PUBLISHED ON : ஜூன் 08, 2026

ஒரு சிறுவன் தனது இடது கையின் விரல்களை பின்வருமாறு எண்ணுகிறான்:
1- கட்டைவிரல் (Thumb)
2- ஆள்காட்டி விரல் (Index finger)
3- நடுவிரல் (Middle finger)
4- மோதிர விரல் (Ring finger)
5- சுண்டு விரல் (Little finger).
பிறகு அப்படியே பின்னோக்கி எண்ணுகிறான்.
6- மோதிர விரல்
7- நடுவிரல்
8- ஆள்காட்டி விரல்
9- கட்டை விரல்.
மீண்டும் இந்தச் சுழற்சியை மேற்கொண்டு, 2026 வரை சிறுவன் எண்ணினால், எந்த விரலில் முடிப்பார்?
விடை: ஆள்காட்டி விரல்.
விளக்கம்:
சிறுவன் விரல்களை எண்ணும் வரிசையைக்
1-T,2-I,3-М,4-R,5-L,6-R,7-M, 8-1.
அடுத்த எண் 9. மீண்டும் கட்டை விரலில் (T) தொடங்குகிறது.
எனவே, இந்தச் சுழற்சி ஒவ்வொரு 8 எண்களுக்கும் ஒருமுறை மீண்டும் மீண்டும் வருகிறது. ஆதலால், 2026ஐ 8 ஆல் வகுப்போம். மீதி
2 கிடைக்கும்.
மீதி 2 கிடைப்பதால், சுழற்சியில் வரும் 2வது எண்ணே, 2026வது எண்ணிக்கையாக இருக்கும்.
ஆக, சுழற்சியில் வரும் 2வது எண் ஆள்காட்டி விரலாகும்.
(விடையில் சந்தேகம் இருந்தால் விரலில் எண்ணிப் பாருங்கள்!)
