ஷார்ட் நியூஸ் 1 / 10
பொது
பிப்ரவரி 04,2023
வாணி ஜெயராம் வீட்டு பணிப்பெண் பரபரப்பு தகவல்
வாணி ஜெயராம் வீட்டு பணிப்பெண் பரபரப்பு தகவல்
3
- பின்னணி பாடகி வாணி ஜெயராம், வீட்டில் தனியாக வசித்து வந்தார்
- பல முறை அழைத்தும் கதவு திறக்கப்படாததால் போலீசுக்கு தகவல் தெரிவித்தேன்
- வாணி ஜெயராம் வீட்டில் பணிபுரியும் மலர்கொடி நிருபர்களிடம் கூறியுள்ளார்
பொது
பிப்ரவரி 04,2023
வாணி ஜெயராம் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்
வாணி ஜெயராம் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்
4
- சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78)
- இவர் எதிர்பாரா விதமாக வீட்டில் வழுக்கி விழுந்ததில் உயிர் இழந்தார்
- அவரது மறைவுக்கு தமிழிசை, இயக்குநர் மனோபாலா உள்ளிட்டோர் இரங்கல்
பொது
பிப்ரவரி 04,2023
‛மழை பாதிப்பிற்கு உடனே நிவாரணம் வழங்குக': பழனிசாமி
- மழையால் பாதித்த விவசாயி, மீனவர், உப்பள தொழிலாளருக்கு நிவாரணம் தர வேண்டும்
- விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
- தமிழக அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அரசியல்
பிப்ரவரி 04,2023
எடப்பாடியின் வேட்பாளரை ஓபிஎஸ்., ஆதரிக்க வேண்டும்
எடப்பாடியின் வேட்பாளரை ஓபிஎஸ்., ஆதரிக்க வேண்டும்
11
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பழனிசாமி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்
- தென்னரசுவை ஆதரிக்க வேண்டும் என பன்னீர்செல்வத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறோம்
- கூட்டணி தர்மம் காக்கப்பட வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
பொது
பிப்ரவரி 04,2023
வங்கிகள் நிலை சீராக உள்ளது: ரிசர்வ் வங்கி அறிக்கை
வங்கிகள் நிலை சீராக உள்ளது: ரிசர்வ் வங்கி அறிக்கை
7
- இந்திய வங்கிகளின் நிலை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் ஸ்திரமாக உள்ளது.
- இந்திய வங்கிகளின் செயல்பாட்டை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது.
- ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
உலகம்
பிப்ரவரி 04,2023
அமெரிக்காவில் மீண்டும் உளவு பார்த்த சீனா: அடுத்தடுத்து பரபரப்பு
அமெரிக்காவில் மீண்டும் உளவு பார்த்த சீனா: அடுத்தடுத்து பரபரப்பு
7
- இரண்டாவது சீன உளவு பலூன் லத்தீன் அமெரிக்காவின் மேல் பறந்துள்ளது.
- வழக்கமாக செயற்கைக்கோள்கள் மூலம் இவ்வாறு உளவுப்பணிகள் நடக்கும்.
- பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டதால் பலூன்களால் உளவு பார்க்கப்படுவதாக தகவல்
உலகம்
பிப்ரவரி 04,2023
சிலியில் காட்டுத்தீ : 13 பேர் பலி
- சிலி தலைநகர் சான்டா ஜூவானா என்ற இடத்தில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது.
- காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். அதில் தீயணைப்பு வீரரும் ஒருவர்
- தீயில் சுமார் 14 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதி தீக்கிரையாகியது.
பொது
பிப்ரவரி 04,2023
காதல் மனைவியை கொலை செய்த கொடூரன்
காதல் மனைவியை கொலை செய்த கொடூரன்
2
- பழனி எம்.பி.ஏ., படிக்கும்போது, வர்ஷாவின் அக்காவை ஒருதலையாக காதலித்தார்.
- வர்ஷாவை கத்தியால் வாய்ப்பகுதி,முழங்காலில் குத்திவிட்டு தப்பிச்சென்றார்
- அக்காவை காதலித்தவர் எனத்தெரிந்தும் அவரை வர்ஷா காதலித்தார்.
பொது
பிப்ரவரி 04,2023
மணிப்பூரில் நிலநடுக்கம்
- மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று(பிப்.,04) நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது.
- இதனால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
பொது
பிப்ரவரி 04,2023
கேரளாவில் பெட்ரோல், டீசல் மது விலை உயருகிறது
கேரளாவில் பெட்ரோல், டீசல் மது விலை உயருகிறது
3
- கேரள சட்டசபையில்,2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.
- ரூ.1000-க்கும் மேல் விற்கப்படும் மதுவுக்கு ரூ.40உயர்த்தப்படும் என அறிவிப்பு