PUBLISHED ON : நவ 02, 2025

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க, பலவித மருந்துகளை பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இவை அதிக விலையுடன் வியாபார நோக்கில் விற்கப்படுகிறது.
நாம் அன்றாட உணவில் உபயோகிக்கும் சில பொருட்கள், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன.
இஞ்சி சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு, ஆப்பிள் சிடார் வினிகர், தேன் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த மருந்து இதயத்தை காக்கும் டானிக். இதை எங்கள் மருத்துவமனையில் நாங்களே தயாரிக்கி றோம்.
இதயம் தொடர்பான எந்த நோயாக இருந்தாலும் அவற்றில் இருந்து இதயத்தை பாதுகாக்கும். மாரடைப்பு வராமல் தடுக்கும்.
இயற்கையாக விளையும் இஞ்சி, பூண்டு இவற்றில் உள்ள காரத் தன்மை ரத்தத் தில் உள்ள கொழுப்பு களை எரிக்கும் தன்மை கொண்டவை .
ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடல் முழுதும் ரத்தத்தை செலுத்தும் இதயத்தின் திறனை மேம்படுத்தும்.
இதனால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
இதயம் தொடர்பான நோய் வராமல் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், 30 வயதிற்கு மேல் இதை சாப்பிடலாம்.
பிறவியிலேயே வரும் இதய நோய்கள் தவிர, வாழ்க்கை முறை மாற்றத்தால் இடையில் ஏற்படக் கூடிய ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த நாளங்கள் சுருங்குவது, சுருள்வது உட்பட அனைத்து இதயக் கோளாறுகளையும் சரி செய்யக்கூடிய ஆற்றல் இந்த மருந்துக்கு உள்ளது.
தினமும் இந்த மருந்தை சாப்பிடும் போது, மாரடைப்பு வராது. ரத்த நாளங்களில் அடைப்பு, கசிவு, ஏற்படாது. மூளையில் ஏற்படு ம் ரத்த நாள அடைப்பையும் தடுக்கும்.
டாக்டர் காமராஜ் சாமியப்பன், சித்த மருத்துவர், மாவட்ட முன்னாள் சித்த மருத்துவ அதிகாரி, திருச்சி 0431 - 2300181, 94898 20113drkaamaraaj@gmail.com

