்ய துவங்குவேன். இதனால்தான் இன்றும் என் உடல் ஆரோக்கியமாக உள்ளது. மதுரை, கோவை, சென்னை, நெய்வேலி யில் நடந்த யோகாசன போட்டிகளில் விருதுகள் பெற்றுள்ளேன்.ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த ஒரு விழாவில் நடிகர் சிவக்குமாருடன் யோகா போட்டி போட்டுள்ளேன். யோகாவை அனைவரும் குறிப்பாக பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டும். அனைத்து குழந்தைகளும் யோகா கற்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் . சமுதாய ஒழுக்கத்திற்கு யோகா மிகவும் அவசியம். இதன்மூலம் மனம் ஒருமுகப்படுத்தப்பட்டு தேவையற்ற எண்ணங்கள், பிரச்னைகளை தவிர்க்க முடியும்,”என்றார்.

வாசகர் கருத்து (8)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)