sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

ஆயுர்வேதம் சொல்லும் புரத உணவுகள்!

/

ஆயுர்வேதம் சொல்லும் புரத உணவுகள்!

ஆயுர்வேதம் சொல்லும் புரத உணவுகள்!

ஆயுர்வேதம் சொல்லும் புரத உணவுகள்!


PUBLISHED ON : நவ 02, 2025

Google News

PUBLISHED ON : நவ 02, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமும் இத்தனை கிராம் புரதம் சாப்பிட வேண்டும் என்பது புதிதாக வந்த விஷயம். ஆயுர்வேதம் இதை வேறுவிதமாக அணுகுகிறது.

நவீன மருத்துவத்தில் சத்துக்களை, அதன் செயல் பாடுகளை கணக்கில் கொள்ளாமல், அமைப் பின் அடிப்படையில் பிரிக் கின்றனர். ஒரு உணவில் எந்த அளவு புரதம், கால்சியம் உள்ளது என்று பிரித்து, அவற்றால் என்ன பலன் என்று பார்க்கின்றனர்.

அவை உடலில் எந்த விதத்தில் செயல்படுகின்றன என்று பார்ப்பதில்லை.

இறைச்சி, பருப்பு இரண்டிலும் புரதம் இருந் தாலும், இரண்டும் ஒரே விதமான புரதம் கிடையாது. அமைப்பில் இரண்டும் ஒன்றாக இருந்தாலும், உடலுக்குள் அதன் செயல்பாடுகள் வேறு வேறாக இருக்கும்.

பால், தயிர் இரண்டிலும் கால்சியம் சத்து உள்ளது. பால் சாப்பிட்டால் மலம் இயல்பாக போகும். தயிர் சாப்பிட்டால் மலம் கட்டும். ஒன்று தோலுக்கு நல்லது. இன்னொன்றால் தோலில் கோளாறுகள் வரலாம்.

நாம் செய்யும் தவறு, இந்த உணவில் எந்த அளவு புரதம், கால்சியம் உள்ளது என்று கணக்கிட்டு, அதற்கேற்றாற்போல சாப்பிடு வதால், அதன் செயல் பாடுகள் மறந்து விட்டன.

இயற்கையில் இது போன்று எதுவும் கிடையாது. என்ன சாப்பிடுகிறோமோ அதை திசுக்களாக மாற்றும் வகையில் குடலின் தன்மை இயற்கையில் அமைந்துள்ளது.

இதை மறந்து, இத்தனை கிராம் புரதம், கால்சியம் என்று அளந்து சாப்பிடுவதால், பழைய தலை முறையினரைப் போன்று ஆரோக்கியமாக இருக்கிறோமா? இல்லையே!

உடல் பருமன், சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், சீரற்ற ஹார் மோன் செயல்பாடு, செரி மானப் பிரச்னைகள், கொழுப்பு என்று பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் போகிறது.

மெட்டபாலிசம்

நம் உடல் அமைப்பு வேட்டையாடி உணவு தேடி சாப்பிடும் விதமாகவே உள்ளதால், காலியாக வயிறு இருக்கும் போது தான், 'மெட்டபாலிக் ரேட்' எனப்படும் உடலின் வளர் சிதை மாற்றம் அதிகமாக நடக்கும்.

அவரவரின் உடலுக்கு தகுந்த, ஒத்துக்கொள்ளக்கூடிய உணவை தேர்வு செய்ய வேண்டும். பேலியோ, கீட்டோ என்று எந்த டயட்டாக இருந்தாலும், அதில் பலன் இருப்பதை போன்றே பக்க விளைவுகளும் உள்ளன.

டயட் என்ற ஒன்றை பின் பற்றினால், இதைத் தான் சாப்பிட வேண்டும் என்ற அழுத்தம் வந்து விடுகிறது.

அப்படி இல்லாமல், ஒரு நாளைக்கு இரு வேளை, ஒரு வேளை தான் சாப்பிடப் போகிறேன் என்று நாமாகவே கட்டுப்பாட்டை கொண்டு வந்து, வாழ்க்கை முறையை மாற்ற வே ண்டும்.

என் கிளினிக்கில் ஒரு வேளை உணவு சாப்பிட்டு, 40 கிலோ உடல் எடையை குறைத்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த பிரச்னையும் வந்ததில்லை.

உணவை எதிர்பார்த்து சாப்பிடாமல் இருந்தால் தான், 'அசிடிட்டி' உட்பட அனைத்து பிரச்னைகளும் வரும்.

வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வந்தால், உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்.

இரவு உணவை 6:00 மணிக்குள் சாப்பிட வேண்டும்.

கொழுப்பை எரிக்கும் தன்மை சிறுதானியங்களில் உள்ளது. காலை உணவாக அளவோடு அரிசி சாதம் சாப் பிட்டு, மாலை உணவாக சிறுதானியங்கள் சாப்பிடலாம்.

மாலை 6:00 மணிக்கு மேல் சாப்பிடுவது, அனைத்தும் கூடுதல் கலோரியாக உடலில் சேமிக்கப்படும். உடல் எடை அதிகரிக்கும். அதன்பின் குறைப்பது சிரமம்.

இதை சில மாதங்கள் என்று இல்லாமல், வாழ்க்கை முறையாக வாழ் நாள் முழுதும் பின்பற்றினால், உடல் பருமனை குறை த்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்.

டாக்டர் சுதீர் ஐயப்பன், டாக்டர் மீரா சுதீர், ஸ்ரீஹரியம் ஆயுர்வேதம், சென்னை 86101 77899 sreehareeyam.co.in






      Dinamalar
      Follow us