உடற்பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் ஆரோக்கிய வாழ்வுக்கு முக்கியம்
உடற்பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் ஆரோக்கிய வாழ்வுக்கு முக்கியம்
PUBLISHED ON : நவ 02, 2025

உட்கார்ந்து பார்க்கும் வேலை, உயிருக்கு உலை என்பது போல் உடற்பயிற்சி இல்லாததால், நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன.
குறிப்பாக, பெண்களிடம் ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு உடல் உழைப்பு இல்லாததே காரணம் என்கிறார், உடற்பயிற்சி நிபுணர் வினோதமலர்.
விரிவுரையாளராக இருந்த இவர், இன்று அப்பணியை விடுத்து முழுநேர உடற்பயிற்சி நிபுணராக மாறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
இன்றைய தலைமுறைக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை. உடற்பயிற்சிக்காக 45 நிமிடம் ஒதுக்க வேண்டும். இன்று பெண்களுக்கு மாதவிடாய், குழந்தையின்மை, சர்க்கரை உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு உடற்பயிற்சி இன்மையே காரணம்.
இளவயதிலேயே இப்பிரச்னைகள் வருவதுதான் கொடுமை. உடற்பயிற்சி துவங்கிய ஒரு மாதத்திலேயே, பிரச்னைகள் சரியாவதை பார்க்க முடிகிறது.
நான் இதற்கு முன், கல்லுாரியில் பணிபுரிந்த போது, அதிக எடையுடன்தான் இருந்தேன். உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த பிறகு, நல்ல மாற்றம் தெரிந்தது.
உணவு கட்டுப்பாடும் முக்கியம். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சர்க்கரையை முற்றிலும் குறைக்க வேண்டும். கார்போஹைட்டை குறைத்து புரோட்டின், நார் சத்து உணவு எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

