sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

வினாடிகள் உறைய வைக்கும் விபரீதம்!

/

வினாடிகள் உறைய வைக்கும் விபரீதம்!

வினாடிகள் உறைய வைக்கும் விபரீதம்!

வினாடிகள் உறைய வைக்கும் விபரீதம்!


PUBLISHED ON : டிச 07, 2025

Google News

PUBLISHED ON : டிச 07, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெளியூரில் இருந்து வந்து அட்மிட் ஆன டீன் -ஏஜ் பெண், 'காரணமே இல்லாமல் எனக்கு பயம் வருது. சில நேரங்களில் எரிச்சலாக இருக்கிறது. கோபம் வருகிறது. பதட்டமாக உணர்கிறேன். உடம்பு முழுவதும் விறைத்துப் போகிறது. யாரோ என்னை அடிக்க வருவது போல உள்ளது' என்று சொன்னார்.

நன்கு படிக்கிற பெண். மனதளவில் ஏதோ பிரச்னை என்பதாக தான் சொன்னார்கள். என் மனநல டாக்டர் நண்பர் தான் இந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார்.

'மனநல பிரச்னைகளுக்கு மருந்துகள் கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. நாளுக்கு நாள் அவரின் பயம், பதட்டம் அதிகரிக்கிறது. நீங்கள் கொஞ்சம் பாருங்கள்' என்று என்னிடம் அனுப்பினார்.

நான் கவனித்ததில் அப்பெண்ணுக்கு 'சைலன்ட் சீசர்ஸ்' எனப்படும் அறிகுறிகள் வெளியில் தெரியாத வலிப்பு நோய் என்று தெரிந்தது. ஆயுர்வேத மருந்துகள் தந்தேன். அறிகுறிகள் அனைத்தும் சரியாகி வி ட்டன.

காரணங்கள்

பொதுவாக வலிப்பு நோய் வந்தால் கை, கால்கள் தொடர்ச்சியாக இழுக்கும். வாயில் நுரை தள்ளும். இது போன்ற அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் வலிப்பு நோய் வரலாம். அதற்கு சைலன்ட் சீசர்ஸ் என்று பெயர்.

மரபியல் கோளாறுகள், விபத்தினால் மூளையில் அடிபடுவது, மூளையில் உள்ள நரம்பு செல்கள் சிதைவது, சிலவிதமான நோய் பாதிப்புகள், நரம்பியல் கோளாறுகள், மூளையில் தொற்று ஏற்பட்டு குணமான பின், அதன் தொடர்ச்சியாகவும் வரலாம். சைலன்ட் சீசரஸ் குழந்தைகள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

எப்படி கண்டுபிடிப்பது?

வகுப்பறையில் பாடம் நடக்கும் சமயத்தில் எந்த சலனமும் இல்லாமல், பகல் கனவு காண்பது போல ஒரே இடத்தில் பார்வை நிலைகுத்தி, பாடத்தில் கவனம் இல்லாமல், வேறு உலகத்தில் இருப்பர். சில வினாடிகள் எங்கே இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற நினைப்பே இருக்காது.

சில சமயங்களில் கண் இமைகள் படபடக்கும், உதடுகளைக் கடிப்பர். கைகளை தேய்ப்பதும் உண்டு. அபூர்வமாக சில குழந்தைகள் பற்களை இறுகக் கடிப்பார்கள்.

இந்த அறிகுறிகள் அனைத்தும் 10 -- 20 வினாடிகள் மட்டுமே இருக்கும். அதனால் இதை வலிப்பு என்று யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். பெற்றோர், ஆசிரியர்கள் இதை அடையாளம் காண்பதும் இல்லை.

சிலருக்கு ஒரு நாளைக்கு 200 முறை கூட வரும். 70 முறை வந்த குழந்தைக்கு நான் சிகிச்சை செய்துள் ளேன். மூன்று மாதக் குழந்தையில் இருந்து சைலன்ட் சீசர்ஸ் வரலாம். குழந்தை கண் அசைவு இல்லாமல், கொஞ்ச நேரத்திற்கு அப்புறம் ஒன்றும் நடக்காதது போல இருக்கும்.

பின் விளைவு

சைலன்ட் சீசர்ஸ் தொடர்ச்சியாக வரும் குழந்தைகள், வளர்ந்த பின், 'ஏடிஹெச்டி' எனப்படும் கவனம் செலுத்துவதில் சிரமம், அதீத செயல்பாடு வர வாயப்புணடு. 'ஏடிஹெச்டி' இருந்தால், பின்னாளில் சைலன்ட் சீசர்ஸ் வரவும் வாய்ப்புண்டு. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

மொபைல் போன்

ஏற்கனவே சைலன்ட் சீசர்ஸ், ஏடிஹெச்டி கோளாறு இருக்கும் குழந்தைகள், மொபைல் போனில் அதிக நேரம் செலவிடும் போது, பிரச்னைகளை மேலும் தீவிரப்படுத்தலாம்.

ஆயுர்வேத சிகிச்சை

மூளையின் செயல்பாடுகளை நிதானப்படுத்த, இயல்பாக்க மூலிகை மருந்துகள் உள்ளன. நீண்ட நாட்களுக்கு மீண்டும் பிரசனை வராமல் இருக்கவும், ஏற்கனவே ஏற்பட்ட உடல் சிதைவுகளை சரி செய்யவும் இம்மருந்துகள் உதவும்.

சிகிச்சை காலம்

எந்த வயதில் சைலன்ட் சீசர்ஸ் தெரிய வந்தது, எத்தனை ஆண்டுகளாக வலிப்பு உள்ளது, இத்தனை நாளில் ஏற்பட்ட பாதிப்பின் அளவு, ஆங்கில மருந்துகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளதா என்பதை தெளிவாக அறிந்து சிகிச்சை தர முடியும். அதிக நாட்கள் சிகிச்சை பெற வேண்டியிருக்கும். ஆனால், நிச்சயம் குணப்படுத்த முடியும்.

டாக்டர் டி. அஜித் குமார் விவேகானந்தன், தலைமை அசோசியேட் மருத்துவர், அப்பல்லோ ஆயுர்வேத மையம், சென்னை 9591964915ajithkumar_v@ayurvaid.com






      Dinamalar
      Follow us