/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மணல் கலந்த களிமண்ணில் லைபீரியா தக்காளி சாகுபடி
/
மணல் கலந்த களிமண்ணில் லைபீரியா தக்காளி சாகுபடி
PUBLISHED ON : நவ 12, 2025

லைபீரியா தக்காளி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:
காய்கறி, கீரை உள்ளிட்ட பல வித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக்கொண்டு, மீத காய்கறிகளை விற்பனை செய்கிறேன். மணல் கலந்த களிமண்ணில், பல வித தக்காளி செடிகளை நட்டுள்ளேன். இதில், ஆப்ரிக்க நாட்டில் விளையும், லைபீரியா ரக தக்காளி நட்டுள்ளேன்.
இது, பிற ரக தக்காளி போல இருக்காது. சிறிய ரக தக்காளியாக இருந்தாலும், புளிப்பு சுவை கூடுதலாக இருக்கும். இதற்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், கணிசமான வருவாய்க்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.குகன், 94444 74428.

